என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இப்படத்தை அறிமுக இயக்குநரான கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ளார்.
    • இப்படம் வருகிற 31-ந்தேதி வெளியாக உள்ளது.

    2023-ஆம் ஆண்டு அறிமுக இயக்குநரான ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்த ''ஜோ'' திரைப்படம் வெளியாகி மக்களிடையே விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகும் நல்ல வரவேற்பை பெற்றது.

    இதைத்தொடர்ந்து ''ஜோ'' பட ஜோடி அடுத்து மீண்டும் ஒன்றாக இணைந்து நடித்துள்ள படம் 'ஆண் பாவம் பொல்லாதது'. இப்படத்தை அறிமுக இயக்குநரான கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ளார்.

    இச்சமுதாயத்தில் ஆண்கள் படும் கஷ்டத்தை பற்றி பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 'ஆண்பாவம் பொல்லாதது' படம் வருகிற 31-ந்தேதி வெளியாக உள்ளது.

    இந்த நிலையில், 'ஆண்பாவம் பொல்லாதது' படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. ட்ரெய்லரில் பெண் பார்ப்பது முதல் திருமணம், குடும்ப சண்டை, விவாகரத்து என திருமண வாழ்க்கையில் கணவன்-மனைவிக்கு இடையே நடப்பதை சொல்லப்பட்டுள்ளது. ட்ரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 



    • சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா ஆகியோர் விசாரணைக்காக நேரில் ஆஜராகி உள்ளனர்.
    • ரங்கராஜ் அறிக்கையை 24 மணி நேரத்தில் திரும்ப பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும்.

    தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டதாக சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா என்பவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இதனிடையே, மாதம்பட்டி ரங்கராஜ் நேற்று இரவு ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், "நீதிமன்றத்திற்கு வெளியே ஜாய் கிரிசில்டா எழுப்பிய தற்போதைய சர்ச்சையைத் தீர்த்து வைக்குமாறு பலர் என்னை அணுகி வருகின்றனர். நீதித்துறை செயல்பாட்டில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. சட்டத்தின்படி உண்மை நிலைநாட்டப்படும். இந்த சர்ச்சையைத் தீர்க்க நான் சென்னை ஐகோர்ட்டை அணுகியுள்ளேன். இந்தப் பிரச்சனை தொடர்பான எந்தவொரு ஊடக விசாரணையிலோ அல்லது பொது விவாதத்திலோ ஈடுபட நான் விரும்பவில்லை. நடந்து வரும் சர்ச்சை குறித்து எந்த கருத்துகளையும், அனுமானங்களையும் வெளியிட வேண்டாம். நான் இந்த சர்ச்சையை சட்டத்தின்படி எதிர்கொள்வேன். ஜாய் கிரிசில்டா எதிர்பார்ப்பதுபோல் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண ஒப்புக்கொள்ள மாட்டேன்", என்று மாதம்பட்டி ரங்கராஜ் கூறியிருந்தார்.

    இதனை தொடர்ந்து இன்று சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா ஆகியோர் விசாரணைக்காக நேரில் ஆஜராகி உள்ளனர்.

    இதற்கிடையே, மாதம்பட்டி ரங்கராஜூக்கு ஜாய் கிரிசில்டா தரப்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பிரச்சனையை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக்கொள்ள அணுகியதாக மாதம்பட்டி ரங்கராஜ் அவதூறு பரப்புவதாக ஜாய் கிரிசில்டா தரப்பில் அவருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ரங்கராஜ் அறிக்கையை 24 மணி நேரத்தில் திரும்ப பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும். தவறினால் உரிமையியல், குற்றவியல் வழக்கு தொடரப்படும் என நோட்டீசில் ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார். 

    • சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
    • போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    நடிகர் சிலம்பரசன் 'தக் லைப்' திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது. இயக்குநர் வெற்றி மாறன் 'வடசென்னை' படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார். இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தொடங்கியது. சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், வெற்றி மாறன் பிறந்தநாளையொட்டி சிலம்பரசன் நடிக்கும் 'எஸ்டிஆர் 49' படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. இதனை தொடர்ந்து 'எஸ்டிஆர் 49' படத்தின் தலைப்பு 'அரசன்' என்று அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில், 'அரசன்' படத்தின் தெலுங்கு ப்ரோமோவான சாம்ராஜ்யம் நாளை வெளியாக உள்ளதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தெரிவித்துள்ளார்.

