என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • விபின் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் கீதா கைலாசம், சரண் சக்தி, பரணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
    • அங்கம்மாள் திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

    எழுத்தாளர் பெருமாள் முருகனின் சிறுகதையை தழுவி உருவாகி வரும் அங்கம்மாள். எழுத்தாளர் பெருமாள் முருகனின் சிறுகதையை தழுவி உருவாகி வரும் அங்கம்மாள். இப்படத்தை ஸ்டோர் பெஞ்ச் நிறுவனம், என்ஜாய் பிலிம்ஸ் மற்றும் பிரோ மூவி ஸ்டேஷன் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளது.

    விபின் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் கீதா கைலாசம், சரண் சக்தி, பரணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் சரண், பரணி, முல்லையரசி மற்றும் தென்றல் ரகுநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக அஞ்சோய் சாமுவேல், இசையமைப்பாளராக முகமது மக்பூல் மன்சூர் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இப்படம் டிசம்பர் 5-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

    இது ஒரு கிராமத்தில் ஜாக்கெட் அணியாத தாயின் வழக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாத கதைக்களத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

    படத்தின் இரண்டாவது ஹீரோ ஏ.ஆர்.ரகுமான்.

    இந்திய விமானப்படை வீரராக இருக்கும் தனுஷ் கோபக்காரராக இருக்கிறார். தனது கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல், தனக்கு மேல் உள்ள அதிகாரிகள் பேச்சையும் கேட்காமல் தன் மனதிற்கு சரி என பட்டதை செய்கிறார்.

    ஆனால், இந்திய விமானப்படை சார்பில் தனுஷின் கோபத்தை கட்டுப்படுத்தி, ஒழுக்கமாக பணியாற்ற வேண்டும் என சைக்காலஜி மருத்துவரிடம் கவுசிலிங் எடுக்க உத்தரவிடப்படுகிறது.

    தனுஷூக்கு கவுன்சிலிங் கொடுக்க வருகிறார் கதாநாயகி க்ரித்தி சனோன். இருவரும் சந்திக்கின்றனர். ஒரு பக்கம் க்ரித்தி தனது ஆய்வறிக்கை மூலம் வன்முறையான மனிதனை சராசரி மனிதனாக மாற்ற முடியும் என நம்புகிறார். இதற்காக, தனுஷிடம் பழகுகிறார்.

    தனுஷை மாற்றிவிட்டால் ஆய்வறிக்கை நிறைவு பெறும் என நினைக்கிறார். ஆனால், தனுஷ்க்கு க்ரித்தி மீது காதல் மலர, க்ரித்தியோ நீ வேண்டுமானால் காதலித்துக் கொள், நான் அப்படி பார்க்கவில்லை என்கிறார். ஆனால், காலங்கள் கடக்க இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது.

    இருந்தாலும், வன்முறையோடு இருக்கும் இப்படி ஒரு மனிதனை கீர்த்தியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனாலும், தனது தந்தையை வந்து பார்க்கும்படி தனுஷிடம் கூறுகிறார்.

    அப்போது, தனுஷை யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டு வரும்படி சவால் விடுகிறார். அதன்பிறகு, தனுஷ் சவாலில் ஜெயிக்கிறாரா? க்ரித்தியை கரம் பிடிக்கிறாரா? என்பது படத்தின் மீதிக்கதை..

    நடிகர்கள்

    சர்கர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள தனுஷ் மிரட்டியிருக்கிறார். எமோஷனல் காட்சிகளில் ராஞ்சனாவை நினைவுப்படுத்துகிறார். க்ரித்தி சனோன் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். க்ரித்தியின் தந்தையாக நடித்துள்ள பிரகாஷ் ராஜ் கண் கலங்கவைத்துவிட்டார்.

    இயக்கம்

    ராஞ்சனா படத்தை போல் இப்படத்திலும் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் தனது வழக்கமான காதல் கதையில் பட்டையை கிளப்பியுள்ளார். எமோஷனல் காட்சிகளில் நம்மை கலங்க வைத்திருக்கிறார். அதுவே படத்தின் வெற்றி.

    இசை

    படத்தின் இரண்டாவது ஹீரோ ஏ.ஆர்.ரகுமான். பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு உயிர்.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவு படத்தின் பலம்.

