என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் ‘சியான் 61’.
    • இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

    மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.


    பா. ரஞ்சித்

    இதில் விக்ரம் நடித்த ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, பா. ரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்க போவதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்திருந்தது. 'சியான் 61' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா, நீலம் ப்ரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார்.


    சியான் 61 படக்குழு

    இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. இந்நிலையில், 'சியான் 61' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளதாகவும் இதன் டெஸ்ட் ஷூட் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    பொன்னியின் செல்வன் வெற்றியைத் தொடர்ந்து 'சியான் 61' படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

    • நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.
    • இவர்களுக்கு திரைப்பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியான நயன்தாரா, கடந்த ஜூன் 9-ம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இருவரும் வெளிநாடுகளுக்கு தேனிலவு சென்று அங்கிருந்து புகைப்படங்களை பதிவிட்டு வந்தனர். மேலும் படப்பிடிப்பிலும் பிசியாக இருந்தனர்.


    நயன்தாரா - விக்னேஷ் சிவன்

    இதையடுத்து தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், நயன்தாராவும் நானும் அம்மா, அப்பா ஆகிவிட்டோம். எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள், நல்ல செயல்கள் எல்லாம் சேர்ந்து எங்களுக்கு ஆசீர்வதிக்கப்ட்ட இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் எங்களுக்காக வேண்டும் என பதிவிட்டிருந்தார். அவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

    அதேசமயம் திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்திருப்பது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தி கேள்வி எழுப்ப செய்துள்ளது. இருந்தும் ரசிகர்கள், வாடகைத்தாய் மூலம் இருவரும் குழந்தை பெற்றுள்ளனர் என்று பதிவிட்டு வருகின்றனர்.


    விக்னேஷ் சிவன் பதிவு

    மேலும், பல பிரச்சினைகள் எழுந்துள்ள நிலையில், நடிகர் கார்த்தி, நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்து பூங்கொத்து அனுப்பியுள்ளார். இதனை விக்கி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார்.

    • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் அடுத்த படமான தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார்.
    • இதற்கான பணிகளில் லோகேஷ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

     

    லோகேஷ் கனகராஜ் - விஜய்
    லோகேஷ் கனகராஜ் - விஜய்

    இதில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

     

    விஜய்
    விஜய்

    இந்நிலையில் விஜய் நடிப்பில் உருவாகவிருக்கும் 'தளபதி 70' படத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டோனிக்கு '7' விருப்பமான எண் என்பதால் விஜய்யின் 70வது படத்தை தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    • மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன் -1.
    • இந்த படம் வெளியான இரண்டு வாரங்களில் வசூல் சாதனை படைத்து வருகிறது.

    மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் நடித்த நடிகர்களுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் நல்ல வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது.


    பொன்னியின் செல்வன்

    இத்திரைப்படம் வெளியான பிறகு மன்னர் ராஜ ராஜ சோழனை பற்றியும், சோழர்களின் வாழ்க்கை முறை பற்றியும் தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இணையதளத்தில் சோழர்கள் போர் பற்றி தெரிந்து கொள்ளும் தேடுதலும் நடக்கிறது. சமீபத்தில் தெலுங்கு மொழியில் பொன்னியின் செல்வனைப் பார்த்த ஆந்திராவை சேர்ந்த ரசிகர்கள் சிலர் சோழர்கள் வாழ்ந்த இடங்களைப் பார்க்க தங்கள் இரு சக்கர வாகனங்களில் சுற்றுப்பயணமாக தமிழ் நாட்டிற்கு வந்தனர்.


    பொன்னியின் செல்வன்

    பொன்னியின் செல்வன் -1 திரைப்படம் வெளியான 12 நாட்களில் ரூ.450 கோடியை வசூல் செய்திருப்பதாக திரைப்பட வர்த்தக தொடர்பாளர்கள் கணித்திருக்கிறார்கள். ஜெர்மனியில் எப்போதும் இல்லாத வகையில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருக்கிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

    பொன்னியின் செல்வன் -1 திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

    • இந்திய திரையுலகின் முன்னணி பாடலாசிரியராக வலம் வருபவர் வைரமுத்து.
    • வைரமுத்து இந்தி திணிப்பு குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    ரஜினி நடிப்பில் 1980-ம் ஆண்டு வெளியான காளி படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியர் தேசிய விருதை வைரமுத்து பெற்றார்.

