என் மலர்
சினிமா செய்திகள்
பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகி இருக்கும் தமிழரசன் படத்தின் முன்னோட்டம்.
எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கொளசல்யா ராணி தயாரித்துள்ள படம் தமிழரசன். விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார். பக்கா கமர்சியல் படமாக உருவாகியுள்ள இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.

படம் குறித்து இயக்குநர் பாபு யோகஸ்வரன் கூறியதாவது: "இந்தப் படம் சிறப்பாக அமைந்ததிற்கு முக்கிய காரணம் தயாரிப்பாளரும், விஜய் ஆண்டனியும் தான் காரணம். நாங்கள் இரண்டு ராஜாக்களைப் பார்த்து தான் வளர்ந்தோம். அந்த இரண்டு ராஜாக்கள் இளையராஜாவும் பாரதிராஜாவும் தான். இது பக்கா கமர்சியல் படம். அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும் என கூறினார்.
லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனனுக்கு பிரபல நடிகை டப்பிங் பேசியுள்ளார்.
விஜய்யின் 64-வது படம் `மாஸ்டர்'. லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இவர், ‘மாநகரம்,’ ‘கைதி’ ஆகிய 2 படங்களை இயக்கியவர். சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே ரஜினியின் பேட்ட படத்தில் நடித்திருந்தார். மாஸ்டர் படம் இம்மாதம் ரிலீசாக இருந்தது. கொரோனா ஊரடங்கால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.

இந்நிலையில், மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனனுக்கு பிரபல நடிகை டப்பிங் பேசியுள்ளார். ஒரு கிடாயின் கருணை மனு படத்தில் நடித்த ரவீனா தான் மாளவிகாவுக்கு குரல் கொடுத்துள்ளார். இவர் ஏற்கனவே நயன்தாரா, காஜல் அகர்வால், அமலாபால், எமி ஜாக்சன் போன்ற முன்னணி நடிகைகளுக்கு குரல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் ஹீரோயினாக நடித்துள்ள காவல்துறை உங்கள் நண்பன் விரைவில் ரிலீசாக உள்ளது.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் பிரியங்கா சோப்ரா, கொரோனாவால் தவிக்கும் அமெரிக்க மாணவர்களின் கல்விக்கு உதவ முடிவு செய்துள்ளார்.
கொரோனாவால் உலக நாடுகள் நிலைகுலைந்துள்ளன. இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. தினமும் ஆயிரக் கணக்கான உயிர்களை கோவிட்-19 வைரஸ் கொன்று குவித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து நாடுகளும் தடுமாறுகின்றன. அமெரிக்காவில் கொரோனா பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. அங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் பலியாகி வருகிறார்கள். இதுவரை அங்கு 22 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் அமெரிக்க பாப் பாடகரை மணந்து அந்த நாட்டில் குடியேறி விட்ட பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொரோனாவால் தவித்து வரும் மாணவர்களின் கல்விக்கு உதவப் போவதாக அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசி இருப்பதாவது:- ‘இந்த இக்கட்டான நேரத்தில் அனைவரும் ஒன்றாக இணைந்து தங்களால் இயன்ற உதவிகளை செய்வது அவசியமாகும். இளைஞர்களின் வளர்ச்சியும், கல்வியும் எப்போதும் எனது மனதுக்கு நெருக்கமாக உள்ளன. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆன்லைன் மூலம் பாடங்களை கற்கும் மாணவர்களின் கல்விக்கு உதவி செய்யும் விதமாக ஹெட்போன்கள் வழங்க முடிவு செய்துள்ளேன்’ என்றார்.
இவ்வாறு பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.
சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் பொன்மகள் வந்தாள் படத்தில் பிரபல இயக்குனர்கள் 5 பேர் இடம்பெற்றுள்ளனர்.