    ரேட்டிங்: 3.5/5

    • பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • பிக்பாஸ் போட்டியாளர் கானா வினோத் தான் தற்போது அனைவருக்கும் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளார்.

    பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாட்கள் நெருங்க நெருங்க யார் வின்னராகப் போகிறார் என்ற பதற்றமும் அதிகரித்து வருகிறது. பிக்பாஸ் போட்டியாளர் கானா வினோத் தான் தற்போது அனைவருக்கும் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளார். இவர் தான் வின்னராவார் என்ற கருத்துகளும் மேலோங்கி வருகிறது.

    பிக்பாஸ் நிகழ்ச்சி என்ன தான் 50 நாட்களை கடந்தாலும் இன்னும் இந்த நிகழ்ச்சியில் விறுவிறுப்பு இல்லை என்று தான் கூறப்படுகிறது. அதாவது, தேவையில்லாத சண்டைகள் ஆடியன்ஸை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.மேலும், பார்வதி செய்யும் வேலைகள் இன்னும் கடுப்பேற்றுவதாக தெரிவித்துள்ளனர்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் தம்பதியராக கலந்து கொண்ட பிரஜினும் சாண்ட்ராவும் நாங்கள் தனித்தனி கண்டஸ்டண்ட் என்று சொல்லிக் கொண்டு ஒரே போட்டியை தான் விளையாடி வருகின்றனர். அதேபோன்று சாண்ட்ரா ஆரம்பத்தில் அமைதியாக இருந்த நிலையில் தற்போது தன் வில்லத்தனத்தை எல்லாம் காண்பித்து வருகிறார். வீட்டினுள் சண்டையை மூட்டி விடுவது. பார்வதியுடன் சேர்ந்து எல்லோரையும் தரக்குறைவாக பேசுவது என பல வேலைகளை செய்து வருகிறார்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருத்தர் வெளியேறுவார்கள். அப்படி, கடந்த சில வாரங்களாக பிரவீன் காந்தி, நந்தினி, அரோரா சி.ஜே., ஆதிரை, துஷார், பிரவீன் காந்தி, திவாகர், கெமி ஆகியோர் வெளியேறினார்கள்.

    இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேறுவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வாக்குகளின் அடிப்படையில் கனி மற்றும் ரம்யா ஜோ குறைந்த வாக்குகளை பெற்றுள்ளதாகவும் இந்த இருவர்களில் ஒருவர் பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

    படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான கண்ணம்மா பாடலும் அண்மையில் வெளியானது.

    சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'மான் கராத்தே' படத்தை இயக்கிய திருக்குமரன் அடுத்ததாக அருண் விஜய் -யின் 'ரெட்ட தல' படத்தை இயக்கியுள்ளார்.

    இப்படத்தில் அருண் விஜயின் ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். இவர் இதற்கு முன் சிம்பு நடித்த 'வெந்து தணிந்தது காடு' படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    மேலும், இப்படத்தில் தன்யா ரவிச்சந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தின் இசையை சாம். சி.எஸ் மேற்கொள்கிறார். பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    இப்படத்தில் அருண் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார். படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான கண்ணம்மா பாடலும் அண்மையில் வெளியானது.

    'ரெட்ட தல' திரைப்படம் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வரும் டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

    இந்த நிலையில், பல்வேறு காரணங்களால் வரும் டிசம்பர் 25ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    அஸ்வின் விநாயகமூர்த்தி இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.

    கிஷோர் தனது மனைவி அபிராமி, தங்கை மகளுடன் வாழ்ந்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த கிஷோர், சிறு பிரச்சனையில் வேலையை விட்டு சொந்தமாக கார் வாங்கி கால் டாக்ஸி ஓட்டி வருகிறார். ஃபுட் டெலிவரி செய்து வரும் டிடிஎஃப் வாசன், கிஷோரின் தங்கை மகளை காதலித்து வருகிறார்.

    ஒரு நாள் கிஷோருக்கு விபத்து ஏற்பட்டு காலில் அடிபடுகிறது. இதிலிருந்து கார் ஓட்ட முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. அதே சமயம் போலீஸ் அதிகாரியாக இருக்கும் போஸ் வெங்கட், லாக்கப்பில் ஒருவரை அடித்து கொன்று விடுகிறார். இந்த பழியை கிஷோர் மீது சுமத்தி அவரை சிக்க வைக்கிறார்.

