என் மலர்
சினிமா செய்திகள்
- அர்னவ் விசாரணைக்கு ஆஜராக போரூர் அனைத்து மகளிர் போலீசார் சம்மன் அனுப்பினர்.
- படப்பிடிப்பு தளத்தில் இருந்த நடிகர் அர்னவ் கைது செய்யப்பட்டார்.
தொலைக்காட்சித் தொடரில் நடித்து வரும் சின்னத் திரை நடிகர் அர்னவ், தன்னுடன் தொலைக்காட்சி தொடரில் நடித்த நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கணவன், மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.
இதற்கிடையில் கர்ப்பிணியான தன்னை அர்னவ் தாக்கியதாக திவ்யா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகார் மீது போரூர் அனைத்து மகளிர் போலீசார், அர்னவ் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் நடிகர் அர்னவ் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். அர்னவுக்கு போரூர் அனைத்து மகளிர் போலீசார் சம்மன் அனுப்பினர்.
ஆனால் கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளதால் 18ஆம் தேதி ஆஜராவதாக அர்னவ் வக்கீல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், போரூர் உதவி கமிஷனர் தலைமையிலான தனிப்படை போலீசார் பூந்தமல்லி அருகே உள்ள நேமம் பகுதியில் படப்பிடிப்பு தளத்தில் இருந்த நடிகர் அர்னவ்வை கைது செய்து மாங்காடு போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
சுமார் இரண்டு மணிநேரம் நடைபெற்ற விசாரணைக்கு பின்னர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப் பட்டார். அவரை வரும் 28ந் தேதிவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க அம்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து நடிகர் அர்னவ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
- வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'வாரிசு'.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வாரிசு
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிக்குள் இதன் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் எனக் கூறப்படுகிறது. மேலும், 'வாரிசு' திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

வாரிசு
இந்நிலையில், நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் பதிவு ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், வாரிசு திரைப்படத்தில் விஜய்யின் மாஸ் லெவல் நடனம் ஒன்று இருப்பதாகவும் இதை பார்த்தால் திரையரங்குகளில் யாரும் உட்கார்ந்து படம் பார்க்கமாட்டீர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை விஜய் ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
விஜய்யின் 'பீஸ்ட்' படத்தின் அரப்பிக்குத்து பாடலின் நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
#ThalapathyVijay Sir fans, mark my words ✨️
— Jani Master (@AlwaysJani) October 14, 2022
Get ready to witness the MAAAAAAAAAASSSSSSSSS level dance from @actorvijay garu 🔥 No one's going to just sit and watch it in theatres... It'll be 💥💥💥💥💥#Varisu @directorvamshi @MusicThaman @SVC_official pic.twitter.com/KS6vZITLqN
- சர்தார் திரைப்படம் அக்டோபர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள படம் 'சர்தார்'. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும், ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

சர்தார்
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'சர்தார்' திரைப்படம் இந்த வருடம் அக்டோபர் மாதம் 21-ம் தேதி ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

சர்தார்
இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இராணுவ ரகசியத்தை கண்டுபிடிப்பதற்காக கார்த்தி செல்வது போன்று உருவாகியுள்ள இந்த டிரைலரை சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து ட்ரெண்டாகி வருகிறது.
- 'ப்ரின்ஸ்' திரைப்படம் அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இப்படத்தின் மூன்றாவது பாடல் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'ப்ரின்ஸ்' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார்.

ப்ரின்ஸ்
மேலும் இப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ப்ரின்ஸ்
இப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டானது. இதையடுத்து இப்படத்தின் மூன்றாவது பாடல் இன்று மாலை ௫ மணிக்கு வெளியாகும் என படக்குழு ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. அதன்படி, 'ப்ரின்ஸ்' படத்தின் மூன்றாவது பாடல் 'நான் யாரு' லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. அறிவு எழுதி பாடியுள்ள இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
- சின்னத்திரை நடிகர்கள் அர்னவ்-திவ்யா கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் மாறி மாறி புகார் கூறி வருகின்றனர்.
- தற்போது போலீசார் நடிகர் அர்னவை கைது செய்துள்ளனர்.
சின்னத்திரை நடிகர் அர்னவ், தன்னுடன் தொலைக்காட்சி தொடரில் கதாநாயகியாக நடித்த நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அர்னவ் தற்போது புதிய தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார். அதில் அவருடன் நடிக்கும் கதாநாயகியுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக கூறி கடந்த சில வாரங்களாக கணவன், மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டு உள்ளது.

இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இதற்கிடையில் கர்ப்பிணியான தன்னை அர்னவ் தாக்கியதாக திவ்யா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகார் மீது போரூர் அனைத்து மகளிர் போலீசார், அர்னவ் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சம்பந்தமாக நடிகர் அர்னவை போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி கூறியும் அவர் ஆஜராகாமல் இருந்து வந்தார். எனவே இன்று (வெள்ளிக்கிழமை) போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அர்னவுக்கு போரூர் அனைத்து மகளிர் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

இன்று விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பட்ட நிலையில் அவகாசம் கேட்டு அர்னவ் மனு அளித்துள்ளார். கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளதால் 18ஆம் தேதி ஆஜராவதாக அர்னவ் வக்கீல் தரப்பில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் அர்னவ் படப்பிடிப்பு தளத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, போரூர் உதவி கமிஷனர் தலைமையிலான தனிப்படை போலீசார் பூந்தமல்லி அருகே உள்ள நேமம் பகுதியில் படப்பிடிப்பு தளத்தில் இருந்த நடிகர் அர்னவ்வை கைது செய்து மாங்காடு போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர். சுமார் இரண்டு மணிநேரம் நடைபெற்ற இந்த விசாரணையை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் அர்னவை ஆஜர்படுத்த அழைத்து சென்றுள்ளனர்.
- அதிமுக. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சமீபத்தில்நடிகை சாந்தினி பாலியல் புகார் கொடுத்திருந்தார்.
- இவர் தற்போது மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமுத்திரகனி இயக்கத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான நாடோடிகள் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சாந்தினி. இவர் சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில், என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறிய முன்னாள் அமைச்சர் மணிகண்டன், தன்னை ஏமாற்றிவிட்டார். நாங்கள் இருவரும் ஒரே வீட்டில் கடந்த 5 ஆண்டுகளாகக் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தோம். இந்த காலத்தில் மூன்று முறை நான் கருவுற்றேன். என்னைக் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்துவிட்டார்" என்று புகார் அளித்திருந்தார்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் - சாந்தினி
அதன்பின்னர் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பெங்களூரில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையார் அனைத்து மகளிர் காவல்துறையினர் சைதாப்பேட்டை 11-வது நீதிமன்றத்தில் 351 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மணிகண்டன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபொழுது நடிகை அளித்திருந்த புகாரை அவர் தரப்பு திரும்ப பெற்றுவிட்டதாக கூறப்பட்டது. அதன்பின்னர் மணிகண்டன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தவிட்டப்பட்டது.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டை முற்றுகையிட முயன்ற சாந்தினி
இதையடுத்து நடிகை சாந்தினி அவருடைய காரில் ராமநாதபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டை முற்றுகையிட முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தன்னை பார்த்து கொள்வேன் என்று கூறியதாலேயே வழக்கை வாபஸ் பெற்றதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது நடிகை சாந்தினிக்கும் மணிகண்டன் ஆதரவாளர்களுக்கும் ஏற்பட்ட தகராறில் சாந்தினிக்கு காலில் காயம் ஏற்பட்டு மதுரை மாவட்டம் மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- கல்லூரி மாணவி சத்திய பிரியா, ரெயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- இது குறித்து நடிகர் விஜய் ஆண்டனியின் பதிவு வைரலாகி வருகிறது.
சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்திய பிரியா, ரெயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளியை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

சத்திய பிரியா - சதீஷ்
இந்த தனிப்படை போலீசார் சென்னை முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நள்ளிரவில் துரைப்பாக்கம் கிழக்கு கடற்கரை பகுதியில் சுற்றித் திரிந்த, கொலையாளி சதீசை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.
விசாரணைக்குப் பிறகு இன்று பலத்த பாதுகாப்புடன் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை ௧௫ நாட்கள் அதாவது 28ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

