என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்
    • டியூட் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஊரும் பிளட் மற்றும் இரண்டாம் சிங்கிளான நல்லாரு போ மற்றும் 3 ஆம் சிங்கிளான சிங்காரி பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், இப்படத்தின் 4 ஆவது பாடல் 'கண்ணுக்குள்ள' இன்று மாலை வெளியாகவுள்ளதாக இயக்குநர் கீர்த்திஸ்வரன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    அந்த பதிவில், 'டியூட்" படப்பிடிப்பின்போது பிரதீப் ரங்கநாதன் - மமிதா பைஜூ ஒன்றாக எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

    இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    • விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார்.
    • மகுடம் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் அஞ்சலி நடித்து வருகிறார்.

    விஷாலின் 35ஆவது படத்தை ஈட்டி மற்றும் ஐங்கரன் படங்களை இயக்கிய ரவி அரசு இயக்கி வந்தார். இப்படத்திற்கு மகுடம் என பெயரிடப்பட்டுள்ளது.

    இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம் இப்படத்தை தயாரிக்கிறது. இது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 99 -வது திரைப்படமாகும்.

    விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் அஞ்சலியும் நடிக்க வருகின்றனர்.

    இந்நிலையில், ரவி அரசு உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மகுடம் படத்திலிருந்து ரவி அரசு விலகிய நிலையில், இப்படத்தை நடிகர் விஷால் இயக்கி வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    இது தொடர்பாக வெளியான வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. 

    • நான் நடித்த படம் தீபாவளிக்கு வெளியாவது இதுவே முதல்முறையாகும்.
    • ஒரு படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக என்ன தகுதி வேண்டும் என எனக்கு தெரியவில்லை.

    பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். துவக்கம் முதலே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் தற்போது சண்முகம் முத்துசாமி இயக்கத்தில்`டீசல்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அதுல்யா நடித்துள்ளார்.

    டீசல் படத்தில் இடம் பெற்ற பாடல்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17ம் தேதி வெளியாகவுள்ளது.

    இந்நிலையில், என்னுடைய படம் எல்லாம் தீபாவளிக்கு வெளியாக கூடாதா? என்று டீசல் படம் குறித்து நடிகர் ஹரிஷ் கல்யாண் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

    டீசல் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஹரிஷ் கல்யாண், "நான் நடித்த படம் தீபாவளிக்கு வெளியாவது இதுவே முதல்முறை. இது சந்தோஷமாக இருந்தாலும், சில விமர்சனங்கள் என்னை காயப்படுத்துகின்றன. என் தயாரிப்பாளர்களிடம் "டீசல் படம் தீபாவளிக்கு வெளியிட என்ன தகுதி இருக்கிறது? பெரிய ஹீரோ, பெரிய இயக்குநர் இல்லையே?" என கேட்கின்றனர். ஒரு படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக என்ன தகுதி வேண்டும் என எனக்கு தெரியவில்லை. படத்துக்கு நல்ல கதை, நல்ல ஆட்கள் இருந்தால் போதாதா?" என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

    • ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரே படத்தில் நடிக்கவுள்ளனர்.
    • இப்படத்தை இயக்கப்போகும் இயக்குனர் யார் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.

    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் 'கூலி'. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை குவித்தது.

    இதனிடையே, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. கமல்ஹாசனும் ஒரு நிகழ்ச்சியில் இதை உறுதிப்படுத்தினார்.

    கூலி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தான் அந்த படத்தை இயக்க போகிறார் என்றும் கூறப்பட்டது.

    இந்த நிலையில், ராஜ்கமல் ஃபிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் இணைந்து தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிக்க ஆசை இருக்கு, பிளானும் இருக்கு. ஆனால் அதற்கான இயக்குநர், கதை, கதாபாத்திரம் இன்னும் ரெடி ஆகல. ஆனதும் நடிப்பேன் என்றார்.

    இதன்மூலம் இப்படத்தை லோகேஷ் இயக்கவில்லை என்று உறுதியானது. இதனால் ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கப்போகும் இயக்குநர் யார் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.

    ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தின் கதை மற்றும் இயக்குநர் இன்னும் முடிவாகாததால் இப்படத்திற்கு முன்பாக வேறு ஒரு படத்தில் நடிக்க ரஜினி முடிவு செய்துள்ளார்.

