என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • சின்னத்திரை நடிகர்கள் அர்னவ்-திவ்யா இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.
    • தற்போது கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் மாறி மாறி புகார் கூறி வருகின்றனர்.

    சின்னத்திரை நடிகர் அர்னவ், தன்னுடன் தொலைக்காட்சி தொடரில் கதாநாயகியாக நடித்த நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அர்னவ் தற்போது புதிய தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார். அதில் அவருடன் நடிக்கும் கதாநாயகியுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக கூறி கடந்த சில வாரங்களாக கணவன், மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டு உள்ளது.

    அர்னவ் - திவ்யா 

    அர்னவ் - திவ்யா 

     

    இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இதற்கிடையில் கர்ப்பிணியான தன்னை அர்னவ் தாக்கியதாக திவ்யா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகார் மீது போரூர் அனைத்து மகளிர் போலீசார், அர்னவ் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    அர்னவ் - திவ்யா 

    அர்னவ் - திவ்யா 

     

    இந்த வழக்கு சம்பந்தமாக நடிகர் அர்னவை போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி கூறியும் அவர் ஆஜராகாமல் இருந்து வந்தார். எனவே இன்று (வெள்ளிக்கிழமை) போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அர்னவுக்கு போரூர் அனைத்து மகளிர் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

    அர்னவ் - திவ்யா 

    அர்னவ் - திவ்யா 

     

    இன்று விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பட்ட நிலையில் அவகாசம் கேட்டு அர்னவ் மனு அளித்துள்ளார். கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளதால் 18ஆம் தேதி ஆஜராவதாக அர்னவ் வக்கீல் தரப்பில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது.
    • ரஜினிகாந்த் அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மணிரத்னம் இயக்கத்தில் ஏற்கனவே ரஜினி நடித்த தளபதி இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாக உள்ளது. சென்னையில் நடந்த பொன்னியின் செல்வன் பட விழாவில் ரஜினிகாந்த் பேசும்போது மீண்டும் மணிரத்னம் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்து இருந்தார்.

     

    அவர் கூறும்போது, ''பொன்னியின் செல்வன் கதையில் என்னை வந்தியத்தேவனாக நினைத்து பார்த்தது உண்டு. மணிரத்னம் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை தொடங்கியதும் அதில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் என்னை நடிக்க வையுங்கள் என்று கேட்டேன். ஆனால் உங்கள் ரசிகர்களுக்கு அந்த கதாபாத்திரத்தில் நடிப்பது பிடிக்காது என்று சொல்லி அவர் மறுத்து விட்டார்" என்றார்.

     

    அப்போதே ஏதாவது கதை இருந்தால் சொல்லுங்கள் என்று ரஜினி கேட்டதாகவும், மணிரத்னம் சொன்ன ஒரு கரு ரஜினிகாந்துக்கு பிடித்து போனதாகவும், அந்த படத்தில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் வலைத்தளத்தில் தகவல் பரவி உள்ளது. ஆனாலும் மணிரத்னம் தரப்பில் இதனை உறுதிப்படுத்தவில்லை.

     

    இவர்கள் கூட்டணி மீண்டும் அமைந்தால் பிரமாண்டமாக இருக்கும் என்று ரசிகர்கள் வலைத்தளத்தில் மகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள். சிபி சக்கரவர்த்தி, தேசிங்கு பெரியசாமி ஆகியோர் பெயர்களும் ரஜினி படங்களை இயக்குபவர்கள் பட்டியலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சின்னத்திரை நடிகர்கள் அர்னவ்-திவ்யா இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.
    • தற்போது கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் மாறி மாறி புகார் கூறி வருகின்றனர்.

    சின்னத்திரை நடிகர் அர்னவ், தன்னுடன் தொலைக்காட்சி தொடரில் கதாநாயகியாக நடித்த நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அர்னவ் தற்போது புதிய தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார். அதில் அவருடன் நடிக்கும் கதாநாயகியுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக கூறி கடந்த சில வாரங்களாக கணவன், மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டு உள்ளது.

    திவ்யா- அர்னவ்

    திவ்யா- அர்னவ்

     

    இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இதற்கிடையில் கர்ப்பிணியான தன்னை அர்னவ் தாக்கியதாக திவ்யா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகார் மீது போரூர் அனைத்து மகளிர் போலீசார், அர்னவ் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    திவ்யா- அர்னவ்

    திவ்யா- அர்னவ்

     

    இந்த வழக்கு சம்பந்தமாக நடிகர் அர்னவை போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி கூறியும் அவர் ஆஜராகாமல் இருந்து வந்தார். எனவே இன்று (வெள்ளிக்கிழமை) போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அர்னவுக்கு போரூர் அனைத்து மகளிர் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

    திவ்யா- அர்னவ்

    திவ்யா- அர்னவ்

     

    இந்நிலையில் நடிகர் அர்னவ், தற்போது தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. அவர் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதால் விசாரணைக்கு ஆஜராகும் அர்னவ் மீது குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவரை போலீசார் கைது செய்யவும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

    திவ்யா- அர்னவ்

    திவ்யா- அர்னவ்

     

