என் மலர்

  சினிமா செய்திகள்

  மூன்றாவது பாடலை வெளியிட்ட சிவகார்த்திகேயன் படக்குழு
  X

  சிவகார்த்திகேயன்

  மூன்றாவது பாடலை வெளியிட்ட சிவகார்த்திகேயன் படக்குழு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 'ப்ரின்ஸ்' திரைப்படம் அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
  • இப்படத்தின் மூன்றாவது பாடல் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

  இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'ப்ரின்ஸ்' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார்.


  ப்ரின்ஸ்

  மேலும் இப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


  ப்ரின்ஸ்

  இப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டானது. இதையடுத்து இப்படத்தின் மூன்றாவது பாடல் இன்று மாலை ௫ மணிக்கு வெளியாகும் என படக்குழு ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. அதன்படி, 'ப்ரின்ஸ்' படத்தின் மூன்றாவது பாடல் 'நான் யாரு' லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. அறிவு எழுதி பாடியுள்ள இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.  Next Story
  ×