    இறுதியில் லாக்கப் டெத் கொலை வழக்கில் இருந்து கிஷோர் மீண்டாரா? கிஷோரை சிக்க வைக்க காரணம் என்ன? டிடிஎஃப் வாசன் கிஷோருக்கு உதவினாரா? என்பதே படத்தின் மீதி கதை.

    நடிகர்கள்

    படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிஷோர் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குடும்பத்தினருடன் சந்தோஷமாகவும், குடும்ப கஷ்டத்திற்காக வருந்துவது, அடிவாங்குவது என நடிப்பில் பளிச்சிடுகிறார். பொறுப்பான குடும்பத் தலைவியாகவும், கணவருக்காக வருந்தும் இடத்திலும் அபிராமி நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.

    படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிய டிடிஎஃப் வாசனுக்கு நடிப்புத்திறனை வெளிப்படுத்த அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். போலீஸ் அதிகாரியான போஸ் வெங்கட், கிஷோரின் நண்பர் சிங்கம்புலி, முதலமைச்சர் ஆடுகளம் நரேன் ஆகியோர் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

    இயக்கம்

    லாக்கப் டெத்தை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் கருணாநிதி. முதல் பாதி திரைக்கதை புரியாமலும் இரண்டாம் பாதி திரைக்கதை மெதுவாகவும் நகர்த்தி இருக்கிறார் இயக்குனர். தேவையில்லாத காட்சிகள் படத்திற்கு பலவீனம். அழுத்தமான காட்சிகளை வைத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

    இசை

    அஸ்வின் விநாயகமூர்த்தி இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணிசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    ஒளிப்பதிவு

    பிச்சுமணியின் ஒளிப்பதிவை ஓரளவுக்கு ரசிக்க முடிகிறது.

    ரேட்டிங்- 2.5/5

    • ஒரு மகனாக நீங்கள் காட்டிய வழியில் நடப்பதை பெருமையாக உணர்கிறேன்.
    • இந்த தருணத்தில் கௌரவ முனைவர் பட்டம் பெற்ற திரு குருஸ்வாமி சந்திரசேகரன் அவர்களுக்கும் எங்களின் அன்பான வாழ்த்துகள்.

    தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நடிகர் சிவகுமார், ஓவியர் குருசாமி சந்திரசேகரன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனைக்கான மதிப்புறு முனைவர் பட்டங்களை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து நடிகரும், சிவகுமாரின் மகனுமான கார்த்தி நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள கடிதத்தில்,

    அன்புடையீர்,

    ஒரு நடிகராக பல தலைமுறைகளைக் கவர்ந்ததோடு, ஓவியக் கலை மீது கொண்ட பேராதரவும் அப்பாவின் வாழ்க்கையை தனித்துவமாக்கியது.

    கம்பன் என் காதலன். திருக்குறன் 100. மகாபாரத உரை போன்ற பெரும் இலக்கியங்களை மக்கள் மனங்களில் நவீனமாகப் பதிய வைத்த அவரின் பணி, தமிழ் மரபை பாதுகாக்கும் வாழ்நாள் அரப்பணிப்பு.

    அப்பாவின் கலைச்சேவையை பெருமைப்படுத்தும் விதமாக தமிழக முதலமைச்சர் கைகளால் அப்பாவுக்கு வழங்கப்பட்ட கௌரவ முனைவர் பட்டம், எங்களுக்கும், கலை உலகிற்கும் மிகுந்த மகிழ்வை தருகிறது. தமிழக முதலமைச்சருக்கும் தமிழக அரசுக்கும் எங்கள் அன்பார்ந்த நன்றிகள்.

    இந்த அங்கீகாரம், அவரது ஆழ்ந்த உழைப்புக்கும், கலை-இலக்கிய ஈடுபாடுக்கும் கிடைத்த உரிய மரியாதை.

    ஒரு மகனாக நீங்கள் காட்டிய வழியில் நடப்பதை பெருமையாக உணர்கிறேன்.

