என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • மூத்த அரசியல்வாதியும், வக்கீலுமான சி சங்கரன் நாயர் வாழ்க்கை வரலாற்று படத்தில் அனன்யா பாண்டே நடித்து வருகிறார்.
    • வாழ்க்கையில் சொல்லப்படாத பல்வேறு சம்பவங்களை வெளிக்காட்டும் கண்ணாடியாக இருக்க ஆசைப்படுவதாக அனன்யா பாண்டே தெரிவித்துள்ளார்.

    பாலிவுட் சினிமாவின் இளம் கவர்ச்சி நடிகை அனன்யா பாண்டே. 'ஸ்டூடன்ட் ஆப் தி இயர் 2', 'காலி பீலி', 'கெஹ்ரையான்', 'லைகர்', 'டிரீம் கேர்ள்-2 புல்' உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது 'கண்ட்ரோல்' என்ற படத்தில் நடித்துள்ளார். மூத்த அரசியல்வாதியும், வக்கீலுமான சி சங்கரன் நாயர் வாழ்க்கை வரலாற்று படத்திலும் நடித்து வருகிறார்.

    சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

    பொதுவாகவே சவாலான வேடங்களில் நடித்து கவனம் ஈர்த்து வரும் அனன்யா பாண்டே, தற்போது முன்னாள் நடிகைகள் சிலரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். அந்த வகையில் பாலிவுட் முன்னாள் நடிகைகள் மதுபாலா மற்றும் ரேகா ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க விரும்புவதாக அனன்யா பாண்டே தெரிவித்துள்ளார். அவர்களின் வாழ்க்கையில் சொல்லப்படாத பல்வேறு சம்பவங்களை வெளிக்காட்டும் கண்ணாடியாக இருக்க ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

    மதுபாலா, ரேகா ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று படங்களை எடுக்க விரும்புவதாக கூறிய பல இயக்குனர்களின் கவனம் தற்போது அனன்யா பாண்டே மீது திரும்பி இருக்கிறது.

    • 2014-ம் ஆண்டு வெளியான ‘வடகறி' படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் சன்னி லியோன் அறிமுகமானார்.
    • உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் சன்னி லியோனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

    ஆபாச படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன், ஒரு கட்டத்தில் அதிலிருந்து முழுமையாக வெளியே வந்தார். பின்னர் பாலிவுட் சினிமாவில் நுழைந்த அவர் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கிறங்கடித்தார். 2014-ம் ஆண்டு வெளியான 'வடகறி' படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் சன்னி லியோன் அறிமுகமானார்.

    அதனைத் தொடர்ந்து 'மதுர ராஜா', 'ஓ மை கோஸ்ட்', 'தீ இவன்' ஆகிய படங்களில் சன்னி லியோன் நடித்தார். மேலும் சில படங்களில் அவர் நடித்து வருகிறார். ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டு வரும் சன்னி லியோன் தற்போது தொழில் அதிபராகவும் மாறி இருக்கிறார். உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் அவர் புதிய ஓட்டல் ஒன்றை தொடங்கி இருக்கிறார்.

    அட்டகாசமான பார் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொண்ட அந்த நட்சத்திர ஓட்டலுக்கு 'சிக்கா லோகா' என்று பெயர் வைத்துள்ளனர். விரைவில் இந்தியா முழுவதும் இதன் கிளைகளை தொடங்கவும் சன்னி லியோன் திட்டமிட்டுள்ளார்.

    நடிகைகள் பலரும் நடிப்பை தாண்டி பல்வேறு தொழில்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில், பிரபல கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் ஓட்டல் தொழிலில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் சன்னி லியோனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

    • ரூ. 25 லட்சம் தொகையை நடிகர் கார்த்தி வழங்கினார்.
    • உதவிவும் எண்ணம் கொண்ட பலர் இருக்கிறார்கள்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருபவர் கார்த்தி. சமீபத்தில் இவர் நடித்த 25-வது படம் வெளியானது. இந்த படம் தொடர்பான விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, 25-வது பட வெளியீட்டை கொண்டாடும் வகையில் ரூ. 1 கோடி வரை உதவித் தொகை வழங்குவதாக அறிவித்து இருந்தார்.

