என் மலர்
சினிமா செய்திகள்
தமிழில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
கொரோனா காரணமாக நடிகைகள் வீட்டிலேயே இருப்பதால், அதிகம் சாப்பிட்டு, தூங்கி உடல் குண்டாகி விடாமல் இருக்க பல்வேறு உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், அழகு நிலையங்களுக்கு செல்ல முடியாததால் தங்களது அழகைப் பராமரிக்கும் வேலைகளை அவர்களால் சரிவர செய்ய முடியவில்லை. வீட்டில் இருந்தபடியே, பேஸ் பேக்குகளைப் போட்டு அவர்கள் சமாளித்து விடுகின்றனர். ஆனால், புருவம் திருத்துதல், முடியை வெட்டிக் கொள்ளுதல் போன்றவற்றை செய்ய முடியாமல் அவர்கள் திணறி வருகின்றனர்.
இது பற்றி நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “என்னுடைய தயாரிப்பாளர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என் புருவ முடிகள் வளர்ந்து அதன் அமைப்பு தடித்து விட்டது. இதனால் நான் நடித்து வந்த படங்களில் கண்டினியூட்டி மிஸ் ஆக வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், அழகு நிலையங்களுக்கு செல்ல முடியாததால் தங்களது அழகைப் பராமரிக்கும் வேலைகளை அவர்களால் சரிவர செய்ய முடியவில்லை. வீட்டில் இருந்தபடியே, பேஸ் பேக்குகளைப் போட்டு அவர்கள் சமாளித்து விடுகின்றனர். ஆனால், புருவம் திருத்துதல், முடியை வெட்டிக் கொள்ளுதல் போன்றவற்றை செய்ய முடியாமல் அவர்கள் திணறி வருகின்றனர்.
இது பற்றி நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “என்னுடைய தயாரிப்பாளர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என் புருவ முடிகள் வளர்ந்து அதன் அமைப்பு தடித்து விட்டது. இதனால் நான் நடித்து வந்த படங்களில் கண்டினியூட்டி மிஸ் ஆக வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
பயத்தில் இருந்து வெளியே வர கண்டிப்பாக இதை செய்யுங்கள் என்று பிரபல நடிகை ராஷி கன்னா கூறியுள்ளார்.
கொரோனாவால் சினிமா தொழில் அடியோடு முடங்கி கிடக்கிறது. நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் யாரும் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள் இருக்கிறார்கள். கொரோனாவால் ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்பதை நடிகை ராஷி கன்னா தெரிவித்துள்ளார்.

ராஷி கன்னா கூறியதாவது:-
‘இப்போதையை சூழ்நிலையில் தகவல்கள் தெரிந்து கொள்வது முக்கியம்தான். ஆனால் அளவுக்கு மீறி அங்கு இவ்வளவு பேர் இறந்து விட்டனர், நாடே ஏதோ ஆகிக்கொண்டு இருக்கிறது, உலகமே அழிந்து விடப்போகிறது என்ற விஷயங்களையெல்லாம் தலையில் ஏற்றிக்கொண்டு மன அழுத்தத்துக்கு ஆளாக வேண்டாம்.
உங்கள் எண்ணங்களை நல்ல விஷயங்களில் திருப்புங்கள். நல்ல புத்தகங்கள் படியுங்கள். தவறாமல் யோகா, தியானம் செய்யுங்கள். இதனால் மனதுக்கு அமைதி, ஆனந்தம் கிடைக்கும். பயத்தில் இருந்து வெளியே வரவேண்டும் என்றால் கண்டிப்பாக இதைசெய்ய வேண்டும்.
இந்த நேரத்தில் அழகு மற்றும் ஆரோக்கியமாக இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தும், நேரம் கிடைக்காமல் ஒதுக்கி வைத்தோமோ அதையெல்லாம் செய்யுங்கள். வீட்டில் அதைத்தான் நான் செய்கிறேன்’ என்றார்.

