என் மலர்
- ரங்கராஜ் மீது ஜாமினில் வெளியே வரக்கூடிய பிரிவுகளின் கீழ் தான் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
- கடந்த ஒன்றரை மாதமாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாதம்பட்டி ரங்கராஜ் மீதான திருமண மோசடி வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாய் கிரிசில்டா வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு தொடர்பாக ஜாய் கிரிசில்டா அளித்த மனுவில்,
மாதம்பட்டி ரங்கராஜூக்கு எதிராக மோசடி, மிரட்டல், கொடுமைப்படுத்துதல் மற்றும் கருச்சிதைவு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் புகார் அளித்தேன். ஆனால் தற்போது ரங்கராஜ் மீது ஜாமினில் வெளியே வரக்கூடிய பிரிவுகளின் கீழ் தான் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. காவல்துறை விசாரணை திருப்திகரமாக இல்லை. கடந்த ஒன்றரை மாதமாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
குறிப்பாக காவல்துறை உரிய விசாரணை நடத்தாததால் தான் மகளிர் உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தேன். இதனால் ரங்கராஜ் மீதான வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றக்கோருகிறேன் என தெரிவித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து இம்மனு இன்று விசாரணைக்கு வந்த போது, மனு மீது பதில் அளிக்க காவல்துறைக்கு வரும் 12-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கி விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
- என்னிடமிருந்து பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டது.
- மாதம்பட்டி ரங்கராஜை மிரட்டி திருமணம் செய்து கொள்ள அவர் என்ன குழந்தையா?” என ஜாய் கிரிசில்டா கேள்வி எழுப்பியிருந்தார்.
தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து, தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஜாய் கிரிசில்டா கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, தன்னை 2வது திருமணம் செய்ததை மகளிர் ஆணையத்தின் முன் மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக் கொண்டார் என்று ஜாய் கிரிசில்டா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்திருந்தார்.
அவரது ஸ்டோரியில், எனது குழந்தையின் தந்தை நான் தான் என ரங்கராஜ் ஒப்புக் கொண்டதால், DNA ஆதாரங்கள் தேவையில்லை எனவும், வழக்கு முடியும் வரை குழந்தை பராமரிப்புக்கு மறுக்க கூடாது எனவும் மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது" என்று தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து, ஜாய் கிரிசில்டாவின் இந்த கூற்றை மாதம்பட்டி ரங்கராஜ் நேற்று திட்டவட்டமாக மறுத்தார். 'ஜாய் கிரிசில்டா என்னை மிரட்டி திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணம் மிரட்டலின் பேரில் கட்டாயப்படுத்தப்பட்டு, என்னிடமிருந்து பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டது என்பதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜை மிரட்டி திருமணம் செய்து கொள்ள அவர் என்ன குழந்தையா?" என ஜாய் கிரிசில்டா கேள்வி எழுப்பியிருந்தார். இதனை தொடர்ந்து தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் முன்பு பேசிய வீடியோ ஒன்றை ஜாய் கிரிசில்டா வெளியிட்டுள்ளார் .
வீடியோவை வெளியிட்டு ஜாஸ் கிரிசில்டா கூறியிருப்பதாவது:- இந்த வீடியோ என்ன மிரட்டலின் பெயரில் அனுப்பியதா??! Mr husband @MadhampattyRR ? மக்களே, ப்ளீஸ் சொல்லுங்க — இதுல லவ் லா பேசுறாரா இல்ல மிரட்டலின் பெயரில் பேசுறாரா? கேக்குறவன் கேனையனா இருந்தா கேப்பையில் நெய் வடியுதுன்னு சொல்ற மாதிரி...
நான் பயணம் செய்து கொண்டிருந்தபோது என் கணவர் என்று சொல்லப்படுபவர் இந்த வீடியோ எனக்கு அனுப்பினார். நாங்கள் பிரிந்திருக்கும்போதோ அல்லது நேரில் சந்திக்க முடியாதபோதோ அவர் தினசரி இதுமாதிரியான வீடியோக்களை எனக்கு அனுப்புவார் என்று கூறியுள்ளார்.
மலையாள சினிமா முன்னணி நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். இவர் கடைசியாக நடித்து வெளியான 'லக்கி பாஸ்கர்' படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
அடுத்ததாக துல்கர் சல்மான் 'காந்தா' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கி உள்ளார். இப்படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே. தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும்.
இப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தை வேஃபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. 'காந்தா' படம் வருகிற 14-ந்தேதி முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் காந்தா படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜயின் 'கில்லி', 'சச்சின்' சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', தனுசின் 'யாரடி நீ மோகினி' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.
இந்த வரிசையில், அஜித்தின் 'அட்டகாசம்' படமும் கடந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.
அந்த வகையில், சேரனின் தயாரிப்பில், இயக்கத்தில், நடிப்பில் வெளியான 'ஆட்டோகிராப்' படம் வருகிற 14-ந்தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 21 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் முறையில் தமிழகம் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக சேரன் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், ரீ ரிலீஸை முன்னிட்டு சேரனின் ஆட்டோகிராஃப் படத்தின் புதிய டிரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது. டிரெய்லரை நடிகர் ஆர்யா மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட உள்ளனர்.
- வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார்.
- திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய முதல் படமான 'பீட்சா' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பாபி சிம்ஹா. இதையடுத்து 'காதலில் சொதப்புவது எப்படி', 'சூது கவ்வும்', 'பகலவன்', 'ஜிகர்தண்டா', 'மகான்' போன்ற படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
'ஜிகர்தண்டா' படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் பாபி சிம்ஹா பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார்.
இந்த நிலையில், நடிகர் பாபி சிம்ஹா இன்று தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, தனது பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகர் பாபி சிம்ஹா சாமி தரிசனம் செய்தார். இதன்பின், அங்கு சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்தார். ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
- இது இரண்டு கதாநாயகர்களை கொண்ட கதை என்று கூறப்படுகிறது.
- படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யாமேன் நடிப்பில் வெளியான படம் 'தலைவன் தலைவி. கடந்த ஜூலை மாதம் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வசூலையும் குவித்தது.
இதையடுத்து, இயக்குநர் பாண்டிராஜ் அடுத்து யாரை வைத்து படம் எடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்த நிலையில், நடிகர் ஹரிஷ் கல்யாண் இயக்குநர் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாகவும் இது இரண்டு கதாநாயகர்களை கொண்ட கதை என்றும் கூறப்படுகிறது. மேலும் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராம் சரண்- இயக்குனர் சங்கர் கூட்டணியில் வெளியான 'கேம் சேஞ்சர்' திரைப்படம் மக்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை.
இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் புச்சி பாபு இயக்கத்தில் 'பெத்தி' படத்தில் ராம் சரண் நடித்து வருகிறார். இப்படத்தை ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் எப்போது என்ற அறிவிப்பை இன்று காலை படக்குழு வெளியிட்டது.
அதன்படி, வரும் 7ம் தேதி காலை 11 மணியளவில் சிகிரி பாடல் வௌியாக இருக்கிறது. முன்னதாக, இப்பாடலில் ப்ரோமோ இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் 'கூலி'. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை குவித்தது.
இதனிடையே, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. பின்னர் கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் இதை உறுதிப்படுத்தினார்.
ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் இயக்குவார் என்று தகவல் வெளியானது. இப்படத்தின் கதையை எழுதுவதற்கு நெல்சனுக்கு நேரம் தேவைப்படுவதால் 2027 இல் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தை கமல்ஹாசனே தயாரிப்பார் என்று சொல்லப்பட்டது.
இதற்கிடையே, ரஜினி- கமல் கூட்டணியில் வெளியாக இருக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி, ரஜினியின் 173வது படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கவுள்ளார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது.
இத்தகவலை ராஜ்கமல் பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. ரஜினி- கமல்- சுந்தர் சி கூட்டணியில் உருவாகும் இப்படத்தில் அறிவிப்பு ரசிகர்களை குதூகலப்படுத்தி உள்ளது.
1997ல் ரஜினிகாந்தை முதல் முறையாக 'அருணாச்சலம்' படத்திற்காக இயக்கிய சுந்தர்.சி. 28 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் தயாரிப்பில், ரஜினியின் 173வது படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

அறிமுக இயக்குனர் தினேஷ் லட்சுமணன் இயக்கத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடிக்கும் படம் தீயவர் குலை நடுங்க.
அதிரடி ஆக்ஷன் திரில்லவராக உருவாகி இருக்கும் இப்படத்தை ஜி.எஸ்.ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரித்துள்ளார்.
இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், தீயவர் குலை நடுங்க படம் வெளியாகும் தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, தீயவர் குலை நடுங்க படம் வரும் நவம்பர் 21ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான படம் 'தக் லைஃப்'. திரைப்படம் வெளியாகி மக்களிடையே எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்தார். படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டானது.
இயக்குநர் மணிரத்னம் தக்லைஃப் படத்தை தொடர்ந்து, தனது அடுத்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிரத்னம் தனது கதையை சிம்பு, விஜய் சேதுபதியிடம் கூறியதாகவும், இதில், சிம்பு அரசன் மற்றும் அஷ்வத்தின் படத்தில் பிஸியாக இருக்கும் நிலையில் விஜய் சேதுபதியை வைத்து எடுக்க முடிவு செய்துள்ளார்.
விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க ருக்மிணி வசந்திடம் பேச்சு வார்த்தை நடந்துக் கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- எனது குழந்தையின் தந்தை நான் தான் என ரங்கராஜ் ஒப்புக் கொண்டதாக ஜாய் கிரிசில்டா தெரிவித்தார்.
- என்னிடமிருந்து பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டது.
தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா என்பவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து, தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஜாய் கிரிசில்டா கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
ஜாய் கிரிசில்டா குழந்தை பிறந்த முதல் நாளிலிருந்து முகத்தை மறைத்த குழந்தையின் புகைப்படத்துடன் மாதம்பட்டி ரங்கராஜின் புகைப்படத்தையும் வைத்து பதிவு வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், தன்னை 2வது திருமணம் செய்ததை மகளிர் ஆணையத்தின் முன் மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக் கொண்டார் என்று ஜாய் கிரிசில்டா நேற்று இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்திருந்தார்.