    நடிகர் கார்த்தியின் 25-வது பட வெளியீட்டை ஒட்டி, அவரது ரசிகர்கள் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கியதோடு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர். அதன்படி, இன்று நடைபெற்ற விழாவில் 25 சமூக செயற்பாட்டாளர்களின் செயல்களை கெளரவப்படுத்தி, தலா 1 லட்சம் வீதம் ரூ. 25 லட்சம் தொகையை நடிகர் கார்த்தி வழங்கினார்.

     


    இந்த விழாவில் பேசிய அவர், "உதவி பண்ண வேண்டும் என்கிற எண்ணம் கொண்ட பல பேர் இருக்கிறார்கள். ஆனால் யார் மூலமாக உதவி செய்வது என்பது அவர்களுக்கு தெரியாமல் இருக்கிறது. பலரிடம் பணம் இருக்கிறது நேரம் இல்லை."

    "அப்படி தங்களது பொன்னான நேரத்தை செலவழித்து உதவி தேவைப்படுபவர்களை தேடிச் சென்று உதவி செய்யும் தன்னார்வலர்கள் இங்கே நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம் என்று சொல்லலாம். இதன் மூலம் இவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள, உதவி செய்ய மனம் படைத்த வசதியானவர்களுக்கு இவர்களைப் பற்றி தெரிய வரும். இந்த பணி இன்னும் தொடரும்," என்று தெரிவித்தார்.

    • நடிகர் விஜய் நேற்று தனது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளதாக அறிவித்தார்.
    • 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே நம் இலக்கு

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறார். அரசியல் கட்சிகளில் இருப்பது போல் இயக்கத்தில் பல அணிகளும் உருவாக்கப்பட்டு மக்கள் பணிகள் செய்யப்பட்டு வந்தது. சமீபத்தில் புயல் மழையால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.


    இதை தொடர்ந்து விஜய் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவித்தொகை மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கினார். இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் நேற்று தனது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே நம் இலக்கு என்று குறிப்பிட்டிருந்தார். இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


    இந்நிலையில், விஜய்யின் அரசியல் வருகை குறித்து நடிகர் டி. ராஜேந்திரனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, "அரசியல் என்பது பொது வழி அந்த பொது வழியில் யார் வேண்டுமானாலும் வரலாம். யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். விஜய்க்கு வாழ்த்துகள். அவரைப் பற்றி பண்ண விரும்பவில்லை விமர்சனம், நான் கடவுளிடம் கேட்பது தமிழ்நாட்டு மக்களுக்கு விமோச்சனம்" என்று பேசினார்.

    • இத்திரைப்படத்தில் வில்லனோ, சண்டை காட்சிகளோ கிடையாது
    • பெரும்பாலான பாடல்களை எஸ்பிபி மற்றும் லதா மங்கேஷ்கர் பாடியிருந்தனர்

    கடந்த வருடம் வெளியான திரைப்படங்களில் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் மிகப்பெரும் வெற்றி பெற்றவைகளில் பெரும்பாலானவை "ஆக்ஷன் திரில்லர்" ரகத்தை சேர்ந்தவை.

    பெரிய ஹீரோ, மிரட்டும் வில்லன் கதாபாத்திரம் மற்றும் அதிர வைக்கும் பிரமாண்ட சண்டை காட்சிகள் இடம் பெற்றால்தான் திரைப்படங்களை காண இளைஞர்கள் திரையரங்குகளுக்கு வருவதாகவும், வினியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் பல ஊடகங்களில் கருத்து தெரிவிக்கின்றனர்.

