என் மலர்
சினிமா செய்திகள்
- விஜய் ஆண்டனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பிச்சைக்காரன் -2’.
- இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் 'பிச்சைக்காரன்'. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் உள்ளார்.

பிச்சைக்காரன் -2
இப்படம் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போனது. இதைத்தொடர்ந்து 'பிச்சைக்காரன் -2' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் புதிய பாடல் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். அதில், "நேத்து நைட்டு கனவுல கடவுளோட மடியில பேயி ஒன்னு படுத்துருக்கத பாத்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
'பிச்சைக்காரன் -2' திரைப்படம் வருகிற மே 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேத்து நைட்டு கனவுல
— vijayantony (@vijayantony) May 9, 2023
கடவுளோட மடியில பேயி ஒன்னு
படுத்துருக்கத பாத்தேன்#nanabuluku
African God
God is my love
Releasing Tomorrow at 4PM
பிச்சைக்காரன் 2 pic.twitter.com/y3tSGaN2xW
- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நேற்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது.
- இதில், திண்டுக்கல் மாணவி நந்தினி 600-க்கு 600 மதிப்பெண் எடுத்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நேற்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. பிளஸ்-2 தேர்வில் திண்டுக்கல் மாணவி நந்தினி 600-க்கு 600 மதிப்பெண் எடுத்து வரலாற்று சாதனை படைத்துள்ளார். இதையடுத்து மாணவி நந்தினி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். சந்திப்பின்போது மாணவி நந்தினியின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் கூறினார்.

நந்தினி -வைரமுத்து
இந்நிலையில், மாணவி நந்தினிக்கு வாழ்த்து தெரிவித்து கவிஞர் வைரமுத்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "ஒரு
தச்சுத் தொழிலாளியின் மகள்
மாநிலத் தேர்வில்
உச்சம் தொட்டிருப்பது
பெண்குலத்தின் பெருமை
சொல்கிறது
எப்படிப் பாராட்டுவது?
அண்மையில் நான்பெற்ற
தங்கப் பேனாவைத்
தங்கை நந்தினிக்குப்
பரிசளிக்கிறேன்
திண்டுக்கல் வருகிறேன்;
நேரில் தருகிறேன்
உன் கனவு
மெய்ப்படவேண்டும் பெண்ணே! " என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரு
— வைரமுத்து (@Vairamuthu) May 9, 2023
தச்சுத் தொழிலாளியின் மகள்
மாநிலத் தேர்வில்
உச்சம் தொட்டிருப்பது
பெண்குலத்தின் பெருமை
சொல்கிறது
எப்படிப் பாராட்டுவது?
அண்மையில் நான்பெற்ற
தங்கப் பேனாவைத்
தங்கை நந்தினிக்குப்
பரிசளிக்கிறேன்
திண்டுக்கல் வருகிறேன்;
நேரில் தருகிறேன்
உன் கனவு
மெய்ப்படவேண்டும் பெண்ணே! pic.twitter.com/bkSbrmrlqt
- ‘தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்துக்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
- இப்படத்துக்கு கேரள ஐகோர்ட்டு தடை விதிக்க மறுத்து விட்டது.
விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'. இப்படத்திற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு தடை விதிக்க கோரி கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இப்படத்துக்கு கேரள ஐகோர்ட்டு தடை விதிக்க மறுத்து விட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதி நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் ஆஜரான மூத்த வக்கீல் கபில்சிபல், இம்மனுவை அவசரமாக விசாரிக்க கோரினார்.

அப்போது இந்த வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளதா? என்று நீதிபதிகள் கேட்டனர். படத்தை வெளியிட தடை விதிக்க மறுத்து விட்டதாக கபில்சிபல் தெரிவித்தார். இதையடுத்து இந்த மனுவை வருகிற 15-ந்தேதி விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேற்கு வங்காளத்தில் 'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து படத்தின் தயாரிப்பாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
- இராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி வரும் திரைப்படம் 'ஆதிபுருஷ்' .
- இந்த படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார்.
இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் இராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி வரும் திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டீசர் கடந்த ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி காந்தி ஜெயந்தி அன்று உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி சராயு நதிக்கரையில் வெளியிடப்பட்டது.

