இரண்டாம் பாகத்திற்கு ரெடியான ஆர்.ஜே.பாலாஜி- எந்த படம் தெரியுமா?

ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடித்த திரைப்படம் 'சிங்கப்பூர் சலூன்'.இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இரண்டாம் பாகத்திற்கு ரெடியான ஆர்.ஜே.பாலாஜி- எந்த படம் தெரியுமா?
Published on

ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடித்த திரைப்படம் 'சிங்கப்பூர் சலூன்'. இந்த படத்தை 'ரவுத்திரம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'காஷ்மோரா' உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்கியுள்ளார். ஆர்.ஜே.பாலாஜி இதில் சிகையலங்கார நிபுணராக நடித்துள்ளார்.

இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ளார். இப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் ஜீவா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். 'சிங்கப்பூர் சலூன்' திரைப்படம் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து இப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் பேசிய ஆர்.ஜே.பாலாஜி, "இந்தப் படம் வெற்றி அடைந்துள்ளதில் மகிழ்ச்சி. இரண்டாம் பாதியில் அரவிந்த் சாமி கதாபாத்திரத்தைப் பார்த்துவிட்டு இவரைப் போல ஒருவர் நம் வாழ்வில் வந்துவிட மாட்டார்களா என நிறையப் பேர் சொன்னார்கள். எனது சிறந்த நடிப்பைக் வெளிக்கொண்டு வந்த இயக்குனர் கோகுலுக்கு நன்றி. 'எல்.கே.ஜி 2', 'மூக்குத்தி அம்மன் 2' போன்ற ஐடியாவும் உண்டு. அதையும் ஐசரி சாரிடம்தான் செய்வேன்" என்று பேசினார்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com