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் எழுதி இயக்கி உள்ளார். ஜோதிகா இப்படத்தில் வக்கீலாக நடித்துள்ளார். இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஜோதிகா உடன் பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் 5 பேரும் இயக்குனர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் இணைந்து நடிப்பது இதுவே முதன்முறை ஆகும்.
நடிகை ஸ்ரேயாவின் கணவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் அவர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயா, கொரோனாவால் தங்களுக்கு எப்படிப்பட்ட பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதை வெளிப்படுத்தி உள்ளார். அவர் கூறியதாவது: “நானும், எனது கணவரும் திருமண நாள் விழாவை கொண்டாட ஒரு ஓட்டலுக்கு செல்ல முடிவு செய்து முன்பதிவும் செய்தோம். அங்கு சென்றபோது அது மூடி இருந்தது.
சுற்றிலும் கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. தொடர்ந்து சில நாட்களில் ஸ்பெயின் முழுவதும் ஊரடங்குக்குள் வந்தது. முக்கிய தேவைகள் இருந்ததால் ஒருவர் மட்டும் வீட்டில் இருந்து வெளியே வரலாம் என்று போலீசார் கட்டுப்பாடுகள் விதித்தனர். ஒரு கட்டத்தில் கணவர் ஆண்ட்ரிக்கு காய்ச்சலும், இருமலும் ஏற்பட்டது. உடனே ஆஸ்பத்திரிக்கு சென்றோம். மருத்துவர்கள் உங்கள் கணவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை.
உடனே வீட்டுக்கு செல்லுங்கள். இங்கு இருந்தால் கொரோனா தொற்று வந்துவிடும் என்றனர். உடனே வீட்டுக்கு வந்து இருவரும் தனிமைப்படுத்திக்கொண்டோம். தனித்தனி படுக்கை அறைகளை பயன்படுத்தினோம். வீட்டில் சமூக விலகலை கடைப்பிடித்தோம். இப்போது நன்றாக இருக்கிறோம். தினமும் யோகா தியானம் செய்கிறேன். எனது பெற்றோர் மும்பையில் இருக்கின்றனர்”. இவ்வாறு ஸ்ரேயா கூறினார்.
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடியனாக இருக்கும் யோகிபாபு, அடுத்ததாக புதிய அவதாரம் எடுக்க உள்ளாராம்.
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடியனாக இருப்பவர் யோகிபாபு. இவர் கைவசம் டஜன் கணக்கில் படம் வைத்துள்ளார். இதுவரை காமெடியனாகவும், ஹீரோவாகவும் நடித்து வந்த யோகிபாபு, தற்போது புது அவதாரம் எடுக்க உள்ளார். டகால்டி படத்தை தயாரித்த எஸ்.பி.சவுத்ரி அடுத்ததாக தயாரிக்கும் புதிய படத்திற்காக யோகிபாபு கதை, திரைக்கதை, வசனம் எழுத உள்ளாராம்.
மேலும் இந்த படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார்களாம். ஒருவேளை நயன்தாரா சம்மதிக்காவிட்டால், காஜல் அகர்வாலை அணுக திட்டமிட்டுள்ளார்களாம். ஏற்கனவே யோகிபாபு, கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுடனும், கோமாளி படத்தில் காஜல் அகர்வாலுடனும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரபல வில்லன் நடிகர், கொரோனா ஊரடங்கால் உணவின்றி தவிப்பவர்களுக்காக தினந்தோறும் இலவசமாக உணவளித்து வருகிறார்.
கொரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி தவிக்கும் மக்களுக்கு நடிகர்-நடிகைகள் உதவிகள் வழங்கி வருகிறார்கள். தமிழில் கள்ளழகர், மஜ்னு, சந்திரமுகி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பிரபல இந்தி வில்லன் நடிகர் சோனு சூட் மும்பையில் தினமும் 45 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கி வருகிறார். அவரது சேவையை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
இதுகுறித்து சோனு சூட் கூறும்போது, ‘கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உயிரை காப்பாற்ற மருத்துவர்களும், நர்சுகளும், தொண்டு நிறுவனத்தினரும் இரவும்-பகலும் உழைத்து வருகிறார்கள். இந்த நிலையில் நானும், என்னால் ஆன உதவிகளை செய்வதில் பெருமை அடைகிறேன்’ என்றார்.

