என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகர் விஜயகாந்த் அண்மையில் காலமானார்.
    • இவரது உடல் தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கான இடத்தை பிடித்தவர் விஜயகாந்த். கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் அரசியல் மற்றும் சினிமாவில் இருந்து விலகினார். இவர் கடந்த டிசம்பர் 28-ந் தேதி உடல் நலக்குறைவினால் காலமானார்.


    இவரது உடல் தேமுதிக அலுவலகத்தில் டிசம்பர் 29-ந் தேதி 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்று முதல் பல பிரபலங்கள், தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலர் தினந்தோறும் அங்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகை ரம்பா மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இல்லத்தில் அவரது உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

    • இயக்குனர் அட்லீ புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார்.
    • இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.

    இயக்குனர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் 'விடி18' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்தி திரைப்படத்தில் பாலிவுட் நட்சத்திர நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகை வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.


    கிரண் கவுஷிக் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். ஆக்ஷன் எண்டர்டெய்னராக தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சினி ஒன் ஸ்டுடியோஸ் மற்றும் ஏ ஃபார் ஆப்பிள் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் முராத் கெடானி, ஜோதி தேஷ்பாண்டே மற்றும் பிரியா அட்லீ ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    பேபி ஜான் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'விடி 18' படத்திற்கு 'பேபி ஜான்' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. இது தொடர்பான போஸ்டரை தயாரிப்பாளர் அட்லீ தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போஸ்டரை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


    • ஒரு இயக்குனராக என்னையும், அவரையும் உற்சாகப்படுத்தும் ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்பதே எனது எண்ணம்.
    • சிவராஜ் குமார் நடிக்கும் ஒரு படத்தின் மூலம் நான் திரையுலகில் நுழைய வேண்டும் என்று விரும்பினேன்.

    'சப்த சாகரதாச்சே எல்லோ சைட் ஏ' மற்றும் 'சைட் பி' படங்களின் வெற்றி இயக்குனர் ஹேமந்த் எம் ராவ், நடிகர் சிவராஜ் குமார் உடன் இணைந்து அடுத்த படத்தை துவங்குகிறார். இப்படத்தினை வி.ஜே.எப் - வைஷாக் ஜே பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில், டாக்டர் வைஷாக் ஜே கவுடா தயாரிக்கிறார்.

    இயக்குனர் ஹேமந்த் எம் ராவ் கூறியதாவது:-

    ஒரு நடிகராக சிவராஜ் குமார் சாரின் அனுபவம் மிகப்பெரியது, அவர் தனது முழு வாழ்க்கையிலும் மாறுபட்ட பல பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். ஒரு இயக்குனராக என்னையும், அவரையும் உற்சாகப்படுத்தும் ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். அவருடன் பணியாற்றுவது எனக்கு கிடைத்திருக்கும் ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு.



    மேலும் இயக்குனர் தனது சமூக வலைதளப்பக்கத்தில், 'எனது 5-வது படத்தில் லெஜண்ட் சிவராஜ்குமாருடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் பெருமையாக உள்ளது. நான் எப்போதுமே ஒவ்வொரு படத்தையும் என்னுடைய முதல் மற்றும் கடைசிப் படம் போல நினைத்தே பணியாற்றிவருகிறேன். வைஷாக் ஜே கவுடாவுடன் இந்த பயணத்தை மேற்கொள்வதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

    அறிமுக தயாரிப்பாளரான வைஷாக் ஜே கவுடா கூறியதாவது:-

    'சிறுவயதில் இருந்தே நான் சிவண்ணாவின் தீவிர ரசிகன். அவர் நடிக்கும் ஒரு படத்தின் மூலம் நான் திரையுலகில் நுழைய வேண்டும் என்று விரும்பினேன். எங்கள் முதல் திரைப்படத்திற்காக ஹேமந்த் எம் ராவ் மற்றும் சிவண்ணாவுடன் இணைந்து பணியாற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எல்லோருக்கும் பெருமை சேர்க்கும் ஒரு படத்தை வழங்க வேண்டிய பொறுப்பு, இப்போது எங்களுக்கு பத்து மடங்காக அதிகரித்துள்ளது.

