என் மலர்
சினிமா செய்திகள்
- ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
- இந்த போட்டியை திரைப்பிரலங்கள் பலரும் நேரில் கண்டுகளித்தனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 139 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 140 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
சென்னை சேப்பாக்கத்தில் நடந்த இந்த போட்டியை திரைப்பிரலங்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் நேரில் கண்டுகளித்தனர். அதன்படி நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், நடிகர் தனுஷ், நடிகைகள் நயன்தாரா, வரலட்சுமி சரத்குமார், இயக்குனர்கள் விக்னேஷ் சிவன், லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ஜவான்’.
- இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
'ராஜா ராணி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமான அட்லீ, அதன் பின்னர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து படங்களை இயக்கினார். தற்போது ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' படத்தை இயக்கி வருகிறார். நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் யோகிபாபுவும் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பான் இந்தியா படமாக உருவாகும் 'ஜவான்' படம் வருகிற ஜுன் மாதம் வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜவான்
இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் ஜவான் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 'ஜவான்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
#Jawan #7thSeptember2023 pic.twitter.com/vNYYffCcQy
— atlee (@Atlee_dir) May 6, 2023
- சென்னையில் 13 தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்பட்டது.
- தமிழகத்தில் நேற்று மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் திரையிடப்பட்ட நிலையில் நாளை முதல் திரையிடப்படாது என அறிவிப்பு.
கேரள மாநில பெண்களை மையமாக வைத்து தி கேரளா ஸ்டோரி திரைப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த இந்து பெண்கள் முஸ்லிம் மதத்துக்கு மாறி பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்வது போன்று கதை களம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கு கேரள மாநிலத்தில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் படத்தை திட்டமிட்டபடி திரையிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது.
இதற்கு தமிழகத்திலும் எதிர்ப்பு ஏற்பட்டது. ஆனால், இந்த படத்தை திரையிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து திட்டமிட்டபடி தி கேரளா ஸ்டோரி படம் வெளியானது. சென்னையில் 13 தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்பட்டது.
சென்னை அண்ணாநகர் வி.ஆர். மால், ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ, விருகம்பாக்கம் ஐநாக்ஸ், வேளச்சேரி பி.வி.ஆர். உள்ளிட்ட அனைத்து தியேட்டர்களிலும் தி கேரளா ஸ்டோரி படம் வெளியானது.
இந்நிலையில், 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் நாளை முதல் திரையிடப்படாது என மல்டிபிளக்ஸ் திரையரங்கங்கள் அறிவித்துள்ளன.
தமிழகத்தில் நேற்று மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் திரையிடப்பட்ட நிலையில் நாளை முதல் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட ஒழுங்கு பிரச்சினை ,படத்திற்கான வரவேற்பு இல்லாததால் திரையரங்க நிர்வாகங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- அஜித் தற்போது மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
வலிமை படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் படத்தை மகிழ்த்திருமேனி இயக்குகிறார். இப்படத்திற்கு 'விடாமுயற்சி' என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. விடமுயற்சியின் கீழ் 'முயற்சிகள் ஒருபோதும் தோல்வியடையாது' என குறிப்பிடபட்டிருந்தது.