ஆனால், ஆதிபுருஷ் டீசரின் கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் மோசமான தரத்தில் இருப்பதாக கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதே போல் டீசரில் ராவணன் கதாபாத்திரம் சித்திரிக்கப்பட்ட விதமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து படக்குழு சார்பில் ராமநவமி அன்று படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இதையடுத்து 'ஆதிபுருஷ்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
- நடிகை சமந்தா தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் ’குஷி’ படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சமந்தா-விஜய் தேவரகொண்டா நடிப்பில் இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் 'குஷி' திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் சமந்தா தசை அழற்சி நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், படப்பிடிப்புப் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து குஷி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் சமந்தா மீண்டும் இணைந்தார். இதனை படக்குழு புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்திருந்தது. இப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

இதையடுத்து குஷி படத்தின் முதல் பாடலான 'என் ரோஜா நீயே' பாடல் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்பாடல் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
- கவிஞரும், பா.இரஞ்சித்தின் உதவி இயக்குனருமான விடுதலை சிகப்பி, இந்து கடவுளை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக புகார் எழுந்தது.
- இந்த புகாரின் அடிப்படையில் விடுதலை சிகப்பி மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை அபிராமபுரத்தில் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கவிஞரும், பா.இரஞ்சித்தின் உதவி இயக்குனருமான விடுதலை சிகப்பி, இந்து கடவுளை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக புகார் எழுந்தது. அதன்பின்னர் பாரத் இந்து முன்னணி அமைப்பின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் சுரேஷ் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து இந்து கடவுளை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் பா.இரஞ்சித்தின் உதவி இயக்குனரும், கவிஞருமான விடுதலை சிகப்பி மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கலகத்தை தூண்டுதல், எந்த ஒரு மதத்தினரையும் புண்படுத்தும் நோக்கில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பா.இரஞ்சித்தின் உதவி இயக்குனர் விடுதலை சிகப்பி
இந்நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து இயக்குனர் பா.இரஞ்சித் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த இலக்கிய நிகழ்வில் 'மலக்குழி மரணம்' எனும் தலைப்பில் கவிஞர் விடுதலை சிகப்பி எனும் விக்னேஸ்வரன் கவிதை ஒன்றை வாசித்திருந்தார். அக்கவிதை, நாடு முழுக்கத் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கும் மலக்குழி மரணங்கள் குறித்த அக்கறையை வெளிப்படுத்துவதாகும். அத்தகைய மரணங்களைக் கண்டும் காணாமல் போகும் சமூக நிலையைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்பதற்காகச் சாதாரண மனிதர்களுக்குப் பதில் கடவுள் ஸ்தானத்தில் இருப்பவர்கள் அத்தகைய வேலையைச் செய்து மரணத்தைத் தழுவினாலாவது கவனம் பெறுமோ என்கிற பொருளில் அந்தக் கவிதை இருந்தது.
எழுத்தாளரின் படைப்புச் சுதந்திரம் அது. மற்றபடி எந்த நம்பிக்கையையும் திட்டமிட்டு இழிவாக எழுதுவதோ பேசுவதோ கவிதையின் நோக்கமல்ல. அப்படி இருக்கும்போது, பிறப்பால் இந்து ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவரான விடுதலை சிகப்பி என்கிற விக்னேஸ்வரனை 'வேற்று மதத்தைச் சேர்ந்தவன் இந்து மதத்தைப் பழிக்கிறான்' என்கிற பொய் பிரச்சாரத்தை இணையத்தில் சில குழுக்கள் கடந்த நான்கு நாட்களாகத் தொடர்ந்து செய்துவந்ததின் தொடர்ச்சியாக விடுதலை சிகப்பி என்கிற விக்னேஸ்வரன் மீது ஐந்து பிரிவுகளில் E 4 அபிராமபுரம் காவல் நிலையத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது.