    இந்த தருணத்தில் கௌரவ முனைவர் பட்டம் பெற்ற திரு குருஸ்வாமி சந்திரசேகரன் அவர்களுக்கும் எங்களின் அன்பான வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். 



    • சென்னை மற்றும் பிற முக்கிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
    • கடந்த மாதம் படிப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

    நடிகர் கவுதம் ராம் கார்த்திக் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'ரூட் - ரன்னிங் அவுட் ஆஃப் டைம்'. ரஜினிகாந்தின் 'கோச்சடையான்' படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றிய அறிமுக இயக்குநர் சூரியபிரதாப் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் நடிகை அபர்சக்தி குரானா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். நடிகை பவ்யா திரிகா, கவுதம் ராம் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

    இப்படத்தில் ஒய்.ஜி.மகேந்திரன், பாவ்னி ரெட்டி, லிங்கா, ஆர்.ஜே.ஆனந்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அறிவியல் கற்பனையும், உணர்ச்சியைப் பிணைந்து கலந்த ஒரு வித்தியாசமான கிரைம் திரில்லராக இப்படம் உருவாகி உள்ளது. சென்னை மற்றும் பிற முக்கிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, கடந்த மாதம் படிப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நடிகர் கவுதம் ராம் கார்த்திக் 'ரூட்' படத்தின் டப்பிங் பணியை நிறைவு செய்துள்ளார். இதனை தொடர்ந்து இன்னும் சில நாட்கள் படம் வெளியீடு குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • சிவகார்த்திகேயன் மற்றும் சுதா கொங்கரா இணைந்து பணியாற்றும் முதல் திரைப்படம் இதுவாகும்.
    • இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    பொங்கல் தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோவை தயாரிப்பு நிறுவனமான ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

    வீடியோவில், சிவகார்த்திகேயன் டப்பிங் பணியில் ஈடுபட்டுள்ளதையும், படத்தின் சில காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

    சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்தப் படம் 1960-ம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. 'பராசக்தி' படத்தில் ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    சிவகார்த்திகேயன் மற்றும் சுதா கொங்கரா இணைந்து பணியாற்றும் முதல் திரைப்படம் இதுவாகும். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.



    நடராஜன் சங்கரனின் பின்னணி இசை கதை கேற்றவாறு பயணித்துள்ளது.

    கிராமத்து விவசாயி பரோட்டா முருகேசனின் மகன் விஜயன் தியா சிறிய வயதில் தவறி கிணற்றுக்குள் விழுந்து விடுகிறார். உயிருக்கு போராடும் விஜயன் தியா உயிர் பிழைக்க வேண்டி ஒண்டிமுனி சாமியிடம் மகனை காப்பாற்றி கொடு உனக்கு நேர்த்திக்கடனாக ஆட்டுக்குட்டியை பலி கொடுக்கிறேன் என வேண்டுகிறார் பரோட்டா முருகேசன். மகன் விஜயன் தியாவும் உயிர் பிழைத்து விடுகிறார்.

    வேண்டிக்கொண்டபடி ஒண்டி முனிக்கு கிடாவை பலி கொடுக்க நினைக்கிறார். ஆனால் ஊர் செல்வந்தர்கள் இரண்டு பேர் இதற்கு தடையாக இருக்கிறார்கள். ஆண்டுகளும் கடந்து ஓடுகிறது. பரோட்டா முருகேசனின் மகன் விஜயன் தியாவும் வளர்ந்து பொறுப்பின்றி இருந்து வருகிறார். இந்நிலையில் ஒண்டிமுனிக்கு பலி கொடுக்க இருந்த கிடா காணாமல் போகிறது.

    இறுதியில் காணாமல் போன கிடாவை பரோட்டா முருகேசன் கண்டுபிடித்தாரா? ஒண்டிமுனிக்கு கிடாவை பலி கொடுத்தாரா? என்பதே படத்தின் மீதி கதை.