விடாமுயற்சி
இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே 22ம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளதாகவும், அஜித் நேபாள் மற்றும் பூட்டான் பைக் டூரை முடித்த பிறகு இதில் இணைவார் எனவும் கூறப்படுகிறது. மேலும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை 70 நாட்கள் எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதில் அஜித்தின் பகுதி 40 நாட்கள் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- தமிழில் குத்து, கிரி, பொல்லாதவன், தூண்டில், வாரணம் ஆயிரம், சிங்கம் புலி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ரம்யா.
- இவர் தனது நாயை தொலைத்துவிட்டதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கன்னடம், தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருந்தவர் ரம்யா என்கிற திவ்ய ஸ்பந்தனா. இவர் தமிழில் குத்து, கிரி, பொல்லாதவன், தூண்டில், வாரணம் ஆயிரம், சிங்கம் புலி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் திரைத்துறையில் இருந்து ஒதுங்கி பின்னர் காங்கிரஸ் சார்பில் மண்டியா தொகுதி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானார். தற்போது அவர் அரசியலில் இருந்தும் ஒதுங்கி உள்ளார்.
இந்நிலையில் ரம்யா நாயை தொலைத்துவிட்டதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் தொலைந்த தனது நாயை கண்டுபிடித்து தருமாறு அனைவரிடமும் கோரிக்கை வைத்து, கண்டுபிடித்து கொடுப்போருக்கு அரிய பரிசு காத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
My dog is missing - please help me find him pic.twitter.com/Hi8viRVS6H
— Ramya/Divya Spandana (@divyaspandana) May 6, 2023
- ஒவ்வொரு காலகட்டத்திலும் தேர்தல் வரும்போது காஷ்மீர் பைல்ஸ் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய படங்கள் வந்தன.
- தற்போது கர்நாடக தேர்தலின் போது ‘தி கேரளா ஸ்டோரி’ படம் வெளிப்படுத்தி இருக்கிறது என்று சீமான் தெரிவித்துள்ளார்.
கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்ட படம் 'தி கேரளா ஸ்டோரி'. இந்த படம் சென்னை உள்பட தமிழகத்தில் முக்கிய நகரங்களில் நேற்று வெளியானது. இந்த படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அசம்பாவிதங்களை தவிர்க்க தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

தி கேரளா ஸ்டோரி
இருப்பினும் நேற்று தென்மாநில எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 4 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 342 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் 2-வது நாளான இன்று 'தி கேரளா ஸ்டோரி' படத்தை தடை செய்ய கோரியும், படத்தில் முஸ்லிம்கள் தவறாக சித்தரிக்கப்படுவதாக வரும் காட்சிகளை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

சீமான்
அதன்பின்னர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது, இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று தான் நாம் எல்லோரும் நம்பிக் கொண்டு இருக்கிறோம். தற்போது மதமே ஆட்சி செய்யும் போக்கை நாம் கண்கூடாக பார்க்கிறோம். இந்தியாவில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த 9 ஆண்டுகளில் கொடும் போக்கு நிலவுகிறது. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிரான கட்டமைப்பை உருவாக்கி வருகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் தேர்தல் வரும்போது காஷ்மீர் பைல்ஸ் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய படங்கள் வந்தன.

தி கேரளா ஸ்டோரி
கர்நாடக தேர்தலின் போது 'தி கேரளா ஸ்டோரி' படம் வெளிப்படுத்தி இருக்கிறது. பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் பேசும்போது தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தடை கேட்பவர்கள் நாட்டில் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர்கள் ஆவார்கள் என்று பேசுகிறார். இது போன்ற கொடுமை எங்காவது உண்டா? 2024 பாராளுமன்ற தேர்தலுக்கும் ஒரு படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. 8 ஆயிரம் இந்துக் கோயிலை இடித்தவர், 27 தேவாலயங்களை இடித்தவர், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்களை கொன்றவர், 2 ஆயிரம் பிராமணர்களை கொன்றவர் 'திப்பு' என்று ஒரு படம் தயாரிக்கப்பட்டு முன்னோட்டம் வந்துள்ளது.

சீமான்
அந்த படம் பாராளுமன்ற தேர்தலையொட்டி வெளிவரும். அதற்கும் நாங்கள் போராட்டம் நடத்துவோம். தி கேரளா ஸ்டோரி படம் உங்கள் மகள்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்ற கருத்தை மையப்படுத்துகிறது. நீங்களும் உங்கள் மகள்களை இந்த படத்தை பார்க்கவிடாமல் தடுத்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.
- விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘இராவண கோட்டம்’.
- இப்படம் வருகிற மே 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் `இராவண கோட்டம்'. சாந்தனு நாயகனாக நடித்துள்ள இப்படத்தை கண்ணன் ரவி தயாரித்துள்ளார். இதில் சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

