என் மலர்

  சினிமா செய்திகள்

  சதீஷை ரயில் முன் தள்ளி விட்டு தண்டனை கொடுங்கள் - விஜய் ஆண்டனி ஆதங்கம்
  X

  விஜய் ஆண்டனி

  சதீஷை ரயில் முன் தள்ளி விட்டு தண்டனை கொடுங்கள் - விஜய் ஆண்டனி ஆதங்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கல்லூரி மாணவி சத்திய பிரியா, ரெயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
  • இது குறித்து நடிகர் விஜய் ஆண்டனியின் பதிவு வைரலாகி வருகிறது.

  சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்திய பிரியா, ரெயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளியை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.


  சத்திய பிரியா - சதீஷ்

  இந்த தனிப்படை போலீசார் சென்னை முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நள்ளிரவில் துரைப்பாக்கம் கிழக்கு கடற்கரை பகுதியில் சுற்றித் திரிந்த, கொலையாளி சதீசை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

  விசாரணைக்குப் பிறகு இன்று பலத்த பாதுகாப்புடன் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை ௧௫ நாட்கள் அதாவது 28ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.


  விஜய் ஆண்டனி

  இந்நிலையில், மாணவி சத்திய பிரியா கொலை வழக்கு குறித்து நடிகர் விஜய் ஆண்டனியின் பதிவு வைரலாகி வருகிறது. அந்த பதிவில், "சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதிஷை, பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு அப்புறம் தூக்குல போடாமல், தயவு செய்து, உடனே விசாரித்து, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி, சத்யாவின் சார்பாக பொது மக்களில் ஒருவனாக, கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

  Next Story
  ×