என் மலர்
சினிமா செய்திகள்
கனடாவில் சிக்கி தவிக்கும் விஜய்யின் மகன் சஞ்சய் குறித்து நடிகர் அஜித் போனில் நலம் விசாரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய், படிப்பை முடித்துவிட்டு, குறும்படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில், பிலிம் மேக்கிங் படிக்க அவர் கனடாவுக்கு சென்றார். இதனிடையே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனால் கனடாவில் இருந்து சஞ்சய் நாடு திரும்ப முடியவில்லை. இதை நினைத்து விஜய் கவலை அடைந்ததாகவும். மகனிடம் தினமும் போனில் பேசி அவரை வெளியே செல்லாமல் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தியதாகவும் செய்திகள் பரவின. இதுபற்றி அறிந்த நடிகர் அஜித், உடனே விஜய்யிடம் செல்போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

‘சஞ்சய் எப்படி இருக்கான்? கனடாவில் நிலைமை எப்படி இருக்கிறது’ என கேட்டுள்ளார். ‘பயப்படும்படியாக எதுவும் இல்லை. சஞ்சய் பாதுகாப்பாக இருக்கிறான் ’ என்று விஜய் கூறியுள்ளார். விஜய்யும், அஜித்தும் இதுபோல் அவ்வப்போது போனில் பேசுவது வழக்கமான ஒன்றுதான் என அவர்களுக்கு நெருங்கியவர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று தனது 54-வது பிறந்தநாளை கொண்டாடும் விக்ரமிற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக கோப்ரா படக்குழு சர்ப்ரைஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா. அஜய் ஞானமுத்து இயக்கும் இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இப்படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். ஆக்ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.
Here's Team #Cobra sending their love and wishes to our one & only #ChiyaanVikram Sir. #HBDChiyaanVikram ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
— Ajay Gnanamuthu (@AjayGnanamuthu) April 17, 2020
And also speaking about #WhyweloveChiyaanhttps://t.co/cj1TxQyoaU
இந்நிலையில் விக்ரம் தனது 54-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் கோப்ரா படக்குழு "தங்களுக்கு ஏன் விக்ரமை பிடிக்கும்" என்பதை கூறி பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் சர்ப்ரைஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, காதல் தோல்விகள் குறித்து சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
நயன்தாரா கேரளாவில் இருந்து சினிமாவில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு பட உலகில் நம்பர்-1 கதாநாயகியாக இருந்து வருகிறார். 10 வருடங்களாக அவரது மார்க்கெட்டை சக நடிகைகளால் சரிக்க முடியவில்லை. அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.
ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், விஷால், தனுஷ், சிம்பு என்று முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்த பெருமையும் நயன்தாராவுக்கு உண்டு. இப்படி உச்ச நடிகையாக இருக்கும் அவரது சொந்த வாழ்க்கை சோகம் நிறைந்தது.
லைட்பாய் முதல் எல்லா தொழிலாளர்களுடனும் அன்பாக பழகுவார். படப்பிடிப்பு இறுதி நாளில் எல்லோருக்கும் பரிசு பொருட்களை வாரி வழங்குவார், சக நடிகர்களுக்கு நட்சத்திர ஓட்டல்களில் பல லட்சம் செலவு செய்து விருந்து கொடுப்பார் என்றெல்லாம் நயன்தாராவின் நல்ல குணங்களை பட உலகினர் பட்டியலிடுகின்றனர்.
ஆனால் இன்னொரு புறம் காதலில் அவர் தொடர்ந்து காயப்பட்டு வருகிறார். 2006-ல் வல்லவன் படத்தில் நடித்த போது சிம்புவுடன் அவரது முதல் காதல் துளிர்த்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் தயாரானார்கள். ஆனால் சில மாதங்களிலேயே அந்த காதல் முறிந்து போனது.

அதன்பிறகு 2009-ல் பிரபுதேவாவுடன் நயன்தாராவின் இரண்டாவது காதல் மலர்ந்தது. வில்லு படத்தை பிரபுதேவா இயக்கியபோது அதில் கதாநாயகியாக நயன்தாரா நடித்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு ஜோடியாக சுற்றினார்கள். நயன்தாரா மதம் மாறி பிரபுதேவாவை மணந்து சினிமாவுக்கு முழுக்கு போடவும் தயாரானார். ஆனால் கடைசி நேரத்தில் அந்த காதலும் முறிந்து போனது.