     

    வைரமுத்து

    வைரமுத்து

    சமீபத்தில் ஐஐடி உட்பட அனைத்து கல்வி நிலையங்களிலும் இந்தியில் கற்பிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

     

    வைரமுத்து

    வைரமுத்து

     

    இந்நிலையில் இந்தி திணிப்பு குறித்து கண்டனம் தெரிவித்து வைரமுத்து பதிவிட்டுள்ளார். அதில், "எங்களை ஆண்ட இஸ்லாமியரோ தெலுங்கரோ மராட்டியரோ வெள்ளையரோ தங்கள் தாய் மொழியை எங்கள் தலையில் திணித்ததில்லை. தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆளும்பொழுதே இந்தியைத் திணிப்பது என்ன நியாயம்? அதிகாரமிக்கவர்களே அன்போடு சொல்கிறேன். புலியைத் தொட்டாலும் தொடுக மொழியைத் தொடாது விடுக" என குறிப்பிட்டுள்ளார்.  

    • இயக்குனர் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த படம் ‘லைகர்’.
    • இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

    இயக்குனர் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான படம் லைகர். இப்படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்திருந்தார். அவருடன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசன், அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் எதிர்பார்த்த வசூல் பெறவில்லை.


    லைகர்

    இதையடுத்து சமீபத்தில் நடைபெற்ற 'சைமா -2022' விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு "யூத் ஐகான் ஆப் சவுத் இந்தியன் சினிமா" என்ற விருது வழங்கப்பட்டது. இதில் பேசிய விஜய் தேவரகொண்டா, "நல்ல நாட்களும், கெட்ட நாட்களும் நம் அனைவரது வாழ்விலும் வரும். நம் வாழ்வில் மிக மோசமான நாட்களை கடந்திருப்போம்.


    விஜய் தேவரகொண்டா

    அதில் இருந்து எப்படி மீண்டு வருகிறோம் என்பதே வாழ்க்கையில் முக்கியமானது. நான் இங்கு விருது வாங்குவதற்காக வரவில்லை. உங்களிடம் பேசுவதற்காக வந்துள்ளேன். இனி எனது பணியை சிறப்பானதாக செய்வேன். மக்களுக்கு பிடிக்கும் வகையில் நல்ல படங்களில் இனி நடிப்பேன். நிச்சயம் இனி நான் தேர்வு செய்யும் படங்கள் உங்களுக்கு பிடிக்கும் என்பதை தெரிவிக்கிறேன்" என்று கூறினார்.

    • சின்னத்திரை நடிகர்கள் அர்னவ்-திவ்யா இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.
    • இதனிடையே இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி வருகின்றனர்.

    'செவ்வந்தி' என்னும் தொலைக்காட்சி தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை திவ்யா. இவரும், மற்றொரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'செல்லம்மா' தொடரில் நடித்து வரும் நடிகர் அரனவ்வும் ஏற்கனவே ஒரு தொடரில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. இருவரும் ஒரே வீட்டில் 2 வருடங்களாக சேர்ந்து வசித்து வந்தனர். பின்னர் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர்.

    அர்னவ் - திவ்யா

    அர்னவ் - திவ்யா

     

    சில தினங்களுக்கு முன்பு தனது கணவர் அரணவ், கர்ப்பிணியான தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், இதனால் எந்த நேரத்திலும் தனது கரு கலையலாம் எனவும் கூறி நடிகை திவ்யா, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் தனது கணவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து 2 வீடியோக்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். பதிலுக்கு அரணவ், மனைவி திவ்யா மீது தனது தரப்பு நியாயங்களை கூறி புகார்களை அளித்து வருகிறார்.