    நாளை காலை 10.07 மணிக்கு சாம்ராஜ்யத்திற்கான ப்ரோமோவை ஜூனியர் என்.டி.ஆர் வெளியிட உள்ளார். இதுதொடர்பான போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 



    • கர்ணன், வாழை படங்களை போல இதிலும் கிராமத்து வாழ்வியலை மாரி செல்வராஜ் படமாக்கியுள்ளார்.
    • வாழை படம் வெளிவந்தபோது பெரிய கடிதமே அனுப்பினார்.

    பரியேறும் பெருமாள் படம் மூலம் சாதிய ஏற்றத்தாழ்வுகள் இன்னும் ஒழியவில்லை என உறக்கச் சொல்லி  அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் மாரி செல்வராஜ்.

    தொடர்ந்து 'கர்ணன்', 'மாமன்னன்', 'வாழை' உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை மாரி செல்வராஜ் பிடித்துவிட்டார்.

    தற்போது தீபாவளி வெளியீடாக அக்டோபர் 17 அன்று அவர் இயக்கிய பைசன் படம் வெளியாக உள்ளது. துருவ் விக்ரம், அனுபமா பரமேஷ்வரன் ஆகியோர் நடித்த இப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. கர்ணன், வாழை படங்களை போல இதிலும் கிராமத்து வாழ்வியலை மாரி செல்வராஜ் படமாக்கியுள்ளார்.

    இந்நிலையில் அண்மையில் நேர்காணல் ஒன்றில் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்குவது குறித்து நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு மாரி செல்வராஜ் சுவாரஷ்யமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

    பேட்டியில் அவர் பேசியதாவது, ரஜிகாந்த் சாருக்கு என்னை மிகவும் பிடிக்கும். எனது ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் என்னை அழைத்து பாராட்டுவார். பரியேறும் பெருமாள், கர்ணன் படங்கள் வெளியானபோது என்னை நேரில் அழைத்து பாராட்டினார்.

    வாழை படம் வெளிவந்தபோது பெரிய கடிதமே அனுப்பினார். கதைகள் குறித்து நாங்கள் பேசியுள்ளோம். என்னிடம் கதைகள் இருக்கின்றன. அவரிடம் சிலவற்றை சொல்லியுள்ளேன். என் மீது நம்பிக்கை வைத்து, எனது நேர்மையை நம்பி அவர் வந்தால் அவருடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன்.

    கதை என்பது ஹீரோவுக்கானது அல்ல. எனது கதையில் ரஜினியும் நடிக்கலாம், துருவ் விக்ரமும் நடிக்கலாம். ரஜினி வந்தால் அவருக்கு ஏற்றவாறு அதை மெருகேற்றுவேன்" என்று தெரிவித்தார். 

    • சட்டத்தின்படி உண்மை நிலைநாட்டப்படும்.
    • பிரச்சனை தொடர்பான எந்தவொரு ஊடக விசாரணையிலோ அல்லது பொது விவாதத்திலோ ஈடுபட நான் விரும்பவில்லை.

    சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டதாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா என்பவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் அலுவலகம், மாநில மகளிர் ஆணையம் என்பதையெல்லாம் தாண்டி தற்போது நீதிமன்றத்தில் ஜாய் கிரிசில்டா வழக்கு தொடுத்துள்ளார். சென்னை ஐகோர்ட்டுக்கு வெளியே மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து ஜாய் கிரிசில்டா பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதனிடையே மாதம்பட்டி ரங்கராஜ் நேற்று இரவு ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், "நீதிமன்றத்திற்கு வெளியே ஜாய் கிரிசில்டா எழுப்பிய தற்போதைய சர்ச்சையைத் தீர்த்து வைக்குமாறு பலர் என்னை அணுகி வருகின்றனர். நீதித்துறை செயல்பாட்டில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. சட்டத்தின்படி உண்மை நிலைநாட்டப்படும். இந்த சர்ச்சையைத் தீர்க்க நான் சென்னை ஐகோர்ட்டை அணுகியுள்ளேன். இந்தப் பிரச்சனை தொடர்பான எந்தவொரு ஊடக விசாரணையிலோ அல்லது பொது விவாதத்திலோ ஈடுபட நான் விரும்பவில்லை. நடந்து வரும் சர்ச்சை குறித்து எந்த கருத்துகளையும், அனுமானங்களையும் வெளியிட வேண்டாம். நான் இந்த சர்ச்சையை சட்டத்தின்படி எதிர்கொள்வேன். ஜாய் கிரிசில்டா எதிர்பார்ப்பதுபோல் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண ஒப்புக்கொள்ள மாட்டேன்", என்று மாதம்பட்டி ரங்கராஜ் கூறியிருந்தார்.

    இந்த நிலையில், திருமண மோசடி புகார் தொடர்பாக மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவியுடன் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்.

    சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா ஆகியோர் விசாரணைக்காக நேரில் ஆஜராகி உள்ளனர். 

    • தமிழ்நாட்டைக் கடந்து படத்தை கொண்டு செல்ல பொதுவான தலைப்பு வைக்க தயாரிப்பு நிறுவனம் கூறியது.
    • துருவ் சொன்ன வார்த்தை எனக்கு பெரிய நம்பிக்கை கொடுத்தது.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

    இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2 மணி நேரம் 48 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட 'பைசன்' படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் தொடர்பாக வெளியான போஸ்டர், பாடல்கள், டிரெய்லர் ஆகியவை ரசிகர்களை வரவேற்பை பெற்றுள்ளது.

    இதனிடையே, 'பைசன்' என ஆங்கிலத்தில் தலைப்பு வைத்ததற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும் போது, படத்திற்கு 'பைசன்' என ஆங்கிலத்தில் தலைப்பு வைத்ததற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டைக் கடந்து படத்தை கொண்டு செல்ல பொதுவான தலைப்பு வைக்க தயாரிப்பு நிறுவனம் கூறியது. என்னுடைய திரைக்கதை புத்தகத்தில் இன்னமும் 'காளமாடன்' என்றுதான் உள்ளது.

    இந்த படம் மிகவும் கடினமான படம். இப்படத்திற்கு பெரிய உழைப்பு தரணும். நாட்கள் நிறைய ஆகும். மன உளைச்சல் வரலாம் என்பதால் துருவ் விக்ரமுக்கு சில டெஸ்ட் வெச்சேன். அதுல துருவ் விக்ரம் என்னை நம்பினார். பல பயிற்சிகளை மேற்கொண்டதில் காயம் பட்டது. அதுலயும் துருவ் விக்ரம் நம்பிக்கையா இருந்தார். அவர் கஷ்டம் படும் போது எல்லாம் சொல்வேன். வேண்டும் என்றால் விட்டுருலாம். அடுத்த கதை பண்ணலாம் என்று சொன்னேன். அதற்கு துருவ் விக்ரம், உங்க மேல நம்பிக்கை இருக்கு சார். உங்களை அப்பா மாதிரி பார்க்கிறேன் என்று சொன்ன வார்த்தை எனக்கு பெரிய நம்பிக்கை கொடுத்தது. அதன்பிறகு இரண்டு பேர் போட்டி போட்டு கடின உழைப்பை கொடுத்து இருக்கோம். எனக்கு இந்த படத்தின் வெற்றி என்பதை விட துருவ் போட்ட உழைப்புக்கு இந்த படத்தின் மூலம் அவருக்கு அங்கீகாரம் கிடைத்தால் இந்த படம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் ரொம்ப சந்தோஷம் படுவேன்.

    என்னோட கரியர்ல அதிக உழைப்பும் யோசனையும் போட்டு எடுத்த படம் 'பைசன்' என்றார். 

    • தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் மகாபாரதம் தொடர் ஒளிபரப்பானது.
    • இதில் கர்ணன் பாத்திரத்தில் நடித்த பங்கஜ் தீர் உடல்நலக் குறைவால் காலமானார்.

    மும்பை:

    தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் 1988-ம் ஆண்டில் மகாபாரதம் தொடர் ஒளிபரப்பப்பட்டது. பல மாதம் ஒளிபரப்பான இந்தத் தொடருக்கு இன்றும் பல ரசிகர்கள் உள்ளனர்.

    இந்தத் தொடரில் கர்ணன் கதாபாத்திரத்தில் நடித்தவர் பங்கஜ் தீர் (68). இவர் சந்திரகாந்தா, கானூன் உள்ளிட்ட டிவி தொடர்களிலும், ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்தார்.

    மும்பையில் நடிப்பு பள்ளி ஒன்றை நடத்தி வந்த அவர், தன் சகோதரருடன் இணைந்து பல ஹிந்தி படங்களையும் தயாரித்தார்.

    இதற்கிடையே, கடந்த சில மாதமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பங்கஜ் தீர், மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பங்கஜ் தீர் நேற்று அதிகாலை உயிரிழந்தார். மும்பை வீட்டில் வைக்கப்பட்டிருந்த பங்கஜ் தீர் உடலுக்கு உறவினர்களும், ரசிகர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

    மெஸன்ஜர் திரைப்படம் அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகயுள்ளது.

    பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி (PVK FILM FACTORY) சார்பில் பா.விஜயன் தயாரித்திருக்கும் படம் மெஸன்ஜர். இதில் ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர் கன்னிமாடம், யுத்தகாண்டம் பாத்திரகாட் (மலையாளம்) போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்து இருக்கிறார். கதாநாயகிகளாக மனீஷா ஜஸ்னானி, ஃபாத்திமா நஹீம், வைசாலி ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்து இருக்கிறார்கள்.

    இவர்களுடன் லிவிங்ஸ்டன், பிரியதர்ஷினி ராஜ்குமார், ஜீவா ரவி, யமுனா, கோதண்டன், இட்இஸ் பிரசாந்த், கூல்சுரேஷ், ராஜேஷ்வரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் ரமேஷ் இலங்காமணி. இவர் இயக்குனர் A.R. காந்தி கிருஷ்ணா மற்றும் இயக்குனர் பத்ரி அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

    விக்ரவாண்டி அதன் சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் சென்னையில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த நிலையில் மெஸன்ஜர் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போன்றே படத்தின் டிரெய்லர் காட்சிகள் சமூக வலைதளங்களில் வலம்வர தொடங்கிவிட்டன.

    மேலும், படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. மெஸன்ஜர் திரைப்படம்  வருகிற அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகும் என்று டிரெய்லரில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மெஸன்ஜர் செயலியால் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை சுவாரஸ்யமாக சொல்லும் கதையாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது.

    பால கணேசன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு பிரசாந்த் படத்தொகுப்பு செய்திருக்கிறார். அபு பக்கர் இசையமைக்க, பாலசுப்ரமணியன் கலை பணிகளை செய்து இருக்கிறார். தக்ஷன் மற்றும் பிரசாந்த் பாடல்கள் எழுத சைந்தவி, சத்யபிரகாஷ், மற்றும் கபில் கபிலன் பாடியிருக்கிறார்கள்.

    ஆர்.ஆர் மூவிஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தில் ஆதிக் சிலம்பரசன் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

    மனிதர்களை சந்தர்ப்பச் சூழ்நிலை என்னவெல்லாம் செய்யும் என்பதை எடுத்துச் சொல்வது 'ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி.'

    சிங்கப்பூரில் வசிக்கிற முரளி சொந்த ஊருக்கு வருகிறான். தனது காதலியை தேடிப் போகிறான். அவளுக்கு வேறு ஒருவருடன் திருமணமாகிவிட்ட விவரம் தெரிந்து அதிர்ச்சியடைகிறான். அந்த அதிர்ச்சியிலிருந்தும் அவனை மீட்க அவனது நண்பன் தனது தங்கையை திருமணம் செய்து வைக்கிறான். நாட்கள் நல்லபடியாக நகர முரளியின் மனைவி தாய்மையடைகிறாள்.

    அந்த சந்தர்ப்பத்தில் தனது முன்னாள் காதலியைப் பற்றி சில விஷயங்கள் முரளியின் கவனத்துக்கு வருகிறது. அவளுக்கு திருமணமான விவரம் தெரிந்தபோது அதிர்ச்சியடைந்ததை விட பல மடங்கு அதிர்ச்சியடைகிறான். அது மனநிலை அவனது வாழ்க்கையை எப்படியெல்லாம் புரட்டிப் போடுகிறது என்பது கதை.

    ஆர்.ஆர் மூவிஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தில் ஆதிக் சிலம்பரசன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். காயத்ரி ரெமா, அனுகிருஷ்ணா கதாநாயகிகளாக நடிக்க தம்பி சிவன், வர்ஷிதா,விஜய் டிவி சரத்,மனோகர் பெருமாத்தா ஆகியோர் கதையின் பாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள். டைசன் ராஜ் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் கே.ராஜன், ஆர்.வி. உதயகுமார், பேரரசு ஜாக்குவார் தங்கம், என்.விஜயமுரளி, விவேகபாரதி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர். விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளி வருகிறது.

    நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினல் கதையாக உருவாகி இருக்கிறது 'மேட் இன் கொரியா'.

    தனது காதலனுடன் கொரியாவுக்குச் செல்லும் ஷென்பாவின் கனவு துரோகத்தில் சிதையும்போது, அவள் சியோலில் தனிமையை உணர்கிறாள். அந்தத் தனிமையுடனும் புதிய இடத்தில் உள்ள கலாச்சார சவால்களுடன் போராடுகிறாள்.

    வாழ்வின் சவால்களில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளும் ஷென்பா மெல்ல தன்னை மீட்டெட்டுக்கும்போது, புதிய நண்பர்களுடன் வாழ்க்கைக்கான பிணைப்பை உருவாக்குகிறாள். நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினல் கதையாக உருவாகி இருக்கிறது 'மேட் இன் கொரியா'. பிரியங்கா மோகன், பார்க் ஹை-ஜின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தக் கதையை கார்த்திக் இயக்கியுள்ளார்.

