என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'லியோ'.
    • இப்படத்தின் படப்பிடிப்பில் அர்ஜுன் இன்று இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    லியோ - விஜய் 

    லியோ - விஜய் 

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் லியோ படத்தின் படப்பிடிப்பில் அர்ஜுன் இன்று இணையவுள்ளதாக கூறப்படுகிறது. பிரம்மாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் அர்ஜுனின் பகுதியை இன்று படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதற்காக அர்ஜுக்கு லுக் டெஸ்ட் எடுக்கப்பட்டதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’.
    • இப்படத்திற்கு பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

    விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'. இப்படம் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது.


    இந்த படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அசம்பாவிதங்களை தவிர்க்க தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் இப்படம் திரையிடப்பட்ட நிலையில் இன்று முதல் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டது. சட்ட ஒழுங்கு பிரச்சினை, படத்திற்கான வரவேற்பு இல்லாததால் திரையரங்க நிர்வாகங்கள் இந்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.


    இந்நிலையில், மேற்கு வங்கத்தில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு தடை விதித்து முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதாவது, வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களை தவிர்க்கவும் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு வெளியான 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் ஒரு பிரிவினரை அவமதிப்பது போன்று வெளியானது. அதுபோல் தான் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படமும் ஒரு பிரச்சினையை உருவாக்குவது போன்று தெரிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    • மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன் -2.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

    மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ரகுமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பொன்னியின் செல்வன் -2. இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை போலவே இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.


    பொன்னியின் செல்வன் -2 போஸ்டர்

    பொன்னியின் செல்வன் -2 திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக அறிவித்திருந்த நிலையில் இப்படத்தின் வசூல் குறித்த புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி பொன்னியின் செல்வன் -2 திரைப்படம் தற்போது வரை உலக அளவில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலை குவித்து சாதனை படைத்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.



    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார்.
    • இதன் படப்பிடிப்பு தென்காசி மாவட்டம் பகுதியில் 3 மாதங்களாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி மாவட்டம் பகுதியில் 3 மாதங்களாக நடைபெற்று வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் குண்டு வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்ட போது, குண்டு சத்தம் கேட்டதால் சுற்று வட்டார பகுதி மக்கள் அச்சமடைந்தனர். பின்னர் அங்கு சென்ற மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரணை நடத்தினார். பின்னர் படக்குழு உரிய அனுமதி பெறவில்லை என்று படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.


    இதையடுத்து, 'கேப்டன் மில்லர்' படக்குழுவினர் முறையான அனுமதி வாங்கி மாவட்ட ஆட்சியரிடம் சான்றிதழை சமர்ப்பித்ததைத் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நீர்நிலைகளை ஆக்கிரமித்து 'கேப்டன் மில்லர்' படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது, நீர்நிலைகளில் படப்பிடிப்பு நடத்த வேண்டிய தேவை என்ன? யார் இந்த அனுமதியை கொடுத்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி அதில் தவறு இருக்குமானால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    • இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கஸ்டடி'.
    • இப்படம் வருகிற 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் 'கஸ்டடி'. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்துள்ளார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி இதனை தயாரித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார்.


    'கஸ்டடி' திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடித்திருக்கிறார். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.


    இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து இப்படத்தின் புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இயக்குனர் வெங்கட் பிரபு, 'இந்த படத்தில் ஸ்டைல் வேணுமா ஸ்டைல் உந்தி, ஆக்ஷன் வேணுமா ஆக்சன் உந்தி, ஃபேமிலி செண்டிமெண்ட் வேணுமா ஃபேமிலி செண்டிமெண்ட் உந்தி ,என்ன வேணும் எல்லாம் உந்தி, இந்த படத்துல மாஸ் வேணுமா மாஸ் உந்தி  என தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளை கலந்து பேசினார். இதனை கேட்ட நடிகர் நாக சைதன்யா மிகுந்த சிரிப்புடன் கைதட்டி வரவேற்றார்.


    இதற்கு முன்பு 'வாரிசு' படத்தின் புரோமோஷன் விழாவில் தில் ராஜு 'டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு, பைட் வேணுமா பைட் இருக்கு' என்று பேசிய பாணியில் இயக்குனர் வெங்கட் பிரபு பேசிய வீடியோ இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

    • 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் தமிழகத்தில் முக்கிய நகரங்களில் மே 5-ஆம் தேதி வெளியானது.
    • இதையடுத்து தமிழகத்தில் உள்ள மால்களில் இன்று முதல் இப்படம் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டது.

    கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்ட படம் 'தி கேரளா ஸ்டோரி'. இந்த படம் சென்னை உள்பட தமிழகத்தில் முக்கிய நகரங்களில் மே 5-ஆம் தேதி இப்படம் வெளியானது. இந்த படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அசம்பாவிதங்களை தவிர்க்க தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டது.


    இதையடுத்து தமிழகத்தில் மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் இப்படம் திரையிடப்பட்ட நிலையில் இன்று முதல் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டது. சட்ட ஒழுங்கு பிரச்சினை ,படத்திற்கான வரவேற்பு இல்லாததால் திரையரங்க நிர்வாகங்கள் இந்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.