அவரது ஸ்டோரியில், எனது குழந்தையின் தந்தை நான் தான் என ரங்கராஜ் ஒப்புக் கொண்டதால், DNA ஆதாரங்கள் தேவையில்லை எனவும், வழக்கு முடியும் வரை குழந்தை பராமரிப்புக்கு மறுக்க கூடாது எனவும் மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஜாய் கிரிசில்டாவின் இந்த கூற்றை மாதம்பட்டி ரங்கராஜ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " மகளிர் ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை. நான் ஜாய்யை தன்னிச்சையாக (under free will) திருமணம் செய்து கொண்டதாக ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை என்பதை நான் திட்டவட்டமாக கூறுகிறேன்.
ஜாய் என்னை அவதூறு செய்வதற்காக தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதாக பலமுறை மிரட்டியதால், இந்த திருமணம் மிரட்டலின் பேரில் நடந்தது.
செப்டம்பர் 2025 இல், ஆயிரம் விளக்குகள், மகளிர் காவல் நிலையத்தின் புலனாய்வு அதிகாரி முன்பும், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்திலும் விரிவான வாக்குமூலங்களை நான் ஏற்கனவே அளித்துள்ளேன்,
இந்தத் திருமணம் மிரட்டலின் பேரில் கட்டாயப்படுத்தப்பட்டு, என்னிடமிருந்து பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டது என்பதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன்.
கமிஷனின் முன் நடந்த அடுத்தடுத்த நடவடிக்கைகளின் போது, ஜாய் எனக்கு மாதத்திற்கு ரூ. 1,50,000/- பராமரிப்புத் தொகையாகவும், தனது BMW காருக்கு ரூ.1.25 லட்சம் மாதாந்திர EMI-யையும் செலுத்த வேண்டும் என்றும் கோரினார். நான் அந்த கோரிக்கையை மறுத்துவிட்டேன்.
நான் ஒருபோதும் டிஎன்ஏ பரிசோதனையை மறுத்ததில்லை, மேலும் அந்தக் குழந்தை என்னுடையது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால்(DNA Test), அந்தக் குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்வேன் என்றும் கூறியுள்ளேன். இந்த வாக்குமூலம் ஏற்கனவே ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய விசாரணை அதிகாரி முன் செப்டம்பர் 2025 அன்றே பதிவுசெய்யப்பட்டுள்ளது.
மகளிர் ஆணையத்தின் பரிந்துரை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த வாக்குமூலத்தையும் அளிக்கவில்லை. அந்த பரிந்துரை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன், மேலும் உண்மையை நிறுவ அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிப்பேன். ஆணையத்தின் முன் நடந்த அனைத்தும் சட்டத்தின்படி நீதிமன்றத்தில் முறையாக சமர்ப்பிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
இதில், டிஎன்ஏ பரிசோதனையில் குழந்தை தன்னுடையது தான் என நிரூபிக்க வேண்டும் என மாதம்பட்டி ரங்கராஜ் கூறியிருந்தார்.
மேலும், குழந்தை என்னுடையது என நிரூபணமானால் வாழ்நாள் முழுவதும் குழந்தையை பராமரித்து கொள்ள தயார் என கூறினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக,"டிஎன்ஏ பரிசோதனை செய்து குழந்தை மாதம்பட்டி ரங்கராஜூக்குத் தான் பிறந்தது என நிரூபிக்கத் தயார்" என ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்," டிஎன்ஏ பரிசோதனை வேண்டாம் எனக்கூறிவிட்டு இப்போது சோதனைக்கு தயார் என மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கைவிட்டுள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவரது குடும்பத்தார் மிகுந்த மனவலியை கொடுக்கின்றனர்.
குழந்தை என்ஐசியூ-வில் உள்ள நிலையில் இதுபோன்ற அறிக்கை தேவையா? மாதம்பட்டி ரங்கராஜூக்கு மனசாட்சி இல்லையா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
- மஹாகாலேஷ்வர் கோவிலில் இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
- ஏராளமான மக்கள் கடவுளிடம் வருகிறார்கள். அவர் ஒவ்வொரு முறையும் அவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்கிறார்.
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள ஸ்ரீ மஹாகாலேஷ்வர் கோவிலில் நடந்த பஸ்ம ஆரத்தியில் நடிகர் ரவி மோகன் கலந்து கொண்டு வழிபாடு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மஹாகாலேஷ்வர் கோவிலில் இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் மிகவும் உற்சாகமாக உணர்கிறேன். இது ஒரு அழகான ஆன்மீக இடம். ஏராளமான மக்கள் கடவுளிடம் வருகிறார்கள். அவர் ஒவ்வொரு முறையும் அவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்கிறார். இது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது.
உலகக்கோப்பையை இந்திய மகளிர் அணி வென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்த்துகள். இது பெண்கள் சக்தி! கோ கேர்ள்ஸ்!
இவ்வாறு அவர் கூறினார்.








