என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • கிரிக்கெட் வீரர்கள் தோனி, சச்சின் தெண்டுல்கர், கபில்தேவ் வாழ்க்கை படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன.
    • தற்போது கிரிக்கெட் வீரர் நடராஜன் வாழ்க்கை கதையில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக குறப்படுகிறது.

    விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் வாழ்க்கை படங்கள் இந்தியில் தொடர்ந்து தயாராகி வருகின்றன. கிரிக்கெட் வீரர்கள் தோனி, சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கை படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை 83 என்ற பெயரில் வந்தது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மிதாலிராஜ் வாழ்க்கை கதையில் டாப்சி நடித்துள்ளார்.

     

    நடராஜன் - சிவகார்த்திகேயன்

    நடராஜன் - சிவகார்த்திகேயன்

    இந்நிலையில் பிரபல தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனின் வாழ்க்கை கதையை சினிமா படமாக எடுக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இதில் நடராஜன் கதாபாத்திரத்தில் நடிக்க சிவகார்த்திகேயனுடன் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சேலம் சின்னப்பம்பட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த நடராஜன் தமிழ்நாடு பிரீமியர் லீக் மற்றும் ஐ.பி.எல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாராட்டு பெற்றார். ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியிலும் இடம் பெற்றார். நடராஜன் ஆட்டத்தை ஏற்கனவே சிவகார்த்திகேயன் பாராட்டி உள்ளார். எனவே அவரது வாழ்க்கை கதையில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அருண்ராஜா காமராஜ் இயக்கிய கனா படத்தில் சிவகார்த்திகேயன் கிரிக்கெட் பயிற்சியாளராக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 67வது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.
    • இதில் சாய் பல்லவி நடித்த இரண்டு படங்களுக்காக இவருக்கு விருது கிடைத்தது.

    இயக்குனர் ராகுல் சன்கிரித்யன் இயக்கத்தில் வெளியான படம் "ஷியாம் சிங்க ராய்".மறுபிறவியை மையமாக கொண்டு உருவான இப்படத்தில், நானி இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். சாய்பல்லவி, கிரித்தி ஷெட்டி, ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் பிரம்மாண்டமாக உருவான இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

     

    ஷ்யாம் சிங்க ராய் - சாய் பல்லவி

    ஷ்யாம் சிங்க ராய் - சாய் பல்லவி

    இந்நிலையில், 67வது தென்னிந்திய பிலிம்பேர் விருது வழங்கும் விழா சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் சாய் பல்லவி நடிப்பில் வெளியான ஷ்யாம் சிங்க ராய் படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விமர்சகர் விருதும், லவ் ஸ்டோரி படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதும் சாய் பல்லவிக்கு கிடைத்தது. இதனை பெற்றுக் கொண்ட சாய் பல்லவி இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    சாய் பல்லவியின் பதிவு

    சாய் பல்லவியின் பதிவு

     

    அதில், இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஒரே வருடத்தின் இரண்டு படங்களுக்கும் விருது கிடைத்தது பாராட்டப்பட வேண்டும்! அபரிமிதமான அன்பிற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் மற்றும் இதுபோன்ற அழகான பாத்திரங்கள் எனக்கு கிடைக்க நான் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன். படக்குழு மற்றும் அனைவருக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

    • இந்த ஆண்டு ஆஸ்கார் விருது போட்டிக்கு செல்லோ ஷோ திரைப்படம் தேர்வு செய்து அனுப்பப்பட்டு உள்ளது.
    • 'செல்லோ ஷோ' படத்தில் நடித்த சிறுவன் ராகுல் கோலி உயிரிழந்தார்.

    இந்தியா சார்பில் இந்த ஆண்டு ஆஸ்கார் விருது போட்டிக்கு குஜராத்தி மொழி திரைப்படமான செல்லோ ஷோ தேர்வு செய்து அனுப்பப்பட்டு உள்ளது. இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள சிறுவன் ராகுல் கோலிக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராகுல் கோலிக்கு பரிசோதனையில் லூகேமியா என்ற ரத்த புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

     

    செல்லோ ஷோ - ராகும் கோலி

    செல்லோ ஷோ - ராகும் கோலி

    ராகுல் கோலிக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி அவர் மரணம் அடைந்தார். 15 வயதாகும் ராகுல் கோலி மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராகுல் கோலி நடித்துள்ள செல்லோ ஷோ படம் வருகிற 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். இந்த படம் வெளியாகும் முன்பே ராகுல் கோலி இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செல்லோ ஷோ படத்தை 14-ந்தேதி தியேட்டரில் பார்த்த பிறகே ராகுலுக்கு இறுதி சடங்கை செய்வோம் என்று அவரது தந்தை கண்ணீரோடு கூறினார்.

    • தவறினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை.
    • அனைவரும் பார்க்கக்கூடிய படங்களுக்கு யூ சான்றிதழ் வழங்கப்படுகிறது.

    மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியம் (சி.பி.எஃப்.சி) அனைத்து வகையான திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கி வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் பார்க்கும் திரைப்படங்களுக்கு வயது வந்தோருக்கு மட்டும் (ஏ சர்டிபிகேட்) வழங்கப்படுகிறது.

    18 வயதுக்கு உட்பட்டவர்கள் பெற்றோரின் அனுமதியுடன் பார்ப்பதற்கான திரைப்படங்களுக்கு யூஏ சான்றிதழ் வழங்கப்படுகிறது. அனைவரும் பார்க்கக்கூடிய படங்களுக்கு யூ சான்றிதழ் வழங்கப்படுகிறது.

    இந்த திரைப்படங்கள் குறித்த விளம்பரங்களை வெளியிடும் போதும், எந்த சான்றிதழ் வகையைச் சேர்ந்த திரைப்படம் என்பதை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு சிபிஎஃப்சி அறிவுறுத்தியுள்ளது. தயாரிப்பாளர் விரும்பினால் யூ சான்றிதழை விளம்பரங்களில் வெளியிட்டுக் கொள்ளலாம்.

    சுவரொட்டிகள், பத்திரிகை விளம்பரங்கள், நோட்டீஸ்கள், பதாகைகள் மற்றும் ஊடகங்களில் வெளியிடப்படும் திரைப்பட விளம்பரங்களில் சான்றிதழ் வகையை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தணிக்கை சான்றிதழ் வகையை குறிப்பிடத் தவறுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியத்தின் மண்டல அதிகாரி டி பாலமுரளி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் அடுத்த படமான தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார்.
    • இதற்கான பணிகளில் லோகேஷ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதற்கான பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.


    விஜய் - லோகேஷ் கனகராஜ்

    ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது.


    லோகேஷ் கனகராஜ் - விஜய்

    இந்நிலையில் இப்படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, தளபதி 67 படத்தின் அறிவிப்பை வரும் தீபாவளி அன்று படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

    • இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் 'சூர்யா 42'.
    • இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

    'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.


    சூர்யா 42

    இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.


    சூர்யா 42 படக்குழு

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, சூர்யா 42 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை நடிகை திஷா பத்தானி தனது சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

    • ’வணங்கான்’ படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார்.
    • இவர் தற்போது மலையாள திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.

    தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி ஷெட்டி 'உப்பென்னா' படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இதைத்தொடர்ந்து 'ஷியாம் சிங்கா ராய்', 'தி வாரியர்' போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தார். தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் 'வணங்கான்' படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.


    கீர்த்தி ஷெட்டி - டோவினோ தாமஸ்

    இதைத்தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில், இவர் டோவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கும் 'அஜயந்தே ரண்டம் மோஷனம்' என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். அறிமுக இயக்குனர் ஜித்தின் லால் இயக்கும் இந்த படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார்.


    அஜயந்தே ரண்டம் மோஷனம் போஸ்டர்

    இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. மேலும், 'அஜயந்தே ரண்டம் மோஷனம்' திரைப்படத்தின் மூலம் கீர்த்தி ஷெட்டி மலையாள திரையுலகில் அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • இசையமைப்பாளர் நடிகர் என பண்முகத்தன்மை கொண்டவர் விஜய் ஆண்டனி.
    • இவரின் சமூக வலைதளப் பதிவு வைரலாகி வருகிறது.

    2005-ம் ஆண்டு சுக்ரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதன்பின்னர் டிஷ்யூம், காதலில் விழுந்தேன், நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன், யுவன் யுவதி, வேலாயுதம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து பிரபலமடைந்தார்.


    விஜய் ஆண்டனி

    இவர் தற்போது நடிகராகவும் வலம் வருகிறார். 2012-ம் ஆண்டு வெளியான நான் படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமானார். இதனை தொடர்ந்து சலீம், பிச்சைக்காரன், சைத்தான், காளி, திமிரு புடிச்சவன் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து அனைவரையும் கவர்ந்தார். தற்போது இவர் கைவசம் கொலை, மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில், ரத்தம் உள்ளிட்ட படங்கள் உள்ளன.


    விஜய் ஆண்டனி

    இந்நிலையில், விஜய் ஆண்டனியின் பதிவு ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், "உங்க குடும்பத்துல எதாவது பிரச்சனன்னா, முடிச்ச வரைக்கும் உங்களுக்குள்ள அடிச்சிக்கங்க, இல்ல விட்டு விலகிடுங்க, இல்ல கைல கால்ல விழுந்து சமாதானம் பண்ணி சேர்ந்து வாழுங்க அடுத்தவன மட்டும் கூப்புடாதிங்க கும்மி அடிச்சி, கதைய முடிச்சிருவாங்க.." என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த பதிவை ரசிகர்கள் பலரும் இணையத்தில் பகிர்ந்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


    • கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் வெந்து தணிந்தது காடு.
    • இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

    கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, சித்தி இத்னானி, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்த 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு வெற்றி கிடைத்து வருகிறது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது.


    வெந்து தணிந்தது காடு

    ஏ.ஆர்.ரகுமான் இசையில் படத்தின் பின்னணி இசையும், பாடல்களும் கவனத்தைப் பெற்றது. குறிப்பாக 'மல்லிப்பூ' பாடலும், அதன் காட்சியமைப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.


