என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கொரோனா ஊரடங்கு உத்தரவால் அனைவரும் வீட்டில் இருக்கும் நிலையில், நடிகர் சிம்பு வீட்டிலேயே உடற் பயிற்சி செய்து வருகிறார்.
    சிம்பு நடிப்பில் தற்போது மாநாடு திரைப்படம் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.

    இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் படப்பிடிப்பு நடக்காமல் இருந்து வருகிறது. ஊரடங்கு உத்தரவால் நடிகர் நடிகைகள் வீட்டிற்குள்ளே உடற்பயிற்சி செய்வது சமையல் செய்வது என வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
    இந்நிலையில் சிம்பு வீட்டிற்குள்ளேயே உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகியிருக்கிறது. இதை நடிகர் மகத் வெளியிட்டிருக்கிறார்.
    தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதி ஹாசன், ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றி இருக்கிறார்.
    தமிழ்,தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்துவருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் லாபம் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். 

    கொரோனா காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பல பிரபலங்களும் தங்களது நேரத்தை ரசிகர்களுடன் சமூகவலைத்தளங்களில் செலவிட்டு வருகின்றனர்.
    நடிகை ஸ்ருதி ஹாசன்
    தற்போது ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார், அவரை Hula Hoop exercise குறித்த வீடியோ ஒன்றை பதிவிடுமாறு ரசிகர்கள் பலரும் கேட்டிருந்ததை அடுத்து அந்த வீடீயோவை பதிவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

    இதில் Hula hoop எப்படி கற்றுக் கொள்வது, எப்படி சுற்றுவது பற்றிய முழு விவரங்களை அவர் கூறியுள்ளார்.
    மாஸ்டர் படத்தை அடுத்து விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்திற்கான வேலைகளில் நடிகர் விஜய் ஈடுபட்டுள்ளார்.
    பிகில் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதில் மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும், விஜய்சேதுபதி வில்லனாகவும் நடித்துள்ளனர். கொரோனா பரவல் முடிவுக்கு வந்தால் விரைவில் திரைக்கு வரும்.

    அடுத்தாக விஜய், தனது 65-வது படத்தில் நடிக்க தயாராகி வருவதாகவும், இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் தொடங்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை இயக்குவது யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிப்பதாக பேசப்பட்டது.

    இயக்குனர்கள் பாண்டிராஜ், அருண்ராஜா காமராஜ், பார்த்திபன், சூர்யாவை வைத்து சூரரைப்போற்று படத்தை இயக்கியுள்ள சுதா கொங்கரா ஆகியோரில் ஒருவர் இயக்க வாய்ப்பு இருப்பதாகவும் பேசப்பட்டது.

    இறுதியில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. விஜய்யின் அடுத்த படம் துப்பாக்கி 2-ம் பாகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகத நிலையில், அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார் விஜய். வித்தியாசமான தோற்றத்தில் புதிய கெட்டபில் தோன்ற இருப்பதாக தகல்கள் வெளியாகி உள்ளது.
    கொரோனா ஊரடங்கு உத்தரவால் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகை குட்டி பத்மினி 2 ஆயிரம் பேருக்கு உதவி செய்திருக்கிறார்.
    கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சின்னத்திரை நடிகர்கள், சினிமா தொழிலாளர்கள், குறைந்த அளவு சம்பளம் வாங்கும் நடிகர் நடிகைகள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பலரும் உதவிகளை செய்து வருகிறார்கள்.

    நடிகை குட்டி பத்மினி உதவி செய்யும் காட்சி

    தற்போது கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளவர்களுக்கு உதவும் வகையில் சின்னத்திரை தயாரிப்பாளரும், நடிகையுமான குட்டி பத்மினி சின்னத்திரை நடிகர்கள், சின்னத்திரை இயக்குனர் சங்கம், எழுத்தாளர் சங்கம், பெப்சி, சினிமா பத்திரிகையாளர் சங்கம்,  தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன், மற்றும் பொதுமக்கள் உட்பட ஏறத்தாழ 2000 பேர்களுக்கு அரிசி, பருப்பு வகைகள், பண உதவி என வழங்கி உள்ளார்.
    விஷ்ணு விஷாலை ரத்த கறையுடன் போட்டோ எடுத்தது யார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
    தமிழில் வெண்ணிலா கபடி குழு, பலே பாண்டியா, குள்ள நரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் விஷ்ணு விஷால். இவர் நடித்துள்ள காடன், ஜகஜால கில்லாடி ஆகிய படங்களின் ரிலீஸ் கொரோனா ஊரடங்கால் தள்ளிப்போயுள்ளன.