    படத்தின் ஜானர் மற்றும் நடிகர்கள் என படத்தின் தகவல்கள் குறித்து எந்த விஷயத்தையும் படக்குழுவினர் பகிரவில்லை. கூடிய விரைவில் ஒவ்வொன்றாக படம் குறித்த தகவல்கள் வெளியிடப்படும் என இயக்குனர் ஹேமந்த் எம் ராவ் தெரிவித்துள்ளார்.

    • நீங்கள் சொல்லுற விஷயத்தில் ஏதாவது மாற்றம் வரப்போகிறதா?
    • உங்களுக்கு நல்ல நோக்கம் இருக்கலாம்.

    நடிகர் விஜய் 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கி உள்ளது குறித்து நடிகர் அரவிந்த்சாமி கருத்து தெரிவித்து உள்ளார். அப்போது அவர் கூறியதாவது:

    நான் ரஜினி, கமல் சாரின் பெரிய ரசிகன், விஜயை ரொம்ப பிடிக்கும் என்பதற்காக ஓட்டு போடக்கூடாது. நான் ஓட்டு போடமாட்டேன்.

    மற்றவர்கள் எப்படி பண்றாங்க என்று நான் சொல்லவில்லை. நீங்கள் சொல்லுற விஷயத்தில் ஏதாவது மாற்றம் வரப்போகிறதா?.

    உங்களால் அது முடியுமா? உங்களின் நல்ல எண்ணங்கள், நோக்கம் அது எனக்கு முதலில் ரீச்-ஆக வேண்டும். நீங்கள் ஒரு பெரிய ஆக்டர். நீங்கள் நல்ல கவர்ன்மென்ட் பாலிசியை எல்லாம் சொல்ல என்ன தகுதி இருக்கிறது என்று நான் எப்படி நம்புவது. உங்களுக்கு நல்ல நோக்கம் இருக்கலாம். நல்ல எண்ணங்கள் இருக்கலாம்.

     


    இவ்வளவு நாள் நல்ல ஹீரோவாக இருந்திருக்கிறேன். சினிமாவில் எல்லோரையும் காப்பாற்றி இருக்கிறேன் என்ற நம்பிக்கையில் திரும்பவும் மக்களை காப்பாற்ற போகிறேன் என்று ஒரு 'ஸ்டாருக்கு' வருகிற 'மைண்ட் செட்' உங்களுக்கு இருக்கலாம்.

    ஆனால் நீங்கள் ஒரு மாநிலத்தை ஆள்வதற்கு, ஒரு பாலிசியை உருவாக்குவதற்கு என்ன படிச்சு இருக்கீங்க. நீங்க பண்ண முடியாது என்று நான் சொல்லவில்லை. ஆனால் பண்ண முடியும். மக்களுக்கு நல்லது செய்ய, புதிய திட்டங்கள் உருவாக்க ஒரு தலைமைத்துவ பண்பு எங்கே இருக்கிறது.

    இவ்வாறு அரவிந்த் சாமி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

    • நடிகர் பாலா பல சேவைகளை செய்து வருகிறார்.
    • மருத்துவத்திற்காக இலவச ஆட்டோ வழங்கினார்.

    சின்னத்திரையில் தனது காமெடியால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் பாலா. 'கலக்கப்போவது யாரு' எனும் நிகழ்ச்சி மூலம் திரையுலகிற்கு அறிமுகமான பாலா 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றார். தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


    இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல குழந்தைகளின் படிப்பிற்கு உதவி வருகிறார். மேலும், சமூக சேவையும் செய்து வருகிறார். மருத்துவ வசதி இல்லாமல் இருக்கும் கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வழங்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் மருத்துவத்திற்காக இலவச ஆட்டோ சேவையும் வழங்கி வருகிறார்.

    இந்நிலையில் நடிகர் பாலாவிடம் விஜய் கட்சி தொடங்கியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, "விஜய் சார் பீக்கில் இருப்பவர், நான் வீட்டில் இருப்பவன். விஜய் சார் பற்றி பேசுவதற்கு எனக்கு தகுதி இல்லை. அரசியலில் சேரும் அளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை. எனக்கு பதவி ஆசை இல்லை. அந்த அளவிற்கு மூளையும் இல்லை.


