நான் யாரு? ப்ரோமோ மூலம் அப்டேட் கொடுத்த ப்ரின்ஸ் படக்குழு..

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ப்ரின்ஸ் திரைப்படம் அக்டோபர் 21-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
ப்ரின்ஸ்
ப்ரின்ஸ்
Published on

இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'ப்ரின்ஸ்' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார்.

ப்ரின்ஸ்

மேலும் இப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ப்ரின்ஸ்

இப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டான நிலையில் தற்போது இப்படத்தின் மூன்றாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'ப்ரின்ஸ்' படத்தின் மூன்றாவது பாடலான 'நான் யாரு' பாடல் நாளை (அக்டோபர் 14) மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com