    இதையடுத்து எப்.ஐ.ஆர். எனும் படத்தை தயாரித்து நடிக்கிறார். இந்நிலையில் இவர் அடுத்ததாக நடித்து தயாரிக்கும் மோகன் தாஸ் என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டார்.

    விஷ்ணு விஷால்

    சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் உடல் முழுவதும் ரத்தக்கறையுடன் விஷ்ணு விஷால் இருப்பதுபோல் அப்போஸ்டர் அமைந்துள்ளது. பலரும் அதை பாராட்டி வந்த நிலையில், அந்த போட்டோவை எடுத்தது யார் என்ற உண்மையை தற்போது விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.

    ஷுட்டிங்கின்போது தனது பெண் தோழியான பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா தான் இந்த போட்டோவை எடுத்தது என்று அவர் கூறியுள்ளார். விளையாட்டாக எடுத்த அந்த போட்டோவை வைத்து கிரியேட்டிவாக ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பிய படக்குழுவினர் அதனை டிஜிட்டல் போஸ்டராக மாற்றியுள்ளனர்.  அந்தப் அந்த போஸ்டர் இவ்வளவு பெரிய வெற்றியடையும் என்று தான் நினைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரம்பா, குழந்தைகளின் வாழ்த்து மழையில் நனைந்து இருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரம்பா. கடந்த 2010ம் ஆண்டு கனடாவை சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் நடிப்பிற்கு முழுக்கு போட்ட ரம்பா, டிவி நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்றார். இவர்களுக்கு லான்யா, சாஷா மற்றும் ஷிவின் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

    குழந்தைகளின் வாழ்த்து மழையில் ரம்பா

    கொரோனா ஊரடங்கால் உலகமே முடங்கி உள்ள நிலையில் கனடாவில் வசிக்கும் ரம்பா திருமண நாளை வீட்டிலேயே கொண்டாடினார். இதுகுறித்து அவர் கூறும்போது, நண்பர்கள், உறவினர்கள் இல்லாமல் கணவர், குழந்தைகளுடன் திருமண நாளை கொண்டாடினோம். வெளியில் இருந்து கேக் கூட வாங்காமல் நாங்களே வீட்டில் கேக் தயார் செய்தோம்.

    லான்யா, சாஷா மற்றும் ஷிவின்

     எதிர்பாராத நேரத்தில் இரு மகள்கள் கொடுத்த வாழ்த்துமடல் மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. இந்த கடினமான சூழலில் பணம், பரிசுகள் எதுவும் இன்றி அன்பு மட்டுமே எங்களை மகிழ்ச்சி கொள்ள செய்தது. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள், குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள்' என்றார்.
    முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித், விஜய் ரசிகர்களுக்கு நடிகர் விவேக் டிவிட்டரில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    கொரோனா ஊரடங்கால் மக்கள் வீட்டுக்குள் முடங்கிக் இருக்கிறார்கள். இந்நிலையில் தொலைக்காட்சியில் புதிய படங்களை ஒளிபரப்பி வருகின்றன. விஜய் மற்றும் அஜித் படங்கள் திரையிடும் போதெல்லாம் அவர்களுடைய ரசிகர்கள், சம்பந்தப்பட்ட படத்தை ஹேஷ்டேக் போட்டு டுவிட்டரில் டிரெண்டாக்குகின்றனர்.

    இதில் இரண்டு தரப்புக்கும் இடையே போட்டியும், மோதலும் நடைபெற்று வருகிறது. ஒருவரை ஒருவர் மோசமான வார்த்தைகளால் திட்டிக்கொள்கின்றனர். அவர்கள் பதிவிடும் டுவிட்களில் சம்பந்தப்பட்ட படத்தில் நடித்த மற்ற நடிகர்களையும் டேக் செய்துவிடுகின்றனர். இதேபோல் நடிகர் விவேக்கும் டேக் செய்து பதிவு செய்கிறார்கள்.

