search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    விஜய் சேதுபதி, நிவேதா பெத்துராஜ்
    X
    விஜய் சேதுபதி, நிவேதா பெத்துராஜ்

    தீபாவளி ரேஸில் இருந்து விலகிய விஜய் சேதுபதி

    விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என கூறப்பட்ட நிலையில், தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.
    வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கும் சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதி இரு வேடங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ராசி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். இவர்களுடன் நாசர் ,சூரி ,ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன்,மொட்டை ராஜேந்திரன் , மாரிமுத்து , ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  

    விஜயா புரடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர்  இசையமைத்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . அதனை தொடர்ந்து படத்தில் கமலா என்ற பாடலும் வெளியானது. இந்த படத்தில் பிரான்சிஸ் எழுதிய " சண்டகாரி நீதான் என் சண்டக்கோழி நீதான் " என்ற பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். 

    சங்கத்தமிழன் படக்குழு

    தீபாவளி அன்று வெளியாகவிருந்த சங்கத் தமிழன், அக்டோபர் 4ந்தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. தீபாவளி அன்று விஜய், கார்த்தி ஆகியோரின் படம் வெளியாவதாலும், தியேட்டர்கள் கிடைப்பதில் கடும் போட்டி நிலவுவதாலும் இம்முடிவு எடுக்கப்பட்டதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம், அக்டோபர் 4ஆம் தேதி அன்று வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள அசுரன் வெளியாகவிருக்கிறது. இதனால் எதிர்பார்ப்பிலிருக்கும் சங்கத் தமிழன் படமும் அசுரன் படமும் ஒரே நாளில் வெளியாகவிருக்கின்றன.
    Next Story
    ×