மாஸ் வீடியோ மூலம் விக்ரம் 62 அறிவிப்பு வெளியீடு

விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது. விக்ரம் 62 படத்தை அருண் குமார் இயக்குகிறார்.
மாஸ் வீடியோ மூலம் விக்ரம் 62 அறிவிப்பு வெளியீடு
Published on

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிப்பதில் புகழ் பெற்றவர் விக்ரம். இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் விக்ரம் 62 படத்தின் அறிவிப்பை படக்குழு வீடியோ மூலம் வெளியிட்டு உள்ளது.

இந்த வீடியோவில் வரும் காவல் நிலைய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. வீடியோவின் படி விக்ரம் 62 படத்தினை எஸ்.யு. அருண் குமார் இயக்குகிறார். இவர் முன்னதாக பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா போன்ற படங்களை இயக்கி இருக்கிறார்.

விக்ரம் 62 படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தை ரியா ஷிபு தயாரித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com