விஜய் ஆண்டனி
இந்நிலையில், மாணவி சத்திய பிரியா கொலை வழக்கு குறித்து நடிகர் விஜய் ஆண்டனியின் பதிவு வைரலாகி வருகிறது. அந்த பதிவில், "சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதிஷை, பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு அப்புறம் தூக்குல போடாமல், தயவு செய்து, உடனே விசாரித்து, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி, சத்யாவின் சார்பாக பொது மக்களில் ஒருவனாக, கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
- சின்னத்திரை நடிகர்கள் அர்னவ்-திவ்யா இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.
- தற்போது கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் மாறி மாறி புகார் கூறி வருகின்றனர்.
சின்னத்திரை நடிகர் அர்னவ், தன்னுடன் தொலைக்காட்சி தொடரில் கதாநாயகியாக நடித்த நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அர்னவ் தற்போது புதிய தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார். அதில் அவருடன் நடிக்கும் கதாநாயகியுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக கூறி கடந்த சில வாரங்களாக கணவன், மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டு உள்ளது.

அர்னவ் - திவ்யா
இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இதற்கிடையில் கர்ப்பிணியான தன்னை அர்னவ் தாக்கியதாக திவ்யா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகார் மீது போரூர் அனைத்து மகளிர் போலீசார், அர்னவ் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

அர்னவ் - திவ்யா
இந்த வழக்கு சம்பந்தமாக நடிகர் அர்னவை போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி கூறியும் அவர் ஆஜராகாமல் இருந்து வந்தார். எனவே இன்று (வெள்ளிக்கிழமை) போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அர்னவுக்கு போரூர் அனைத்து மகளிர் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

அர்னவ் - திவ்யா
இன்று விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பட்ட நிலையில் அவகாசம் கேட்டு அர்னவ் மனு அளித்துள்ளார். கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளதால் 18ஆம் தேதி ஆஜராவதாக அர்னவ் வக்கீல் தரப்பில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் அர்னவ் படப்பிடிப்பு தளத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.

அர்னவ்
இதைத்தொடர்ந்து, போரூர் உதவி கமிஷனர் தலைமையிலான தனிப்படை போலீசார் நேமம் பகுதியில் படப்பிடிப்பு தளத்தில் இருந்த நடிகர் அர்னவ்வை கைது செய்துள்ளனர். அவரை சிறையில் அடைக்கும் பணிகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு ஆஜரானால் போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக நடிகர் அர்னவ் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று போலீஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடலூரில் நடைபெற்று வருகிறது.
நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

ஜெயிலர்
இதையடுத்து, 'ஜெயிலர்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடலூர் மாவட்டம் அழகிய நத்தம் பகுதியில் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. தென்பெண்ணை ஆற்றின் பாலத்தில் நடைபெறும் இந்த படப்பிடிப்பில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

ஜெயிலர்
இந்த பகுதியில் பொது மக்கள் யாரும் அனுமதியில்லை என்பதால் படப்பிடிப்பு நடக்கும் பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலேயே பொதுமக்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றனர். மேலும், இதில் நடிகர் ரஜினி மற்றும் முக்கிய கதாபாத்திரங்கள் பங்கேற்றுள்ளதால் போலீசாரின் உரிய பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

ரஜினி
இந்நிலையில், படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினி புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு காரில் சென்றபோது, புதுச்சேரியில் அவரது ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்பை அளித்தனர். இதையடுத்து தனது காரின் கண்ணாடியை கீழிறக்கி ரசிகர்களை பார்த்து ரஜினி கையசைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
- நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ‘பொன்னியின் செல்வன் -1’ திரைப்படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
- இவர் தற்போது மீண்டு தயாரிப்பாளராகியுள்ளார்.
மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில், அழுத்தமான வேடங்களில் நடித்து, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். விஷால் நடிப்பில் வெளியான 'ஆக்ஷன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான 'ஜகமே தந்திரம்' என்ற படத்தில் ஈழத் தமிழில் பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

ஐஸ்வர்யா லட்சுமி
பின்னர், 'கார்கி' என்ற படத்தை தயாரித்திருந்தார். தற்போது 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் இவர் நடித்திருந்த பூங்குழலி கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்று இவருக்கான ஒரு அடையாளத்தை கொடுத்துள்ளது. இது குறித்து அவர் கூறியதாவது, "செப்டம்பர் 30-ம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன் -1' வெளியானது. அதில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். இதற்கு எதிர்பாராத இடங்களிலிருந்து கிடைத்து வரும் பாராட்டுகள் என்னை உற்சாகமடைய செய்திருக்கிறது.

