பொங்கல் ரேஸில் முதல் இடம் பிடித்த அயலான்

’கேப்டன் மில்லர்’ திரைப்படம் முதல் இடத்தை பிடித்தது.‘அயலான்’ திரைப்படம் இரண்டாவது இடத்தை பிடித்தது.
பொங்கல் ரேஸில் முதல் இடம் பிடித்த அயலான்
Published on

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த ஜனவரி 12-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வெளியான முதல் வாரத்தில் முதல் இடத்தை பிடித்தது.

இதையடுத்து, ஆர். ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' திரைப்படம் இதே தேதியில் வெளியாகி இரண்டாம் இடத்தை பிடித்தது. தொடர்ந்து, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான 'மிஷன் சாப்டர் -1' மூன்றாவது இடத்தையும், ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த 'மெரி கிறிஸ்துமஸ்' நான்காம் இடத்தையும், இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடித்த 'ஹனு-மான்' ஐந்தாம் இடத்தையும் பிடித்தது.

இந்நிலையில், இரண்டாவது வாரம் நிலவரப்படி, 'அயலான்' திரைப்படம் முதல் இடத்தையும் 'கேப்டன் மில்லர்' திரைப்படம் இரண்டாம் இடத்தையும், 'மிஷன் சாப்டர் 1' திரைப்படம் மூன்றாவது இடத்தையும், 'ஹனு-மான்' திரைப்படம் நான்காம் இடத்தையும், 'மெரி கிறிஸ்துமஸ்' திரைப்படம் ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com