என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    திருப்பதியில் தான் தனது திருமணம் நடக்க வேண்டும் என வாரிசு நடிகை ஒருவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
    மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கடந்த ஆண்டு 'தடக்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது புதிய படத்தில் நடித்து வருகிறார். தாய் ஸ்ரீதேவி போல் சாதிக்க வேண்டிய பணி இன்னும் நிறைய இருந்தாலும் திருமணத்தை எங்கு நடத்துவது என்று இப்போதே அவர் முடிவு செய்திருக்கிறார். சமீபத்தில் பட்டுச் சேலை அணிந்து விதவிதமாக போஸ் அளித்தார். 

    ஸ்ரீதேவி, ஜான்வி கபூர்

    பிறகு ஜான்வி கூறும்போது,’என் திருமணம் எங்கு நடக்க வேண்டும் என்பது பற்றி நான் எற்கனவே முடிவு செய்துவிட்டேன். அதுவும் பாரம்பரிய முறைப்படி திருப்பதியில் தான் திருமணம் செய்து கொள்வேன். அதுதான் எனது கனவு. என் அம்மா வழியில் தென் இந்திய பெண்ணாக இருந்து திருமணம் செய்ய விரும்புகிறேன். என் திருமணத்தில் இட்லி, சாம்பார், தயிர் சாதம் போன்றவை இடம்பெறும்’ என்றார்.

    தமிழ் திரையுலகில் பன்முகத்திறமை கொண்ட நடிகர்களான தனுஷும், ஜிவி பிரகாஷும் தங்களுடைய படங்கள் ரிலீஸ் மூலம் மோத இருக்கிறார்கள்.
    நாகசைதன்யா - தமன்னா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம், `100 சதவீதம் லவ்.' இந்த படம் `100 சதவீதம் காதல்' என்ற பெயரில் தமிழில் உருவாகி இருக்கிறது. சந்திரமவுலி எம்.எம். இயக்கியிருக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் - ஷாலினி பாண்டே நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். நாசர், தம்பிராமய்யா, `தலைவாசல்' விஜய், ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    அசுரன், 100 சதவீதம் காதல் படங்களின் போஸ்டர்

    இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற அக்டோபர் 4-ந் தேதி ரிலீசாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதேபோல் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘அசுரன்’ படமும் அக்டோபர் 4-ந் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என கூறப்பட்ட நிலையில், தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.
    வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கும் சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதி இரு வேடங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ராசி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். இவர்களுடன் நாசர் ,சூரி ,ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன்,மொட்டை ராஜேந்திரன் , மாரிமுத்து , ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  

    விஜயா புரடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர்  இசையமைத்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . அதனை தொடர்ந்து படத்தில் கமலா என்ற பாடலும் வெளியானது. இந்த படத்தில் பிரான்சிஸ் எழுதிய " சண்டகாரி நீதான் என் சண்டக்கோழி நீதான் " என்ற பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். 

    சங்கத்தமிழன் படக்குழு

    தீபாவளி அன்று வெளியாகவிருந்த சங்கத் தமிழன், அக்டோபர் 4ந்தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. தீபாவளி அன்று விஜய், கார்த்தி ஆகியோரின் படம் வெளியாவதாலும், தியேட்டர்கள் கிடைப்பதில் கடும் போட்டி நிலவுவதாலும் இம்முடிவு எடுக்கப்பட்டதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம், அக்டோபர் 4ஆம் தேதி அன்று வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள அசுரன் வெளியாகவிருக்கிறது. இதனால் எதிர்பார்ப்பிலிருக்கும் சங்கத் தமிழன் படமும் அசுரன் படமும் ஒரே நாளில் வெளியாகவிருக்கின்றன.
    ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ’பேச்சிலர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ஹர்பஜன் சிங் பேச்சிலர்னா ஜம்முனு இருக்கலாம் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
    சசி இயக்கத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ், லிஜோ மோல் ஜோஸ், காஷ்மீரா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியானள படம் 'சிவப்பு மஞ்சள் பச்சை'.  இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த மகிழ்ச்சியில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஜீ.வி.பிரகாஷ். 

