என் மலர்
சினிமா செய்திகள்
- ’கேப்டன் மில்லர்’ திரைப்படம் முதல் இடத்தை பிடித்தது.
- ‘அயலான்’ திரைப்படம் இரண்டாவது இடத்தை பிடித்தது.
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த ஜனவரி 12-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வெளியான முதல் வாரத்தில் முதல் இடத்தை பிடித்தது.

இதையடுத்து, ஆர். ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' திரைப்படம் இதே தேதியில் வெளியாகி இரண்டாம் இடத்தை பிடித்தது. தொடர்ந்து, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான 'மிஷன் சாப்டர் -1' மூன்றாவது இடத்தையும், ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த 'மெரி கிறிஸ்துமஸ்' நான்காம் இடத்தையும், இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடித்த 'ஹனு-மான்' ஐந்தாம் இடத்தையும் பிடித்தது.

இந்நிலையில், இரண்டாவது வாரம் நிலவரப்படி, 'அயலான்' திரைப்படம் முதல் இடத்தையும் 'கேப்டன் மில்லர்' திரைப்படம் இரண்டாம் இடத்தையும், 'மிஷன் சாப்டர் 1' திரைப்படம் மூன்றாவது இடத்தையும், 'ஹனு-மான்' திரைப்படம் நான்காம் இடத்தையும், 'மெரி கிறிஸ்துமஸ்' திரைப்படம் ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளது.
- எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'புளூ ஸ்டார்'.
- இப்படம் வருகிற 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'புளூ ஸ்டார்' (Blue Star). இந்த படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார்.

'புளூ ஸ்டார்' திரைப்படம் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய நடிகை கீர்த்தி பாண்டியன், "நான் ஒரு இடத்தில் இருந்தேன் அப்போது இயக்குனர் ஜெயக்குமார் எனக்கு கதை அனுப்பினார். அதை படித்துவிட்டு அவரை சந்தித்தே ஆக வேண்டும் என்று நினைத்து என் இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு அவரை பிக்-அப் செய்துவிட்டு ஒரு தேநீர் கடையில் இருந்து பேசினோம். அந்த முதல் சந்திப்பில் அவர் என்னிடம் உங்கள் கதாபாத்திரம் பிடித்திருந்ததா? என்று தான் கேட்டார். எனக்கு அந்த கதையை படித்ததும் அதில் இருந்த கதாபாத்திரங்கள் ரொம்ப தாக்கத்தை கொடுத்தது.

இந்த படத்தில் கிரிக்கெட் என்பது ஒரு முக்கியமான விஷயம். பா.இரஞ்சித் அண்ணனின் பெயர் வந்தாலே அரசியல் பற்றி பேச ஆரம்பித்துவிட்டீர்களா என்று தான் கேட்கிறார்கள். அரசியல் பேசுனா என்ன தப்பு. நாம் அன்றாட வாழ்வில் அரசியல் இருக்கிறது. அதை பற்றி பேசவில்லை என்றால் அது இல்லை என்று அர்த்தம் இல்லை. அதை நீங்கள் பேச தவிர்க்கிறீர்கள் என்று அர்த்தம். பா.இரஞ்சித் தயாரிக்கும், இயக்கும் படங்களில் அவர் சொல்வது மிகவும் முக்கியமானது. அந்த விதத்தில் என்னுடைய குரலை இந்த படத்தில் பயன்படுத்துவது பெருமையாக நினைக்கிறேன்" என்று பேசினார்.
- வடிவேலு மற்றும் பகத் பாசில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்கள்.
- இந்த படத்தை இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்குகிறார்.
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'மாமன்னன்' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் வடிவேலு புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். மலையாள இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்கும் இந்த படத்தில் வடிவேலுவுடன் பகத் பாசில் நடிக்கிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 98-வது படமான இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். முழுக்க முழுக்க காமெடி காட்சிகளை கொண்டிருக்கும் இப்படத்திற்கு கலைசெல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.