    இவை இல்லாத திரைப்படங்கள் ஓரளவு வசூலை செய்தாலும் பெரும் வெற்றியை பெற முடிவதில்லை.

    முதல்முதலாக ரூ.200 கோடி வசூல் செய்த இந்திய திரைப்படத்தில் சண்டை, வன்முறை, இரட்டை அர்த்த நகைச்சுவை, ஆணாதிக்க காட்சிகள் எதுவும் இன்றி மென்மையான குடும்ப கதையை களமாக கொண்டது.


    1994ல் வெளிவந்த, ராஜ்ஸ்ரீ புரொடக்ஷன்ஸ் (Rajshri Productions) தயாரிப்பில் சூரஜ் பர்ஜாத்யா எழுதி, இயக்கிய இந்தி திரைப்படமான, "ஹம் ஆப்கே ஹை கோன்" (Hum Aapke Hain Koun), இந்தியாவில் ரூ.200 கோடிக்கும் மேல் (ரூ.210 கோடி) வசூல் செய்த முதல் திரைப்படமாகும்.

    1994 ஆகஸ்ட 4 அன்று தெற்கு மும்பை பகுதியின் லிபர்டி திரையரங்கில் வெளியாகி அங்கு மட்டுமே 100 வாரங்களுக்கும் மேலாக ஓடியது.

    குறைந்த அளவு திரையரங்குகளில் வெளியானாலும், வாய்மொழி விளம்பரத்திலும், குடும்பம் குடும்பமாகவே பார்க்க சென்ற மக்களின் அமோக வரவேற்பிலும், பிற திரையரங்குகளிலும் வெளியிடப்பட்டது.


    தமிழில் "நான் உங்களுக்கு யாராம்?" எனும் பொருள்படும் தலைப்பில் வெளியான இத்திரைப்படத்தின் தயாரிப்பு செலவு ரூ.6 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

    "ஹம் ஆப்கே ஹை கோன்" திரைப்படத்தில் சல்மான் கான் கதாநாயகனாகவும், மாதுரி தீட்சித் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர்.

    பிரேம் எனும் இளைஞரும் அவரது அண்ணியின் தங்கையான நிஷாவும் ஒருவரையொருவர் விரும்புகின்றனர். அவர்கள் எண்ணம் நிறைவேறியதா என்பதை குடும்ப கொண்டாட்டங்களின் பின்னணியில் கூறும் ஒரு நேர்த்தியான கதையமைப்பே இப்பட வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

    ராம்லட்சுமண் இசையில் 14 பாடல்கள் இடம் பெற்றிருந்தன. பெரும்பாலான பாடல்களை எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் லதா மங்கேஷ்கர் பாடியிருந்தனர்.


    இனிமையான பாடல்கள் இப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம்.

    தற்போது இந்தியாவின் முன்னணி பாலிவுட் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வரும் சல்மான் கான் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் ஒரு சண்டை காட்சி கூட கிடையாது என்பது மற்றுமொரு ஆச்சரியம் அளிக்கும் தகவல்.

    இதில் பிரேம் வேடத்தில் நடிக்க முதலில் தயாரிப்பாளர்கள் தேர்வு செய்த நடிகர், அமீர் கான். ஆனால், இக்கதை தன்னை பெரிதாக ஈர்க்கவில்லை என அவர் கூறியதால், வாய்ப்பு சல்மான் கானுக்கு சென்றது.

    "ஹம் ஆப்கே ஹை கோன்" பட வசூல் சாதனையை, சுமார் 15 வருடங்கள் கடந்து அமீர் கான் கதாநாயகனாக நடித்து வெளியான "த்ரீ இடியட்ஸ்" ரூ.300 கோடி வசூல் செய்து முறியடித்தது.

