சிவகார்த்திகேயனின் 'எஸ்கே21' படப்பிடிப்பின் புதிய தகவல்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் 'எஸ்கே21' படத்தில் நடிக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது.
எஸ்கே21
எஸ்கே21
Published on

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. தற்காலிகமாக 'எஸ்கே21' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

எஸ்கே21
எஸ்கே21

எஸ்கே21

இந்நிலையில் 'எஸ்கே21' படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு 55 நாட்கள் காஷ்மீரில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இப்படம் உணர்வுகளையும் தேசபற்றையும் மையப்படுத்தி உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 'எஸ்கே21' திரைப்படம் சிவாகார்த்திகேயனின் புதிய பரிமாணமாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com