என் மலர்
சினிமா செய்திகள்
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துவரும் நடிகை சாய்பல்லவி, கொரோனா காலகட்டத்தில் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்போம் என தெரிவித்துள்ளார்.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் எங்கும் தனது கோரமுகத்தை காட்டி வருகிறது. அதில் இருந்து தப்பிக்க இந்தியாவில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக்கிடக்கும் சூழல் உருவாகி உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் மருத்துவ பணியாளர்களும், காவல் துறையினரும் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் சேவையை பலரும் பாராட்டுகின்றனர்.

இந்த நிலையில், நடிகை சாய்பல்லவி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இந்த கஷ்டமான காலக்கட்டத்தில் ஒருவருக்கொருவர் அனைத்து வழிகளிலும் உதவியாக இருப்போம். தன்னலமில்லாமல் சேவையாற்றி வரும் மருத்துவ, சுகாதார பணியாளர்கள் காவல்துறை அண்ணன்கள், அக்காள்களுக்கு என்றைக்கும் கடமைப்பட்டு உள்ளோம்’ என்று கூறியுள்ளார்.
தமிழில் முன்னணி நடிகையாக இருந்த பூமிகா தற்போது பிரபல நடிகரின் படத்தில் வில்லியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் விஜயுடன் பத்ரி, சூர்யா ஜோடியாக சில்லுனு ஒரு காதல், ஸ்ரீகாந்துடன் ரோஜா கூட்டம் ஆகிய படங்களில் நடித்தவர் பூமிகா. தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். 2007-ல் யோகா ஆசிரியர் பரத் தாகூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
திருமணத்துக்கு பிறகு கொஞ்சகாலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த பூமிகா, பின்னர் மீண்டும் நடிக்க தொடங்கினார். தமிழில் தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் ‘கண்ணை நம்பாதே’ படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் ரவிதேஜாவின் ‘சீட்டிமார்’ என்ற படத்திலும் நடிக்கிறார்.

இந்த நிலையில் பூமிகா தற்போது வில்லி வேடத்துக்கு மாறி இருக்கிறார். பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் தெலுங்கு படத்தில் பூமிகா வில்லி வேடம் ஏற்றுள்ளார். இதில் கதாநாயகியாக நடிக்க சோனாக்சி சின்ஹா, கேத்தரின் தெரசா ஆகியோர் பரிசீலிக்கப்பட்டு, தற்போது ஸ்ரேயாவை தேர்வு செய்துள்ளனர். முன்னாள் கதாநாயகிகள் சிலர் வில்லியாக நடிப்பதால் பூமிகாவுக்கும் அந்த கதாபாத்திரத்தின் மீது ஆசை வந்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்து தமிழ் படங்களிலும் வில்லியாக நடிக்க பூமிகாவுக்கு வாய்ப்புகள் வருவதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான வடிவேலு, கொரோனாவை பற்றி உருக்கமான பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கலக்கி வருபவர் வடிவேலு. ரஜினி, விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் காமெடியில் ஜோடி சேர்ந்து கலக்கிய இவர், சிறிய இடைவெளிக்குப் பிறகு கமல் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இந்நிலையில் வடிவேலு கொரோனாவை வெல்வோம் என்று பதிவு செய்து ஒரு பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். மனிதர்களின் அலட்சியமும், அதை கொரோனா எப்படி உணர வைத்தது என்றும் அவர் தனது பாடலின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கொரோனாவை வெல்வோம் pic.twitter.com/rD486Yek42
— Actor Vadivelu (@VadiveluOffl) April 15, 2020
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரைசா, அவரைத்தான் கல்யாணம் பண்ண போறேன், அவர்கிட்ட சொல்லாதீங்க என்று பதிலளித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் ரைசா. இதன்பிறகு ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மேலும் சில படங்களில் நடித்து வருகிறார்.