    இந்நிலையில், 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து நடிகை குஷ்பு பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்துபவர்கள் எதை கண்டு அச்சம் கொள்கின்றனர் என்றே தெரியவில்லை. வெளிப்படையாக கூறப்பட்ட உண்மையா அல்லது இந்த உண்மையின் அங்கமாக பல ஆண்டுகளாக அமைதியாகவும், தெரியாமலும் இருந்ததா என்று புரியவில்லை. எதை பார்க்க வேண்டும் என்பதை மக்களே தீர்மானம் செய்து கொள்ளட்டும். நீங்கள் யாருக்காகவும் முடிவெடுக்க வேண்டாம். காட்சிகளை ரத்து செய்வதற்காக தமிழ்நாடு அரசு நொண்டி காரணங்களை கூறி வருகிறது. இது கட்டாயம் பார்க்கப்பட வேண்டும் என்பதை மக்களிடம் தெரிவிக்க செய்ததற்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


    • கடந்த 2014-ஆம் ஆண்டு இயக்குனர் அட்லீ நடிகை பிரியாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.
    • தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக சமீபத்தில் அட்லீ சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்திருந்தார்.

    தமிழில் ராஜா ராணி, மெர்சல், தெறி, பிகில் போன்ற படங்களை இயக்கி திரையுலகில் தனக்கான இடத்தை பிடித்தவர் இயக்குனர் அட்லீ. இவர் தற்போது ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    குழந்தையுடன் அட்லீ -பிரியா

    கடந்த 2014-ஆம் ஆண்டு இயக்குனர் அட்லீ, நடிகை பிரியாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், அட்லீ -பிரியா தம்பதியினர் தங்களது குழந்தையின் பெயரை சமூக வலைதளத்தின் வாயிலாக அறிவித்துள்ளனர். அதன்படி, இவர்கள் குழந்தைக்கு 'மீர்' என பெயர் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளனர்.


    • மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் 'மாமன்னன்' .
    • இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

    பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'மாமன்னன்' படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    மாமன்னன்

    இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியானது. நாளுக்கு நாள் 'மாமன்னன்' படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.


    மாமன்னன் படக்குழு

    அதன்படி, 'மாமன்னன்' திரைப்படத்தில் நடிகர் வடிவேலு பாடல் ஒன்றை பாடியுள்ளதாகவும் விரைவில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளதாகவும் படக்குழு புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.


    • ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'லால் சலாம்'.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 'லால் சலாம்' படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.


    லால் சலாம் போஸ்டர்

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் மும்பைக்கு புறப்பட்டு சென்றார். இந்நிலையில் 'லால் சலாம்' படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில், நடிகர் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 'சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


    • இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வீரன்’.
    • இப்படத்தில் ஹிப்ஹாப் ஆதி கதாநாயகனாக நடித்துள்ளார்.

    மரகத நாணயம் படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்து வரும் படம் 'வீரன்'. ஃபேண்டசி காமெடி ஆக்ஷன் எண்டர்டெயினர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


    வீரன் போஸ்டர்

    சத்யஜோதி பிலிம்ஸ்' தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'வீரன்' திரைப்படம் வருகிற ஜுன் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    • ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படம் லால் சலாம்.
    • இப்படத்தின் புதிய போஸ்டரை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 'லால் சலாம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.


    லால் சலாம் படக்குழு

    லால் சலாம் படக்குழு

    இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 34 நாட்கள் நடைபெற்ற 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவயடைந்ததை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது. 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று மும்பைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.


    லால் சலாம்

    லால் சலாம்

    இந்நிலையில் லால் சலாம் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு படப்பிடிப்பில் இன்று ரஜினிகாந்த் இணையவுள்ளதாக இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். தி மனிதன் என்று குறிப்பிட்டு வெளியாகியுள்ள இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழி படங்களில் பாடல்கள் பாடியுள்ளவர் ரக்ஷிதா சுரேஷ்.
    • இவர் சென்ற கார் சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதாகவும், 10 வினாடிகளில் முழு வாழ்க்கையும் கண் முன் வந்து சென்றதாக உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

    தென்னிந்திய சினிமாவில் பிரபல பாடகியாக வலம் வரும் ரக்ஷிதா சுரேஷ், மலேசியாவில் விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோது அவர் பயணத்து கொண்டிருந்த கார் காலையில் இருந்த டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது. தனியார் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஜூனியர் - சீனியர் என இரண்டு சீசன்களிலும் கலந்து கொண்ட ரக்ஷிதா சுரேஷ் சூப்பர் சிங்கர் 6 நிகழ்ச்சியில் ரன்னர் அப்-ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தெலுங்கு, கன்னடம், இந்தி, தமிழ் னிழு படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.


    ரக்ஷிதா சுரேஷ்

    ரக்ஷிதா சுரேஷ்

    இந்நிலையில் பாடகி ரக்ஷிதா சுரேஷ் கார் விபத்தில் சிக்கியதாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "இன்று பெரிய விபத்தில் சிக்கினேன். இன்று காலை மலேசிய விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோது சாலையில் இருந்த டிவைடரில் பலமாக மோதிய கார் சாலையின் மறுபகுதிக்கு சென்றது. இந்தப் பெரிய பாதிப்பில் என் மொத்த வாழ்க்கையும் அந்த 10 வினாடிக்குள் என் கண் முன் தோன்றின.



    ஏர் பேக்குகளுக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன். இல்லையென்றால் நிலைமை மிகவும் மோசமாகி இருக்கும். இப்போதும் நடந்தது மிகவும் நடுக்கமாக இருக்கிறது. நானும், காரை இயக்கி வந்த டிரைவரும் உடன் பயணித்த இன்னொரு வரும் லேசான வெளி காயங்களோடும் சிறு உட்காயங்களோடும் பாதுகாப்பாக இருக்கிறோம் என நினைக்கும் போது கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது. என பதிவிட்டுள்ளார்.

    இவர் பொன்னியின் செல்வன் -2 படத்தின் கன்னடம் மொழியில் கிரு நகே பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×