தற்போது இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். நானும் ரவுடி தான் படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றினார். அப்போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது.
இந்நிலையில், நடிகை நயன்தாரா தனது காதல் முறிவு குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது: ''நம்பிக்கை இல்லாத காதல் நிலைக்காது. அதேபோல் நம்பிக்கை இல்லாத இடத்தில் சேர்ந்து வாழ்வதை விட தனியாக வாழ்வதே மேல் என உணர்ந்து, பழைய காதல்களை கடந்துவிட்டேன்'' என கூறியுள்ளார்.
இயக்குனர் பாக்யராஜின் மகனும், நடிகருமான சாந்தனுவை அவரது மனைவி கீர்த்தி மீம் போட்டு கலாய்த்துள்ளார்.
தமிழ் திரையுலகில் தனக்கென்று முத்திரையை பதித்தவர் பாக்யராஜ், அவரது மகன் சாந்தனு சக்கரகட்டி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்தவர் தற்போது விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இவரும், டி.வி. தொகுப்பாளர் கீர்த்தியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், சாந்தனுவின் மனைவி கீர்த்தி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீம் ஒன்றை பகிர்ந்துள்ளார். திருவள்ளுவர் போன்று நீண்ட தாடியுடன் இருக்கும் தனது கணவர் சாந்தனுவின் புகைப்படத்தை ஒப்பிட்டு போடப்பட்டுள்ள அந்த மீமில், சாந்தனுவை மாடர்ன் திருவள்ளுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா தீவிரத்தை உணராமல் ஊரடங்கை மீறுபவர்களை நாட்டை ஆபத்தில் தள்ள விரும்புகிறீர்களா? என்று நடிகர் சல்மான்கான் கேள்வி எழுப்பி உள்ளார்.
கொரோனா வைரஸ் நோய் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக மே மாதம் 3-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் சிலர் ஊரடங்கை மீறுவது குறித்து இந்தி சூப்பர் ஸ்டார் சல்மான்கான் தனது வேதனையை பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் உருக்கமாக கூறி இருப்பதாவது: அனைவரும் வீட்டிலேயே இருக்கும்படியும், குடும்பத்துடன் நேரத்தை செலவிடும்படியும் அரசு கூறியுள்ளது. நீங்கள் வீட்டிலிருந்தபடியே உங்கள் பிரார்த்தனையை செய்யுங்கள்.
கடவுள் நமக்குள் வசிக்கிறார் என்பதை நாம் சிறுவயதிலேயே கற்றுக் கொண்டுள்ளோம். எல்லோரும் ஒருநாள் சாகத்தான் வேண்டும். ஆனால் தற்போது நீங்கள் சாக விரும்புகிறீர்களா? உங்கள் சொந்த குடும்பத்தையும் இந்த நாட்டையும் ஆபத்தில் தள்ள விரும்புகிறீர்களா? அல்லது நமக்காக உழைக்கும் போலீசார் மற்றும் மருத்துவ துறையினருக்கு உறுதுணையாக இருக்க விரும்புவீர்களா? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நீங்கள் உங்கள் நண்பர்களுடன் அல்லது குழுவாகவோ வெளியே செல்லவில்லை என்றால் போலீசார் உங்களை தாக்கி இருக்கமாட்டார்கள். அத்தியாவசிய பொருட்கள் வாங்க நீங்கள் வெளியில் செல்வதை யாரும் தடுக்கவில்லை. ஆனால் அப்படி செல்லும்போது கையுறைகள் மற்றும் முக கவசங்களை பயன்படுத்துங்கள். இவ்வாறு சல்மான் கான் கூறியுள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று படத்தின் மேக்கிங் வீடியோ யூடியூபில் சாதனை படைத்துள்ளது.
சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் சூரரைப்போற்று படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
#MakingOfMaara Script to Screen Part 1 official video continues to inspire with 1M+ views! #SooraraiPottruhttps://t.co/zKBjkPeaWM@Suriya_offl#SudhaKongara@rajsekarpandian@gvprakash@nikethbommi@Aparnabala2@editorsuriya@deepakbhojraj@jacki_art@guneetm@SakthiFilmFctrypic.twitter.com/N81jLoMbKR
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) April 16, 2020
இந்நிலையில், ரசிகர்களை உற்சாகப்படுத்த சூரரைப்போற்று படக்குழு கடந்த சில தினங்களுக்கு முன்னர் அப்படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டிருந்தது. இப்படத்திற்காக சூர்யா கடுமையாக உடற்பயிற்சி செய்யும் காட்சிகள் அதில் இடம்பெற்று இருந்தன. இந்த மேக்கிங் வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, வெளியான இரண்டே நாட்களில் 1 மில்லியன் அதாவது 10 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
கொரோனா பாதிப்புக்கு உதவ நிதி கொடுத்தால் தன்னுடன் நடிக்கலாம் என பிரபல ஹாலிவுட் நடிகர் லியார்னாடே டிகாப்ரியோ நூதன அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் முழு வீச்சில் பரவி, லட்சத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்து வருகிறது. இதில் ஹாலிவுட் நடிகர்-நடிகைகளும் பலியாகி உள்ளனர். பல லட்சம் மக்கள் இந்த நோய் தொற்றில் சிக்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா பாதிப்புக்கு உதவ, உலகம் முழுவதும் தொண்டு நிறுவனங்கள் நிதி திரட்டி வருகின்றன. நலிந்தோருக்கு உணவு மற்றும் உதவிப்பொருட்களும் வழங்கப்படுகின்றன. பிரபல ஹாலிவுட் நடிகர் லியார்னாடே டிகாப்ரியோவும் கொரோனா பாதிப்புக்கு நிதி திரட்ட நூதன அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: மார்ட்டின் ஸ்கோர்செஸி இயக்கும் ‘கில்லர்ஸ் ஆப் தி பிளவர் மூன்’ என்ற படத்தில் நானும், ராபர்ட் டி நிரோவும் இணைந்து நடிக்க இருக்கிறோம். கொரோனா பாதிப்பு நிவாரணத்துக்கு நன்கொடை வழங்குபவர்களுக்கு இந்த படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு தர இருக்கிறோம். ஒருநாள் முழுவதும் படப்பிடிப்பு தளத்தில் எங்களோடு இருக்கலாம். படத்தின் சிறப்பு காட்சியில் பங்கேற்கவும் அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு டிகாப்ரியோ கூறியுள்ளார்.
நடிகர் விஜயுடன் பதினேழு வருடங்களுக்கு முன்பு நடித்த நடிகர் தற்போது மீண்டும் இணைந்து நடித்திருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.
விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் மாஸ்டர். கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கி இருக்கிறார்.
அனிருத் இசையமைக்க விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், சாந்தனு, சேத்தன், சஞ்சீவ், ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன் இன்னும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் பலரையும் கவர்ந்த மகேந்திரனும் இந்த படத்தில் நடித்துள்ளார். அவரைப் போலவே 17 வருடங்களுக்கு முன்பு விஜய்யின் திருமலை படத்தில் நடித்திருந்த உதயும் இந்த படத்தில் நடித்துள்ளார்.

இதை உதயா தற்போது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்திலும் உதய் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற ஆரவ், அதை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் என்று கூறியிருக்கிறார்.
கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று வெற்றி பெற்றவர் ஆரவ். இவர் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார்.
சரண் இயக்கிய இப்படம் ரசிகர்களிடம் அதிக அளவு வரவேற்பைப் பெறவில்லை. இப்படத்தை அடுத்து ராஜபீமா என்ற படத்தில் ஆரவ் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து வரும் நேரத்தை மிகச்சரியாக பயன்படுத்தியிருக்கிறார்.

தீவிர உடற்பயிற்சி செய்து வெறித்தனமாக சிக்ஸ் பேக் வைத்துள்ளார். இந்நிலையில் ஊரடங்கிற்கு முன்னர் ஜிம்மில் பைசெப்ஸ் பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு அந்த நாட்களை ரொம்ப மிஸ் செய்வதாக கூறியுள்ளார்.
