காசுக்குதான் மரியாதை.. லவ் எல்லாம் சும்மா- வைரலாகும் லவ்வர் டிரைலர்

மணிகண்டன் நடித்துள்ள திரைப்படம் ‘லவ்வர்’.இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
காசுக்குதான் மரியாதை.. லவ் எல்லாம் சும்மா- வைரலாகும் லவ்வர் டிரைலர்
Published on

8 தோட்டாக்கள், விக்ரம் வேதா, காலா, ஏலே, ஜெய்பீம், சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் மணிகண்டன். சமீபத்தில் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியான குட் நைட் திரைப்படத்தில் மோகன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து பலரையும் கவர்ந்தார்.

இவர் தற்போது அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கியுள்ள 'லவ்வர்' (lover) திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் ஸ்ரீகெளரி பிரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. காதலர்களுக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com