     

    திவ்யா

    திவ்யா

    இந்நிலையில் நடிகர் அர்னவ் மீது மாநில மகளிர் ஆணையத்தில் நடிகை திவ்யா புகார் ஒன்றை அளித்தார். மாநில மகளிர் ஆணையத்தில் நேரில் ஆஜரான பிறகு நடிகை திவ்யா செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது, நேற்று முன்தினம் நான் புகார் அளித்திருந்தேன். ஆனால் அதில் நான் கூறியவாறு என்னுடைய புகார்களை அந்த எப்ஐஆர்-இல் அவர்கள் பதிவு செய்யவில்லை. என்னை முஸ்லீம் மதத்திற்கு மாற வைத்து திருமணம் செய்து நான் கர்ப்பம் ஆன பின்பு என்னை அர்னவ் விட்டுவிட்டார்.

    திவ்யா

    திவ்யா

     

    ஆனால் எப்ஐஆர்-இல் இதுகுறித்து அவர்கள் குறிப்பிடவில்லை. அதற்காக தான் நான் இங்கு வந்து பல்வேறு தகவல்களை எப்ஐஆர்-இல் இணைக்க வலியுறுத்தியுள்ளேன். அவர்கள் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். விரைவில் எனக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எந்த பெண்ணிற்கும் என்னை போன்ற நிலைமை வந்துவிடக்கூடாது. எல்லோரும் நீ கணவனுக்கு ஏற்றார்போல் குடும்பத்தை நடத்து என்கிறார்கள். எல்லாம் பெண்களும் இதுபோன்று ஒத்துழைத்து சென்றால் யார் குரல் கொடுப்பது? அதனால் தான் நான் இதை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறேன். என் நிலைமை எந்த பெண்ணும் வரக்கூடாது. அர்னவ் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர் என்றார்.

    • மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இதில் நடிகை திரிஷாவின் குந்தவை கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

    மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.


    பொன்னியின் செல்வன்

    இப்படத்தில் நடித்த நடிகர்களுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் நல்ல வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை திரிஷாவிடம் கல்யாணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.


    திரிஷா

    இதற்கு பதிலளித்த திரிஷா, "கடமைக்காக திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்ய விருப்பமில்லை. மிக மகிழ்ச்சியாக திருமணம் செய்து கொண்டதாக கூறிய என் நண்பர்களில் சிலர் கூட விவாகரத்தை நாடியுள்ளனர்.


    திரிஷா

    மகிழ்ச்சியில்லாத ஒரு திருமணத்தை செய்துகொண்டு வாழ்வதற்கும் எனக்கு விருப்பம் கிடையாது. வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழக்கூடிய மனிதர் இவர்தான் என்று எனக்கு தோன்ற வேண்டும். அப்படியான ஒரு நபரை சந்தித்தால் திருமணம் செய்வேன்" என்று கூறியுள்ளார்.

    • தடையற தாக்க, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே படங்களில் நடித்த் பிரபலமடைந்தவர் ரகுல்பிரீத் சிங்.
    • தற்போது தனது காதல் குறித்து நடிகை ரகுல்பிரீத் சிங் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    தமிழில் தடையற தாக்க, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரகுல்பிரீத் சிங் தற்போது சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்திலும் நடிக்கிறார். ரகுல்பிரீத் சிங் சமீபத்தில் இந்தி நடிகர் ஜாக்கி பக்னானியுடன் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து அவரை காதலிப்பதாக பகிரங்கப்படுத்தினார்.

     

    ரகுல்பிரீத் சிங்

    ரகுல்பிரீத் சிங்

    தற்போது காதல் உறவு குறித்து ரகுல்பிரீத் சிங் அளித்துள்ள பேட்டியில், ''சிலர் தங்கள் காதல் குறித்து வெளிப்படையாக பேசாமல் இருப்பது ஒருவித மனநிலை. ஆனால் நான் அப்படி இல்லை. காதலை வெளிப்படுத்தினேன். எனது வாழ்க்கையை இரட்டை வழியில் கொண்டு செல்ல விரும்பவில்லை. கேமரா முன் நடிக்கும்போது நிஜவாழ்க்கையில் நடிக்க தேவை இல்லை. நான் உண்மையாக இருக்க விரும்புகிறேன்.

