தி மனிதன்.. புதிய போஸ்டரை வெளியிட்டு லால் சலாம் பட அப்டேட் கொடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படம் லால் சலாம்.இப்படத்தின் புதிய போஸ்டரை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
Published on

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 'லால் சலாம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.

லால் சலாம் படக்குழு
லால் சலாம் படக்குழு

லால் சலாம் படக்குழு

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 34 நாட்கள் நடைபெற்ற 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவயடைந்ததை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது. 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று மும்பைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

லால் சலாம்
லால் சலாம்

லால் சலாம்

இந்நிலையில் லால் சலாம் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு படப்பிடிப்பில் இன்று ரஜினிகாந்த் இணையவுள்ளதாக இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். தி மனிதன் என்று குறிப்பிட்டு வெளியாகியுள்ள இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com