    வெந்து தணிந்தது காடு போஸ்டர்

    அதன்படி 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் வருகிற 13-ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை அமேசான் ஓடிடி நிறுவனம் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • நேற்று முன்தினம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை குழந்தை பிறந்ததாக அறிவித்தனர்.
    • இதனிடையில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றது தெரியவந்தது.

    தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியான நயன்தாரா, கடந்த ஜூன் 9-ம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இருவரும் வெளிநாடுகளுக்கு தேனிலவு சென்று அங்கிருந்து புகைப்படங்களை பதிவிட்டு வந்தனர். மேலும் படப்பிடிப்பிலும் பிசியாக இருந்தனர்.


    நயன்தாரா - விக்னேஷ் சிவன்

    தற்போது தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக நேற்று விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், நயன்தாராவும் நானும் அம்மா, அப்பா ஆகிவிட்டோம். எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள், நல்ல செயல்கள் எல்லாம் சேர்ந்து எங்களுக்கு ஆசீர்வதிக்கப்ட்ட இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் எங்களுக்காக வேண்டும் என பதிவிட்டிருந்தார். அவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.


    அதேசமயம் திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்திருப்பது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தி கேள்வி எழுப்ப செய்துள்ளது. இருந்தும் ரசிகர்கள், வாடகைத்தாய் மூலம் இருவரும் குழந்தை பெற்றுள்ளனர் என்று பதிவிட்டு வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து, நடிகை கஸ்தூரி இதுகுறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், "மருத்துவ ரீதியாக தவிர்க்க முடியாத காரணங்களைத் தவிர இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறை தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டம் ஜனவரி 2022 முதல் அமலுக்கு வந்தது. அடுத்த சில நாட்களுக்கு இதைப் பற்றி நிறைய கேள்விப்படுவோம்" என பதிவிட்டிருந்தார்.


    கஸ்தூரி பதிவு

    இந்நிலையில் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகியுள்ள விக்கி - நயன் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகை வனிதா தனது சமூக வலைதளப் பக்கத்தில், "ஒருவரது வாழ்வின் மிக அழகான தருணங்களை அழிப்பவர்கள் தான் முதலில் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். சட்டம் தெரியும் மருத்துவம் தெரியும்னு சில மதிப்பு இல்லாத கோமாளிகள் பேட்டி கொடுக்கறதும் டுவீட் போடறதும். திருந்தவேமாட்டங்க. கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார், யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியும்" என்று பகிர்ந்துள்ளார்.

    இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் கஸ்தூரியை மறைமுகமாக தாக்குகிறீர்களா என கேட்டு வருகின்றனர்.


    • இயக்குனர் ஆர்.கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள படம் 'நித்தம் ஒரு வானம்'.
    • இப்படத்தின் அறிமுக போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது.

    அறிமுக இயக்குனர் ஆர்.கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்து வரும் படம் 'நித்தம் ஒரு வானம்'. இதில் அபர்ணா பாலமுரளி, ரித்து வர்மா, சிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

     

    நித்தம் ஒரு வானம்

    நித்தம் ஒரு வானம்

    வியாகோம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இப்படம் மலையாளத்தில் 'ஆகாசம்' என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் மற்றும் டிரைலர் அனைவரையும் கவர்ந்தது.

     

    நித்தம் ஒரு வானம்

    நித்தம் ஒரு வானம்

    இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள உனக்கென நான் என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. இதனை நடிகர் அசோக் செல்வன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து இப்பாடலை என் அன்பு நண்பன் ஹரிஷ் கல்யாணுக்கு சமர்பணம் செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

    'நித்தம் ஒரு வானம்' திரைப்படத்தில் அசோக் செல்வன் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படம் ரத்தம்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது.

    தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகரான விஜய் ஆண்டனி கொலை, மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில், உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் சில படங்களின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனிடையே இவர் இயக்குனர் சி.எஸ்.அமுதன் சி.எஸ். இயக்கத்தில் 'ரத்தம்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.


    ரத்தம்

    இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் நடிக்கிறார்கள். இன்பினிடி பிலிம் வென்டர்ஸ் சார்பில் கமல் போரா, லலிதா தனஞ்செயன், பி.பிரதீப், பங்கஜ் போரா & எஸ்.விக்ரம் குமார் ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.

    'ரத்தம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றுவந்ததையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ள இயக்குனர் சி.எஸ்.அமுதன் பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.


    விஜய் ஆண்டனி - சி.எஸ்.அமுதன்

    அதில், "நாங்கள் படப்பிடிப்பை முடித்து விட்டு இந்தியா திரும்பிவிட்டோம். போஸ்ட் புரொடக்‌ஷனின் பெரும்பகுதி முடிவடைந்த நிலையில், உங்களை திரையரங்குகளில் பார்க்கும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை. தயக்கமின்றி ஆபத்தான ஸ்டண்டுகளை செய்த படக்குழுவினருக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.


    ×