    • மணிகண்டன் நடித்துள்ள திரைப்படம் ‘லவ்வர்’.
    • இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    8 தோட்டாக்கள், விக்ரம் வேதா, காலா, ஏலே, ஜெய்பீம், சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் மணிகண்டன். சமீபத்தில் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியான குட் நைட் திரைப்படத்தில் மோகன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து பலரையும் கவர்ந்தார்.


    இவர் தற்போது அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கியுள்ள 'லவ்வர்' (lover) திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் ஸ்ரீகெளரி பிரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. காதலர்களுக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.



    • நடிகர் விஜய் 'தமிழக வெற்றி கழகம்' கட்சியை தொடங்கியுள்ளார்.
    • இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறார். அரசியல் கட்சிகளில் இருப்பது போல் இயக்கத்தில் பல அணிகளும் உருவாக்கப்பட்டு மக்கள் பணிகள் செய்யப்பட்டு வந்தது. சமீபத்தில் புயல் மழையால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.


    இதை தொடர்ந்து விஜய் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவித்தொகை மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கினார். இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் நேற்று தனது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே நம் இலக்கு என்று குறிப்பிட்டிருந்தார். இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


    இந்நிலையில், நடிகர் சமுத்திரகனி, விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "திரை உலகில் உச்சத்தின் உச்சத்தில் இருக்கும்போது மக்கள்பணியாற்ற வந்த தைரியமான முதல் மனிதன் பிரபஞ்சம் உம்மை வெல்லச் செய்யட்டும்.. உம் கனவுகள் மெய்ப்படட்டும். வாழ்த்துகள் சகோதரா" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடித்த திரைப்படம் 'சிங்கப்பூர் சலூன்'.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடித்த திரைப்படம் 'சிங்கப்பூர் சலூன்'. இந்த படத்தை 'ரவுத்திரம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'காஷ்மோரா' உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்கியுள்ளார். ஆர்.ஜே.பாலாஜி இதில் சிகையலங்கார நிபுணராக நடித்துள்ளார்.


    இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ளார். இப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் ஜீவா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். 'சிங்கப்பூர் சலூன்' திரைப்படம் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.


    இதையடுத்து இப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் பேசிய ஆர்.ஜே.பாலாஜி, "இந்தப் படம் வெற்றி அடைந்துள்ளதில் மகிழ்ச்சி. இரண்டாம் பாதியில் அரவிந்த் சாமி கதாபாத்திரத்தைப் பார்த்துவிட்டு இவரைப் போல ஒருவர் நம் வாழ்வில் வந்துவிட மாட்டார்களா என நிறையப் பேர் சொன்னார்கள். எனது சிறந்த நடிப்பைக் வெளிக்கொண்டு வந்த இயக்குனர் கோகுலுக்கு நன்றி. 'எல்.கே.ஜி 2', 'மூக்குத்தி அம்மன் 2' போன்ற ஐடியாவும் உண்டு. அதையும் ஐசரி சாரிடம்தான் செய்வேன்" என்று பேசினார்

    • கார்ல் வெதர்ஸ் ஒரு தொழில்முறை கால்பந்து வீரராக திகழ்ந்தவர்
    • ஸ்டாலோன் மற்றும் ஸ்வார்ஸ்னேக்கர் ஆகியோருடன் இணையாக நடித்தவர்

    1976ல் ஹாலிவுட்டின் ஹீரோ சில்வெஸ்டர் ஸ்டாலோன் கதாநாயகனாக நடித்து வெளிவந்த திரைப்படம், ராக்கி (Rocky).

    ஸ்டாலோனை புகழேணியின் உச்சாணிக் கொம்பில் நிறுத்திய இத்திரைப்படத்தில், அப்போல்லோ க்ரீட் எனும் பிரபல ஹெவிவெயிட் குத்துச்சண்டை வீரரை, ராக்கி பல்போவா எனும் உள்ளூர் வீரர் போட்டியிட்டு வெல்வார். இதில் ராக்கி பல்போவா கதாபாத்திரத்தில் சில்வெஸ்டர் ஸ்டாலோன் நடித்திருந்தார்.