    நடிகர்கள்

    பரோட்டா முருகேசனின் இயல்பான நடிப்பு படத்திற்கு பலம். காடு மேடுகளில் செருப்பு இல்லாமல் நடந்து செல்வது, குடும்பத்துக்காக அவர் படும் கஷ்டங்கள், கிடா விருந்து வைப்பதற்கு அவர் அனுபவிக்கும் சிரமங்கள் என உடலை வருத்திக் கொண்டு கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

    மகனாக வரும் விஜயன் தியா பொறுப்பற்ற கிராமத்து இளைஞனாக நடித்து, பின்னர் தந்தையின் நிலையை அறிந்து வாழ தொடங்குவது என காட்சிகளில் கவனிக்கும்படியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கதாநாயகியாக வரும் வித்யா சக்திவேல் கிராமத்து காதலை கண்முன் நிறுத்தியுள்ளார். பரோட்டா முருகேசன் மகளாக வரும் சித்ரா நாகராஜனின் எதார்த்த நடிப்பு படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது.

    இயக்கம்

    கிராமத்தில் நடந்த ஒரு உண்மை கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சுகவனம். மனிதர்களின் வாழ்வியலை யதார்த்தத்தோடும் இயல்பாகவும் வெளிக் கொண்டு வந்துள்ள இயக்குனர் சுக வனத்துக்கு பெரிய பாராட்டுக்கள்.

    இசை

    நடராஜன் சங்கரனின் பின்னணி இசை கதை கேற்றவாறு பயணித்துள்ளது.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் ஜேடி விமல், கிராமத்தின் அழகை மாறாமல் படம் பிடித்து இருக்கிறார்.

    • என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி.
    • 100 ஜென்மம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் ஒரு நடிகனாக, ரஜினிகாந்தாகவே பிறக்க விரும்புகிறேன்.

    கோவாவில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் நடைபெறும் மிக முக்கியமான திரைப்பட விழாக்களில் இதுவும் ஒன்று. இது உலகளாவிய திரைப்படங்களையும், உள்ளூர் திறமைகளையும் வெளிப்படுத்துகிறது.

    அந்தவகையில் இந்த ஆண்டுக்கான திரைப்பட விழா, கோவாவில் 20-ந்தேதி தொடங்கியது. இதில் பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

    மேலும் திரைப்படம் சார்ந்த ஆவணப்படங்கள், ஆய்வறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட உள்ளன. சிறப்பு ஆய்வரங்குகள், பயிற்சி பட்டறைகளும் நடைபெற்றன.

    இந்நிலையில் விழாவின் இறுதி நாளான இன்றைய நிகழ்வில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்துள்ளதைச் சிறப்பிக்கும் வகையில் வாழ்நாள் சாத்தையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

    விருது பெற்றது குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி.  நான் நடிப்பையும் சினிமாவையும் காதலிக்கிறேன். 100 ஜென்மம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் ஒரு நடிகனாக, ரஜினிகாந்தாகவே பிறக்க விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார்.

    இந்த நிகழ்ச்சியில், மத்திய இணையமைச்சர் எல். முருகன், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இந்த விழாவை இந்திய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் மற்றும் கோவா மாநில அரசு ஆகியவற்றால் இணைந்து நடத்தப்படுகிறது.

    • இந்து அமைப்புகள் உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகளின் எதிர்ப்பை சம்பாதித்தார் பிருத்விராஜ்.
    • ஜெயன் நம்பியார் இயக்கிய பிருத்விராஜின் சமீபத்திய திரைப்படமான 'விலாயத் புத்தா' நவம்பர் 21 அன்று வெளியிடப்பட்டது.

    மலையாள திரையுலகில் குறிப்பிடத்தக்க ஆளுமையாக திகழ்பவர் பிருத்விராஜ். மலையாளம், தமிழ் படங்களில் கதாநாயக வளம் வரும் பிருத்விராஜ் கடந்த 2019 இல் மோகன்லாலை வைத்து லூசிபர் என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.

    முதல் படத்திலேயே தேர்ந்த இயக்குனரான பரிமளித்தார் பிருத்விராஜ். இப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் கடந்த மார்ச் மாதம் இப்படத்தின் 2 ஆம் பாகமான எம்புரான் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

    இருப்பினும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இந்த படத்தில் 2002 குஜராத் கலவரத்தில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையை காட்சிப்படுத்தியதால் இந்து அமைப்புகள் உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகளின் எதிர்ப்பை சம்பாதித்தார் பிருத்விராஜ்.