    எனக்கு சேவை மட்டும் போதும். அரசியலில் தாக்கு பிடிக்கும் அளவிற்கு எனக்கு அறிவு இல்லை. நான் பத்து ஆம்புலன்ஸ் தருவதாக கூறினேன், அதில் ஐந்து முடித்துவிட்டேன் மீதியையும் கொடுத்துவிடுவேன். இது முடித்துவிட்டு இன்னொரு இலக்கு இருக்கிறது அதை நோக்கி பயணிப்பேன். இதில் எந்த விதமான அரசியல் நோக்கம் இல்லை, அன்பின் ஏக்கம் மட்டுமே இருக்கிறது" என்று கூறினார்.


    • ஆண்டுதோறும் கிராமி விருது வழங்கப்பட்டு வருகிறது.
    • சக்தி ஆல்பத்தில் மொத்தம் 8 பாடல்கள் உள்ளன.

    இசை உலகில் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் கிராமி விருதுகள் 1959-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதானது உலகம் முழுவதும் சிறந்த பாடல், ஆல்பம், இசையமைப்பாளர்கள், பாடல் ஆசிரியர்கள் உள்ளிட்ட இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இந்தியாவின் சக்தி ஆல்பத்திற்கு கிராமி விருது வழங்கப்பட்டுள்ளது. சங்கர் மகாதேவன், செல்வகணேஷ் விநாயக்ராம், கணேஷ் ராஜகோபாலன், ஜாகீர் உசேன் ஆகியோர் அடங்கிய இசைக்குழு இணைந்து உருவாக்கிய சக்தி ஆல்பத்தில் மொத்தம் 8 பாடல்கள் உள்ளன.


    இந்த ஆல்பத்திற்கு உயரிய கிராமி விருது வழங்கப்பட்டுள்ளது. திஸ் மொமண்ட் ஆல்பத்தில் இடம்பெற்றுள்ள சக்தி இசைக்குழுவின் பாடல்களுக்கு உலகின் சிறந்த ஆல்பம் பிரிவில் கிராமி விருது கிடைத்துள்ளது. விருதுபெற்ற சக்தி இசைக்குழுவுக்கு திரையுலகினர் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "இந்தியாவிற்கு கிராமி மழை பொழிகிறது" என்று குறிப்பிட்டு விருது வென்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


    • நடிகர் சிரஞ்சீவி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இந்த படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவர் நடிப்பில் வெளியான 'வால்டர் வீரய்யா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் வசூலையும் குவித்தது.


    இதைத்தொடர்ந்து சிரஞ்சீவின் 156-வது படத்தை இயக்குனர் மல்லிடி வசிஷ்டா இயக்குகிறார். இந்த படத்திற்கு 'விஸ்வம்பரா' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

    பேன்டஸி ஜானரில் உருவாகும் இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பிரமாண்டமாக உருவாகும் இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்க சோட்டா கே நாயுடு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் 2025-ஆம் ஆண்டு ஜனவரி 10-ஆம் இப்படத்தை வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.



    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'விஸ்வம்பரா' திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகை திரிஷா இணைந்துள்ளார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பகிர்ந்து அறிவித்துள்ளார். மேலும், 18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சிரஞ்சீவியுடன் நடிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

    2006-ஆம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான 'ஸ்டாலின்' என்ற தெலுங்கு திரைப்படத்தில் திரிஷா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • நடிகர் விஷ்ணு விஷால் ‘லால் சலாம்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான விஷ்ணு விஷால் 'வெண்ணிலா கபடி குழு' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். 2018-ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான சைக்காலஜி த்ரில்லரான ராட்சசன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து பல தடைகளை தாண்டி வெளியான இவரது எஃப் ஐ ஆர் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.


    விஷ்ணு விஷால்- செல்லா அய்யாவு

    தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த விஷ்ணு விஷால் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 'லால் சலாம்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து, சமீபத்தில் விஷ்ணு விஷால், இயக்குனர் செல்லா அய்யாவு படத்தில் நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தை விஷ்ணு விஷாலே தயாரிக்கவுள்ளதாகவும் அறிவித்திருந்தார்.