பா.இரஞ்சித் அறிக்கை
தனி நபரின் படைப்புச் சுதந்திரத்தை மதப் பிரச்சினையாக மாற்றும் செயலை ஜனநாயகத்தை விரும்பும் ஒவ்வொருவரும் எதிர்க்க வேண்டி இருக்கிறது. கடந்த மூன்று நாட்களாக தனிப்பட்ட முறையில் விடுதலை சிகப்பி இக்குழுக்களால் மிரட்டப்படுகிறார்; இக்குழுக்கள் கொடுக்கும் அழுத்தத்தால் கடந்த மூன்று நாட்களாக விடுதலை சிகப்பியின் கிராமத்தில் இருக்கும் பெற்றோர்கள் காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். ஒரு படைப்பின் மையப்பொருளை விளங்கிக்கொள்ளாமல் அல்லது விளங்கிக்கொள்ள விரும்பாமல் படைப்புச் சுதந்திரத்திற்கு எதிராகத் தொடுத்த வழக்கைப் பதிவு செய்திருக்கும் காவல்துறை மற்றும் தமிழக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது.
இக்கவிதையின் பாடுபொருள் மலக்குழி மரணம் பற்றியது, உண்மையில் அவைதான் பேசுபொருளாகியிருக்க வேண்டும். அதைத் திசை மாற்றி இதை மதப் பிரச்சினையாக உருமாற்றும் நடவடிக்கையை நீலம் பண்பாட்டு மையம் வன்மையாகக் கண்டிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'.
- இப்படத்திற்கு வரி விலக்கு அறிவிப்பதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'. இப்படம் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது.

தி கேரளா ஸ்டோரி
இந்த படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அசம்பாவிதங்களை தவிர்க்க தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் இப்படம் திரையிடப்பட்டு பின்னர் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டது. சட்ட ஒழுங்கு பிரச்சினை, படத்திற்கான வரவேற்பு இல்லாததால் திரையரங்க நிர்வாகங்கள் இந்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

தி கேரளா ஸ்டோரி
'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு தடை விதித்து முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதாவது, வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களை தவிர்க்கவும் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு வெளியான 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் ஒரு பிரிவினரை அவமதிப்பது போன்று வெளியானது. அதுபோல் தான் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படமும் ஒரு பிரச்சினையை உருவாக்குவது போன்று தெரிகிறது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

மத்தியப் பிரதேச அரசு கடந்த 6-ம் தேதி இந்தப் படத்திற்கு வரிவிலக்கு அறிவித்திருந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் "தி கேரளா ஸ்டோரி" திரைப்படத்திற்கு வரி விலக்கு அறிவிக்க உள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் அறிவித்துள்ளார்.
'The Kerala Story' उत्तर प्रदेश में टैक्स फ्री की जाएगी।
— Yogi Adityanath (@myogiadityanath) May 9, 2023
- நடிகர் அஜித் தனது ஓய்வு நேரங்களில் பைக் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
- அஜித் தற்போது உலக சுற்றுலா செல்லவுள்ளார்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் பைக் மூலம் இந்தியாவைச் சுற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதில் முதல்கட்டமாக இமயமலையில் கடந்த ஆண்டு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். பனி படர்ந்த பல்வேறு பகுதிகளில் பைக்கில் நண்பர்களுடன் பயணம் செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வந்தது.

தற்போது அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தின் தொடக்க வேலையில் இருப்பதால் 2-ம் கட்ட பைக் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் அஜித் தற்போது மீண்டும் உலக சுற்றுலா செல்லவுள்ளார். அஜித் உலக சுற்றுலா செல்லவுள்ள பகுதி குறித்த மேப் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
- இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் கருமேகங்கள் கலைகின்றன.
- இப்படத்தில் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கருமேகங்கள் கலைகின்றன'. இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள் எழுதியுள்ளார். இப்படத்தை வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் திரையுலகினர், படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதாவது, சினிமாவை நேசித்ததால் ஏதோ ஒரு வகையில் நம்மை அது நேசித்துக் கொண்டிருக்கும். அதற்கு உதாரணம், முதலில் இயக்கினேன், தயாரித்தேன், விநியோகித்தேன், இப்போது இந்த வயதில் நடித்துக் கொண்டிருக்கிறேன். நான் பல திரைப்படங்களை இயக்கியிருக்கிறேன். அதில், நிறைய பணம் சம்பாதித்திருக்கிறேன். ஆனால், தங்கர் பச்சான் மாதிரி பெயரை சம்பாதிக்கவில்லை.