    இந்நிலையில் ஒரு நடிகராக தனது மகனை திரைப்படத் துறையிலிருந்து அழிக்க சிலர் பெரிய சதித்திட்டம் தீட்டி வருவதாக பிருத்விராஜின் தாயார் மல்லிகா சுகுமாரன் கவலை தெரிவித்துள்ளார்.

    மலையாள ஊடகங்களுக்கு மல்லிகா சுகுமாரன் அளித்த பேட்டியில் "பிருத்விராஜை குறிவைத்து சமூக ஊடகங்களில் தொடர்ந்து தவறான பிரச்சாரம் பரப்பப்படுகிறது. இது அவரை சினிமா தொழிலில் இருந்து நீக்க திட்டமிட்ட முயற்சி" என்று கூறினார்.

    ஜெயன் நம்பியார் இயக்கிய பிருத்விராஜின் சமீபத்திய திரைப்படமான 'விலாயத் புத்தா' நவம்பர் 21 அன்று வெளியிடப்பட்டது.

    இந்தப் படம் வெளியானதிலிருந்து ஒரு குழு தனது மகனை வேண்டுமென்றே குறிவைத்து வருவதாகவும் அவர்கள் பிருத்விராஜை தொழில் ரீதியாக மட்டுமல்ல, தனிப்பட்ட முறையிலும் அவமானப்படுத்த முயற்சிக்கின்றனர் என்றும் குற்றம் சாட்டினார்.

    பிரபல மலையாள நாவலை தழுவி சந்தன மரகடத்தல் பற்றிய கதைக்களத்துடன் எடுக்கப்பட்ட 'விலாயத் புத்தா' எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.  

    விலாயத் புத்தா படத்தின் காட்சிகளை தவறாக சித்தரித்ததாகவும், வகுப்புவாத பதட்டங்களைத் தூண்டும் நோக்கில் அவற்றை திரித்து கூறியதாகவும் கூறி படத்தின் தயாரிப்பாளர் அளித்த புகாரின் பேரில் ஒரு யூடியூப் சேனலுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

    நான் கல்லூரியில் படிக்கும் போது, என் பெயர் உமர் ஷெரீப் என்று எல்லோரிடமும் சொல்வேன்.

    மலையாளத் திரையுலகில் மெகாஸ்டார் என்று லட்சக்கணக்கான ரசிகர்களால் போற்றப்படும் நடிகர் மம்மூட்டி உடைய இயற்பெயர் 'முகமது குட்டி பனப்பரம்பில் இஸ்மாயில்' ஆகும்.

    இந்நிலையில் தனது பெயர் மம்மூட்டி என மறுவியதற்கு பின்னால் உள்ள சுவாரஸ்யமான கதையை அவர் பகிர்ந்துள்ளார்.

    கேரளாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், மம்மூட்டி தனது கல்லூரி நாட்களை நினைவு கூர்ந்தார்.

    அப்போது, "நான் கல்லூரியில் படிக்கும் போது, என் பெயர் உமர் ஷெரீப் என்று எல்லோரிடமும் சொல்வேன். என் உண்மையான பெயர் முகமது குட்டி என்று யாருக்கும் தெரியாது.

    ஒரு நாள், என் ஐடி கார்டு தற்செயலாக பாக்கெட்டில் இருந்து கீழே விழுந்துவிட்டது. இதன் காரணமாக, எனது உண்மையான பெயர் முழு கல்லூரிக்கும் தெரிய வந்தது என்று தெரிவித்தார்.

    அந்த நேரத்தில், அவரது நண்பர்களில் ஒருவரான சசிதரன், ஐடி கார்டில் 'முகமது குட்டி' என்ற பெயரை 'மம்மூட்டி' என்று தவறாகப் படித்ததாகக் கூறினார்.

    எனவே, "அவர் தவறாகப் படித்த பெயர் பின்னர் எனக்குப் பொருத்தமாகிவிட்டது" என்று மம்மூட்டி சிரித்தபடி கூறினார்.

    இந்த சந்தர்ப்பத்தில், அவர் தனது நண்பர் சசிதரனை மேடைக்கு அழைத்து பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார். ரஜினியின் குசேலன் படம் போல நடந்த இந்த நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 

    ×