‘இப்போதையை சூழ்நிலையில் தகவல்கள் தெரிந்து கொள்வது முக்கியம்தான். ஆனால் அளவுக்கு மீறி அங்கு இவ்வளவு பேர் இறந்து விட்டனர், நாடே ஏதோ ஆகிக்கொண்டு இருக்கிறது, உலகமே அழிந்து விடப்போகிறது என்ற விஷயங்களையெல்லாம் தலையில் ஏற்றிக்கொண்டு மன அழுத்தத்துக்கு ஆளாக வேண்டாம்.
உங்கள் எண்ணங்களை நல்ல விஷயங்களில் திருப்புங்கள். நல்ல புத்தகங்கள் படியுங்கள். தவறாமல் யோகா, தியானம் செய்யுங்கள். இதனால் மனதுக்கு அமைதி, ஆனந்தம் கிடைக்கும். பயத்தில் இருந்து வெளியே வரவேண்டும் என்றால் கண்டிப்பாக இதைசெய்ய வேண்டும்.
இந்த நேரத்தில் அழகு மற்றும் ஆரோக்கியமாக இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தும், நேரம் கிடைக்காமல் ஒதுக்கி வைத்தோமோ அதையெல்லாம் செய்யுங்கள். வீட்டில் அதைத்தான் நான் செய்கிறேன்’ என்றார்.
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை சிம்ரன் கன்னா, கணவரை விவாகரத்து செய்துள்ளார்.
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் பிரபல நடிகையாக இருப்பவர் சிம்ரன் கன்னா. தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘யா ரிஷ்தா கியா கேஹ்லத ஹை’ என்ற தொடர் சிம்ரன் கன்னாவுக்கு புகழை பெற்றுக்கொடுத்தது.
இவருக்கும், பரத் என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு வினித் என்ற ஆண் குழந்தை உள்ளது. மகிழ்ச்சியாக சென்ற இவர்கள் குடும்ப வாழ்க்கையில் திடீர் புயல் வீசியது. இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் சில மாதங்களுக்கு முன்பு பிரிந்தனர். கோர்ட்டிலும் விவாகரத்து வழக்கு தொடர்ந்தனர்.
தற்போது இருவருக்கும் கோர்ட்டு விவாகரத்து வழங்கி உள்ளது. குழந்தை, தந்தையுடன் வசிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
அறிமுக இயக்குனர் கே.மகேந்திரன் இயக்கத்தில் அபிஷேக், மனோ சித்ரா, அஞ்சு கிருஷ்ணா நடிப்பில் உருவாகி வரும் ’தண்டகன்’ படத்தின் முன்னோட்டம்.
ராயல் பிலிம் பேக்டரி சார்பில் வி.இளங்கோவன் தயாரித்திருக்கும் படம் ’தண்டகன்’. அறிமுக இயக்குனர் கே.மகேந்திரன் இயக்கியிருக்கும் இப்படத்தில் அபிஷேக் கதாநாயகனாகவும், மனோ சித்ரா, அஞ்சு கிருஷ்ணா ஆகியோர் கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். மேலும் ராட்சசன் வில்லன் 'நான்' சரவணன், எஸ்.பி.கஜராஜ், சூப்பர் குட் சுப்பிரமணி, ஆதவ், ராம், வீரா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்திய இதிகாசங்களில் புகழ்பெற்ற ராமாயணத்தில் 4638 கதாபாத்திரங்கள் உள்ளன. அதில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் தான் 'தண்டகன்'. இந்தப் பெயரில் ஒரு தமிழ்ப் படம் உருவாகியிருக்கிறது. தண்டகனின் புதிரான குணச்சித்திரம் எப்படி இருக்கும்? அதன் மன இயல்பு எத்தகையது என்பதை விறுவிறுப்பான திரைக்கதையாக உருவாக்கி உள்ளனர்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட சினிமா விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கு ராகவா லாரன்ஸ் ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சினிமா தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவ பெப்சி அமைப்பு நிதி திரட்டி வருகிறது. திரைப்பிரபலங்கள் பலர் நிதி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும், இயக்குனருமான லாரன்ஸ் பெப்சிக்கு ரூ.50 லட்சம் வழங்கினார்.
இதுதவிர பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும் வழங்கினார். மேலும் நடனக்கலைஞர் சங்கத்திற்கு ரூ.50 லட்சம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 லட்சம், ஏழை மக்களுக்கு ரூ.75 லட்சம் என முதலில் ரூ.3 கோடி வழங்கினார். அண்மையில் துப்புரவு பணியாளர்களுக்கு உதவும் பொருட்டு தனது அடுத்த பட சம்பளத்திலிருந்து ரூ.25 லட்சம் வழங்குவதாக அறிவித்தார்.

