என் மலர்
சினிமா செய்திகள்
- ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘ஃபர்ஹானா’.
- இப்படம் வருகிற மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
'மான்ஸ்டர்', 'ஒரு நாள் கூத்து' போன்ற படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஃபர்ஹானா'. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், இதில் இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஐஸ்வர்யா ராஜேஷ் - ஃபர்ஹானா
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். 'ஃபர்ஹானா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி வைரலானது. இப்படம் மே 12ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ் - ஃபர்ஹானா
இந்நிலையில் ஃபர்ஹானா படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் திரைப்பிரலங்கள், படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது, மனுஷ்ய புத்ரன் சார் சொன்ன மாதிரி, வாரா வாரம் என்னுடைய படங்கள் வெளியானது. படம் வெளியாவதற்கும் எனக்கு எந்த சம்பந்தமுமில்லை. அது என் கையிலும் இல்லை. கடந்த வருடத்தில் எனது படம் இரண்டு தான் வெளியானது. அதனால் இந்த ஆண்டு எனது படத்திற்கு எந்த விருதும் கிடைக்கவில்லை. வருடா வருடம் விருதுகள் பல வென்ற எனக்கு இந்த வருடம் பல விருது விழாக்களின் அழைப்புக் கூட வரவில்லை. க/பெ. ரணசிங்கம் படத்திற்கு அங்கீகாரம் கூட கிடைக்கவில்லை. இதில் எனக்கு வருத்தமே. சரி, இப்போ ஃபர்ஹானா படத்திற்கு வருவோம்.

ஐஸ்வர்யா ராஜேஷ் - ஃபர்ஹானா
நெல்சன் இந்த கதையை சில வரிகளில் தான் கூறினார். பிடித்திருந்தால் சொல்லுங்கள், நான் டெவலப் செய்து எடுத்து வருகிறேன் என்றார். அதற்குள் ஊரடங்கு வந்துவிட்டது. ஆனால், அடிக்கடி நான் நெல்சன் சாரிடம் அந்த கதை என்ன ஆச்சு? எனக்கு பிடித்திருக்கிறது என்று கேட்டுக் கொண்டே இருப்பேன். இப்படம் மிகச் சிறந்த படமாக எனக்கு இருக்கும். அதற்காக நான் நடித்த மற்ற படங்களை குறை சொல்கிறேன் என்று அர்த்தமில்லை. சில படங்கள் மனதிற்கு மிக நெருக்கமாக இருக்கும். இப்படம் அது போல தான். எஸ்.ஆர்.பிரபு சார் அடிக்கடி என்னிடம், பெரிய படங்கள் செய்யுங்கள் என்று சொல்லி கொண்டே இருப்பார். எனக்கு பிரபு சார் நல்ல வெல் விஷர். இப்படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.

ஐஸ்வர்யா ராஜேஷ்
மிக சிரமமான பகுதிகளில் தான் படப்பிடிப்பு நடத்தினோம். ஐஸ்வர்யா தத்தா உணர்சிவசப்பட்டு பேசினார். ஜித்தன் ரமேஷ் நடிப்பு, இது மாதிரி ஒரு கணவர் நமக்கு வேண்டும் என்று எல்லா பெண்களும் நினைக்கும்படியாக இருக்கும். எங்களின் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். அதை பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன் என்றார்.
- விஷால் தற்போது மார்க் ஆண்டனி மற்றும் துப்பறிவாளன்-2 படங்களில் நடித்து வருகிறார்.
- 'சென்னையில் ஒரு கிராம விழா' நிகழ்ச்சியில் விஷால் கலந்து கொண்டார்.
2004ம் ஆண்டு வெளியான செல்லமே படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் விஷால். அதன்பின்னர் வெளியான திமிரு, சத்யம், தீராத விளையாட்டு பிள்ளை, அவன் இவன், ஆம்பள், இரும்புத்திரை உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் லத்தி திரைப்படம் வெளியானது. தற்போது மார்க் ஆண்டனி மற்றும் துப்பறிவாளன்-2 படங்களில் நடித்து வருகிறார். மேலும் விஷால் பல சமூக பணிகளையும் செய்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் விஷால் சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற 'சென்னையில் ஒரு கிராம விழா' நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது மறைந்த இயக்குனரும், நடிகருமான மனோபாலா அவர்களுக்கு விஷால் உள்ளிட்ட அனைவரும் மௌன அஞ்சலி செலுத்தினர்.

அதன்பிறகு பேசிய விஷால், "விவசாயிகளுக்காக நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன். சென்னையில் ஒரு கிராமம் விழா நிழச்சியில் வரும் வருவாய் அனைத்தும் நலியுற்ற விவசாயக் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்பதாலேயே நான் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். விவசாயி 'சேற்றில் கால் வைத்தால் தான் நாம் அனைவரும் சோற்றில் கை வைக்க முடியும்!' என்பது உண்மையானது. என்னுடைய திரைப்படங்களுக்கு திரையரங்குகளில் விற்பனையாகும் டிக்கட்டுகளில் ஒரு டிக்கட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் விவசாயக் குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கி வருகிறேன்.