மாரீசன் போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு 'மாரீசன்' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும் இது தொடர்பான போஸ்டரை வெளியிட்டுள்ளது. மான் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டரில் 'இன்னைக்கு வேட்டை ஆரம்பம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- அயோத்தி ராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
- ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை நேரலையை திருப்பூரில் இந்து முன்னணி ஏற்பாடு செய்திருந்தது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்று வரும் இந்த விழா நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை நேரலையை திருப்பூரில் இந்து முன்னணி ஏற்பாடு செய்திருந்தது. அதில் கலந்து கொண்ட நடிகர் ரஞ்சித் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இன்றைய தினம் பெருமை வாய்ந்த தினம். அனைவரும் எதிர்பார்த்த அற்புதமான நாள். இதில் கலந்து கொண்டது பெருமையாக உள்ளது. இது நம் பூமி. அதை ஒத்துக்கொள்ள வேண்டும்.மின்சாரம் துண்டிப்பு பிரச்சனை எல்லாம் தேவையற்றது. கண்டிக்கத்தக்கது. இறக்குமதி செய்யப்பட்ட சாமி இல்லை. இது என் தாய் உணர்வு. கடவுளுக்கு எல்லை இல்லை. இதனை எதிர்க்கும் அன்னிய கைக்கூலிகள் இருக்கத்தானே செய்கின்றனர்.
சுதந்திரத்திற்கு பல உயிர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட மதம் இந்து மதம். அனைத்து மதத்தையும் ஏற்கும் மதம் இந்து மதம். அடுத்த தலைமுறைக்கு இந்த பகுத்தறிவை ஊட்டியதே எதிர்ப்பவர்கள் தான். இவ்வாறு அவர் கூறினார்.

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் பேசியதாவது, 500 ஆண்டு காலம் போராடி இன்று வெற்றி விழா நடைபெறுகிறது. உலகம் முழுவதும் ராமர் பிரதிஷ்டை நிகழ்ச்சியை கண்டு களிக்கிறார்கள். நிறைய மாநிலங்களில் அரசு விடுமுறை அளித்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் இந்து விரோத அரசு நடைபெறுகிறது. இந்த அரசு வன்முறையை விரும்புகிறது. ராமரின் விளையாட்டு துவங்கி உள்ளது. இந்த தேர்தலில் ராமர் பாடம் புகட்டுவார். இவ்வாறு அவர் கூறினார்.
- நடிகர் விஷால் 'ரத்னம்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் 'ரத்னம்' திரைப்படத்தில் நடிகர் விஷால் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும், கவுதம் மேனன், சமுத்திரகனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தினை தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பாராஜின் 'ஸ்டோன் பெஞ்ச்' தயாரிப்பு நிறுவனத்தோடு ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படம் கோடையில் திரையரங்குகளில் வெளியாகுகிறது. இதையடுத்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் விஷால், பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "அன்புக்குரிய பிரதமர் நரேந்திர மோடி. உங்களின் மற்றொரு சாதனைக்கு வாழ்த்துகள். ஜெய் ஸ்ரீராம். ராமர் கோவில் இன்னும் பல ஆண்டுகள் நினைவுகூரப்படும். இந்த தருணத்திற்காக உயிர்த் தியாகம் செய்த அனைவருக்கும் தலைமுறை தலைமுறைகளாக இங்கு வந்து, அஞ்சலி செலுத்துவார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெறும் இந்த விழாவில் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
- ராமர் கோயிலில் இன்று கும்பாகிஷேக விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
- இந்த விழாவில் திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்று வரும் இந்த விழாவில், திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். நடிகர் ரஜினிகாந்த் நேற்றே விமானம் மூலம் அயோத்தி சென்றடைந்தார்.

