தமிழ்நாட்டில் உன் வேலையை காண்பிக்கிறாயா? திவ்யாவை அர்னவ் மிரட்டும் புதிய ஆடியோ

சின்னத்திரை நடிகர்கள் அர்னவ்-திவ்யா இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.இதனிடையே இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி வருகின்றனர்.
அர்னவ் - திவ்யா
அர்னவ் - திவ்யா
Published on

சின்னத்திரை நடிகரான அர்னவ், தன்னுடன் தொலைக்காட்சி தொடரில் கதாநாயகியாக நடித்த நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த சில தினங்களாக கணவன், மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி வருகின்றனர். தனது கணவர், கர்ப்பிணியான தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், தன்னை மதம் மாற கட்டாயப்படுத்தியதாகவும் திவ்யா புகார் தெரிவித்தார்.

அர்னவ் - திவ்யா
அர்னவ் - திவ்யா

அர்னவ் - திவ்யா

ஆனால் தனது மனைவிதான் அவரது நண்பர்கள் சொல்வதை கேட்டு இதுபோல் நடந்து கொள்வதாகவும், அவருடன் சேர்ந்து வாழவே விரும்புவதாகவும் அர்னவ் கூறினார். மேலும் அர்னவ், திவ்யா தன்னுடன் சண்டைபோடும் வீடியோக்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கிடையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திவ்யா அளித்த புகாரின்பேரில் போரூர் அனைத்து மகளிர் போலீசார் அர்னவ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

அர்னவ் - திவ்யா
அர்னவ் - திவ்யா

அர்னவ் - திவ்யா

இதனை மறுத்த அர்னவ், என் மனைவி திவ்யாவை நான் அடித்ததாக போலீசில் கூறிய புகாரில் உண்மை இல்லை. என் விரல் கூட அவர் மீது படவில்லை. அவர் அளித்த பொய்யான புகாரில் என் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்றார். மேலும் எனக்கு என் மனைவி வேண்டும். என்னுடைய மனைவி, குழந்தையை மீட்டு தர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அர்னவ் - திவ்யா
அர்னவ் - திவ்யா

அர்னவ் - திவ்யா

இந்நிலையில் நடிகர் அர்னவ் மீது மாநில மகளிர் ஆணையத்தில் நடிகை திவ்யா புகார் ஒன்றை அளித்துள்ளார். மேலும் திவ்யாவை அர்னவ் மிரட்டும் ஆடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில், நான் தமிழன் என்றும் தமிழ்நாட்டில் வந்து உன் வேலையை காண்பிக்கிறாயா என்று அர்னவ் பேசியுள்ளார். நடிகர் அர்னவ் தன்னை வேண்டும் என்றே திட்டமிட்டு இஸ்லாமியராக மதம் மாற்றி கர்ப்பம் அடைய செய்து வேறு ஒரு முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாக திவ்யா மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். தனக்கு பாதுக்காப்பு அளிக்க வேண்டும் எனவும் எந்த ஒரு ஆதரவின்றி தான் நிற்பதாகவும் மாநில மகளிர் ஆணையத்தில் அளித்துள்ள புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com