எப்போதும் ரசிகர்களின் கேள்விக்கு ஜாலியாக பதிலளிக்கக் கூடியவர் ரைசா. அந்தவகையில் ரசிகர் ஒருவர், 'ஹரீஷ் அண்ணாவும் நீங்களும் கல்யாணம் பண்ணிப்பீங்களா?' எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு ரைசா, “ஆமாம். நாங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம். ஆனால் இதை அவரிடம் சொல்லி விடாதீர்கள். அவருக்கு இது சர்ப்பிரைஸ்” என வேடிக்கையாக பதிலளித்துள்ளார்.
அந்த இயக்குனரின் தீவிர ரசிகன் நான் என்று மணிரத்னம், ரசிகர்களுடன் பேசும் போது அவர் கூறியுள்ளார்.
பல வெற்றி படங்களை இயக்கியவர் மணிரத்னம். இவர் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார். படப்பிடிப்பு இல்லாததால் மணிரத்னம் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாற்றினார்.
இவருடன் பேசுவதற்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலக பிரபலங்கள் சிலரும் ஆன்லைனில் வரிசை கட்டி நின்றார்கள்.

அப்போது பிரபல இளம் மலையாள இயக்குனர் லிஜோ ஜோஸ் இவர்கள் உரையாடலை கவனித்துள்ளார். அவர் இருப்பதை கவனித்த சுஹாசினி, லிஜோவை வரவேற்று தானும் தனது கணவரும் அவரது படங்களுக்கு தீவிர ரசிகர்கள் என கூறினார்.
லிஜோவுடன் தொடர்ந்து உரையாடிய மணிரத்னம், அவர் இயக்கிய அனைத்து படங்களையும் தான் பார்த்துவிட்டதாக கூறி, மலையாள திரையுலகில் உள்ள மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவரான லிஜோ தொடர்ந்து இதேபோன்ற நல்ல படைப்புகளை தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மலையாளத்தில் வெளியான அங்கமாலி டைரீஸ், ஈ மா யூ, ஜல்லிக்கட்டு என சிறந்த படங்களை தந்து ரசிகர்கள் மட்டுமல்லாது விமர்சகர்களையும் கவர்ந்தவர் தான் இயக்குனர் லிஜோ ஜோஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருடன் பேசுவதற்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலக பிரபலங்கள் சிலரும் ஆன்லைனில் வரிசை கட்டி நின்றார்கள்.

லிஜோவுடன் தொடர்ந்து உரையாடிய மணிரத்னம், அவர் இயக்கிய அனைத்து படங்களையும் தான் பார்த்துவிட்டதாக கூறி, மலையாள திரையுலகில் உள்ள மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவரான லிஜோ தொடர்ந்து இதேபோன்ற நல்ல படைப்புகளை தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மலையாளத்தில் வெளியான அங்கமாலி டைரீஸ், ஈ மா யூ, ஜல்லிக்கட்டு என சிறந்த படங்களை தந்து ரசிகர்கள் மட்டுமல்லாது விமர்சகர்களையும் கவர்ந்தவர் தான் இயக்குனர் லிஜோ ஜோஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
கமல் நடிப்பில் வெளியான பாடலை அவரது மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் ரீமிக்ஸ் செய்து உள்ளார்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் லாபம் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
கொரோனா காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பல பிரபலங்களும் தங்களது நேரத்தை ரசிகர்களுடன் சமூகவலைத்தளங்களில் செலவிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் Hula Hoop exercise குறித்த வீடியோ ஒன்றை பதிவு செய்தார். தற்போது கமல் நடிப்பில் வெளியான நாயகன் படத்தில் இடம் பெற்ற தென்பாண்டி சீமையிலே என்ற பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளார்.
அவரே இசையமைத்து பாடிய இந்த பாடல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கொரோனா காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பல பிரபலங்களும் தங்களது நேரத்தை ரசிகர்களுடன் சமூகவலைத்தளங்களில் செலவிட்டு வருகின்றனர்.