    இது குறித்து இயக்குநர் ஆர். ஏ. கார்த்திக் பகிர்ந்து கொண்டதாவது:-

    கொரிய கலாச்சாரம் கடந்த பத்தாண்டுகளில் இந்திய கலாச்சாரத்தை கணிசமாக பாதித்துள்ளது. 'மேட் இன் கொரியா' கதையில் பணிபுரியத் தொடங்கும் வரை நான் கே-டிராமாவை பார்த்ததும் இல்லை, கே-பாப் இசையை கேட்டதும் இல்லை.

    இந்தக் கதைக்காக சில விஷயங்கள் ரிசர்ச் செய்தபோது, கொரியா மற்றும் தமிழ் பாரம்பரியத்திற்கு இடையிலான ஆழமான கலாச்சார தொடர்புகள் மற்றும் வரலாற்று ஒற்றுமைகளைக் கண்டறிய ஆர்வமாக இருந்தேன்.

    என்னுடைய இந்த ஆர்வம் ஆழமான ஒரு கதையைச் சொல்ல தூண்டியது. 'மேட் இன் கொரியா' கதை நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியுடன் தனித்துவமான கலாச்சார பின்னணியை கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது" என்றார்.

    நடிகை பிரியங்கா மோகன் பகிர்ந்து கொண்டதாவது, "இந்தக் கதையில் என்னை ஈர்த்தது அதன் வலிமையும் தனித்துவமும்தான். கதை கேட்டவுடனே பிடித்துவிட்டது. கே-டிராமாஸை எப்போதும் விரும்பி பார்ப்பேன். அப்படி இருக்கையில், இந்திய-கொரிய கூட்டு முயற்சியான இந்தக் கதையின் ஒரு பகுதியாக இருக்கும் வாய்ப்பு எனக்கு உற்சாகமூட்டுவதாக இருந்தது.

    நான் நடித்திருக்கும் கதாபாத்திரத்துடன் எனக்கு ஆழமான தனிப்பட்ட தொடர்பு இருந்தது. கார்த்திக் சார் கதை சொன்னபோதே எனக்கு உடனே பிடித்துவிட்டது. நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினல்ஸின் இந்தப் பயணத்தில் நான் இணைந்திருப்பது பெருமையாக உள்ளது" என்றார்.

    தீபாவளியை முன்னிட்டு இந்த ஆண்டு 3 புதிய திரைப்படங்கள் வெளியாகின்றன.

    தீபாவளி கொண்டாட்டம் என்றாலே ஒன்று பட்டாசும், மற்றொன்று புதிய திரைப்படங்களும் தான். 

    முன்பெல்லாம், தீபாவளி- பொங்கல் பண்டிகைகளில் முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டுமே பெரும்பாலும் வெளியாகும். ஆனால், சமீப காலமாக அந்த போக்கு மாறி வருகிறது.

    தற்போது சிறிய பட்ஜெட் படங்களும், புதிய ஹீரோக்களின் படங்களும் கூட தீபாவளி முன்னிட்டு வெளியாகி வசூல் சாதனை படைக்கின்றன. அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 20ம் தேதி வருகிறது. தீபாவளியை முன்னிட்டு 3 புதிய திரைப்படங்கள் வெளியாகின்றன.

    அதன்படி, வரும் 17ம் தேதி அன்று துருவ் விக்ரமின் பைசன், ஹரிஷ் கல்யாணின் டீசல், பிரதீப் ரங்கநாதனின் டியூட் ஆகிய மூன்று படங்கள் வௌியாக தயாராக உள்ளன.

    பைசன்

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். மேலும், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

    டியூட்

    இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் ட்யூட். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.

    டீசல்

    பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். துவக்கம் முதலே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண், சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் அதுல்யா உடன் நடிக்கும் `டீசல்' என்ற படத்தில் நடித்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்
    • டியூட் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஊரும் பிளட் மற்றும் இரண்டாம் சிங்கிளான நல்லாரு போ மற்றும் 3 ஆம் சிங்கிளான சிங்காரி பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், இப்படத்தின் 4 ஆவது பாடல் 'கண்ணுக்குள்ள' இன்று மாலை வெளியாகவுள்ளதாக இயக்குநர் கீர்த்திஸ்வரன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    அந்த பதிவில், 'டியூட்" படப்பிடிப்பின்போது பிரதீப் ரங்கநாதன் - மமிதா பைஜூ ஒன்றாக எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

    இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    ×