    இதனால் அர்னவ் முன்ஜாமீன் கோரி கோர்ட்டை நாட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே இன்றைய தினம் அர்னவ் போலீஸ் விசாரணைக்கு ஆஜராவாரா? என்பது சந்தேகமாக இருப்பதாகவும் தெரிகிறது. ஒருவேளை அவர் விசாரணைக்கு ஆஜரானால் அவரிடம் விசாரித்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது தெரியவரும் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    • சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான மாமனிதன் திரைப்படம் பல விருதுகளை வென்றது.
    • இவரின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

    2007-ஆம் ஆண்டு வெளியான 'கூடல் நகர்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனுராமசாமி. இதைத்தொடர்ந்து, தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், தர்மதுரை, கண்ணே கலைமானே போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். மேலும், தனது இரண்டாவது படத்தில் தேசிய விருது வென்று சினிமாவில் தனக்கான இடத்தை பெற்றார்.


    சீனுராமசாமி

    இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான 'மாமனிதன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்றது. இந்நிலையில் இன்று பிறந்தநாளை கொண்டாடி வரும் இயக்குனர் சீனுராமசாமிக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


    மாதம்பட்டி ரங்கராஜ்

    அந்த வகையில் 'மெஹந்தி சர்க்கஸ்' படத்தின் கதாநாயகன் மாதம்பட்டி ரங்கராஜ், சீனுராமசாமிக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சீனுராமசாயின் அடுத்த படத்தில் தான் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் 'மெஹந்தி சர்க்கஸ்' போலவே இப்படமும் ஒரு அழகான காதல் கதையாக இருக்கும் எனவும் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.   

    • சினிமா துறையில் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்.
    • இவர் சமூக பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார்.

    இந்திய திரையுலகின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் பி.சி.ஸ்ரீராம். தமிழில் பூவே பூச்சுடவா, மவுன ராகம், நாயகன், தேவர் மகன், காதல் தேசம், அலைபாயுதே உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தெலுங்கு, இந்தி, மலையாளத்திலும் நிறைய படங்களில் பணியாற்றி இருக்கிறார். விக்ரம் நடித்த மீரா, கமல்ஹாசன், அர்ஜுன் இணைந்து நடித்த குருதிப்புனல் மற்றும் வானம் வசப்படும் ஆகிய படங்களை இவர் இயக்கியுள்ளார்.


    பி.சி.ஸ்ரீராம்

    மேலும் பல விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார். சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வரும் இவர் அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையில், பி.சி.ஸ்ரீராம் தனது சமூக வலைதளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்த் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


    பி.சி.ஸ்ரீராம்

    அதில், "பொதுவெளியில் மனம் விட்டு பேசுவதற்கு வலிமையான மனம் வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு படி மேலே சென்று அனைவரிடமும் உண்மையை பேசியுள்ளார். நேரடி தொடர்பும் வெளிப்படை தன்மையும் அச்சமின்மையும் இருக்கும் இன்றைய உலகில் இது அவரது வலிமையைக் காட்டுகிறது. அவர் இன்னும் உயர்ந்து நிற்கிறார்" என்று பதிவிட்டுள்ளார்.


    • புத்தர் சிலை முன்பு அஜித் நிற்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் ட்ரெண்டானது.
    • இதைத்தொடர்ந்து நடிகர் அஜித் பைக்கில் சாகசம் செய்யும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் "துணிவு". இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.


    அஜித்

    இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும் "துணிவு" திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


    அஜித்

    இந்நிலையில் தொடர்ந்து சமூக வலைதளத்தில் நடிகர் அஜித்தின் புகைப்படம் வைரலாகி வருகிறது. முதலில் புத்தர் சிலை முன்பு அஜித் தனது பைக்குடன் நிற்கும் புகைப்படம் வெளியானது. தற்போது அஜித் பைக்கில் சாகசம் செய்யும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து புகைப்படம் வெளியாகுவதால் உற்சாகமடைந்த ரசிகர்கள் அந்த புகைப்படங்களை இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

    • சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ப்ரின்ஸ் திரைப்படம் அக்டோபர் 21-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

    இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'ப்ரின்ஸ்' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார்.


    ப்ரின்ஸ்

    மேலும் இப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    ப்ரின்ஸ்

    இப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டான நிலையில் தற்போது இப்படத்தின் மூன்றாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'ப்ரின்ஸ்' படத்தின் மூன்றாவது பாடலான 'நான் யாரு' பாடல் நாளை (அக்டோபர் 14) மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.



    • எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் துணிவு.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் "துணிவு". இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.


    அஜித்

    இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.


    அஜித்

    இதற்கு முன்பு படப்பிடிப்பிற்கு நடுவே நடிகர் அஜித், லடாக், பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளுக்கு பைக் சுற்றுப்பயணம் சென்றார். இந்நிலையில், இவர் புத்தர் முன்பு நிற்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    அஜித்

    அதுமட்டுமல்லாமல் இவர் படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து தாய்லாந்தில் மீண்டும் தன் பைக் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பகிர்ந்துள்ள விக்னேஷ் சிவன், "அமைதிக்கு முன் ஒரு புயல்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.