96, பிகில் படத்தில் நடித்து பிரபலமான வர்ஷா பொல்லம்மா, பள்ளி பருவத்தில் அவர் மீது கிரஸ் என்று கூறியிருக்கிறார்.
விஜய் சேதுபதியின் 96 படத்தில் மற்றும் விஜயின் பிகில் படத்தில் நடித்தவர் நடிகை வர்ஷா பொல்லம்மா.

இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தனக்கு விராட் கோலியின் மீது கிரஸ் இருப்பதாக கூறி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பள்ளி பருவத்தில் அவர் மீது கிரஸ் இருந்ததாகவும், அவருக்காக பென்சிலில் ஜெர்சி மாடல் வரைந்து வைத்ததாகவும் பதிவு செய்து இருக்கிறார்.
இதை பார்த்த ரசிகர்கள் திருமணமானவர் மீது ஈர்ப்பா என அவரை கலாய்த்து வருகின்றனர்.

இதை பார்த்த ரசிகர்கள் திருமணமானவர் மீது ஈர்ப்பா என அவரை கலாய்த்து வருகின்றனர்.
தமிழில் பல படங்களில் நடித்த விக்னேஷ், சினிமா தொழிலாளர்களுக்கு இலவசமாக உணவு வழங்க முடிவு செய்துள்ளார்.
தமிழில் பல படங்களில் நடித்தவர் விக்னேஷ். இவர் படங்களை தயாரிக்கவும் செய்திருக்கிறார். இவர் வெளியிட்ட ஆடியோ பதிவில் கூறியதாவது,
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டதால், சினிமா சார்ந்த அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வேலை இழந்து கஷ்டப்படும் திரைப்பட தொழிலாளர்கள், உதவி இயக்குனர்கள் மற்றும் துணை நடிகர், நடிகைகளுக்கு உதவ உள்ளேன்.
எனக்கு கிண்டி அருகிலுள்ள ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் சேலம் ஆர்ஆர் என்ற உணவகம் இருக்கிறது. இங்கு தினமும் இரவு 7 முதல் 9 மணி வரை சினிமா தொழிலாளர்களுக்கு இலவச உணவு வழங்கப்படும். இவ்வாறு கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டதால், சினிமா சார்ந்த அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வேலை இழந்து கஷ்டப்படும் திரைப்பட தொழிலாளர்கள், உதவி இயக்குனர்கள் மற்றும் துணை நடிகர், நடிகைகளுக்கு உதவ உள்ளேன்.
எனக்கு கிண்டி அருகிலுள்ள ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் சேலம் ஆர்ஆர் என்ற உணவகம் இருக்கிறது. இங்கு தினமும் இரவு 7 முதல் 9 மணி வரை சினிமா தொழிலாளர்களுக்கு இலவச உணவு வழங்கப்படும். இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழ் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கும் நிதி உதவி வழங்கி உள்ளார்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தற்போது கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக 'ஆச்சார்யா' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
கொரானோவால் பாதிக்கப்பட்டுள்ள திரைப்படத் தொழிலாளர்களுக்கு என அந்தந்த மொழிகளில் நன்கொடை வசூல் செய்து வருகிறார்கள்.
தெலுங்குத் திரைப்படத் தொழிலாளர்களுக்காக மட்டும் காஜல் அகர்வால் 2 லட்ச ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளார். ஆனால், தமிழ்த் திரைப்படத் தொழிலாளர்கள் உள்ள பெப்ஸிக்காக எதுவும் அறிவிக்கவில்லை.
கொரானோவால் பாதிக்கப்பட்டுள்ள திரைப்படத் தொழிலாளர்களுக்கு என அந்தந்த மொழிகளில் நன்கொடை வசூல் செய்து வருகிறார்கள்.
தெலுங்குத் திரைப்படத் தொழிலாளர்களுக்காக மட்டும் காஜல் அகர்வால் 2 லட்ச ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளார். ஆனால், தமிழ்த் திரைப்படத் தொழிலாளர்கள் உள்ள பெப்ஸிக்காக எதுவும் அறிவிக்கவில்லை.