    அப்போல்லோ க்ரீட் கதாபாத்திரத்தில் கார்ல் வெதர்ஸ் (Carl Weathers) எனும் அமெரிக்க தொழில்முறை கால்பந்து வீரர் சிறப்பாக நடித்திருந்தார்.

    ராக்கி திரைப்பட நடிகர்களுக்கான தேர்வின் போது (audition), கார்ல் வெதர்ஸ், அங்கு உடன் நடித்த ஸ்டாலோனின் நடிப்பில் உள்ள குறைகளை வெளிப்படையாகவும், துணிச்சலாகவும் விமர்சித்தார்.

    கார்ல் வெதர்ஸின் விமர்சனங்களை நேர்மறையாக எடுத்து கொண்ட சில்வெஸ்டர் ஸ்டாலோன், கார்ல் வெதர்ஸ்தான் "அப்போல்லோ க்ரீட்" கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் என அவரை தேர்ந்தெடுத்தார். அப்படத்தில் இருவருக்குமான குத்து சண்டை காட்சிகளில் சில இடங்களில், ஒருவரையொருவர் நிஜமாக தாக்கி கொள்ள நேர்ந்தது குறிப்பிடத்தக்கது.


    இதை தொடர்ந்து ராக்கி-2, ராக்கி-3 மற்றும் ராக்கி-4 என 4 பாகங்களிலும் கார்ல் வெதர்ஸ், ஸ்டாலோனுடன் நடித்து புகழ் பெற்றார்.

    மேலும், 1987ல் வெளியான அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் கதாநாயகனாக நடித்த ப்ரிடேட்டர் (Predator) திரைப்படத்தில் அர்னால்டுக்கு இணையான கதாபாத்திரத்திலும் நடித்து புகழ் பெற்றார்.


    கார்ல் வெதர்ஸ், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில், தனது 76-வது வயதில் பிப்ரவரி 1 அன்று கார்ல் வெதர்ஸ் காலமானார்.

    "பிப்ரவரி 1 அன்று உறக்கத்திலேயே கார்ல் வெதர்ஸின் உயிர் பிரிந்தது. அவர் ஒரு நல்ல குடும்ப தலைவனாக வாழ்ந்தார். விளையாட்டிலும், கலைத்துறையிலும் தனி முத்திரையை பதித்ததை தாண்டி ஒரு மிகச் சிறந்த மனிதராக திகழ்ந்தார்" என கார்ல் வெதர்ஸின் குடும்பம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஸ்டாலோன் உட்பட பல ஹாலிவுட் பிரபலங்கள் கார்ல் வெதர்ஸ் மரணத்திற்கு வருத்தம் தெரிவித்து சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • இயக்குனர் விக்னேஷ் சிவன் 'எல்.ஐ.சி' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் விக்னேஷ் சிவன் 'எல்.ஐ.சி' (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) என்ற புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூர் ஈஷா யோகா மையத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில் 'எல்.ஐ.சி' படத்தின் படப்பிடிப்பு தள ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் ஷோஃபா விற்கும் வீடியோ மூலம் சமூக வலைதத்தில் பிரபலமான 'Sofa Boy' சிறுவன் முகமது ரசூல் படக்குழுவினரை விற்பது போன்று காமெடி செய்யும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த வீடியோவில் 'எல்.ஐ.சி' டீம் நியூ பப்ளிசிட்டி மேனேஜர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


    • நடிகை பூனம் பாண்டே உயிரிழந்ததாக அவரது சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவிடப்பட்டிருந்தது.
    • இதை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

    பாலிவுட் நடிகையான பூனம் பாண்டே, பிரபல மாடல் அழகி ஆவார். இவர் 2013-ஆம் ஆண்டு 'நஷா' எனும் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். பின்னர், "லவ் இஸ் பாய்சன்" எனும் கன்னட படத்திலும், "மாலினி அண்ட் கோ" எனும் தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், இவர் 'பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார்.