    இந்நிலையில், இவர் தன் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, விஷ்ணு விஷால் அடுத்ததாக இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இதனை விஷ்ணு விஷால் தனது சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும், புகைப்படத்தை பகிர்ந்து 'பெரிய சம்பவம் லோடிங்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.


    • 'தி கோட்' திரைப்படம் படமாக்கப்பட்டு வருகிறது.
    • இந்த படப்பிடிப்பில் நடிகர் விஜய் பங்கேற்றார்.

    நடிகர் விஜய் நடித்து வெங்கட்பிரபு இயக்கும் 'தி கோட்' திரைப்படம் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தின் பாடல் காட்சிகள் புதுவையில் உள்ள பழமை வாய்ந்த ஏ.எப்.டி. மில்லில் படமாக்கப்பட்டது. இந்த படப்பிடிப்பில் நடிகர் விஜய் பங்கேற்றார்.

    தமிழக வெற்றி கழகம் தொடங்கி தலைவரான பிறகு முதல் முறையாக நடிகர் விஜய் படப்பிடிப்புக்கு வந்துள்ளார் என்ற தகவல் பரவியது. இதனையடுத்து விஜயை காண்பதற்காக ஆயிரக்கணக்கான தொண்டர்கள், ரசிகர்கள் புதுவை, கடலூர் சாலையில் உள்ள ஏ.எப்.டி. மில் முன்பு குவிந்தனர்.

    தளபதி.. தளபதி... என்று கோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து ரசிகர்கள் திரண்டு வந்த வண்ணம் இருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. படப்பிடிப்பில் இருந்த விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் கை கூப்பி கலைந்து செல்லும்படி கேட்டும் ரசிகர்கள் கலையவில்லை.


    மாறாக மில் எதிரில் உள்ள மரத்தின் மீது ஏறியும் மில் சுவற்றின் மீதும் ஏறியும் விஜயை காண ரசிகர்கள் முயன்றனர். மாலை 5.45 மணிக்கு படப்பிடிப்பில் இருந்து வெளியே வேனில் வந்த விஜய் மில் நுழைவு வாயிலில் வேன் மீது ஏறி ரசிகர்களை பார்த்து கை அசைத்தார்.

    தொடர்ந்து அவரது பாணியில் முத்தத்தை பறக்க விட்டார். ரசிகர்கள் அவர் மீது பூக்களை தூவியும் மாலையை வீசியும் மகிழ்ச்சியை தெரிவித்தனர். ரசிகர்கள் ஒருவர் வீசிய மாலையை விஜய் அணிந்து கொண்டார். பின்னர் விஜய் அந்த மாலைகளை ரசிகர்களிடமே வீசி அவர்களுடன் செல்பி எடுத்து கொண்டார். பின்னர் படப்பிடிப்பு தளத்திற்குள் சென்றார். இதனையடுத்து ரசிகர்கள் கூட்டம் கலைந்து கடலூர் சாலையில் போக்குவரத்து சீரானது.

    நடிகர் விஜய் ரசிகர்கள் சந்தித்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனால் மீண்டும் ரசிகர்கள் கூட்டம் ஏ.எப்.டி. மில் நோக்கி வந்தனர். அதில் பெண்கள், சிறுவர், சிறுமிகளும் ஆர்வமுடன் திரண்டு நின்றனர். அவர்கள் நடிகர் விஜயை பார்த்து விட்டுதான் செல்வோம் என்று நீண்ட நேரம் நின்றனர்.


    போலீசார் கூட்டத்தை கலைந்து செல்லும்படி வற்புறுத்தியும் அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை. விஜய் படப்பிடிப்பில் இருந்து சென்றுவிட்டார் என்று உறுதியான தகவல் வந்த பின்னரே அவர்கள் கலைந்து சென்றனர். மாலை 3 மணியில் இருந்து இரவு 9மணி வரை சுமார் 6 மணி நேரம் விஜயை காண ரசிகர்கள் கூட்டம் குவிந்திருந்தனர்.