இராவண கோட்டம்
இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர், டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் `இராவண கோட்டம்' படத்தின் டைட்டில் டிராக் லிரிக்கல் பாடலை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு படக்குழுவை வாழ்த்தியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இப்படம் வருகிற மே 12ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Happy to present #RaavanaKottathula title track lyrical from #இராவணகோட்டம்
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) May 5, 2023
Im sure this movie is going to be massive for u Machi @imKBRshanthnu ?https://t.co/UrhXb7etxF
Wishing you a huge success #KannanRavi @VikramSugumara3 @justin_tunes & team #RaavanaKottamfromMay12th pic.twitter.com/rTYOMisAq6
- ஜெயம், எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, உன்னாலே உன்னாலே, திருப்பதி, போன்ற பல படங்களில் நடித்தவர் சதா.
- இவர் நேரலையின் போது கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
மராட்டிய மாநிலத்தை சேர்ந்த நடிகை சதா 2002 ஆம் ஆண்டு ஜெயம் ரவி ஹீரோவாக அறிமுகமான 'ஜெயம்' படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். தெலுங்கில் ஜெயம் ரவி நடித்த கதாபாத்திரத்தில் நித்தின் நடித்திருந்த நிலையில், கதாநாயகியாக சதா தான் நடித்திருந்தார். மேலும் முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதையும் பெற்றார்.
'ஜெயம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, உன்னாலே உன்னாலே, திருப்பதி, போன்ற பல படங்களில் அஜீத், விக்ரம், ஜெயம் ரவி, மாதவன் என தமிழில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், போன்ற மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

சதா
அடுத்தடுத்து திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்த சதா, திடீர் என பட தயாரிப்பிலும் களமிறங்கினார். தனியார் வங்கியில் கடன் வாங்கி கடந்த 2018 ஆம் ஆண்டு இவர், தயாரித்து நடித்திருந்த திரைப்படம் 'டார்ச் லைட்'. இதில் ஒரு பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார். தன்னுடைய கணவனை காப்பாற்ற பாலியல் தொழிலாளியாக மாறும் ஒரு பெண், பின்பு ஏன் கணவரையே கொலை செய்ய துணிகிறாள் என்பதை பரபரப்பான காட்சிகளுடன் படமாக்கப்பட்டிருந்தது 'டார்ச் லைட்' திரைப்படம்.
அந்தப்பட்ம் தோல்வியை சந்தித்தது. தொடர்ந்து அவருக்கு படவாய்ப்புகளும் இல்லாமல் போனது. நீண்ட இடைவெளிக்கு பின் எலி படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்தார். 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள சதா, தான் சம்பாதித்த பணத்தை வைத்து மும்பையில் ஓட்டல் பிசினஸ் ஒன்றை துவங்கினார். எர்த்லிங்ஸ் கபே என்கிற பெயரில் சுமார் 4 வருடங்களுக்கு மேல் வெற்றிகரமாக இந்த ஓட்டல் இயங்கி வருகிறது.

சதா
சதாவும் ஒரு நாளைக்கு சுமார் 12 மணிநேரம் இந்த கபே-வில் தான் நேரம் செலவழித்து, தன்னுடைய வியாபாரத்தை பார்த்து வந்தார். ஆனால் தற்போது திடீர் என, 'எர்த்லிங்ஸ் கபே' இயங்கி வரும் இடத்தின் உரிமையாளர். அந்த இடத்தை காலி செய்ய சொல்வதாகவும், எவ்வளவோ இந்த சூழலை மாற்ற முயற்சித்த போதும் அது முடியாமல் போய் விட்டது என நேரலையில் பேட்டி கொடுத்த போது சதா கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
- ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் ஒரு முன்னணி நிறுவனம் ஐஎன்10 (IN10) மீடியா நெட்வொர்க்.
- அதன் திரைப்படப் பிரிவான மூவிவெர்ஸ் ஸ்டுடியோஸ் தொடங்கப்படுவதை அறிவித்துள்ளது.
ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் ஒரு முன்னணி நிறுவனமான ஐஎன்10 (IN10) மீடியா நெட்வொர்க், அதன் திரைப்படப் பிரிவான மூவிவெர்ஸ் ஸ்டுடியோஸ் தொடங்கப்படுவதை அறிவித்துள்ளது. இந்த ஃபிலிம் ஸ்டூடியோ திரையரங்குகளுக்கு வருகை தரும் பார்வையாளர்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் தளங்களின் பார்வையாளர்களை தன்னோடு இணைத்துக் கொள்ளும் வகையில் இந்தி மற்றும் பிராந்திய மொழிகளில் திரைப்படங்களை தயாரித்து வழங்கவுள்ளது.
ஐஎன்10 மீடியா நெட்வொர்க்கின் நிர்வாக இயக்குனர் ஆதித்யா பித்தி, இது குறித்து கூறியதாவது, "ஒரு புதிய மூவிவெர்ஸ் ஸ்டுடியோவை ஐஎன்10 மீடியா நெட்வொர்க் குடும்பத்தில் கூடுதலாக அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மிகவும் உற்சாகமடைந்துள்ளோம். உலகம் முழுவதிலுமுள்ள திரைப்பட ரசிகர்களோடு ஒத்திசைந்து இயங்கும் உள்ளடக்கங்களை உருவாக்குவதில் எங்களுக்குள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் ஒரு சாசனமாக இந்த ஸ்டுடியோ திகழ்கின்றது.

