என் மலர்
சினிமா செய்திகள்

ரக்ஷிதா சுரேஷ்
மொத்த வாழ்க்கையும், 10 வினாடிக்குள் என் கண் முன் தோன்றின.. விபத்தில் சிக்கிய பொன்னியின் செல்வன் பட பாடகி பதிவு
- தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழி படங்களில் பாடல்கள் பாடியுள்ளவர் ரக்ஷிதா சுரேஷ்.
- இவர் சென்ற கார் சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதாகவும், 10 வினாடிகளில் முழு வாழ்க்கையும் கண் முன் வந்து சென்றதாக உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் பிரபல பாடகியாக வலம் வரும் ரக்ஷிதா சுரேஷ், மலேசியாவில் விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோது அவர் பயணத்து கொண்டிருந்த கார் காலையில் இருந்த டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது. தனியார் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஜூனியர் - சீனியர் என இரண்டு சீசன்களிலும் கலந்து கொண்ட ரக்ஷிதா சுரேஷ் சூப்பர் சிங்கர் 6 நிகழ்ச்சியில் ரன்னர் அப்-ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தெலுங்கு, கன்னடம், இந்தி, தமிழ் னிழு படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.
ரக்ஷிதா சுரேஷ்
இந்நிலையில் பாடகி ரக்ஷிதா சுரேஷ் கார் விபத்தில் சிக்கியதாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "இன்று பெரிய விபத்தில் சிக்கினேன். இன்று காலை மலேசிய விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோது சாலையில் இருந்த டிவைடரில் பலமாக மோதிய கார் சாலையின் மறுபகுதிக்கு சென்றது. இந்தப் பெரிய பாதிப்பில் என் மொத்த வாழ்க்கையும் அந்த 10 வினாடிக்குள் என் கண் முன் தோன்றின.
ஏர் பேக்குகளுக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன். இல்லையென்றால் நிலைமை மிகவும் மோசமாகி இருக்கும். இப்போதும் நடந்தது மிகவும் நடுக்கமாக இருக்கிறது. நானும், காரை இயக்கி வந்த டிரைவரும் உடன் பயணித்த இன்னொரு வரும் லேசான வெளி காயங்களோடும் சிறு உட்காயங்களோடும் பாதுகாப்பாக இருக்கிறோம் என நினைக்கும் போது கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது. என பதிவிட்டுள்ளார்.
இவர் பொன்னியின் செல்வன் -2 படத்தின் கன்னடம் மொழியில் கிரு நகே பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






