என் மலர்
சினிமா செய்திகள்
- இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்றதையடுத்து சமீபத்தில் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்தது. தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

விஜய் - திரிஷா
இந்நிலையில், திரிஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு விஜய் மற்றும் திரிஷா இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- விஜய் சேதுபதி நடிப்பில் வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’.
- இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'. இவர் மறைந்த இயக்குனர் ஜனநாதனின் உதவி இயக்குனர் ஆவார். விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் மோகன் ராஜா, மகிழ்திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்
இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை விஜய் சேதுபதி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படம் மே 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியானதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
#YaadhumOoreYaavarumKelir TN release by @SakthiFilmFctry#YOYKfromMay19 @ChandaraaArts @EssakiduraiS @roghanth @akash_megha @sakthivelan_b @raguesaki @Riythvika @jayam_mohanraja @Vetri_DOP @nivaskprasanna @AbrahamEditor @saregamasouth @onlynikil @CtcMediaboy pic.twitter.com/lcmYNaHUmC
— VijaySethupathi (@VijaySethuOffl) May 4, 2023
- டார்லிங், திரிஷா இல்லனா நயன்தாரா, பேச்சுலர், ஜெயில் உள்ளிட்ட பல படங்களில் நடித்து கவனம் பெற்றவர் ஜிவி பிரகாஷ் குமார்.
- ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது சமூக வலைத்தளத்தில் ஜிவி பிரகாஷை வம்பிழுத்துள்ளார்.
வெயில் படத்தின் மூலம் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிவி பிரகாஷ் குமார். அதன்பின்னர் கிரீடம், குசேலன், ஆயிரத்தில் ஒருவன், மதராசப்பட்டினம், ஆடுகளம், தெறி, அசூரன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் இசையமைப்பாளராக மட்டுமல்லாது கதாநாயகனாக டார்லிங், திரிஷா இல்லனா நயன்தாரா, பேச்சுலர், ஜெயில் உள்ளிட்ட பல படங்களில் நடித்து கவனம் பெற்றார். இவர் தற்போது பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்-ஜிவி பிரகாஷ் குமார்
இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ஜிவி பிரகாஷ் ராஜ் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்ஹ்டுள்ளது. அதில், அன்பான ஜிவி பிரகாஷ், நீங்க எவ்வளோ பெரிய மியூசிக் டைரக்டர்.. அந்த சவுண்ட கேட்டா உங்களுக்கு கோபம் வருமாமே என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு பலரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், இதற்கு ஜிவி பிரகாஷ் பதிலளித்துள்ளார். அதில், டியர் ஐஷு, அந்த சவுண்டு மியூசிக் இல்லமா நாய்ஸ் !! என்று பதிவிட்டு மேலும் ரசிகர்களை குழப்பியுள்ளார்.
Dear aishu.. "andha" sound-du music illamaa.. noise !! ? https://t.co/WbILgHsvoA
— G.V.Prakash Kumar (@gvprakash) May 4, 2023
- ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
- செல்வராகவனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
2002-ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான செல்வராகவன், அதன்பின்னர் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்ஜிகே, நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். தற்போது 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தில் செல்வராகவன் மும்முரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

செல்வராகவன்
இதனிடையே நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் செல்வராகவன் விஜய்யின் பீஸ்ட் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் சாணிக் காயிதம் படத்திலும் மோகன் ஜி இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான பகாசூரன் திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்திருந்தார். தொடர்ந்து ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