தரமான உள்ளடக்கத்தை கொண்ட படைப்புக்களை வழங்கி பார்வையாளர்களுக்கும் எங்களுக்கும் இடையே தற்போது நிலவி வரும் உறவை திரைப்படங்கள் மூலம் மேலும் வலுப்படுத்திக்கொள்வது மற்றொரு புதுமையான வழியாகும்". மூவிவெர்ஸ் என்ற இதன் பெயர், மனதைக் கொள்ளை கொள்ளும் உள்ளடக்கங்களுடனான எங்கள், படைப்புக்கள் நினைவை விட்டு அகலாது நீண்ட நாள் தாக்கத்தை ஏற்ப்படுத்தி சினிமாவின் பிரமாண்டமான ஒரு உலகத்தை அடையாளப்படுத்துகிறது. ஸ்டுடியோவின் இலட்சிணை ஈடு இணையற்ற பொழுதுபோக்கு அனுபவங்களை வழங்கத்தயார் நிலையில் இருப்பதை குறிக்கிறது. மற்றும் –மூவி தயாரிப்பின் மையமாக உள்ள லைட்ஸ், கேமரா, ஆக்ஷன்! என்ற மூன்று வார்த்தைகளைக் காட்சிப்படுத்துகிறது.
"மூவிவெர்ஸ் ஸ்டுடியோவில், இந்தி மற்றும் பிராந்திய மொழிகளில் புத்தம் புதிய உள்ளடக்கங்களை உருவாக்குவதில் எங்கள் கவனம் குவிந்துள்ளது மற்றும் கதைசொல்லல் மீதான எங்கள் அளவு கடந்த ஆர்வம் மற்றும் பார்வையாளர்களின் விருப்பங்களைப் பற்றி எங்களுக்குள்ள ஆழமான புரிதல் ஆகியவற்றால் அது உந்தப்படுகிறது. தொழில்துறையில் உள்ள சில தலைசிறந்த திறமைவாய்ந்த படைப்பாளிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இணைந்து புதுமையான மற்றும் அழுத்தமான கதைகளுக்கு உயிரூட்ட எங்களை நாங்கள் அர்பணித்துக் கொண்டுள்ளோம். உங்களை மகிழ்விக்கவே நாங்கள் இங்கே இருக்கிறோம், மட்டும் அதை நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்." என்றார்.
- பசங்க, மெரினா, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை, எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் இயக்குனர் பாண்டிராஜ்.
- பாண்டிராஜிடம் ரூ.2 கோடி மோசடி செய்த புகாரில் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பசங்க, மெரினா, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை, எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் பாண்டிராஜ். இவரிடம் புதுக்கோட்டை பூங்கா நகரை சேர்ந்த பிரபல ஜவுளிக்கடை வைத்திருக்கும் குமார் என்பவர் ரூ.2 கோடி வணிக ரீதியில் கடனாக பெற்றுள்ளார். பாண்டிராஜிடன் நிலம் வாங்கித்தருவதாக கூறியும் கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