ஐஸ்வர்யா லட்சுமி
தற்போது 'அம்மு' என்ற பெயரில் தயாராகி இருக்கும் தெலுங்கு திரைப்படம் ஒன்று அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 19-ஆம் தேதி அன்று வெளியாகிறது. இதிலும் கதையின் நாயகியாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறேன். இதனைத் தொடர்ந்து அக்டோபர் 28-ஆம் தேதி 'குமாரி' என்ற மலையாள படமும் வெளியாகிறது.

ஐஸ்வர்யா லட்சுமி
'கார்கி' படத்தைத் தொடர்ந்து, 'குமாரி' படத்திலும் தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறேன். இந்தப் படத்திலும் கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடித்திருக்கிறேன். முப்பது நாட்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில், முத்தான மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன்.'' என்று கூறியுள்ளார்.

ஐஸ்வர்யா லட்சுமி
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, தற்போது விஷ்ணு விஷால் நடிப்பில் தயாராகி வரும் 'கட்டா குஸ்தி' படத்தில் நடித்திருக்கிறார். மேலும் இயக்குனர் ப்ரியா இயக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் வசந்த் ரவி ஆகியோருடன் இணைந்து நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் 'கிறிஸ்டோபர்' மற்றும் 'கிங் ஆஃப் கோதா' எனும் மலையாளப் படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.
- வாடகைத்தாய் தொடர்பான விதிமுறைகள் மீறப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது.
- 3 பேர் கொண்ட குழுவினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தகவல்
சென்னை:
நயன்தாரா-விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையில் திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்தனர். இவர்களின் இந்த அறிவிப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதேசமயம் திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது சலசலப்பை கிளப்பி பல கேள்விகளை எழுப்பியது.
அதன்பின்னர் வாடகைத் தாய் மூலம் இவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டது தெரியவந்தது. இதிலும் சர்ச்சை எழுந்தது. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க பல்வேறு விதிமுறைகள் இருக்கும் நிலையில், இந்த விதிமுறைகள் மீறப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற நயன்தாரா-விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன பின்னரே வாடகை தாய் மூலம் குழந்தை பெற இயலும் என்றும் அவர் தெரிவித்தார். இதையடுத்து இணை இயக்குனர் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நயன்தாரா, விக்னேஷ் சிவன் சிகிச்சை பெற்ற மருத்துவமனை குறித்தான விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது என்றும், சுகாதாரத்துறை சார்பில் அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழுவினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார். மேலும், இந்த விசாரணைக் குழுவினர் ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
- அதிமுக. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சமீபத்தில்நடிகை சாந்தினி பாலியல் புகார் கொடுத்திருந்தார்.
- தற்போது ராமநாதபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் வீட்டை நடிகை சாந்தினி முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சமுத்திரகனி இயக்கத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான நாடோடிகள் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சாந்தினி. இவர் சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில், என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறிய முன்னாள் அமைச்சர் மணிகண்டன், தன்னை ஏமாற்றிவிட்டார். நாங்கள் இருவரும் ஒரே வீட்டில் கடந்த 5 ஆண்டுகளாகக் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தோம். இந்த காலத்தில் மூன்று முறை நான் கருவுற்றேன். என்னைக் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்துவிட்டார்" என்று புகார் அளித்திருந்தார்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன்
அதன்பின்னர் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பெங்களூரில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது புகார் அளித்த சாந்தினி
இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையார் அனைத்து மகளிர் காவல்துறையினர் சைதாப்பேட்டை 11-வது நீதிமன்றத்தில் 351 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மணிகண்டன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபொழுது நடிகை அளித்திருந்த புகாரை அவர் தரப்பு திரும்ப பெற்றுவிட்டதாக கூறப்பட்டது. அதன்பின்னர் மணிகண்டன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தவிட்டப்பட்டது.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் - சாந்தினி
இந்நிலையில் நடிகை சாந்தினி அவருடைய காரில் ராமநாதபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டை முற்றுகையிட முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தன்னை பார்த்து கொள்வேன் என்று கூறியதாலேயே வழக்கை வாபஸ் பெற்றதாக குற்றம்சாட்டியுள்ளார். அங்கிருந்த போலீசார் நடிகை சாந்தினியை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று இதுகுறித்து பேசி வருகின்றனர்.