     

    ரகுல்பிரீத் சிங்

    ரகுல்பிரீத் சிங்

    எல்லோருக்கும் வாழ்க்கையில் துணை முக்கியம். நானும், ஜாக்கியும் எங்கள் உறவில் இயல்பாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இருக்கிறோம். இது பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்துகிறது. ஒவ்வொருவருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்பதிலும் ஒருமித்த கருத்தோடு இருக்கிறோம். வாழ்க்கை மிகவும் எளிமையானது. பயத்தின் காரணமாக சில விஷயங்களை மறைத்து சிக்கலாக்குகின்றனர். எனக்கு பயம் இல்லாததால் காதலை மறைக்கவில்லை" என்றார்.

    • சின்னத்திரை நடிகர்கள் அர்னவ்-திவ்யா இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.
    • இதனிடையே இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி வருகின்றனர்.

    சின்னத்திரை நடிகரான அர்னவ், தன்னுடன் தொலைக்காட்சி தொடரில் கதாநாயகியாக நடித்த நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த சில தினங்களாக கணவன், மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி வருகின்றனர். தனது கணவர், கர்ப்பிணியான தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், தன்னை மதம் மாற கட்டாயப்படுத்தியதாகவும் திவ்யா புகார் தெரிவித்தார்.

     

    அர்னவ் - திவ்யா

    அர்னவ் - திவ்யா

    ஆனால் தனது மனைவிதான் அவரது நண்பர்கள் சொல்வதை கேட்டு இதுபோல் நடந்து கொள்வதாகவும், அவருடன் சேர்ந்து வாழவே விரும்புவதாகவும் அர்னவ் கூறினார். மேலும் அர்னவ், திவ்யா தன்னுடன் சண்டைபோடும் வீடியோக்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கிடையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திவ்யா அளித்த புகாரின்பேரில் போரூர் அனைத்து மகளிர் போலீசார் அர்னவ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

     

    அர்னவ் - திவ்யா

    அர்னவ் - திவ்யா

    இதனை மறுத்த அர்னவ், என் மனைவி திவ்யாவை நான் அடித்ததாக போலீசில் கூறிய புகாரில் உண்மை இல்லை. என் விரல் கூட அவர் மீது படவில்லை. அவர் அளித்த பொய்யான புகாரில் என் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்றார். மேலும் எனக்கு என் மனைவி வேண்டும். என்னுடைய மனைவி, குழந்தையை மீட்டு தர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

     

    அர்னவ் - திவ்யா

    அர்னவ் - திவ்யா

    இந்நிலையில் நடிகர் அர்னவ் மீது மாநில மகளிர் ஆணையத்தில் நடிகை திவ்யா புகார் ஒன்றை அளித்துள்ளார். மேலும் திவ்யாவை அர்னவ் மிரட்டும் ஆடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில், நான் தமிழன் என்றும் தமிழ்நாட்டில் வந்து உன் வேலையை காண்பிக்கிறாயா என்று அர்னவ் பேசியுள்ளார். நடிகர் அர்னவ் தன்னை வேண்டும் என்றே திட்டமிட்டு இஸ்லாமியராக மதம் மாற்றி கர்ப்பம் அடைய செய்து வேறு ஒரு முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாக திவ்யா மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். தனக்கு பாதுக்காப்பு அளிக்க வேண்டும் எனவும் எந்த ஒரு ஆதரவின்றி தான் நிற்பதாகவும் மாநில மகளிர் ஆணையத்தில் அளித்துள்ள புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    • அபிஷேக் சர்மா இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராம் சேது.
    • இப்படத்தின் டிரைலரை நடிகர் அக்‌ஷய் குமார் தமிழில் பதிவிட்டுள்ளார்.