கல்வியால் எப்போதும் இந்த உலகத்தை ஆள முடியும், அந்த கல்விக்காக நான் யாரிடமும் பிச்சை எடுக்க தயங்கியது கிடையாது. எனக்காக இல்லை, படிக்க முடியாத எத்தனையோ மாணவ, மாணவியர்களுக்காகத்தான். அந்த வகையில் சத்யபாமா பல்கலைக்கழகத்தின் வேந்தர் மரிய ஜீனா ஜான்சன் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். எனது தேவி அறக்கட்டளை மூலம் பல மாணவ, மாணவியர்களை படிக்க வைத்து வருகிறேன். அதற்குத் துணையாக எங்களுடைய தேவி அறக்கட்டளை மூலம் மாணவ, மாணவியர்கள் படிப்பதற்கு உதவி செய்து வருகிறார். இது போன்று எண்ணற்ற மாணவ, மாணவியர்ளை மரிய ஜீனா படிக்க வைத்துவருகிறார்.

நீங்கள் ஒரு ரூபாய் கொடுத்தால் நீங்களும் உதவலாம் இங்கு கலந்துகொண்டுள்ள அனைவரும் உங்களால் முடித்தால் ஒரு ரூபாய் கொடுக்க விரும்பினால் உங்களால் ஒரு விவசாயி குடும்பத்துக்கோ அல்லது ஒரு மாணவ, மாணவி படிப்பதற்காகவோ உதவ முடியும். போற்றுவோம் விவசாயத்தை, காப்போம் விவசாயியை..!! இது போன்ற விவசாயம் போற்றும் நிழச்சிகள் அனைத்து மாவட்டங்களில் நடத்தினால் நன்றாக இருக்கும்" என்றார்.
- மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம்‘மாவீரன்’.
- இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கும் 'மாவீரன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர்.

மாவீரன்
இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

மாவீரன்
'மாவீரன்' திரைப்படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிறன் ஜூலை 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
Our #Maaveeran/#Mahaveerudu, will see you in theaters worldwide - much SOONER & BIGGER, on JULY 14th ?@Siva_Kartikeyan ?#MaaveeranOnJuly14th#MahaveeruduOnJuly14th #VeerameJeyam ??@madonneashwin @AditiShankarofl @DirectorMysskin #Saritha @suneeltollywood @iYogiBabu… pic.twitter.com/QOylpnkFZy
— Shanthi Talkies (@ShanthiTalkies) May 5, 2023
- வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் கஸ்டடி.
- இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் 'கஸ்டடி'. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்துள்ளார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி இதனை தயாரித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார்.

கஸ்டடி
'கஸ்டடி' திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடித்திருக்கிறார். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

கஸ்டடி
இந்நிலையில், 'கஸ்டடி' திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Here it is ! the trailer of #Custody
— chaitanya akkineni (@chay_akkineni) May 5, 2023
Can't wait for you all to experience the hunt in theatre's on May 12th
Telugu - https://t.co/uOriDVxa42
Tamil - https://t.co/GkiQwNjHut#CustodyTrailer#CustodyOnMay12@realsarathkumar @vp_offl @thearvindswami @ilaiyaraaja @thisisysr… pic.twitter.com/3fFjRyuYOH
- சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் நடிக்கவுள்ளார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், தற்போது மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். தற்காலிகமாக 'எஸ்கே21' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

எஸ்கே21
இந்நிலையில் 'எஸ்கே21' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளதாக படக்குழு வெளியிட்ட வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- வாட்ச்மேன், கோமாளி, மன்மதலீலை, பப்பி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் சம்யுக்தா ஹெக்டே
- தற்போது இவர் வெளியிட்டிருக்கும் குளிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கன்னட திரையுலகின் இளம் நடிகை சம்யுக்தா ஹெக்டே. இவர் கன்னட பிக்பாக்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர். தமிழில் ஜி.வி.பிரகாஷுடன் வாட்ச்மேன், ஜெயம் ரவியுடன் கோமாளி, அசோக் செல்வனுடன் மன்மதலீலை, வருணுடன் பப்பி உள்ளிட்ட படங்களிலும், கன்னடத்தில் கிரிக்பார்ட்டி, காலேஜ் குமார் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். பெங்களூருவில் வசித்து வரும் அவர் தற்போது கன்னட இயக்குனர் அபிஷேக் வசந்த் இயக்கத்தில் கிரீம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சம்யுக்தா ஹெக்டே
இந்நிலையில் சம்யுக்தா ஹெக்டே நீச்சல் உடையில் குளிக்கும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.
- நயன்தாரா, மாதவன், சித்தார்த் இணைந்து நடிக்கும் படம் டெஸ்ட்.
- இப்படத்தின் மூலம் பாடகி சக்தி ஸ்ரீ இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
தமிழ்ப் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, மண்டேலா உள்ளிட்ட படங்களை தயாரித்த YNOT ஸ்டுடியோஸ் சஷிகாந்த் தற்போது இயக்குனராக அறிமுகமாகும் முதல் படத்தில் நயன்தாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் மாதவன், சித்தார்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

டெஸ்ட்
'டெஸ்ட்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தில் இணைந்துள்ள இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளனர்.

