என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் ஜெயிலர்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு கடலூர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.

    நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.


    ஜெயிலர்

    இந்நிலையில், 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு கடலூர் மாவட்டம் அழகிய நத்தம் பகுதியில் நடைபெற்று வருகிறது. தென்பெண்ணை ஆற்றின் பாலத்தில் நடைபெறும் இந்த படப்பிடிப்பில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

    இந்த பகுதியில் பொது மக்கள் யாரும் அனுமதியில்லை என்பதால் படப்பிடிப்பு நடக்கும் பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலேயே பொதுமக்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றனர். மேலும், இதில் நடிகர் ரஜினி மற்றும் முக்கிய கதாபாத்திரங்கள் பங்கேற்றுள்ளதால்  போலீசாரின் உரிய பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

    • நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
    • இந்த அறிவிப்புக்கு பின்னர் பல சர்ச்சைகள் கிளம்பி வருகிறது.

    நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் 9-ந் தேதி திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்பே இருவரும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்ததாக கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக விக்னேஷ் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இவர்களின் அறிவிப்புக்கு பின்னர் இதுகுறித்து பல சர்ச்சைகள் கிளம்பி வருகிறது.

     

    நயன்தாராவுக்கு இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொடுத்த வாடகை தாய் யார்? என்பதை அவரும், அவரது கணவரும் ரகசியமாக வைத்து இருக்கிறார்கள். அந்த ரகசியம் மெதுவாக கசிந்து இருக்கிறது.

     

    இந்நிலையில் நயன்தாராவுக்கு வாடகைத்தாயாக உதவியவர் கேரளாவை சேர்ந்த பெண் என்பது தெரியவந்துள்ளது. நயன்தாரா கேரள மாநிலம் திருவல்லாவில் கல்லூரி படிப்பை படித்துள்ளார். அவரது கல்லூரி தோழிகள் சிலர் உதவியுடன்தான் ஒரு பெண்ணை ஏற்பாடு செய்துள்ளார்கள் என்றும் அந்த பெண் நயன்தாராவின் பாதுகாப்பில் இருப்பதாகவும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

    நயன்தாராவிடம் விசாரித்து பின்னர் வாடகை தாயான அந்த பெண்ணிடமும் விசாரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

    • நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
    • இது குறித்து நயன்தாரா-விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

    நயன்தாரா-விக்னேஷ் சிவன் காதலித்து கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையில் திருமணம் செய்துக் கொண்டனர். திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் சில தினங்களுக்கு முன்பு தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்தனர். இவர்களின் இந்த அறிவிப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

     

    அதேசமயம் திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது சலசலப்பை கிளப்பி பல கேள்விகளை எழுப்பியது. இதனிடையே வாடகைத் தாய் மூலம் இவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற நயன்தாரா-விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன பின்னரே வாடகை தாய் மூலம் குழந்தை பெற இயலும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

     

    இந்நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியின் இரட்டை ஆண் குழந்தை விவகாரத்தில் இணை இயக்குனர் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு அமைத்து விசாரணையை தொடங்கியுள்ளது. எந்த மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது? என விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் தமிழகத்தில் தான் சிகிச்சை பெற்றாரா? தமிழக மருத்துவமனை என்றால் உரிய நடைமுறை பின்பற்றப்பட்டதா எனவும் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். மருத்தவமனையில் விசாரனை முடிந்த பிறகு தேவைப்பட்டால் நயன்தாரா-விக்னேஷ் சிவனிடம் விசாரிக்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளனர்.

    கர்ப்பகாலத்தில் தாய் மற்றும் சேய் இருவரின் உடல்நிலையை கண்கானிக்க கூடிய சுகாதாரத்துறையுடைய 'பிக்மி' வரிசை எண்ணை நயன்தாரா பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், நயன்தாரா- விக்னேஷ் சிவன் மீது விரைவில் நடவடிக்கை பாயும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    • அர்னவ்-திவ்யா இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.
    • சில தினங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் மாறிமாறி புகார்களை கூறிவருகிறார்கள்.

    தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடரில் இணைந்து நடித்த அர்னவ் மற்றும் திவ்யா இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். நடிகர் அர்னவுக்கும், நடிகை திவ்யாவுக்கும் சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கடந்த சில நாட்களாகவே இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி அடுக்கடுக்கான புகார்களை கூறிவருகிறார்கள். மேலும் அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

    அர்னவ்-திவ்யா

    அர்னவ்-திவ்யா

     

    கர்ப்பிணியான தன்னை அர்னவ் அடித்து துன்புறுத்துவதாகவும், தன்னை ஏமாற்றிவிட்டு இன்னொரு நடிகையுடன் தொடர்புவைத்து இருப்பதாகவும் திவ்யா குற்றம் சாட்டினார். ஆனால் அர்னவ் கூறும்போது, எனது மனைவி திவ்யா எனக்கு வேண்டும். திவ்யாவுடன் இருப்பவர்கள் தான் அவரை இதுபோல் செயல்பட தூண்டுவதாக தெரிவித்தார்.