இந்த நிலையில், நடிகர் சிரஞ்சீவி, தனது மகன் ராம்சரண் மற்றும் மனைவியுடன் இன்று அயோத்திக்கு வந்தார். விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், "இது மிகவும் மகிழ்ச்சிகரமான தருணம். இதை ஒரு அரிய தருணமாக நாங்கள் பார்க்கிறோம். என்னுடைய இஷ்ட தெய்வமான அனுமாரே என்னை நேரில் வந்து இந்த விழாவுக்கு அழைத்ததைப் போல உணர்கிறேன். இந்த பிரதிஷ்டை நிகழ்வைக் காண நாங்கள் மிகவும் பாக்கியம் செய்துள்ளோம்" என்று தெரிவித்தார்.
- சந்தானம் நடித்துள்ள திரைப்படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'.
- இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கியுள்ளார்.
'டிக்கிலோனா' படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'. இந்த படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தீபக் ஒளிப்பதிவு செய்ய சிவன் நந்தீஸ்வரன் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார். இப்படம் பிப்ரவரி 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியானது.

இந்நிலையில், 'வடக்குப்பட்டி ராமசாமி' திரைப்படத்தின் இப்படத்தின் முதல் பாடலான 'ஆபராக்கோ டாபராக்கோ' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. சந்தானம் பாடியுள்ள இந்த பாடலில் 'நம்பியாரு வேல பாத்து ஊர வாங்குவேன்' போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் 'இடிமுழக்கம்'.
- இந்த படத்தை இயக்குனர் சீனுராமசாமி இயக்கியுள்ளார்.
தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கிய சீனு ராமசாமி, அடுத்ததாக இயக்கி உள்ள படம் 'இடிமுழக்கம்'. ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக காயத்ரி சங்கர் நடித்துள்ளார். மேலும் சரண்யா பொன்வண்ணன், சுபிக்ஷா, செளந்தரராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 'இடிமுழக்கம்' படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படம் 22-வது பூனே சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய சினிமா பிரிவில் திரையிடப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது. இதனை கதாநாயகன் ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
#Idimuzhakkam premiered in Pune international film festival … and had a very good response …. Thanks @seenuramasamy and @SkymanFilms #mubarak … pic.twitter.com/t9UZJqJBSj
— G.V.Prakash Kumar (@gvprakash) January 22, 2024
- பிரசாந்த் வர்மா இயக்கத்தில் வெளியான படம் 'ஹனு-மான்'.
- இப்படம் தொடர்ந்து வசூலை குவித்து வருகிறது.
இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் வெளியான படம் 'ஹனு-மான்'. இதில் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடித்துள்ளார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தாசரதி சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கௌரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ண சவுரப் என மூன்று இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.நிரஞ்சன் ரெட்டி தயாரிப்பில் ஜனவரி 12-ஆம் தேதி பான் இந்தியா திரைப்படமாக வெளியான இப்படம் தொடர்ந்து வசூலை குவித்து வருகிறது.

ஹனு-மான் போஸ்டர்
'ஹனு-மான்' படத்தின் வசூலில் இருந்து அயோத்தி ராமர் கோவிலுக்கு நன்கொடை அளிக்கப்படும் என படக்குழுவினர் அறிவித்தனர். அதன்படி இதுவரை, விற்கப்பட்ட ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் ரூ. 5 நன்கொடையாக ஒதுக்கீடு செய்தனர். பிரீமியர் ஷோக்களில் மட்டும் ரூ.14 லட்சத்து 85,810 அளித்தனர். தற்போது, 53 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. இந்த நிலையில், மேலும் ரூ.2.66 கோடி நன்கொடை அளிப்பதாக அறிவித்துள்ளனர்.
- ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’.
- இந்த படத்தை நெல்சன் இயக்கியிருந்தார்.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான திரைப்படம் 'ஜெயிலர்'. இப்படம் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ரூ. 500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

'ஜெயிலர்' திரைப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினி, நெல்சன், அனிருத் ஆகியோருக்கு விலையுயர்ந்த கார்கள் மற்றும் காசோலைகளை வழங்கினார்.