    இயக்குநர் சசியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த சதீஷ் செல்வகுமார் இயக்கவுள்ள இந்தப் படத்தின் நாயகியாக திவ்ய பாரதி நடிக்கவுள்ளார். நாயகனாக நடிப்பது மட்டுமன்றி, இசையமைப்பாளராகவும் ஜி.வி.பிரகாஷ் பணிபுரியவுள்ளார். 'பேச்சிலர்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை பிரபல இந்திய கிரிக்கெட் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் வெளியிட்டுள்ளார். 

    பேச்சிலர் பட போஸ்டர்

    இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் தொடர்பாக ’கல்யாணம் ஆனா கம்முனு இருக்கனும்... கமிட் ஆனா உம்முனு இருக்கனும்... பேச்சிலர்னா ஜம்முனு இருக்கலாம்... பேச்சிலர் பர்ஸ்ட் லுக் வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன் வாழ்த்துக்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார் ஹர்பஜன் சிங். 
    ’சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்துக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் 'ஐங்கரன்', ''100% காதல்', 'ஜெயில்', 'அடங்காதே', 'காதலிக்க யாருமில்லை', 'ஆயிரம் ஜென்மங்கள்' ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன.
    எனது வாழ்க்கை கதையில் சமந்தாவை விட பிரபல நடிகை நடித்தால் தான் பொருத்தமாக இருக்கும் என பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து தெரிவித்துள்ளார்.
    ஐதராபாத்:

    இந்திய சினிமாவில் சமீபகாலமாக பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாக எடுக்கப்பட்டு வருகின்றன. அரசியல், சினிமா, விளையாட்டு துறைகளில் சாதித்தவர்களின் வாழ்க்கையை படமாக்க போட்டி நிலவுகிறது.

    இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் நடந்த சர்வதேச போட்டியில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்துடன் தங்கப்பதக்கம் வென்றார். அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது.

    சிந்து கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தாவிடம் பட தயாரிப்பாளர்கள் பேசினர். அவரும் நடிக்க சம்மதம் சொல்லி இருக்கிறார். தனது வாழ்க்கை வரலாறு படத்தில் சமந்தா நடிப்பதற்கு பி.வி.சிந்து வாழ்த்தும், நன்றியும் தெரிவிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் மாறுபட்ட கருத்து கூறி அதிர்ச்சி தந்திருக்கிறார்.

    ‘உங்கள் வாழ்க்கை கதையில் யார் நடித்தால் பொருத்தமாக இருக்கும்’ என்று பி.வி.சிந்துவிடம் கேட்டபோது,’எனது வாழ்க்கை கதையில் சமந்தா வைவிட தீபிகா படுகோன் நடித்தால் பொருத்தமாக இருப்பார். ஏனென்றால் அவரும் ஒரு பேட்மிண்டன் வீராங்கனை.

    பிவி சிந்து - தீபிகா படுகோன்


    ஆனாலும் எனது கதாபாத்திரத்தில் யார் நடிக்க வேண்டும் என்பதை பட தயாரிப்பாளர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்’ என தெரிவித்தார்.
    அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ’பிகில்’ படத்தின் இசை வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
    விஜய்  - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘பிகில்’. இந்த படம், பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இந்த படத்தில் அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் விஜய் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. 