சோனு சூட் ஏற்கனவே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் ஓய்வெடுக்க மும்பையில் உள்ள தனது 6 மாடி நட்சத்திர ஓட்டலை வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா அச்சத்தால் சினிமாவில் முத்த காட்சிகளுக்கு தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
கொரோனா உயிர்ப்பலிகளில் இருந்து மீள முடியாமல் உலகம் திக்குமுக்காடி வருகிறது. இதை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் ஊரடங்கை பிறப்பித்துள்ளன. இந்த வைரஸ் தும்மல் மற்றும் மூச்சுகாற்றால் பரவும் என்றும், இதில் இருந்து தப்பிக்க ஒரு மீட்டர் இடைவெளியில் இருக்க வேண்டும் என்றும், முக கவசம் அணிய வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் வற்புறுத்துகின்றனர்.
இதனால் ஊரடங்கு முடிந்ததும் திரைப்படங்களில் நெருக்கமான காதல் காட்சிகளையும், முத்த காட்சிகளையும் படமாக்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்த காட்சிகளை படமாக்குவதற்கு தடை விதிக்கப்படலாம் என்ற பரபரப்பும் ஏற்பட்டு உள்ளது.
தற்போதையை படங்களில் காதல் காட்சிகளில் எல்லை மீறிய நெருக்கத்தை வைக்கின்றனர். உதட்டோடு உதடு முத்தமிடும் காட்சிகளும் சகஜமாகி விட்டன. கொரோனாவால் பாதியில் நின்றுபோன பல படங்களில் நெருக்கமான காதல் மற்றும் முத்த காட்சிகள் எடுக்க வேண்டி இருப்பதாக கூறப்படுகிறது. இனிமேல் இந்த காட்சிகளில் நடிக்க நடிகர்-நடிகைகள் உடன்படுவார்களா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
இதுகுறித்து பிரபல இந்தி இயக்குனர் ஷுஜித் சிர்கார் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறும்போது, “இந்த கொரோனா பாதிப்பு முடிந்த பிறகு திரைப்படங்களில் திட்டமிட்டபடி நெருக்கமான காதல் காட்சிகள், முத்த காட்சிகள், கட்டியணைக்கும் காட்சிகளை எப்படி படமாக்க போகிறோம்? என்று தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.
நடிகை தியா மிர்சா கூறும்போது, “படப்பிடிப்புகளில் எல்லா பணிகளுமே நெருக்கமாகத்தான் நடக்கும். ஒரு காட்சியை படமாக்கும்போது இணைந்தே இருப்பார்கள். கொரோனாவால் முக கவசம், கையுறைகள் அணிந்துதான் படப்பிடிப்புகளில் பங்கேற்கும் நிலை வருமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்” என்று கூறியுள்ளார்.
கொரோனா பாதித்த பகுதியில் தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினி தெளிக்க அஞ்சியதால் பிரபல நடிகை அந்த பணியை செய்துள்ளார்.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் எங்கும் தனது கோரமுகத்தை காட்டி வருகிறது. அதில் இருந்து தப்பிக்க இந்தியாவில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக்கிடக்கும் சூழல் உருவாகி உள்ளது. ஆந்திர மாநிலத்திலும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜா, கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார். அந்தவகையில், அவரது தொகுதியில் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை அறிந்த ரோஜா அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்க உத்தரவிட்டார்.