அவரே இசையமைத்து பாடிய இந்த பாடல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கன்னடத்தில் நந்தா கிஷோர் இயக்கியுள்ள படம் பொகரு. துருவா சார்ஜா, ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இப்படத்தின் பாடல் யூடியூப்பில் வெளியிடப்பட்டது. இதற்கு வரவேற்பு கிடைத்தாலும் கூட, பல்வேறு தரப்பில் கண்டனம் எழுந்துள்ளது.
மிகப் பெரிய ரவுடிகள் கூட்டத்தை சேர்ந்த தலைவன் மாதிரி இருக்கும் துருவா சார்ஜா, அப்பாவி இளம்பெண் ராஷ்மிகாவை துரத்தி, மிரட்டி, அச்சுறுத்தி தன்னை காதலிக்க சொல்வது போல் இப்பாடல் காட்சி படமாக்கப்பட்டு உள்ளது.
கத்தி காட்டி மிரட்டுவது, பலவந்தமாக கட்டிப்பிடிப்பது, தூக்குவது, தலைமுடியை பிடித்திழுப்பது, மின்சார ஷாக் வைத்துவிடுவேன் என பயமுறுத்துவது என்று எல்லை மீறிய காட்சிகள் இடம்பெற்று இருப்பது சமூக ஆர்வலர்களை கோபப்பட வைத்துள்ளது.
பெண்ணுரிமை அமைப்புகள் இயக்குனரின் மீது வழக்கு தொடுக்க திட்டமிட்டுள்ளதாக திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் ரகுல் பிரீத் சிங், ஊரடங்கால் தன்னுடைய வீட்டை ஜிம்மாக மாற்றி இருக்கிறார்.
கொரோனா ஊரடங்கில் நடிகர்-நடிகைகள் பலரும் வீட்டிலேயே உடற்பயிற்சிகள், யோகா செய்து தேகத்தை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது சம்பந்தமான வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.

நடிகை ரகுல்பிரீத் சிங்கும் உடற்பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். விதம் விதமாக உடற்பயிற்சிகள் செய்யும் புகைப்படங்களையும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார். இப்போது ஜிம்முக்கு செல்லும் நிலைமை இல்லாததால் வீட்டையே உடற்பயிற்சி கூடமாக மாற்றி இருக்கிறார்.
வீட்டில் இருக்கும் மரச்சாமான்கள் உதவியோடு உடற்பயிற்சிகள், யோகாசனங்கள் செய்கிறார். வீட்டுக்குள்ளேயே அந்தரத்தில் தொங்குவது, ஓடுவது, குதிப்பது என்றெல்லாம் உடற்பயிற்சிகள் செய்கிறார். ஊரடங்கு நமது ஆரோக்கியத்துக்கு தடையாக இருக்க கூடாது. கலோரிகளை கரைக்க ஜிம்முக்குதான் போக வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டிலேயே எளிமையான உடற்பயிற்சிகளை செய்யலாம் என்றார்.

தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை மகிமா நம்பியார், ரசிகரின் கேள்விக்கு பதில் சொல்ல மறுத்திருக்கிறார்.
தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மகிமா நம்பியார். தேசிய ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே அடைந்து கிடக்கும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் எண்ணத்தில், தன் சமூக வலைத்தளத்தில் நேரலையில் தோன்றி, ரசிகர்கள் கேட்ட எல்லா கேள்விக்கும் முகம் சுளிக்காமல் பதிலளித்தார்.
வரிசையாக பதிலளித்து வந்த அவரிடம் ஒரு ரசிகர், 'உங்கள் வயசு என்னன்னு வெளிப்படையா சொல்ல முடியுமா மகிமா ? என்று கேட்டார். அதுவரை ஜாலியாக பதிலளித்துக் கொண்டிருந்த மகிமா, ஹலோ . . . ஆண்கள் கிட்ட அவங்க வருமானத்தை பற்றியும், பெண்கள் கிட்ட அவங்க வயசு பற்றியும் கேட்க கூடாதுன்னு உங்களுக்கு தெரியாதா ? இதுக்கு நான் பதில் சொல்லமாட்டேன் என்றார். பிறகு வழக்கம் போல் சில கேள்விகளுக்கு பதிலளித்தார்.