    இன்னும் 2 நாட்கள் படப்பிடிப்பு புதுவையில் நடைபெற உள்ளது. இன்று மதியம் நடைபெறும் படப்பிடிப்பில் நடிகர் விஜய் பங்கேற்பார் என திரைப்பட குழுவினர் தெரிவித்தனர். ஏற்கனவே இதே ஏ.எப்.டி. மில்லில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'லால் சலாம்' சினிமா படிப்பிடிப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் மணிகண்டன் நடித்துள்ள திரைப்படம் ‘லவ்வர்’.
    • இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    8 தோட்டாக்கள், விக்ரம் வேதா, காலா, ஏலே, ஜெய்பீம், சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் மணிகண்டன். இவர் தற்போது அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கியுள்ள 'லவ்வர்' (lover) திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.


    இதில் ஸ்ரீகெளரி பிரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இந்நிலையில், அமைச்சர் உதயநிதி 'லவ்வர்' திரைப்படத்தை பார்த்துவிட்டு நடிகர் மணிகண்டனை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மணிகண்டன் வெளியிட்டுள்ள பதிவில், "தொலைபேசி அழைப்பின் மூலம் வாழ்த்தியதற்கு நன்றி உதயநிதி ஸ்டாலின் சார். நீங்கள் எங்கள் 'லவ்வர்' படத்தை பார்த்து ரசித்தீர்கள் என்பது சந்தோஷமாக உள்ளது. இது எனக்கு இன்னும் சிறந்த கதாபாத்திரங்களை செய்ய ஊக்கமளிக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • நடிகர் விஜய் புதுச்சேரி ஏஎஃப்டி பஞ்சாலைக்கு வந்தார்.
    • நடிகர் விஜய் பெரிய வேன் மீது ஏறி, ரசிகர்களை பார்த்து கை அசைத்தார்.

    நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்கிற தனது கட்சியின் பெயரை அறிவித்தார். விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர்.

    இதற்கிடையே, நடிகர் விஜய்யின் 68வது படமான GOAT வெங்கட் பிரபு இயக்கத்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

    இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்புக்காக இன்று நடிகர் விஜய் புதுச்சேரி ஏஎஃப்டி பஞ்சாலைக்கு வந்தார். விஜய் வந்ததை அறிந்து அங்கு ரசிகர்கள் குவிந்தனர்.

    நடிகர் விஜய் பெரிய வேன் மீது ஏறி, ரசிகர்களை பார்த்து கை அசைத்தார். பிறகு ரசிகர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டார்.

    • மூத்த அரசியல்வாதியும், வக்கீலுமான சி சங்கரன் நாயர் வாழ்க்கை வரலாற்று படத்தில் அனன்யா பாண்டே நடித்து வருகிறார்.
    • வாழ்க்கையில் சொல்லப்படாத பல்வேறு சம்பவங்களை வெளிக்காட்டும் கண்ணாடியாக இருக்க ஆசைப்படுவதாக அனன்யா பாண்டே தெரிவித்துள்ளார்.

    பாலிவுட் சினிமாவின் இளம் கவர்ச்சி நடிகை அனன்யா பாண்டே. 'ஸ்டூடன்ட் ஆப் தி இயர் 2', 'காலி பீலி', 'கெஹ்ரையான்', 'லைகர்', 'டிரீம் கேர்ள்-2 புல்' உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது 'கண்ட்ரோல்' என்ற படத்தில் நடித்துள்ளார். மூத்த அரசியல்வாதியும், வக்கீலுமான சி சங்கரன் நாயர் வாழ்க்கை வரலாற்று படத்திலும் நடித்து வருகிறார்.

    சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

    பொதுவாகவே சவாலான வேடங்களில் நடித்து கவனம் ஈர்த்து வரும் அனன்யா பாண்டே, தற்போது முன்னாள் நடிகைகள் சிலரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். அந்த வகையில் பாலிவுட் முன்னாள் நடிகைகள் மதுபாலா மற்றும் ரேகா ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க விரும்புவதாக அனன்யா பாண்டே தெரிவித்துள்ளார். அவர்களின் வாழ்க்கையில் சொல்லப்படாத பல்வேறு சம்பவங்களை வெளிக்காட்டும் கண்ணாடியாக இருக்க ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

    மதுபாலா, ரேகா ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று படங்களை எடுக்க விரும்புவதாக கூறிய பல இயக்குனர்களின் கவனம் தற்போது அனன்யா பாண்டே மீது திரும்பி இருக்கிறது.

    ×