    இதனால் கோபமான விவேக், நண்பர்கள் அஜித், விஜய் அல்லது எந்த நடிகரையும், தனி நபரையும் தரம் தாழ்ந்து செய்யும் எதிர்மறைப் பதிவுகளை நான் விரும்புவதில்லை. என்னை டேக் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். மீறிச் செய்தால் பிளாக் ஆகும். நேர்மறைப் பதிவுகளுக்கே நான் டுவிட்டரைப் பயன்படுத்துகிறேன் என்று பதிவு செய்திருக்கிறார்.
    சாயிஷாவை திருமணம் செய்து கொண்ட ஆர்யா, தற்போது விடுமுறை நாளில் அவரது சமயலை சாப்பிட்டு புகழ்ந்து வருகிறார்.
    சினிமா நடிகர், நடிகைகளிடம் இருக்கும் திறமைகளை அவர்களே மறந்துவிட்ட நிலையில் இப்போது இந்த விடுமுறை நேரத்தில் தான் அது அவர்களுக்கே நினைவுக்கு வருகிறது. பல நடிகைகள் தன் கணவருக்கும், தன் குழந்தைகளுக்கும் தங்கள் கைகளால் விதவிதமாக சமைத்து தருகின்றனர்.

    அந்த வகையில் ஆர்யா, சாயிஷா ஜோடி இந்த ஊரடங்கை ஓய்வு நேரமாக நினைக்கின்றனர். சாயிஷா தன் கணவர் ஆர்யாவுக்கு தினமும் ஸ்பெஷல் உணவுகளை சமைத்து தருகிறார்.

    முதலில் கப் கேக், சீஸ் கேக் என்று ஆரம்பித்து தற்போது, பிரியாணி சமைக்கும் அளவுக்கு தயாராகி விட்டார். பிரியாணி சாப்பிட்ட ஆர்யா அப்படியே அசந்து போய் விட்டு மிகவும் அருமை அருமை என்று கூறியுள்ளார். தன் மனைவி சமைத்த உணவுகளை படங்கள் எடுத்து தன் நண்பர்களுக்கும் சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டுள்ள ஆர்யா இது என் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான தருணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
    கொரோனா ஊரடங்கு நேரத்தில் மக்கள் பலரும் சிரமப்பட்டு வரும் நிலையில் நடிகர் சந்தானம் ரகசியமாக உதவி செய்து வருகிறார்.
    தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரம் நடிகர் சந்தானம். இவர் மக்களுக்கு பேரிடர் காலங்களில் எப்போதும் துணையாக நின்று பல உதவிகளை ரகசியமாக செய்து வருவார்.

    ரசிகர் நற்பணி மன்றம் மூலமாக உதவி செய்யும் காட்சி

    அதேபோல் கொரோனா பீதியில் உலகமே உறைந்துபோய் உள்ள நிலையில் சந்தானம் தன் தமிழக மக்களுக்கும், காவல்துறையினருக்கும், மருத்துவர்களுக்கும், துப்புரவுத்தொழிலாளர்களுக்கும் தேவையான உதவிகளை தமிழகம் முழுவதும் உள்ள தன் ரசிகர் நற்பணி மன்றம் மூலமாக செய்து வருகிறார்.

    மேலும் கொரொனா நிவாரணப்பணிகளுக்கு தன்னால் முடிந்தவரை மக்கள் பணியை செய்து வருகிறார். இதில் மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான பால், காய்கறிகள், அரிசி, மளிகைப்பொருட்கள், கபசுரகுடிநீர், கிருமிநாசினி மற்றும் முககவசம் என தேவையான அனைத்தும் சந்தானம் தன் ரசிகர் மன்றம் மூலம் செய்து வருகிறார். 
    உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பயத்தில் இருந்து மீள்வதற்கான சிறந்த வழியை நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
    நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் ஊரடங்கு முடிந்த பிறகு அனைவரும் இந்திய பொருட் களை வாங்கி நமது வணிகர்களை வாழ வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருந்தார். தற்போது கொரோனா ஊரடங்கு ஓய்வை கழிப்பது குறித்து அவர் கூறியதாவது:- எனக்கு கிடைத்த இந்த ஓய்வு நேரத்தை நல்லபடியாக பயன்படுத்தி வருகிறேன். விளையாடுவது, புத்தகங்கள் படிப்பது ஒரு புறம் இருந்தாலும், உடற்பயிற்சிக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்க வேண்டும். 