    ஜெயிலர் 2 படத்திற்கு அடுத்து இந்த புதிய படத்தில் ரஜினி நடிப்பார் என்றும் இப்படத்தை இயக்க சுந்தர் சி இடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • மலையாள நாட்டுப்புற தொன்ம காதாபாத்திரமான 'கள்ளியங்காடு நீலி' ஐ இன்ஸ்பிரேஷனாக கொண்டுள்ளது.
    • சாண்டியின் வில்லத்தனம் படத்திற்கு ஒரு புதிய சாயலை கொடுத்துள்ளது.

    மலையாள நாட்டுப்புற தொன்ம காதாபாத்திரமான 'கள்ளியங்காடு நீலி' ஐ இன்ஸ்பிரேஷனாக கொண்டு டொமினிக் அருண் ஃபேன்டசி-ஆக்ஷன் ஜானரில் இயக்கிய திரைப்படம் லோகா. இதுவே இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ படம் என்று கருதப்படுகிறது. 

    இந்த படத்தின் கல்யாணி பிரியதர்ஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நஸ்லேன், சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். சாண்டியின் வில்லத்தனம் படத்திற்கு ஒரு புதிய சாயலை கொடுத்துள்ளது. 

     ஓணம் பண்டிகையை ஒட்டி வெளியான இப்படம் உலகலவில் ரூ.300 கோடி வசூலை தாண்டி மலையாளத்தின் அதிக வசூல் படமாக மாறியது. இந்த படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. 

    • தொழிலதிபரை திருமணம் செய்ததில் இருந்து காம்னா படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
    • 2015 இல் சந்திரிகா என்ற படத்திற்கு பிறகு மகள்களை வளர்க்க வேண்டி அவரின் திரை வாழ்க்கை நின்றுபோனது.

    சுமார் 10 வருடங்களை ரீவைட் செய்து பார்த்தால் நடிகை காம்னா ஜேத்மாலினியை தமிழ், கன்னடம், தெலுங்கில் வெளிவந்த படங்களில் காணலாம்.

    குறிப்பாக ஜெயம் ரவியின் இதயத்திருடன் படத்தின் ஹீரோயினாக ஜேத்மாலினியை தமிழ் ரசிகர்கள் அடையாளம் காணக்கூடும்.

    கடந்த 2014 இல் தொழிலதிபரை திருமணம் செய்ததில் இருந்து காம்னா படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

    2015 இல் சந்திரிகா என்ற படத்திற்கு பிறகு மகள்களை வளர்க்க வேண்டி அவரின் திரை வாழ்க்கை நின்றுபோனது.

    இந்நிலையில் 10 வருடங்கள் கழித்து 2025 இல் தெலுங்கு படம் மூலம் காம்னா மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்

    தெலுங்கில் உருவாகி உள்ள "கேராம்ப்" படத்தில் காம்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வருகிற 18-ந்தேதி படம் திரைக்கு வர இருக்கிறது.

    • பவன் கல்யாணுடன் பிரியங்கா அருள் மோகன் மற்றும் எம்ரான் ஹம்ஷி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
    • வயலன்ஸ் காட்சிகள் அதிகம் உள்ளதால் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டது.

    ஹரி ஹர வீரமல்லு திரைப்படத்தை தொடர்ந்து பவன் கல்யாண் ஓஜி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    சாகோ மற்றும் ரன் ராஜா ரன் ஆகிய படங்களை இயக்கிய சுஜித் இப்படத்தை இயக்கியுள்ளார்.

    பவன் கல்யாணுடன் பிரியங்கா அருள் மோகன் மற்றும் எம்ரான் ஹம்ஷி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவான OG படம் செப்டம்பர் 25 திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முன்பதிவிலேயே ரூ.100 கோடி வசூலித்து ஓஜி சாதனை படைத்திருந்தது.

    இப்படம் உலகளவில் ரூ. 350 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பவன் கல்யாண் நடித்த திரைப்படங்களிலேயே அதிகம் வசூலித்த திரைப்படம் ஓஜிதான்.

    விமர்சனங்கள் இருந்தபோதிலும் பவன் கல்யாண் ரசிகர்களுக்கு படம் மிகவும் திருப்தியளிக்கக்கூடியதாக உள்ளது.

    வயலன்ஸ் காட்சிகள் அதிகம் உள்ளதால் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டது.

    படத்தின் இசையை தமன் மேற்கொள்கிறார். ஒளிப்பதிவை ரவி கே சந்திரன் மற்றும் மனோஜ் பரமஹம்சா இணைந்து செய்துள்ளனர்.

    இந்நிலையில் 'ஓஜி' படம் வருகிற 23ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.    

    • 'அஞ்சான்' படத்தில் சூர்யாவுடன், வித்யூத் ஜாம்வால், சமந்தா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
    • விஜயின் 'சச்சின்', சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', தனுசின் 'யாரடி நீ மோகினி' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.

    தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள்.

    ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜயின் 'சச்சின்', சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', தனுசின் 'யாரடி நீ மோகினி' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.

    இந்த நிலையில், நடிகர் சூர்யா- இயக்குநர் லிங்குசாமி கூட்டணியில் வெளியான 'அஞ்சான்' திரைப்படம் மீண்டும் வெளியாக உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு வெளியான 'அஞ்சான்' படத்தில் சூர்யாவுடன், வித்யூத் ஜாம்வால், சமந்தா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் மனோஜ் பாஜ்பாய் வில்லனாக நடித்திருந்தார்.

    'அஞ்சான்' படத்தின் இந்தி மொழிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இப்படத்தை ரீ-எடிட் செய்து விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில் படம் வரும் நவம்பர் 28 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
    • நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர்.

    தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷின் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    இப்படத்தில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். அண்மையில் வெளியான 'இட்லி கடை' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    இதற்கிடையே 'இட்லி கடை' படத்தின் 'என்ன சுகம்' வீடியோ பாடல் அண்மிஅயுள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் படத்தின் மற்றொரு பாடலான "எஞ்சாமி தந்தானே" என்ற வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. 

    ரொம்ப படம் தீபாவளிக்கு வருவதை பார்த்திருப்போம்.

    புதுசா வருகிற படங்கள் எல்லாமே Gen Z-க்கு ஃபேவரைட்டாக இருக்கும் ஹீரோக்களின் படமாக ரிலீஸ் ஆகிறது. முழுக்க முழுக்க இந்த மோதலை (Clash) எப்படி பார்க்கிறீர்கள் என பிரதீப் ரங்கநாதனிடம் கேள்வி கேட்கப்பட்டது.

    இதற்கு பிரதீப் ரங்கநாதன் "நான் இதை மோதமாக பார்க்கவில்லை. யாருக்கும் போட்டியில்லை. எல்லோரும் சேர்ந்து வருகிறோம். எல்லா படங்களும் வெற்றி பெற வேண்டும் என ஆசைப்படுகிறேன். நான் படம் பார்க்கும்போது Clash., அந்த வகையில் படம் பார்த்துள்ளேன். படம் பண்ணும்போது மோதலாக தெரியவில்லை. ரொம்ப படம் தீபாவளிக்கு வருவதை பார்த்திருப்போம். நம்ம படமும் தீபாவளிக்கு வருகிறது என்பது சந்தோசமாக இருக்கிறது" என்றார்.

    இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் ட்யூட். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன், டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    • கேனிஷா இசையமைத்து பாடியுள்ளார்.

    நடிகரும், தயாரிப்பாளருமான ரவி மோகன் அம்மாவுக்காக ஒரு பாடலை எழுதியுள்ளார். முதன் முறையாக இவர் எழுதிய பாடல் இதுவாகும். இந்த பாடலுக்கு இசையமைத்து பாடியவர் கேனிஷா.

    அவருடைய அம்மாவுக்காக ஒரு பாடலை எழுதும்படி கேனிஷா கூறினார். நான் என்னுடைய அம்மாவை நினைத்து இந்த பாடல எழுதினேன் என ரவி மோகன் ஏற்கனவே கூறியிருந்தார்.

    இந்த நிலையில் பாடலின் முழு வீடியோவை ரவி மோகன் பட நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    • இங்கிலாந்தை சேர்ந்த பாடகர் எட் ஷீரன் உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.
    • இந்தாண்டு சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் எட் ஷீரன் இசை நிகழ்ச்சி நடத்தினார்.

    உலகளவில் பிரபலமானவர் இங்கிலாந்தை சேர்ந்த பாடகர் மற்றும் இசையமைப்பாளரான எட் ஷீரன். இவர் உலகம் முழுவதும் பயணம் சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம்.

    அந்தவகையில் எட் ஷீரன்கடந்த வருடம் மார்ச் மாதம் மும்பையில் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி நடத்தினார். இந்தாண்டு சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடத்தினார்.

    இந்நிலையில், எட் ஷீரன், இந்திய இசைக்கலைஞர்கள் தீ, ஹனுமன்கைண்ட் இணையும் தனியிசை பாடல் ஒன்றை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரித்திருக்கிறார்.

    இப்படி ஒரு பாடலை தயாரித்ததில் பெருமைகொள்கிறேன் என தனது எக்ஸ் பக்கத்தில் சந்தோஷ் நாராயணன் பதிவிட்டுள்ளார்.

    ×