என் மலர்
சினிமா செய்திகள்

நயன்தாரா- விக்னேஷ் சிவன் குழந்தையை பெற்றெடுத்தவர் யார்? வெளியான புதிய தகவல்
- நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக அறிவிக்கப்பட்டது.
- இந்த அறிவிப்புக்கு பின்னர் பல சர்ச்சைகள் கிளம்பி வருகிறது.
நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் 9-ந் தேதி திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்பே இருவரும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்ததாக கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக விக்னேஷ் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இவர்களின் அறிவிப்புக்கு பின்னர் இதுகுறித்து பல சர்ச்சைகள் கிளம்பி வருகிறது.
நயன்தாராவுக்கு இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொடுத்த வாடகை தாய் யார்? என்பதை அவரும், அவரது கணவரும் ரகசியமாக வைத்து இருக்கிறார்கள். அந்த ரகசியம் மெதுவாக கசிந்து இருக்கிறது. நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடியின் வாடகை தாய் துபாயில் இருப்பதாக கூறப்படுகிறது.
நயன்தாராவின் அண்ணன் துபாயில் வாழ்ந்து வருகிறார். எனவே அங்கியிருக்கும் கேரளாவை சேர்ந்த ஒருவர் மூலம் வாடகை தாய் ஏற்பாடு நடந்திருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.