    உடற்பயிற்சி கூடங்கள் அனைத்தையும் மூடிவிட்டதால் உடற்பயிற்சிகள் செய்யாமல் இருக்கலாம் என்று பலர் சொல்கிறார்கள். அது தவறு. இந்த சமயத்திலும் வயிறு, கால் தொடர்பான யோகாசனங்களை செய்து வருகிறேன். உடற்பயிற்சிகள் செய்து கொண்டே இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களிடம் பேசுகிறேன். பிடித்தமான விளையாட்டுகளில் ஈடுபட்டும் நிறைய கலோரிகளை குறைக்கிறேன். அதே மாதிரி தியானமும் செய்கிறேன்.

    காஜல் அகர்வால்

    வீட்டில் இருப்பதால் ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து மீளவும், கொரோனா வியாதி வந்து ஏதோ ஆகிவிடப்போகிறது என்ற பயத்தில் இருந்து விடுபடவும் தியானம்தான் சிறந்த வழி. அதை செய்யுங்கள். 6 மாதமாக நான் அணியாமல் வீட்டில் சேர்த்து வைத்திருந்த உடைகளை பீரோவில் இருந்து அகற்றி விட்டேன். எனக்கு சமையல் செய்வது மிகவும் பிடிக்கும். இந்த நேரத்தில் புதுசுபுதுசாக சமையல் செய்து வருகிறேன்”.

    இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.
    குடிகாரர்களுக்காக மதுக்கடைகளை திறக்குமாறு பிரபல இயக்குனர் ஒருவர் முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
    கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடி உள்ளனர். இதனால் மதுவுக்கு அடிமையாகி இருக்கும் குடிகாரர்கள் அல்லாடுகிறார்கள். சில இடங்களில் கள்ளச்சாராய வியாபாரம் விறுவிறுப்பாக நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. போதைக்காக கைகழுவும் சானிடைசர்கள் மற்றும் திரவங்களை குடிக்கும் சம்பவங்களும், இதனால் உயிர்ப்பலிகளும் நடக்கின்றன. எனவே குடிகாரர்கள் பிரச்சினையை மனதில் கொண்டு வீட்டுக்கு வீடு மது விற்க மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த நிலையில் பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மாவும் தனது டுவிட்டர் பக்கத்தில், “மது கிடைக்காமல் தலைமுடியை பிய்த்து, பைத்தியமாகி மனைவிமார்களை அடித்து துன்புறுத்தும் குடிகாரர்களுக்காக மதுக்கடைகளை திறக்க வேண்டும் என்று ஆந்திர, தெலுங்கானா முதல்-மந்திரிகளை கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். அவருடையை கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. அடுத்த வேளை உணவு கிடைக்காமல் மக்கள் கஷ்டப்படும் இந்த நேரத்தில் மது தேவையா? என்று அவருக்கு கண்டனமும் எழுந்துள்ளது.
    அறிமுக இயக்குனர் விக்னராஜன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன், மீஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் அந்தகாரம் படத்தின் முன்னோட்டம்.
    'அந்தகாரம்' என்ற படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து அட்லீ தயாரிக்கிறார். விக்னராஜன் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கிறார். மேலும் வினோத் கிஷன், மீஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைக்க, எட்வின் சாகே ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

    அந்தகாரம் என்றால் புதையல்கள் நிறைந்த ஒரு இடம். அந்த இடத்தை சாத்தான்களும், பிசாசுகளும் பாதுகாக்கிறது என்று குறிப்பிடுகிறது பைபிள்.  

    படம் குறித்து இயக்குனர்  விக்னராஜன் கூறியதாவது: இது முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம். இப்படம் முழுக்க சென்னையில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மூன்று கதைகள் அவை ஒன்றோடொன்று தொடர்பு இருக்கும். இப்படத்தின் படப்பிடிப்பை 2016-ல் தொடங்கினோம், கடந்தாண்டு நிறைவடைந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
    ×