டெஸ்ட்
அதன்படி இப்படத்தில் என் உச்சி மண்டைல, மக்காயல, அக நக உள்ளிட்ட பல பாடல்களை பாடிய பாடகி சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
- பப்பாராவ் பிய்யாலா இயக்கத்தில் ஸ்ரேயா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘மியூசிக் ஸ்கூல்’.
- இப்படம் வருகிற மே 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் பப்பாராவ் பிய்யாலா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மியூசிக் ஸ்கூல்'. இந்த படத்தில் ஸ்ரேயா சரண், ஷர்மன் ஜோஷி, ஷாம் மற்றும் பிரகாஷ் ராஜ், ஓசு பருவா மற்றும் கிரேசி கோஸ்வாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தி மற்றும் தெலுங்கில் படமாக்கப்பட்டு, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை யாமினி பிலிம்ஸ் சார்பில், இயக்குனர் பாப்பாராவ் பிய்யாலா தயாரித்துள்ளார்.

மியூசிக் ஸ்கூல்
இளம் மாணவர்கள் எதிர்கொள்ளும் தற்போதைய கல்வி அழுத்தத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படம் வருகிற மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மியூசிக் ஸ்கூல் படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி வைரலானது.

இளையராஜாவை சந்தித்த பப்பாராவ் பிய்யாலா, ஸ்ரேயா
இந்நிலையில் இளையராஜாவை, இயக்குனர் பாப்பாராவ் பிய்யாலா மற்றும் நடிகை ஸ்ரேயா சரண் சந்தித்து அவருடன் உரையாடி, புகைப்படங்கள் எடுத்துகொண்டனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘பிச்சைக்காரன் -2’ படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று மாங்காடு மூவிஸ் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
- இப்படம் வெளியிட தடை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தற்போது இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'பிச்சைக்காரன் -2'. இப்படம் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று மாங்காடு மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜகணபதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த புகார் மனுவில், "மாங்காடு மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் 2016-ஆம் ஆண்டு வெளியான 'ஆய்வுக் கூடம்' திரைப்படத்தின் கருவையும், வசனத்தையும் விஜய் ஆண்டனி 'பிச்சைக்காரன் -2' திரைப்படத்திற்கு பயன்படுத்தியுள்ளதால் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தனக்கு நஷ்டஈடாக ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
அதன்பின்னர் விஜய் ஆண்டனி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ஆய்வுக்கூடம் படம் குறித்த எந்தவொரு தகவலும் தமக்கு தெரியாது என்றும் அந்த படத்தை பார்த்தது கூட இல்லை என்றும் கூறப்பட்டது. மேலும், வழக்கு தொடரப்பட்ட பிறகே அந்த படத்தை பார்த்ததாகவும் பிச்சைக்காரன் -2 படத்திற்கும் ஆய்வுக்கூடம் படத்திற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
படம் வெளியாவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கடைசி நேரத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் படத்தின் வெளியீடு தள்ளிப்போனதால் பொருளாதார ரீதியாக தனக்கு பெருத்த இழப்பு மற்றும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் விஜய் ஆண்டனி அந்த பதில் மனுவில் வேதனை தெரிவித்திருந்தார்.

பிச்சைக்காரன் 2
இந்நிலையில் பிச்சைக்காரன் -2 படத்தை வெளியிட அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் படத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் விவரங்களை தாக்கல் செய்ய தயாரிப்பாளர் விஜய் ஆண்டனிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பிச்சைக்காரன் -2 திரைப்படம் வருகிற மே 19ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட ஜிவி பிரகாஷுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளார்.
- இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட ஜிவி பிரகாஷ் குமாருடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணைந்துள்ளார். இப்படத்தை 'செத்தும் ஆயிரம் பொன்' படத்தின் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்குகிறார். மேலும் காளி வெங்கட், இளவரசு,ரோஹிணி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, ஜி. வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

டியர்
இந்நிலையில் ஃபேமிலி எண்டெர்டெயின்மெண்ட் படமாக உருவாகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை திரைப்பிரபலங்கள் பலரும் வெளியிட்டுள்ளனர். டியர் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை இணையத்தில் வைரலாகி வருகிறது.
- ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஜெயிலர்
இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஜெயிலர்
இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படத்தின் வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. ரஜினி மாஸாக காரில் இருந்து இறங்குவது போன்று இடம்பெற்றிருக்கும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது..
- இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்றதையடுத்து சமீபத்தில் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்தது. தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

விஜய் - திரிஷா
இந்நிலையில், திரிஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு விஜய் மற்றும் திரிஷா இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.






