என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    Its My Choice - வெளியானது ஆண்பாவம் பொல்லாதது படத்தின் ட்ரெய்லர்
    X

    Its My Choice - வெளியானது 'ஆண்பாவம் பொல்லாதது' படத்தின் ட்ரெய்லர்

    • இப்படத்தை அறிமுக இயக்குநரான கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ளார்.
    • இப்படம் வருகிற 31-ந்தேதி வெளியாக உள்ளது.

    2023-ஆம் ஆண்டு அறிமுக இயக்குநரான ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்த ''ஜோ'' திரைப்படம் வெளியாகி மக்களிடையே விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகும் நல்ல வரவேற்பை பெற்றது.

    இதைத்தொடர்ந்து ''ஜோ'' பட ஜோடி அடுத்து மீண்டும் ஒன்றாக இணைந்து நடித்துள்ள படம் 'ஆண் பாவம் பொல்லாதது'. இப்படத்தை அறிமுக இயக்குநரான கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ளார்.

    இச்சமுதாயத்தில் ஆண்கள் படும் கஷ்டத்தை பற்றி பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 'ஆண்பாவம் பொல்லாதது' படம் வருகிற 31-ந்தேதி வெளியாக உள்ளது.

    இந்த நிலையில், 'ஆண்பாவம் பொல்லாதது' படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. ட்ரெய்லரில் பெண் பார்ப்பது முதல் திருமணம், குடும்ப சண்டை, விவாகரத்து என திருமண வாழ்க்கையில் கணவன்-மனைவிக்கு இடையே நடப்பதை சொல்லப்பட்டுள்ளது. ட்ரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.



    Next Story
    ×