    அபிஷேக் சர்மா இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராம் சேது. இதில் அக்‌ஷய் குமாருடன் இணைந்து ஜாக்குலின் பெர்னாண்டஸ், நுஷ்ரத் பருச்சா, நாசர், பிரவேஷ் ராணா, ஜெனிபர் பிசினாடோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை அமேசான் பிரைம் வீடியோ, அபுண்டன்டியா என்டர்டெயின்மென்ட் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் புராண இதிகாசமான ராமாயணத்தில் ராமரால் கட்டப்பட்ட பாலத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.

     

    ராம் சேது - அக்‌ஷய் குமார்

    ராம் சேது - அக்‌ஷய் குமார்

    இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ், இந்தி மொழிகளில் இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ராம் சேது படம் வருகிற அக்டோபர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் இப்படத்தின் தமிழ் டிரைலரை நடிகர் அக்‌ஷய் குமார் தமிழில் பதிவிட்டு வெளியிட்டுள்ளார். அதில், உங்களுக்கு ராம் சேது ஓட முதல் கிளிம்ப்ஸ் பிடிச்சுருக்கா.? அப்போ கண்டிப்பா டிரைலர் இன்னும் பிடிக்கும் இந்த தீபாவளிய ராம் சேது ஓட பிரமாண்ட உலகத்துல குடும்பத்தோட கொண்டாடுங்க என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகை நயன்தாராவுக்கு வாடகை தாய் மூலம் குழந்தைகள் பெற்று கொள்வதற்கு உதவி செய்த மருத்துவமனை மற்றும் டாக்டர்கள் மீது அனைவரது பார்வையும் திரும்பி உள்ளது.
    • நயன்தாராவின் இரட்டை குழந்தைகள் சென்னையில் உள்ள மிகப்பெரிய பிரபலமான தனியார் மருத்துவமனையில் பிறந்துள்ளன.

    சென்னை:

    நடிகை நயன்தாரா வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொண்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்தியாவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது தடை செய்யப்பட்டிருப்பதாக நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த கருத்துக்கள் இந்த சர்ச்சைக்கு வித்திட்டது.

    வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமானால் சில சட்ட விதிகள் நடைமுறையில் உள்ளன. திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகி இருக்க வேண்டும். குழந்தை பெற்றுக்கொள்ள தகுதியில்லை அல்லது விருப்பம் இல்லை என்பதை உரிய முறையில் தெரிவித்து இருக்க வேண்டும்.

    இந்த நடைமுறைகளுக்கு ஏற்ப இருந்தால் மட்டுமே வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி உண்டு. ஆனால் நடிகை நயன்தாரா இந்த விசயத்தில் அனைத்து விதிகளையும் மீறி இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

    சமீபத்தில் இதுபற்றி சட்டப்பூர்வமான பிரச்சினைகள் எழுந்ததும் விசாரணை நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார். இதையடுத்து இந்த சர்ச்சை பல்வேறு கோணங்களிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

    சட்ட நிபுணர்கள் இதுவரை தெரிவித்த கருத்துக்கள் நடிகை நயன்தாராவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் உள்ளன. வாடகை தாய் சட்ட விசயத்தில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி ஏற்கனவே முன்பதிவு செய்திருப்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இல்லை என்று ஒரு சாரார் சொல்கிறார்கள்.

    இந்தநிலையில் நடிகை நயன்தாராவுக்கு வாடகை தாய் மூலம் குழந்தைகள் பெற்று கொள்வதற்கு உதவி செய்த மருத்துவமனை மற்றும் டாக்டர்கள் மீது அனைவரது பார்வையும் திரும்பி உள்ளது. நயன்தாராவின் இரட்டை குழந்தைகள் சென்னையில் உள்ள மிகப்பெரிய பிரபலமான தனியார் மருத்துவமனையில் பிறந்துள்ளன.