பாண்டிராஜ்
கொடுத்த கடனை திருப்பி கேட்டபோது, அவர் நிலம் ஒன்றை ஈடாக கொடுத்துள்ளார். இதனிடையே அவர் நில பத்திரத்தில் மோசடி செய்தது பாண்டிராஜிக்கு தெரியவந்தது. இதனை தொடர்ந்து கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது, காலம் தாழ்த்தியும் தகுந்த பதிலளிக்காமலும் குமார் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், பாண்டிராஜ் புதுக்கோட்டை மாவட்ட குற்ற பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் குமார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
- அறிமுக இயக்குனர் ஜோயல் விஜய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'கூடு'.
- 'கூடு' படத்தின் டைட்டில் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
அறிமுக இயக்குனர் ஜோயல் விஜய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'கூடு'. இப்படத்தை ஸ்கைமூண் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் ஏ எண்டர்டெயின்மெண்ட் சார்பில் எம்.கணேஷ் மற்றும் கண்ணன்.பி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

'கூடு'
இந்நிலையில் உண்மை சம்பவத்தை தழுவி உருவாகியிருக்கும் 'கூடு' படத்தின் டைட்டில் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளதாக போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘ஃபர்ஹானா’.
- இப்படம் வருகிற மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
'மான்ஸ்டர்', 'ஒரு நாள் கூத்து' போன்ற படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஃபர்ஹானா'. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், இதில் இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஐஸ்வர்யா ராஜேஷ் - ஃபர்ஹானா
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். 'ஃபர்ஹானா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி வைரலானது. இப்படம் மே 12ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ் - ஃபர்ஹானா
இந்நிலையில் ஃபர்ஹானா படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் திரைப்பிரலங்கள், படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது, மனுஷ்ய புத்ரன் சார் சொன்ன மாதிரி, வாரா வாரம் என்னுடைய படங்கள் வெளியானது. படம் வெளியாவதற்கும் எனக்கு எந்த சம்பந்தமுமில்லை. அது என் கையிலும் இல்லை. கடந்த வருடத்தில் எனது படம் இரண்டு தான் வெளியானது. அதனால் இந்த ஆண்டு எனது படத்திற்கு எந்த விருதும் கிடைக்கவில்லை. வருடா வருடம் விருதுகள் பல வென்ற எனக்கு இந்த வருடம் பல விருது விழாக்களின் அழைப்புக் கூட வரவில்லை. க/பெ. ரணசிங்கம் படத்திற்கு அங்கீகாரம் கூட கிடைக்கவில்லை. இதில் எனக்கு வருத்தமே. சரி, இப்போ ஃபர்ஹானா படத்திற்கு வருவோம்.

ஐஸ்வர்யா ராஜேஷ் - ஃபர்ஹானா
நெல்சன் இந்த கதையை சில வரிகளில் தான் கூறினார். பிடித்திருந்தால் சொல்லுங்கள், நான் டெவலப் செய்து எடுத்து வருகிறேன் என்றார். அதற்குள் ஊரடங்கு வந்துவிட்டது. ஆனால், அடிக்கடி நான் நெல்சன் சாரிடம் அந்த கதை என்ன ஆச்சு? எனக்கு பிடித்திருக்கிறது என்று கேட்டுக் கொண்டே இருப்பேன். இப்படம் மிகச் சிறந்த படமாக எனக்கு இருக்கும். அதற்காக நான் நடித்த மற்ற படங்களை குறை சொல்கிறேன் என்று அர்த்தமில்லை. சில படங்கள் மனதிற்கு மிக நெருக்கமாக இருக்கும். இப்படம் அது போல தான். எஸ்.ஆர்.பிரபு சார் அடிக்கடி என்னிடம், பெரிய படங்கள் செய்யுங்கள் என்று சொல்லி கொண்டே இருப்பார். எனக்கு பிரபு சார் நல்ல வெல் விஷர். இப்படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.

ஐஸ்வர்யா ராஜேஷ்
மிக சிரமமான பகுதிகளில் தான் படப்பிடிப்பு நடத்தினோம். ஐஸ்வர்யா தத்தா உணர்சிவசப்பட்டு பேசினார். ஜித்தன் ரமேஷ் நடிப்பு, இது மாதிரி ஒரு கணவர் நமக்கு வேண்டும் என்று எல்லா பெண்களும் நினைக்கும்படியாக இருக்கும். எங்களின் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். அதை பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன் என்றார்.