    கதாநாயகியாக நயன்தாரா நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் கதிர், விவேக், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், யோகி பாபு, இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

    பிகில் பட போஸ்டர்

    இதுவரை படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தீபாவளிக்கு படம் திரைக்கு வர உள்ள நிலையில் செப்டம்பர் மாதம் முழுக்க படம் குறித்த அப்டேட்ஸ் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி படத்தின் இசை வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளார்கள். வரும் 19ந் தேதி இசை வெளியீடு நடக்க இருப்பதாக அறிவித்துள்ளார்கள்.
    விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘சங்கத்தமிழன்’ படத்திற்காக இசையமைப்பாளர் அனிருத் குரல் கொடுத்துள்ளார்.
    வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கும் படம் சங்கத்தமிழன். இப்படத்தில் விஜய் சேதுபதி இரு வேடங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ராசி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளனர். இவர்களுடன் நாசர், சூரி, ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

    விஜய்சேதுபதி - அனிருத்

    இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைத்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து படத்தில் கமலா என்ற பாடலும் வெளியானது. இந்த படத்தில் பிரான்சிஸ் எழுதிய "சண்டகாரி நீதான் என் சண்டக்கோழி நீதான்" என்ற பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார்.
    சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ரத்தா கபூர், அருண் விஜய் நடிப்பில் வெளியான ‘சாஹோ’ திரைப்படம் வசூலில் சாதனை படைத்துள்ளது.
    பிரபாஸ் நடிப்பில் ஆகஸ்ட் 30ம் தேதி வெளியான படம் சாஹோ. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என 4 மொழிகளில் வெளியானது. ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் வெளியான பத்து நாட்களில் 400 கோடி ரூபாய் வசூலை எட்டி சாதனை படைத்திருக்கிறது.

    சுஜீத் இயக்கத்தில் பாகுபலி பிரபாஸ், பாலிவுட் ஸ்ரத்தா கபூர் நடிப்பில், யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கப்பட்ட இப்படம் வெளியாகும் முன்பே படத்தின் அனைத்து மொழி வியாபாரங்களில் சாதனை படைத்தது. மேலும் டிஜிட்டல், சாட்டிலைட் உரிமங்களிலும் படத்தின் பட்ஜெட்டை மிஞ்சிய வியாபாரத்தை எட்டியது.

    சாஹோ படத்தில் பிரபாஸ்

    படத்தின் வெளியீட்டுக்கு பிறகு பிரபாசின் ரசிகர்களால் உலகளவில் இப்போது சாதனை படைத்து வருகிறது. 
    2017ம் ஆண்டு வெளியான ‘இட்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து வெளியாகி இருக்கும் ‘இட் - சாப்டர் டூ’ திரைப்படம் விமர்சனம்.
    2017ம் ஆண்டு வெளியான இட் படத்தின் தொடர்ச்சியாக இட் - சாப்டர் டூ பாகம் வெளியாகி இருக்கிறது. முந்தைய பாகத்தில் அமெரிக்காவின் டெர்ரி நகரில் வசித்து வரும் பில், தனது தம்பி ஜார்ஜிக்கு ஒரு மழை நாளில் காகிதக் கப்பலைச் செய்து தருகிறான். ஜார்ஜி அதை வைத்து மழையில் விளையாடும்போது, ஒரு வடிகாலுக்குள் விழுந்துவிடுகிறது. அதற்குள் எட்டிப்பார்க்கும் ஜார்ஜியை, ஜோக்கர் வடிவிலிருக்கும் ஒருவன் கடித்து அந்த வடிகாலுக்குள் இழுத்து சென்று விடுகிறான்.

    தம்பியின் இழப்பிலிருந்து மீள முடியாமல் இருக்கும் பில்லுடன் வெவ்வேறு சந்தர்ப்பத்தில் சில சிறுவர்கள் ஒன்று சேர்கிறார்கள். இவர்களுடன் சேர்ந்து தம்பியை தேடும் நிலையில், பல இடங்களில் சிறுவர்கள் காணாமல் போகிறார்கள். ஒரு கட்டத்தில் ஜோக்கர் வடிவில் இருக்கும் ஒருவன் இறந்து விட்டான் என்று நம்புகிறார்கள்.