ஆனால் கொரோனா பயத்தால் தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினி தெளிக்க அஞ்சியதால், ரோஜா தானே களத்தில் இறங்கி பாதுகாப்பு கவசங்களுடன் கிருமி நாசினி தெளித்தார். அப்பகுதி முழுவதும் அவர் கிருமி நாசினி தெளித்தார். ரோஜாவின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
எந்த நாட்டில் வாழ்கிறீர்களோ அந்நாடு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை கடைபிடித்து பாதுகாத்து கொள்ளுங்கள் என்று வெளிநாடுகளில் வாழும் தமிழகர்களுக்கு ரஜினி டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
எந்த நாட்டில் வாழ்கிறீர்களோ அந்நாடு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை கடைபிடித்து பாதுகாத்து கொள்ளுங்கள் என்று வெளிநாடுகளில் வாழும் தமிழகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த டுவிட்ரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் பிரிந்து வாழும் உறவினர்கள் உங்களைப் பற்றியே கவலை கொண்டுள்ளனர். கொரோனா பாதிப்புக்கு இந்தியாவோ, தமிழகமோ விதிவிலக்கு அல்ல. உங்களை பாதுகாத்து கொள்வதே குடும்பத்தினருக்கும், உறவினருக்கும் நீங்கள் தரும் இந்த ஆண்டின் பரிசு என்று கூறியுள்ளார்.
ஜூவாலா கட்டாவை காதலித்து வரும் நடிகர் விஷ்ணு விஷால், தனது மனைவியை பிரிந்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.
வெண்ணிலா கபடி குழு படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பலே பாண்டியா, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள விஷ்ணு விஷாலுக்கு 2011-ல் திருமணம் நடந்தது. 2018-ல் மனைவியை விவாகரத்து செய்து விட்டார். பின்னர் ராட்சசன் படத்தில் ஜோடியாக நடித்த அமலாபாலுடன் இணைத்து பேசப்பட்டார். அதனை இருவரும் மறுத்தனர்.

இந்த நிலையில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட செல்பி படங்களை விஷ்ணு விஷால் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளதை உறுதிப்படுத்தினார். இதுபோல் ஜூவாலா கட்டாவும், விஷ்ணு விஷாலுடன் ஜோடியாக எடுத்துக்கொண்ட படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து காதலில் உருகி வருகிறார். ஜுவாலா கட்டாவை திருமணம் செய்வதற்காகவே தனது மனைவியை விஷ்ணு விஷால் விவாகரத்து செய்தார் என்று இணையதளங்களில் தகவல்கள் பரவின.

இதற்கு தற்போது விளக்கம் அளித்து விஷ்ணு விஷால் கூறும்போது, ‘எனது மனைவியை பிரிய காரணம் ஜுவாலா கட்டா என்று சிலர் பேசுகின்றனர். மேலுல் சிலர் ராட்சசன் படப்பிடிப்பு சமயத்தில் அமலாபாலோடு சேர்ந்து இருந்ததாக சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதெல்லாம் பொய். பிரிவுக்கான உண்மையான காரணத்தை என்னால் சொல்ல முடியாது. அது எனது தனிப்பட்ட சொந்த விஷயம்’ என்றார்.
கொரோனா ஊரடங்கு உத்தரவால் அனைவரும் வீட்டில் இருக்கும் நிலையில், நடிகர் சிம்பு வீட்டிலேயே உடற் பயிற்சி செய்து வருகிறார்.
சிம்பு நடிப்பில் தற்போது மாநாடு திரைப்படம் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் படப்பிடிப்பு நடக்காமல் இருந்து வருகிறது. ஊரடங்கு உத்தரவால் நடிகர் நடிகைகள் வீட்டிற்குள்ளே உடற்பயிற்சி செய்வது சமையல் செய்வது என வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் சிம்பு வீட்டிற்குள்ளேயே உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகியிருக்கிறது. இதை நடிகர் மகத் வெளியிட்டிருக்கிறார்.Ok guys here we go finally a video of #STR working out at home Because of lot of requests from the fans! #StayHomeStaySafe#WorkoutsAtHomepic.twitter.com/T70L6jePUo
— Mahat Raghavendra (@MahatOfficial) April 13, 2020