    அந்த மருத்துவமனையில் உள்ள சில டாக்டர்கள்தான் நடிகை நயன்தாராவுக்கு வாடகை தாய் மூலம் குழந்தை பெறும் விசயத்தில் ஆலோசனைகள் வழங்கியதாக தெரியவந்துள்ளது. எனவே அவர்களிடம் விசாரணை நடத்துவது பற்றி சுகாதாரத்துறை அதிகாரிகள் விவாதித்து வருகிறார்கள்.

    எனவே நயன்தாராவுக்கு உதவி செய்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    இது தொடர்பாக தமிழக மருத்துவ துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    நயன்தாரா வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றதற்கு சென்னையில் உள்ள நவீன வசதிகள் கொண்ட மருத்துவமனைதான் உதவி செய்து உள்ளது. அந்த மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள் நடிகை நயன்தாராவிடம் முழு விவரங்களையும், சட்ட விதிகளையும் எடுத்து சொன்னார்களா? என்பது தெரியவில்லை.

    பொதுவாக ஒரு தம்பதி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினால் அவர்களுக்கு சட்ட விதிகளை விளக்கமாக எடுத்து சொல்ல வேண்டும். இது அந்தந்த மருத்துவமனைகளில் உள்ள டாக்டர்களின் கடமையாகும்.

    நடிகை நயன்தாரா விசயத்தில் டாக்டர்கள் அந்த சட்ட விதிகளை தெரிவித்தார்களா என்பது தெரியவில்லை. வாடகை தாய் விவகாரத்தில் 99 சதவீதம் பேருக்கு சட்ட விதிகள் நிச்சயம் தெரியாது. எனவே அதை தெரிவிக்க வேண்டிய கடமை மருத்துவமனைகளுக்கும், டாக்டர்களுக்கும்தான் உள்ளது.

    நயன்தாராவிடம் சட்ட விதிகளை டாக்டர்கள் தெரிவிக்கவில்லை என்று எங்களது விசாரணையில் தெரிய வந்தால் நிச்சயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நயன்தாரா எப்போது மருத்துவமனைக்கு வந்தார்? வாடகை தாய் மூலம் குழந்தை பெற எப்போது முன்பதிவு செய்தார்? அவரிடம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதா? என்பது பற்றியெல்லாம் ஆய்வு செய்யப்படும்.

    இதில் விதிமீறல்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் நடவடிக்கை பாயும். இது தொடர்பான விவரங்கள் தெரிவதற்கு சில நாட்கள் ஆகும். விசாரணை விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படமாட்டாது. ஆனால் நாங்கள் நடவடிக்கை எடுப்பது உறுதி.

    இவ்வாறு அந்த மருத்துவ துறை அதிகாரி கூறினார்.

    வாடகை தாய் மூலம் விதிகளை மீறி குழந்தை பெற்றிருப்பது உறுதிபடுத்தப்பட்டால் அபராதம் ஏதேனும் விதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு மருத்துவ துறை அதிகாரிகள் கூறுகையில், "விதி மீறல்கள் இருந்தால் உரிய அபராதம் விதிக்கப்படும்" என்றனர்.

    மருத்துவமனை நிர்வாகம் தவிர நடிகை நயன்தாராவுக்கும் அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக நிபுணர் ஒருவர் தெரிவித்தார். ஆனால் சட்ட நிபுணர்கள் கூறுகையில், "நடிகை நயன்தாராவுக்கு அபராதம் விதிக்கவோ அல்லது அவர் மீது நடவடிக்கை எடுக்கவோ வாய்ப்புகள் மிக மிக குறைவு" என்று தெரிவித்தனர்.

    நயன்தாரா விவகாரத்தில் மருத்துவ துறை அதிகாரிகள் இன்று விசாரணை நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை (வியாழக்கிழமை) விசாரணை தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    விசாரணை எத்தனை நாட்களுக்கு நடக்கும் என்பது தெரியவில்லை. மருத்துவ துறையை சேர்ந்த 4 அதிகாரிகளை கொண்ட குழு நயன்தாராவிடம் விசாரணை நடத்த அமைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

    ×