பூஜையுடன் தொடங்கிய சிவகார்த்திகேயனின் அடுத்த படம்

சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் நடிக்கவுள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.
எஸ்கே21
எஸ்கே21
Published on

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், தற்போது மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். தற்காலிகமாக 'எஸ்கே21' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

எஸ்கே21
எஸ்கே21

எஸ்கே21

இந்நிலையில் 'எஸ்கே21' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளதாக படக்குழு வெளியிட்ட வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com