என் மலர்
சினிமா

நடிகை சிம்ரன் கன்னா
கணவரை விவாகரத்து செய்தார் பிரபல டி.வி. நடிகை
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை சிம்ரன் கன்னா, கணவரை விவாகரத்து செய்துள்ளார்.
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் பிரபல நடிகையாக இருப்பவர் சிம்ரன் கன்னா. தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘யா ரிஷ்தா கியா கேஹ்லத ஹை’ என்ற தொடர் சிம்ரன் கன்னாவுக்கு புகழை பெற்றுக்கொடுத்தது.
இவருக்கும், பரத் என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு வினித் என்ற ஆண் குழந்தை உள்ளது. மகிழ்ச்சியாக சென்ற இவர்கள் குடும்ப வாழ்க்கையில் திடீர் புயல் வீசியது. இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் சில மாதங்களுக்கு முன்பு பிரிந்தனர். கோர்ட்டிலும் விவாகரத்து வழக்கு தொடர்ந்தனர்.
தற்போது இருவருக்கும் கோர்ட்டு விவாகரத்து வழங்கி உள்ளது. குழந்தை, தந்தையுடன் வசிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
Next Story