எல்லாம் போலியானவை என்று தனுஷ், மற்றும் சிம்பு படத்தில் நடித்த நடிகை வருத்தமாக கூறியிருக்கிறார்.
தமிழில் தனுஷ் ஜோடியாக ‘மயக்கம் என்ன’ படத்தில் அறிமுகமானவர் ரிச்சா கங்கோபாத்யாய். தொடர்ந்து சிம்புவுடன் ‘ஒஸ்தி’ படத்தில் நடித்தார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். பின்னர் அமெரிக்கா சென்று எம்.பி.ஏ. படித்தார். கல்லூரியில் தன்னுடன் படித்த ஜோ லாங்கெல்லா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்தநிலையில் இன்ஸ்டாகிராமில் ரிச்சா பெயரில் சில பக்கங்கள் இருந்தன. அவற்றில் ரிச்சாவின் புகைப்படங்கள் மற்றும் அவரை பற்றிய தகவல்கள் பகிரப்பட்டு வந்தன. அவை ரிச்சாவின் உண்மையான பக்கங்கள் என்று கருதி ரசிகர்களும் பின் தொடர்ந்து கருத்துகள் பதிவிட்டு வந்தார்கள். தன் பெயரில் உள்ள இன்ஸ்டாகிராம் கணக்குகள் போலியானவை என்று நடிகை ரிச்சா கூறியுள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:-
“எனக்கு ஒரே ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கு உள்ளது. இப்போதுதான் இந்த இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கி இருக்கிறேன். இதில் 6 பதிவுகள் மட்டுமே வெளியிட்டு உள்ளேன். எனது பெயரில் உள்ள இதர இன்ஸ்டாகிராம் பக்கங்கள் அனைத்தும் போலியானவை. அவற்றில் என்னை பற்றிய தகவல்களை உண்மைபோல் சித்தரித்து வெளியிடுகின்றனர். அந்த கணக்குகள் உண்மையானவை அல்ல”. இவ்வாறு ரிச்சா கூறியுள்ளார்.

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய், தன்னுடைய மகன் சஞ்சய்யை நினைத்து வருத்தத்தில் இருக்கிறார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் போராடி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் கன்னடாவில் படித்துவருகிறார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திவரும் நிலையில் மகன் தனியே வெளிநாட்டில் இருப்பதால் விஜய் குடும்பமே மிகுந்த வருத்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
கனடாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைவாக இருப்பதால் சஞ்சய் அங்கு பாதுகாப்பாக இருப்பதாக வந்த தகவல் விஜய்க்கு ஓரளவுக்கு மன நிம்மதியை அளித்துள்ளதாக தெரிகிறது.

நடிகர் ரஜினிகாந்தின் மகள் தன்னை நடிக்க அழைத்ததாகவும், அவரது படத்தில் நடிக்க மறுத்தது ஏன் என்பது குறித்தும் இயக்குனர் மணிரத்னம் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் மணிரத்னம். இவர் தளபதி, நாயகன், ரோஜா, அலைபாயுதே என காலம் தாண்டி பேசும் பல காவியங்களை கொடுத்துள்ளார். மணிரத்னத்தின் படங்களை பார்த்தும் அவரது படங்களால் ஈர்க்கப்பட்டும் சினிமா துறைக்கு வந்தவர்கள் ஏராளம். தமிழ் சினிமாவில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் மணிரத்னம் என்றே சொல்லலாம்.
தற்போது இவர் பொன்னியின் செல்வன் படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் இயக்கி வருகிறார். கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதால் வீட்டில் இருக்கும் மணிரத்னம், நேற்று தனது மனைவி சுஹாசினியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது, ரசிகர் ஒருவர், ஏன் நீங்கள் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை, யாரேனும் உங்களை நடிக்க அணுகினார்களா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மணிரத்னம், "ரஜினியின் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா நடிக்க அழைத்தார். நான் நடிக்க மறுத்துவிட்டேன். ஏனென்றால், நான் நடித்திருந்தால், அதன் பிறகு மீண்டும் படம் இயக்கும்போது மற்ற நடிகர்கள் 'நான் பார்த்தேனே நீங்க நடிச்ச அழக' என சொல்லிவிடுவார்கள். எதுக்கு வம்புனு நான் நடிக்கல" என மணிரத்னம் கூறினார்.