செல்வராகவன்
இந்நிலையில் செல்வராகவன் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் அறிவிப்பை சமூக வலைத்தளத்தின் வாயிலாக அறிவித்துள்ளார். அதன்படி புஷ்பா பட நடிகர் சுனில் மற்றும் நகைச்சுவை நடிகர் யோகிபாபு நடிக்கும் அடுத்த படத்தில் செல்வராகவன் நடிக்கவுள்ளார். இப்படத்தை இயக்குனர் ரங்கநாதன் இயக்கவுள்ளார். இதுகுறித்து செல்வராகவன், யோகிபாபு மற்றும் புஷ்பா பிரபலம் சுனிலுடன் திரையை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.
Happy to share screen-space with Pushpa fame #Sunil and dear @iYogiBabu in my next
— selvaraghavan (@selvaraghavan) May 4, 2023
Produced by @ga_harikrishnaa #DurgaDeviHarikrishnan's @MomentEntertain
Directed by @dirranganathan@onlynikil
- மனோபாலா உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.
- சென்னை வளசரவாக்கத்தில் அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். 69 வயதாகும் இவர் கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சிகிச்சைக்கு மத்தியில் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில் அவர் உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு திரையுலகினரை மட்டுமல்லாது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இவரது மறைவுக்கு திரைபிரலங்கள், அரசியல் பிரமுகர்கள், பொது மக்கள் என பலரும் நேரிலும் சமூக வலைத்தளத்தின் வாயிலாகவும் அஞ்சலி செலுத்தினர். மனோபாலாவின் இறுதி ஊர்வலம் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து புறப்பட்டு வளசரவாக்கம் மின்மயானத்தை சென்றடைந்தது.

அங்கு அவரின் உடலுக்கு குடும்ப வழக்கப்படி இறுதி சடங்குகள் செய்யப்பட்டன. இறுதி சடங்குகளை அவரது மகன் செய்தார். அங்கு கூடியிருந்த குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் இறுதி மரியாதை செலுத்தினர். அதன்பின்னர் மனோபாலாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. மனோபாலாவின் உடலுக்கு உறவினர்கள் கண்ணீர் மல்க விடைகொடுத்தனர்.
- ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் அப்டேட்டை படக்குழு இன்று வெளியிடவுள்ளது.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஜெயிலர்
இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் காத்திருந்தது போதும் என்றும் குறிப்பிட்டு ஜெயிலர் படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.
- இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் 'மத்தகம்'.
- இந்த வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் 'மத்தகம்'. மேலும் கவுதம் மேனன், தில்னாஸ் இராணி, இளவரசு, டிடி (திவ்யதர்ஷினி), வடிவுக்கரசி, அருவி திருநாவுக்கரசு, மூணாறு ரமேஷ், சரத் ரவி, ரிஷி காந்த் மற்றும் முரளி அப்பாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனை ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. இந்த வெப் சீரிஸ் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

மத்தகம்
இந்நிலையில் மத்தகம் வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வெப் சீரிஸ் குறித்து இயக்குனர் பிரசாத் முருகேசன் கூறுகையில், 30 மணி நேரத்தில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களைச் சுவாரஸ்யமாகச் சொல்லும் சீரிஸ் தான் "மத்தகம்". ஒரு இரவில் நாயகனுக்கும், வில்லனுக்கும் நடக்கும் ஆடுபுலி ஆட்டத்தைப் படம்பிடித்தது சவாலானதாக இருந்தது. இந்த சீரிஸ் ரசிகர்களுக்குக் கண்டிப்பாக ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்.
இந்த வெப் சீரிஸுக்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார், எட்வின் சாகே ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் ஆண்டனி எடிட்டிங் செய்துள்ளார். இந்த சீரிஸுன் பரப்பரப்பான ஆக்சன் காட்சிகளை பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் அமைத்துள்ளார். சுரேஷ் கல்லரி கலை இயக்கம் செய்துள்ளார் என்றார்.
- தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா நேற்று காலமானார்.
- இவரது இறுதி ஊர்வலம் சென்னை சாலிகிராமத்தில் இருந்து தொடங்கியது.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். 69 வயதாகும் இவர் கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சிகிச்சைக்கு மத்தியில் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.

