மனைவி திவ்யா அளித்த புகார் எதிரொலி- நடிகர் அர்னவ் தலைமறைவு?

அர்னவ்-திவ்யா இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.சில தினங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் மாறிமாறி புகார்களை கூறிவருகிறார்கள்.
அர்னவ்-திவ்யா
அர்னவ்-திவ்யா
Published on

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடரில் இணைந்து நடித்த அர்னவ் மற்றும் திவ்யா இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். நடிகர் அர்னவுக்கும், நடிகை திவ்யாவுக்கும் சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கடந்த சில நாட்களாகவே இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி அடுக்கடுக்கான புகார்களை கூறிவருகிறார்கள். மேலும் அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

அர்னவ்-திவ்யா
அர்னவ்-திவ்யா

அர்னவ்-திவ்யா

கர்ப்பிணியான தன்னை அர்னவ் அடித்து துன்புறுத்துவதாகவும், தன்னை ஏமாற்றிவிட்டு இன்னொரு நடிகையுடன் தொடர்புவைத்து இருப்பதாகவும் திவ்யா குற்றம் சாட்டினார். ஆனால் அர்னவ் கூறும்போது, எனது மனைவி திவ்யா எனக்கு வேண்டும். திவ்யாவுடன் இருப்பவர்கள் தான் அவரை இதுபோல் செயல்பட தூண்டுவதாக தெரிவித்தார்.

அர்னவ்-திவ்யா
அர்னவ்-திவ்யா

அர்னவ்-திவ்யா

இந்நிலையில் கர்ப்பிணியான தன்னை அர்னவ் தாக்கியதாக திவ்யா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகார் மீது போரூர் மகளிர் போலீசார் அர்னவ் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

அர்னவ்-திவ்யா
அர்னவ்-திவ்யா

அர்னவ்-திவ்யா

இந்த வழக்கு தொடர்பாக அர்னவை விசாரணைக்கு ஆஜராகுமாறு போரூர் மகளிர் போலீசார் அழைத்தனர். ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து நாளை (வெள்ளிக்கிழமை) இந்த வழக்கு தொடர்பாக போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நடிகர் அர்னவுக்கு போரூர் மகளிர் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். ஆனால் நடிகர் அர்னவ் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவர் நாளை விசாரணைக்கு ஆஜராவாரா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com