இந்நிலையில், தற்போது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட சினிமா விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கு ரூ.15 லட்சம், நிதியுதவி அறிவித்துள்ளார். இந்த சங்கத்தில் நலிவடைந்த பல விநியோகஸ்தர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு உதவும்படி சங்க தலைவர் டி.ராஜேந்தர் கேட்டுக்கொண்டதையடுத்து லாரன்ஸ் உதவியுள்ளார்.
படப்பிடிப்புக்காக ஜோர்டான் சென்ற பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ், பாலைவனத்தில் நல்ல சாப்பாடு கிடைக்காமல் தவிப்பதாக கூறியுள்ளார்.
தமிழில் மொழி, கனா கண்டேன், சத்தம் போடாதே, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மலையாள நடிகரான பிருத்விராஜ், ஆடு ஜீவிதம் படப்பிடிப்புக்காக 57 பேருடன் கொரோனா பரவலுக்கு முன்பே ஜோர்டான் சென்று தற்போது நாடு திரும்ப முடியாமல் தவிக்கிறார்.
அங்குள்ள பாலைவனத்தில் முக்கிய காட்சிகளை படமாக்கிக்கொண்டிருந்தபோது விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் படக்குழுவினர் பாலைவன கூடாரங்களிலேயே முடங்கினர். பிருத்விராஜ் உள்ளிட்ட 58 பேரையும் தற்போதைய சூழ்நிலையில் மீட்டு வர வாய்ப்பு இல்லை என்று கேரள அரசும் கைவிரித்து விட்டது.

இந்த நிலையில் ஜோர்டானில் தவித்து வரும் பிருத்விராஜ் டுவிட்டர் பக்கத்தில், “கடந்த வருடம் புத்தாண்டு தினத்தில் மனைவி மற்றும் சொந்தங்களுடன் ருசியான மதிய உணவை சாப்பிட்டேன். ஆனால் இந்த ஆண்டு நல்ல உணவை சாப்பிடும் வாய்ப்பு இல்லாமல், பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் உறவுகளை பிரிந்து வாடுகிறேன். விரைவில் ஒன்று சேரும் காலம் வரும்” என்று பதிவிட்டுள்ளார். அதோடு மனைவியுடன் சேர்ந்து உணவு சாப்பிட்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் வெளிவந்த கன்னடப் படமான தியாவை ரீமேக் செய்ய பலரும் ஆர்வம் காண்பித்து வருவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கே.எஸ். அசோகா இயக்கத்தில் கன்னடத்தில் வெளியான படம் தியா. இளம் நடிகர் நடிகைகள் நடித்திருந்தால் இப்படத்திற்கு ஆரம்பத்தில் வரவேற்பில்லை, பின்னர் நாளடைவில் தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்கிகளாக ஓடின. இப்படம் மணிரத்னத்தின் மௌன ராகம் படம் போல இருந்தாலும், நடிகர்களின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இப்படம் டிஜிட்டல் தளத்தில் வெளியான பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிற மொழி ரசிகர்களிடமும் பிரபலமானது. மேலும் தியா படத்தை இதர மொழிகளில் ரீமேக் செய்ய போட்டா போட்டி நடக்கிறதாம். படத்தை ரீமேக் செய்ய இதுவரை 60 தொலைப்பேசி அழைப்புகள் வந்துள்ளதாகத் தயாரிப்பாளர் கிருஷ்ண சைதன்யா கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், அனைத்து மொழிகளுக்குமான ரீமேக் உரிமையை வாங்க ஓர் இயக்குநர் முன்வந்தார். அவருடன் பேசி வருகிறோம். தெலுங்கில் ரீமேக் செய்ய அதிக அழைப்புகள் வருகின்றன. தெலுங்கு பதிப்பின் டப்பிங் உரிமையை வாங்க அமெரிக்காவிலிருந்து ஒரு கோரிக்கை வந்தது. விரைவில் ரீமேக் உரிமைகள் குறித்து முடிவு செய்வோம் என்று கூறியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
விஜய்யின் 64 வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். மேலும் சாந்தனு, ஆண்ட்ரியா, கவுரி கிஷான், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் வருகின்றனர். சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை ஏப்ரல் 9-ந் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. இதனிடையே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மே 3-ந் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. இந்த ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும் திரையரங்குகள் திறக்க சில நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது. இதனால் மாஸ்டர் படத்தை விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ந் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து தவிக்கும் ஏழைகளுக்கு பண உதவி செய்யுமாறு மோடிக்கு நடிகை ஸ்ரீரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை, படுக்கைக்கு அழைப்பதாக திரையுலகினர் மீது பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. தன்னையும் படத்தில் நடிக்க வைப்பதாக ஏமாற்றி படுக்கையில் சீரழித்து விட்டனர் என்று இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது குற்றம் சாட்டினார். ஆந்திராவில் தனக்கு மிரட்டல்கள் இருப்பதாக சொல்லி, சென்னையில் குடியேறி இருக்கிறார். ஸ்ரீரெட்டி சமூக வலைத்தளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.
தற்போது பிரதமர் நரேந்திரமோடி கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் அமல்படுத்தி இருந்த 21 நாட்கள் ஊரடங்கை மே 3-ந்தேதி வரை நீட்டித்து இருப்பது குறித்து ஸ்ரீரெட்டி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- “இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை மே 3-ந்தேதி வரை பிரதமர் நீட்டித்துள்ளார். அதன் பிறகு கொரோனா வைரஸ் வானத்துக்கா சென்றுவிடும்? முதலில் ஏழைகளை காப்பாற்றுவது பற்றி சிந்தியுங்கள்.