எஸ்.ஏ.சந்திரசேகர்
அவர் விவசாயத்தில் மட்டுமல்ல, படத்திலும் கலப்படமில்லாமல் ஆர்கானிக்காகத் தான் படம் எடுப்பேன், நீங்கள் அதை பார்க்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார். அவரின் இயக்கத்தில் இந்த வயதில் நடித்திருப்பதில் மகிழ்ச்சி. ஒரே காலகட்டத்தில் ஒரே ஊரில் இருந்து சினிமாவிற்கு நானும் பாரதிராஜாவும் வந்தோம். ஆனால், அவர் முதலில் இயக்குனராகிவிட்டார். அவரிடம் உதவி இயக்குநராக வாய்ப்பு கேட்டேன். முடியாது என்று மறுத்துவிட்டார்.
விஜயை நடிகராக்க வேண்டும் என்று ஒரு ஆல்பம் தயாரித்துக் கொண்டு சென்றேன். என்னிடம் ஏன் கொண்டு வந்தாய்? நீயே பெரிய இயக்குனர் தானே, நீயே இயக்கிக் கொள் என்று மறைமுகமாக மறுத்துவிட்டார். அவரிடம் உதவி இயக்குனராக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன், நடக்கவில்லை. என் பையனை அவர் இயக்கத்தில் நடிக்க வைக்க ஆசைப்பட்டேன், அதுவும் நடக்கவில்லை.
ஆனால், தங்கர் பச்சான் ஒரே படத்தில் எங்கள் இருவரையும் நண்பர்களாக நடிக்க வைத்துவிட்டார். இவரைப் போலவே கௌதம் மேனனிடமும் ஆல்பத்தை கொண்டு சென்றேன். அவரும் மறுத்துவிட்டார். அதுவும் ஒருவிதத்தில் நல்லது தான், இல்லையென்றால் விஜய் கமர்ஷியல் நாயகனாக ஆகியிருக்கமாட்டார். அதற்காக கடவுளுக்கும் நன்றி என்றார்.
- ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் 'எஸ்கே21' படத்தில் நடிக்கிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. தற்காலிகமாக 'எஸ்கே21' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

எஸ்கே21
இந்நிலையில் 'எஸ்கே21' படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு 55 நாட்கள் காஷ்மீரில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இப்படம் உணர்வுகளையும் தேசபற்றையும் மையப்படுத்தி உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 'எஸ்கே21' திரைப்படம் சிவாகார்த்திகேயனின் புதிய பரிமாணமாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
- கவிஞரும், பா.இரஞ்சித்தின் உதவி இயக்குனருமான விடுதலை சிகப்பி, இந்து கடவுளை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக புகார் எழுந்தது.
- இந்த புகாரின் அடிப்படையில் விடுதலை சிகப்பி மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை அபிராமபுரத்தில் கடந்த ஏப்ரல் 30ம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கவிஞரும், பா.இரஞ்சித்தின் உதவி இயக்குனருமான விடுதலை சிகப்பி, இந்து கடவுளை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக புகார் எழுந்தது. அதன்பின்னர் பாரத் இந்து முன்னணி அமைப்பின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் சுரேஷ் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் இந்து கடவுளை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் பா.இரஞ்சித்தின் உதவி இயக்குனரும், கவிஞருமான விடுதலை சிகப்பி மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கலகத்தை தூண்டுதல், எந்த ஒரு மதத்தினரையும் புண்படுத்தும் நோக்கில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘இராவண கோட்டம்’.
- இப்படத்தின் கதாப்பாத்திரங்களை படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் `இராவண கோட்டம்'. சாந்தனு நாயகனாக நடித்துள்ள இப்படத்தை கண்ணன் ரவி தயாரித்துள்ளார். இதில் சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

இராவண கோட்டம்
இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர், டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் `இராவண கோட்டம்' படத்தின் கதாப்பாத்திரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தில் சித்ரவேல் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் இளவரசுவும், மதிவாணன் என்ற கதாப்பாத்திரத்தில் சஞ்சய் சரவணனும் நடித்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
`இராவண கோட்டம்' திரைப்படம் வருகிற மே 12ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.