    அர்னவ்-திவ்யா

    அர்னவ்-திவ்யா

     

    இந்நிலையில் கர்ப்பிணியான தன்னை அர்னவ் தாக்கியதாக திவ்யா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகார் மீது போரூர் மகளிர் போலீசார் அர்னவ் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    அர்னவ்-திவ்யா

    அர்னவ்-திவ்யா

    இந்த வழக்கு தொடர்பாக அர்னவை விசாரணைக்கு ஆஜராகுமாறு போரூர் மகளிர் போலீசார் அழைத்தனர். ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து நாளை (வெள்ளிக்கிழமை) இந்த வழக்கு தொடர்பாக போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நடிகர் அர்னவுக்கு போரூர் மகளிர் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். ஆனால் நடிகர் அர்னவ் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவர் நாளை விசாரணைக்கு ஆஜராவாரா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

     

    • நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக அறிவிக்கப்பட்டது.
    • இந்த அறிவிப்புக்கு பின்னர் பல சர்ச்சைகள் கிளம்பி வருகிறது.

    நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் 9-ந் தேதி திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்பே இருவரும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்ததாக கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக விக்னேஷ் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இவர்களின் அறிவிப்புக்கு பின்னர் இதுகுறித்து பல சர்ச்சைகள் கிளம்பி வருகிறது.

     

    நயன்தாராவுக்கு இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொடுத்த வாடகை தாய் யார்? என்பதை அவரும், அவரது கணவரும் ரகசியமாக வைத்து இருக்கிறார்கள். அந்த ரகசியம் மெதுவாக கசிந்து இருக்கிறது. நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடியின் வாடகை தாய் துபாயில் இருப்பதாக கூறப்படுகிறது.

    நயன்தாராவின் அண்ணன் துபாயில் வாழ்ந்து வருகிறார். எனவே அங்கியிருக்கும் கேரளாவை சேர்ந்த ஒருவர் மூலம் வாடகை தாய் ஏற்பாடு நடந்திருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    • இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள படம் 'ஆதிபுருஷ்'.
    • ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார்.

    ராமாயண கதையை மையமாக வைத்து ஆதிபுருஷ் படம் தயாராகி உள்ளது. இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். ஓம் ராவத் இயக்கியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.

     

    ஆதிபுருஷ்

    ஆதிபுருஷ்

    டிரைலரில் இடம் பெற்றுள்ள காட்சிகள் வீடியோ கேம் போல் இருப்பதாகவும் ராவணனை தவறாக சித்தரித்து இருப்பதாகவும் கண்டித்தனர். அயோத்தி ராமர் கோவிலின் தலைமை குரு ஆதிபுருஷ் படத்தை வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தினார். பா.ஜனதா பிரமுகர் மாளிகா அவினாஷ், ''இலங்கையை சேர்ந்த ராவணன் சிவ பக்தர். 64 கலைகள் கற்றவர். அவருக்கு ஜாக்கெட் அணிந்து நீல நிற கண்களுடன் சர்வாதிகாரி போல் தவறாக காட்டி உள்ளனர். ராமாயண சரித்திரத்தை தவறாக சித்தரித்து உள்ளனர்" என்று சாடினார்.

    ஆதிபுருஷ்

    ஆதிபுருஷ்

     

    இந்நிலையில் ஆதிபுருஷ் படத்தில் ராமரையும், ராவணனையும், அனுமனையும் தவறாக சித்தரித்து இருப்பதாக டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் பிரபாஸ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    • 'அய்யப்பனும் கோஷியும்' படத்தில் பாடியதற்காக சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை பெற்றார் நஞ்சம்மா.
    • இவர் தற்போது தமிழில் அறிமுகமாகியுள்ளார்.

    கேரள மாநிலம் அட்டப்பாடி மலைக்கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சம்மா. பழங்குடி இனத்தை சேர்ந்த நஞ்சம்மா, கிராமிய பாடல்கள் பாடுவதில் வல்லவர். இது பற்றி அறிந்த கலை உலகினர், இவருக்கு 2020-ஆம் ஆண்டு வெளியான 'அய்யப்பனும் கோஷியும்' என்ற படத்தில் பாடல் பாட வாய்ப்பு அளித்தனர்.


    நஞ்சம்மா

    அந்த படத்தில் இவர் 'கலக்காத சந்தனமேரம் வெகுவோக பூதிரிக்கும்' என்ற பாடலை பாடினார். படம் வெளியான பின்னர் இந்த பாடல் பட்டி, தொட்டி எங்கும் ஒலிக்க தொடங்கியது. இதையடுத்து மத்திய அரசு இந்த பாடலை பாடியதற்காக சமீபத்தில் இவருக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை அறிவித்தது.


