என் மலர்

  சினிமா செய்திகள்

  மீண்டும் தயாரிப்பாளராகும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி
  X

  ஐஸ்வர்யா லட்சுமி

  மீண்டும் தயாரிப்பாளராகும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ‘பொன்னியின் செல்வன் -1’ திரைப்படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
  • இவர் தற்போது மீண்டு தயாரிப்பாளராகியுள்ளார்.

  மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில், அழுத்தமான வேடங்களில் நடித்து, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். விஷால் நடிப்பில் வெளியான 'ஆக்‌ஷன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான 'ஜகமே தந்திரம்' என்ற படத்தில் ஈழத் தமிழில் பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.


  ஐஸ்வர்யா லட்சுமி

  பின்னர், 'கார்கி' என்ற படத்தை தயாரித்திருந்தார். தற்போது 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் இவர் நடித்திருந்த பூங்குழலி கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்று இவருக்கான ஒரு அடையாளத்தை கொடுத்துள்ளது. இது குறித்து அவர் கூறியதாவது, "செப்டம்பர் 30-ம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன் -1' வெளியானது. அதில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். இதற்கு எதிர்பாராத இடங்களிலிருந்து கிடைத்து வரும் பாராட்டுகள் என்னை உற்சாகமடைய செய்திருக்கிறது.


  ஐஸ்வர்யா லட்சுமி

  தற்போது 'அம்மு' என்ற பெயரில் தயாராகி இருக்கும் தெலுங்கு திரைப்படம் ஒன்று அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 19-ஆம் தேதி அன்று வெளியாகிறது. இதிலும் கதையின் நாயகியாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறேன். இதனைத் தொடர்ந்து அக்டோபர் 28-ஆம் தேதி 'குமாரி' என்ற மலையாள படமும் வெளியாகிறது.


  ஐஸ்வர்யா லட்சுமி

  'கார்கி' படத்தைத் தொடர்ந்து, 'குமாரி' படத்திலும் தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறேன். இந்தப் படத்திலும் கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடித்திருக்கிறேன். முப்பது நாட்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில், முத்தான மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன்.'' என்று கூறியுள்ளார்.


  ஐஸ்வர்யா லட்சுமி

  நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, தற்போது விஷ்ணு விஷால் நடிப்பில் தயாராகி வரும் 'கட்டா குஸ்தி' படத்தில் நடித்திருக்கிறார். மேலும் இயக்குனர் ப்ரியா இயக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் வசந்த் ரவி ஆகியோருடன் இணைந்து நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் 'கிறிஸ்டோபர்' மற்றும் 'கிங் ஆஃப் கோதா' எனும் மலையாளப் படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.

  Next Story
  ×