    • தொல். திருமாவளவனின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சினேகன் கலந்து கொண்டார்.
    • இவர் வெற்றிமாறனின் கருத்து அவரின் தனிப்பட்ட கருத்து என்று கூறினார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு அக்கட்சி உறுப்பினர்கள் 60 நாள் நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். இதையடுத்து 50-வது நாளான நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பாடலாசிரியர் சினேகன் மற்றும் அவரது மனைவி கனிகா கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.


    கனிகா - சினேகன்

    நிகழ்ச்சியை அடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்த சினேகன், "நல்ல கலைஞன் எந்த பிரிவினைகளுக்கும் அகப்படமாட்டான். அரசியலை சினிமாவாகவும் சினிமாவை அரசியலாகவும் பார்க்காத வரைக்கும் கலைஞன் கலைஞனாக இருந்தால் எந்த கலைஞனையும் பிரிவினைவாதத்திற்குள் கொண்டு போக முடியாது" என்று கூறினார்.


    சினேகன்

    மேலும் இயக்குனர் வெற்றிமாறனின் கருத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, "ஆரம்பத்திலேயே காஞ்சி பெரியவர் மற்றும் எழுத்தாளர் சோ ஆகியோர் கூறிய கருத்து தான் அவை. அந்த காலத்தில் இந்து மதம் என்பது இல்லை. அதன்பின் பண்பட்ட ஒரு பண்பாடு இங்கு சேர்ந்து அதற்கு பெயர் வைத்தார்கள் என்று அவர் படித்ததை அவர் கூறினார். அது அவருடைய கருத்து" என்று கூறினார். 

    • தொகுப்பாளரிடம் அநாகரீகமாக பேசியதாக நடிகர் ஸ்ரீநாத் பாசியை காவல்துறை கைது செய்தது.
    • இவர் மீதான வழக்கை கேரள உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

    மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகர் ஸ்ரீநாத் பாசி. இவர் '22 பீமேல் கோட்டயம்', 'உஸ்தாத் ஓட்டல்', 'கும்பளங்கி நைட்ஸ்', 'வைரஸ்' உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த 'சட்டம்பி' திரைப்படம் சமீபத்தில் வெளியானது.


    ஸ்ரீநாத் பாசி

    இதையடுத்து இவர் 'சட்டம்பி' திரைப்படம் தொடர்பாக பிரபலமான மலையாள யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பெண் தொகுப்பாளரின் கேள்வியால் எரிச்சலடைந்த அவர், கேமராவை நிறுத்தும்படி கூறிவிட்டு, தொகுப்பாளரையும் அந்தக் குழுவையும் ஆபாசமாகத் திட்டி, மிரட்டியதாகக் கூறப்படுகிறது.


    ஸ்ரீநாத் பாசி

    இதுபற்றி கொச்சி, மராடு போலீசில் புகார் செய்யப்பட்டதை அடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நடிகர் ஸ்ரீநாத் பாசியை போலீசார் கைது செய்து மூன்று மணி நேரம் விசாரணைக்கு பிறகு ஜாமீனில் விடுவித்தனர். இவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர்.


    ஸ்ரீநாத் பாசி

    அதன்பின்னர், தன்னை நேரில் சந்தித்து நடிகர் ஸ்ரீநாத் பாசி மன்னிப்பு கேட்டதால் வழக்கை திரும்ப பெறுவதாக பெண் தொகுப்பாளர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும், தன் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி ஸ்ரீநாத் பாசி மனு தாக்கல் செய்தார்.

    இந்நிலையில், இரு தரப்பினரும் இந்த வழக்கை சுமூகமாக தீர்த்துக் கொண்டதால் கேரள உயர்நீதிமன்றம் நடிகர் ஸ்ரீநாத் பாசி மீதான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டது.

    • பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சர்தார்’ படத்தில் கார்த்தி நடித்துள்ளார்.
    • இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள படம் 'சர்தார்'. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும், ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.


    சர்தார்

    பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'சர்தார்' திரைப்படம் இந்த வருடம் அக்டோபர் மாதம் 21-ம் தேதி ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.


    சர்தார் போஸ்டர்

    இந்நிலையில், 'சர்தார்' படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் நாளை (அக்டோபர் 14) வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


    • மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் பொன்னியின் செல்வன் -1.
    • இந்த படத்தின் வசூல் ரூ.400 கோடியை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.


    பொன்னியின் செல்வன்

    பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் ரூ.400 கோடி வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது. மேலும், பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்திற்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் பார்த்திபன் பொன்னியின் செல்வன் படத்தின் ரூ.400 கோடி வசூல் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


    பொன்னியின் செல்வன்

    அந்த பதிவில், " ரூ. 400 கோடியை கடந்தது. இந்து என்ற மதம் இன்று இந்து என்ற பிரச்சனையாக மதம்மாறி விட்டது! இந்த எழுத்தும் ஏதோ ஒரு பிரச்சனையை எழு (இ)ப்பலாம்! எழுப்பினால்… இன்னும் ஒரு 100!" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் எழுப்பிவிடலாம் என கமெண்ட் செய்து வைரலாக்கி வருகின்றனர்.


    ×