    நடிகை பூனம் பாண்டே சமூக வலைதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு சர்ச்சையிலும் சிக்கியுள்ளார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா கோப்பையை வென்றால் நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.


    நடிகை பூனம் பாண்டே கடந்த 2020-ஆம் ஆண்டு தன் காதலர் சாம் பாம்பேவை திருமணம் செய்துகொண்டார். ஆனால் ஒரு மாதத்திலேயே தன் கணவர் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், குடும்ப வன்முறை செய்ததாகவும் புகாரளித்தார். இதனைத் தொடர்ந்து இவர்களது திருமண வாழ்வு முடிவுக்கு வந்தது.

    இதைத்தொடர்ந்து, சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வந்த பூனம் பாண்டே, தனது 32 வயதில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக அவரது சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவிடப்பட்டிருந்தது. இதை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

    இந்நிலையில், நடிகை பூனம் பாண்டே தான் உயிருடன் இருப்பதாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். மேலும், அதில், "உங்கள் அனைவருடனும் ஒரு முக்கியமான செய்தியை பகிர்ந்து கொள்ளும் நிர்ப்பந்தத்தில் நான் இருக்கிறேன்.


    ஆம், "நான் இருக்கிறேன்" - உயிருடன். ஊடகங்களில் வந்தது போல் பெண்களை தாக்கும் கர்ப்பப்பை புற்றுநோய் என் உயிரை பலி வாங்கவில்லை; ஆனால், இந்நோய் குறித்த விழிப்புணர்வு இல்லாத எண்ணற்ற பெண்களை நாள்தோறும் அது பலி வாங்குகிறது.

    கர்ப்பப்பை புற்றுநோய், பிற புற்றுநோய்களை போல் அல்ல; முற்றிலும் தடுக்க முடியும். ஹெச்பிவி (HPV) தடுப்பூசி மற்றும் முன்னரே கண்டறிதல் சோதனைகள் ஆகியவற்றில் இதற்கு தீர்வு உள்ளது. இந்நோயினால் இனி வரும் காலங்களில் எவரும் உயிரிழக்காமல் இருக்க நம்மிடையே இன்று மருத்துவ வழிமுறைகள் உள்ளன. நாம் ஒன்றிணைந்து, பெண்ணினத்தின் மீது இந்த கொடிய உயிர்கொல்லி நோய் ஏற்படுத்தும் தாக்கத்திற்கு முடிவை கொண்டு வருவோம்" என்று கூறினார்.


    • மணிவர்மன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஒரு நொடி’.
    • இந்த படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம் இசையமைக்கிறார்.

    அறிமுக இயக்குனர் மணிவர்மன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஒரு நொடி'. இந்த படத்தில் 'தொட்டால் தொடரும்' பட நாயகனும் 'அயோத்தி' படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்த தமன் குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ கருப்பையா, தீபா ஷங்கர், சிவரஞ்சனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    மதுரை அழகர் புரொடக்ஷன் கம்பெனி மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம் இசையமைக்கிறார். கே.ஜி.ரத்தீஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு எஸ்.குரு.சூர்யா படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.


    பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், பாஃப்டா திரைப்படக் கல்லூரி நிறுவனரும், 'காற்றின் மொழி', 'இவன் தந்திரன்', 'கோடியில் ஒருவன்', 'கொலைகாரன்' போன்ற படங்களை வெளியிட்ட விநியோகஸ்தருமான தனஞ்செயன் இப்படத்தை முன்னின்று வழங்குகிறார்.


    'ஒரு நொடி' படத்தின் படப்பிடிப்புகள் முழுமையடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்ற நிலையில், வெகுவிரைவில் திரையில் இப்படத்தை காணலாம். படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் குறிப்பிட்ட இடைவெளியில் வெளியிடப்படும்.

    ×