அவர்களுக்கு குறைந்த அளவேனும் பண உதவி செய்யுங்கள். ஒருவேளை மே 3-க்கு பிறகு வெளியில் ஒரு நபருக்கு மட்டும் கொரோனா தொற்று ஏற்பட்டாலும், அவர் மூலமாக மீண்டும் லட்சக்கணக்கான மக்களுக்கு பரவிவிடும். அதன் பிறகு மீண்டும் என்ன செய்வது?”. இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.
நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் கொரோனா ஊரடங்கிலும் தனது அடுத்த படத்திற்கான பணிகளில் பிசியாக உள்ளார்.
இசையமைப்பாளராக திரையுலகில் அறிமுகமான ஜிவி பிரகாஷ், தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான, டார்லிங், சிவப்பு மஞ்சள் பச்சை, நாச்சியார் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் கைவசம் ஏராளமான படங்கள் உள்ளன. கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதால், நடிகர் ஜிவி பிரகாஷுக்கு ரெஸ்ட் கொடுத்துவிட்டு, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பிசியாக இயங்கி வருகிறார்.

இவர் தற்போது சூர்யா-வெற்றிமாறன் கூட்டணியில் உருவாக உள்ள வாடிவாசல் படத்திற்கு இசையமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளார். இது ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் 75வது படமாகும். மேலும் இப்படத்தின் இசை தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும் என ஜிவி கூறியுள்ளார். கடந்தாண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்தில் ஜிவி பிரகாஷின் இசை பெரிதும் பாராட்டப்பட்டது. தற்போது அதே கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால், இப்படம் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றி வரும் டாக்டர்களின் சேவையை பாராட்டி, அவர்களுக்கு நடிகை ஒருவர் உணவளித்து உதவியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்கும் பணியில் டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள், போலீசார், சுகாதாரத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அவர்கள் வீட்டுக்கு செல்ல முடியாமல் தாங்கள் பணியாற்றி வரும் இடங்களிலேயே தங்கியிருந்து இரவு-பகலாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றி வரும் டாக்டர்களின் சேவையை பாராட்டி நேற்று கன்னட திரையுலகின் பிரபல நடிகையான ராகினி திவேதி தனது குடும்பத்தினருடன் சேர்ந்து சப்பாத்தி, குருமா தயாரித்து அதனை பார்சல் கட்டி நேரில் சென்று வழங்கினார். மொத்தம் 150 அரசு டாக்டர்களுக்கு அவர் சப்பாத்தி வழங்கியுள்ளார்.

இதனை நடிகை ராகினி திவேதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே எலகங்கா பகுதி துப்புரவு தொழிலாளர்களுக்கு அவர் கையுறைகள், முகக்கவசம் வழங்கியதுடன் உணவு பொருட்களையும் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துவரும் நடிகை சாய்பல்லவி, கொரோனா காலகட்டத்தில் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்போம் என தெரிவித்துள்ளார்.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் எங்கும் தனது கோரமுகத்தை காட்டி வருகிறது. அதில் இருந்து தப்பிக்க இந்தியாவில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக்கிடக்கும் சூழல் உருவாகி உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் மருத்துவ பணியாளர்களும், காவல் துறையினரும் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் சேவையை பலரும் பாராட்டுகின்றனர்.

இந்த நிலையில், நடிகை சாய்பல்லவி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இந்த கஷ்டமான காலக்கட்டத்தில் ஒருவருக்கொருவர் அனைத்து வழிகளிலும் உதவியாக இருப்போம். தன்னலமில்லாமல் சேவையாற்றி வரும் மருத்துவ, சுகாதார பணியாளர்கள் காவல்துறை அண்ணன்கள், அக்காள்களுக்கு என்றைக்கும் கடமைப்பட்டு உள்ளோம்’ என்று கூறியுள்ளார்.