    இட் சாப்டர் டூ

    27 ஆண்டுகள் கழித்து இப்படம் தொடங்குகிறது. ஜோக்கர் வடிவில் இருக்கும் மர்ம மனிதன் மீண்டும் ஊரில் உள்ள சிறுவர்களை அழித்து வருகிறான் செய்திகள் வருகிறது. இதையறிந்த பில்லின் நண்பர், வெவ்வேறு ஊரில் இருக்கும் நண்பர்கள் மற்றும் பில் ஆகியோரை அழைக்கிறான்.

    மீண்டும் ஒன்று சேரும் நண்பர்கள் ஜோக்கர் வடிவில் இருக்கும் மர்ம மனிதனை அழித்தார்களா? அவன் இவ்வாறு செய்வதற்கு என்ன காரணம்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    இட் சாப்டர் டூ

    திகில் படம் என்ற வகையிலிருந்து பேண்டஸி வகை படமாக மாறிவிடுகிறது இட் சாப்டர் டூ. முதல் பாகத்தில் சிறுவர்களாக இருந்தவர்கள் தற்போது 27 ஆண்டுகள் கழித்து பெரியவர்களாக மாறி ஜோக்கர் உருவத்தில் இருப்பவரை தேடும் விதமாக படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

    பயத்தை மூலதனமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர். எதிர்ப்பார்க்காத பல இடங்களில் பயமுறுத்தி இருக்கிறார். பின்னணி இசை மூலம் பார்ப்பவர்களை அச்சுறுத்தி இருக்கிறார் இசையமைப்பாளர் பெஞ்சமின் வால்ப்பிஷ். செக்கோ வரீஸின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.

    மொத்தத்தில் ‘இட் - சாப்டர் டூ’ சூப்பர் ஹிட்.
    நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தை பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது.
    அஜித் நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘நேர்கொண்ட பார்வை’. பாலிவுட்டில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக் இது. எச்.வினோத் இயக்கிய இந்தப் படத்தில், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த படத்தை தொடர்ந்து, திரும்பவும் எச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் அஜித். 

    ‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து, இந்தப் படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார். இது அஜித்தின் 60-வது படமாகும். இந்நிலையில், ‘தல 60’ படத்தின் ஷூட்டிங் தொடங்கிவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. மேலும், படப்பிடிப்பு தளத்தில் அஜித் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றும் வைரலாகி வருகிறது. 

    அஜித் 60 படக்குழு

    இதுகுறித்து படக்குழுவிடம் விசாரித்தபோது, “அது பழைய புகைப்படம். இன்னும் போட்டோஷூட் கூட நடத்தவில்லை. அதற்குள் எப்படி படப்பிடிப்பைத் தொடங்க முடியும்? அஜித்துடன் நடிப்பவர்கள் தேர்வு தற்போதுதான் நடைபெற்று வருகிறது. அது முடிந்ததும், பட பூஜையன்று படக்குழுவினர் யார் என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளோம்” என்றனர். ‘தல 60’ படத்துக்காக தாடி, மீசையை எடுத்து விட்டு இளமைத் தோற்றத்துக்கு மாறியுள்ளார் அஜித். ஆக்‌ஷன், த்ரில்லர் கலந்த படமாக இது உருவாகவுள்ளது.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    ‘பேட்ட’ படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் பிரதீக் பாபர், தலீப் தாஹில், ஜதின் சர்னா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

    இந்த படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். தற்போது தர்பார் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு 2வது போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


    லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். அனிருத் இசை அமைக்கிறார். 
    அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பிகில்’ திரைப்படத்தின் தெலுங்கு உரிமம் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.
    அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகி உள்ள இந்தப் படத்தில் விஜய் அப்பா, மகன் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

    ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இதுவரை படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இம்மாதம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.

    தயாரிப்பாளர் அர்ச்சனா ட்விட்

    தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் நிலையில், இந்தப் படத்தின் தெலுங்கு உரிமத்தை மகேஷ் கோனேரு மற்றும் ஈஸ்ட் கோஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பெற்றுள்ளதாகவும், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பிகில் திரைப்படம் 400 திரையரங்குகளில் வெளியாக இருப்பதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.
    ×