    சீன் நம்பர் 62

    இந்நிலையில், அவர் தமிழிலும் பாடகியாக அறிமுகமாக உள்ளார். 'ஆதாம்' என்ற மலையாள படத்தை இயக்கிய இயக்குனர் சமர் 'சீன் நம்பர் 62' என்கிற படம் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். இந்தப்படத்தில் 'என் சேவல்' என்ற பாடலை பாடகர் வேல்முருகனுடன் இணைந்து நஞ்சம்மா பாடியுள்ளார். இந்தப் பாடல் சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.



    • இயக்குனர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் வைபவ் நடித்த படம் ‘பபூன்’.
    • இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

    ஈசன், மங்காத்தா, கோவா, மேயாதமான் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் வைபவ். இவர் அறிமுக இயக்குனர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் 'பபூன்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் வைபவ்வுக்கு ஜோடியாக 'நட்பே துணை' நாயகி அனகா நடித்திருந்தார்.


    பபூன்

    மேலும், ஜோஜு ஜார்ஜ், அந்தக்குடி இளையராஜா, நரேன், மூனர் ரமேஷ், தமிழ், ஆடுகளம் ஜெயபாலன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ளார். சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையாம விமர்சனங்களை பெற்றது.


    பபூன் போஸ்டர்

    இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'பபூன்' திரைப்படம் அக்டோபர் 14-ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

    • வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்து வரும் படம் என்சி22.
    • இப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்து இயக்கும் புதிய படம் என்சி22. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். தற்காலிகமாக 'என்சி22' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.


    நாக சைதன்யா - வெங்கட் பிரபு

    மேலும், இப்படத்திற்கு இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், மாண்டியா மாவட்டம், மேலுகோட் பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோவிலுக்கு அருகில் படக்குழு மதுக்கடை செட் ஒன்று அமைத்து படப்பிடிப்பு நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கோவிலுக்கு அருகில் விதிகளை மீறி செட் அமைந்துள்ளதாக கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


    என் சி 22

    பின்னர் அந்த செட் அப்புறப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் படக்குழு மேலுகோட் பகுதியில் படப்பிடிப்பிற்கு அனுமதி வாங்கும் பொழுது மதுக்கடை செட் அமைத்து காட்சிகள் படமாக்கப்படவுள்ளது என்பதை தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

    • சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ப்ரின்ஸ்' திரைப்படத்தை இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ளார்.
    • 'ப்ரின்ஸ்' திரைப்படம் அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'ப்ரின்ஸ்' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்துளளார்.


    ப்ரின்ஸ்

    மேலும் இப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    ப்ரின்ஸ்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'ப்ரின்ஸ்' திரைப்படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. 


    • பிரபல இந்தி இயக்குனர் சஜித்கான் பிக்பாஸில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.
    • இவருக்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் குரல் எழுப்பியுள்ளனர்.

    பிரபல இந்தி இயக்குனர் சஜித்கான். இவர் தற்போது இந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 16-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்று உள்ளார். இவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் கண்டன குரல் எழுப்பியுள்ளனர்.


    பிக்பாஸ் சீசன் - 16

    இதையடுத்து டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவியான சுவாதி மலிவால், மத்திய மந்திரி அனுராக் தாக்குருக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், " இயக்குனர் சஜித்கான் மீது 10 பெண்கள் பாலியல் புகார் தெரிவித்து உள்ளனர். அப்படிப்பட்டவரை சல்மான்கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க செய்து இருப்பது தவறானது. அவரை உடனடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


    சஜித்கான்

    இந்நிலையில், டெல்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மலிவால் இன்று கூறும்போது, இயக்குனர் சஜித்கானை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நீக்க கோரி மத்திய மந்திரி அனுராக் தாக்குருக்கு கடிதம் எழுதியதில் இருந்து சமூக ஊடகம் வழியே தனக்கு பாலியல் பலாத்கார மிரட்டல்கள் தொடர்ந்து வருகின்றன.


    சுவாதி மலிவால்

    எங்களது பணியை நிறுத்த அவர் விரும்புகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. இதுபற்றி டெல்லி போலீசில் நான் புகார் ஒன்றை அளித்து உள்ளேன். எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். இந்த மிரட்டல்களை விடுத்த நபர்களை டெல்லி போலீசார் கைது செய்ய வேண்டும்" என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.


    • இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் ‘சியான் 61’.
    • இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

    மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.


    பா. ரஞ்சித்

    இதில் விக்ரம் நடித்த ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, பா. ரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்க போவதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்திருந்தது. 'சியான் 61' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா, நீலம் ப்ரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார்.


    சியான் 61 படக்குழு

    இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. இந்நிலையில், 'சியான் 61' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளதாகவும் இதன் டெஸ்ட் ஷூட் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    பொன்னியின் செல்வன் வெற்றியைத் தொடர்ந்து 'சியான் 61' படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

    ×