அதுமட்டுமல்லாமல், 'ஜெயிலர்' படத்தில் பணியாற்றியவர்களுக்கு தங்க நாணயத்தை பரிசாக வழங்கினார். சமீபத்தில் இயக்குனர் நெல்சன் 'ஜெயிலர்' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாக செய்தி பரவி வந்தது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், 'ஜெயிலர்' படத்தின் இரண்டாம் பாகம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த பாகத்தில் சிலை கடத்தல்காரர்களிடம் ரஜினி மோதும் காட்சிகளும் அவர்களை அழிக்கும் காட்சிகளும் படமாக்கப்படவுள்ளதாகவும் இதற்கான திரைக்கதை அமைக்கும் பணியில் நெல்சன் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் 'கோலமாவு கோகிலா' திரைப்படத்தின் சில நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் நயன்தாரா இணைய வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- ஜெய் ஸ்ரீ ராம்' பாடல் வீடியோவாக வெளியாகி இருக்கிறது.
- பாடலின் இசை ஒருங்கிணைப்பை சி. சத்யா செய்துள்ளார்.
அயோத்தியில் ஜனவரி 22-ம் தேதி ராமர் கோவில் திறக்கப்படுவதை முன்னிட்டு பிரபல நடிகையும் நடனக் கலைஞருமான சுகன்யா 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற பாடலை எழுதி, இசையமைத்து பாடியுள்ளார்.
பக்தி ரசம் சொட்டும் வகையில் அமைந்துள்ள இந்த பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எளிதில் பாடும் வகையில் அமைந்துள்ளது. 'ஜெய் ஸ்ரீ ராம்' பாடல் வீடியோவாக வெளியாகி வைரல் ஆகி வருகிறது. பாடலின் வரிகள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட உள்ளன. இப்பாடலின் இசை ஒருங்கிணைப்பை சி. சத்யா செய்துள்ளார்.

பாடல் குறித்து பேசிய நடிகை சுகன்யா, "500 ஆண்டுகளுக்கு பிறகு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு திறக்கப்பட உள்ள நிலையில் நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது. கோவில் கட்டுமான பணிகள் தொடங்கியபோது என் நெற்றியில் நான் வரைந்த ஸ்ரீ ராமர் ஓவியம் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு பெற்றது. தற்போது கோவில் திறப்பு விழா நடைபெற உள்ள வேளையில் என்னுடைய சிறு பங்களிப்பாக இந்த பாடலை சமர்பிக்கிறேன்," என்று கூறினார்.
- பார்த்திபனின் டீன்ஸ் படம் விரைவில் வெளியாகிறது.
- இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.
இந்திய சினிமாவில் மூன்று தசாப்தங்களுக்கும் மேல் வெற்றிகரமாக இயங்கி வரும் நடிகர்-இயக்குநர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் 'டீன்ஸ்' எனும் முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளை மையமாகக் கொண்ட சாகச திரில்லர் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.
கால்டுவெல் வேள்நம்பி, டாக்டர் பாலசுவாமிநாதன், டாக்டர் பின்ச்சி ஸ்ரீநிவாசன் மற்றும் ரஞ்சித் தண்டபாணி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். பயாஸ்கோப் டிரீம்ஸ் எல் எல் பி மற்றும் அகிரா ப்ரொடக்ஷன்ஸ் பேனரில் 'டீன்ஸ்' தயாராகியுள்ளது. கீர்த்தனா பார்த்திபன் அக்கினேனி இதன் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்.

இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார் . ஒளிப்பதிவு பணிகளை காவ்மிக் ஆரி மேற்கொண்டுள்ளார். இவர்களுடன் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் முதல் முறையாக இணைந்துள்ளார். இமான் மற்றும் காவ்மிக் ஆரியின் சிறந்த படைப்புகளில் முன்னணி வகிக்கும் வகையில் இந்த படம் உருவாகியுள்ளது. படத்தொகுப்புக்கு ஆர். சுதர்சன் பொறுப்பேற்றுள்ளார்.
இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் முந்தைய படைப்பான 'இரவின் நிழல்' தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு அங்கீகாரங்களையும் பெற்று சாதனை படைத்த நிலையில் அவரது புதிய படம் 'டீன்ஸ்' புதிய முத்திரையை பதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.