இவர் அரண்மனை, டான், துப்பாக்கி, சீமராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் பிதாமகன் படத்தில் நடித்திருந்த கதாப்பாத்திரம் அனைவராலும் பேசப்பட்டது. இயக்குனர் பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள் படத்தில் உதவி இயக்குனராக மனோபாலா பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகாய கங்கை படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக மனோபாலா அறிமுகமானார். ரஜினி நடித்த ஊர்க்காவலன் படத்தை இயக்கிய மனோபாலா பிள்ளை நிலா, சிறைபறவை, மூடு மந்திரம், கருப்பு வெள்ளை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். சதுரங்க வேட்டை உள்ளிட்ட 3 திரைப்படங்களை தயாரித்துள்ளார். இவரது திடீர் மறைவு திரையுலகினரை மட்டுமல்லாது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவரது உடலுக்கு திரைபிரலங்கள், அரசியல் பிரமுகர்கள், பொது மக்கள் என பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். சமூக வலைத்தளத்தின் வாயிலாகவும் தங்கள் இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.
அஞ்சலிக்குப் பிறகு இன்று காலை 11.30 மணியளவில் மனோபாலாவின் இறுதி ஊர்வலம் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து தொடங்கியது. இவரது உடலுக்கு பொது மக்கள் வழி நெடுங்கிலும் நின்று மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர். மனோபாலாவின் உடல் சென்னை வளசரவாக்கம் மின்மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.
- மனோபாலாவின் மறைவுக்கு திரைபிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- இயக்குனர்கள் ஷங்கர், லோகேஷ் கனகராஜ் மனோபாலா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட மனோபாலா நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். இவரது உடலுக்கு திரை பிரபலங்கள் நேரிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மனோபாலா உடலுக்கு இயக்குனர்கள் ஷங்கர், லோகேஷ் கனகராஜ் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மனோபாலாவின் உடல் சென்னை வளசரவாக்கம் மின்மயானத்தில் இன்னும் சற்று நேரத்தில் தகனம் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் மனோபாலா உடலுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- இவரது உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என்று பன்முகத்தன்மை கொண்ட மனோபாலா உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். இவரது உடலுக்கு திரை பிரபலங்கள் நேரிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் மனோபாலா உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மனோபாலாவின் உடல் சென்னை வளசரவாக்கம் மின்மயானத்தில் இன்று காலை 10.30 மணிக்கு மேல் தகனம் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முத்து, அண்ணாமலை போன்ற படங்களில் சரத்பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
- கே. பாலசந்தர் இயக்கத்தில் வெளியான பட்டின பிரவேசம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
ஐதராபாத்:
தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர் சரத்பாபு (71). வயது முதிர்வு, உடல்நலக் குறைவால் சரத்பாபு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 20-ம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. சரத்பாபுவின் சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, நடிகர் சரத்பாபு உயிரிழந்து விட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. தெலுங்கு, தமிழ் ஊடகங்களிலும் இதுதொடர்பாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், நடிகர் சரத்பாபு குணமடைந்து வருவதாகவும், அவர் உயிரிழந்துவிட்டதாக வெளியான செய்திகள் பொய்யானவை என நடிகர் சரத்பாபுவின் சகோதரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நடிகர் சரத்பாபுவின் உதவியாளர் மற்றும் அவரது சகோதரி வெளியிட்டுள்ள தகவலில், நடிகர் சரத்பாபு மரணமடைந்து விட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான அனைத்து செய்திகளும் தவறானவை. சரத்பாபு குணமடைந்து வருகிறார். அவர் வேறு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். சரத்பாபு முழுமையாக குணமடைந்து விரைவில் பத்திரிக்கையாளர்களிடம் பேசுவார் என்று நான் நம்புகிறேன். சமூக வலைதளங்களில் வரும் செய்திகள் எதையும் நம்பவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
- நடிகர் மனோபாலா உடலுக்கு திரையுலகினர் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
- மனோபாலா மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை:
இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என்று பன்முகத்தன்மை கொண்டவரான மனோபாலா உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இவரது உடலுக்கு திரை பிரபலங்கள் நேரிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இவரது திடீர் மறைவு திரையுலகினரை மட்டுமல்லாது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், நடிகர் மனோபாலா மறைவை அறிந்து நேரில் வந்த அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.






