குழந்தையின் பெயரை அறிவித்த அட்லீ -பிரியா

கடந்த 2014-ஆம் ஆண்டு இயக்குனர் அட்லீ நடிகை பிரியாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக சமீபத்தில் அட்லீ சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்திருந்தார்.
பிரியா -அட்லீ
பிரியா -அட்லீ
Published on

தமிழில் ராஜா ராணி, மெர்சல், தெறி, பிகில் போன்ற படங்களை இயக்கி திரையுலகில் தனக்கான இடத்தை பிடித்தவர் இயக்குனர் அட்லீ. இவர் தற்போது ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

குழந்தையுடன் அட்லீ -பிரியா

கடந்த 2014-ஆம் ஆண்டு இயக்குனர் அட்லீ, நடிகை பிரியாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், அட்லீ -பிரியா தம்பதியினர் தங்களது குழந்தையின் பெயரை சமூக வலைதளத்தின் வாயிலாக அறிவித்துள்ளனர். அதன்படி, இவர்கள் குழந்தைக்கு 'மீர்' என பெயர் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com