என் மலர்
நீங்கள் தேடியது "ரூட்"
- சென்னை மற்றும் பிற முக்கிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
- அக்டோபர் மாதம் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
நடிகர் கவுதம் ராம் கார்த்திக் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'ரூட் - ரன்னிங் அவுட் ஆஃப் டைம்'. ரஜினிகாந்தின் 'கோச்சடையான்' படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றிய அறிமுக இயக்குநர் சூரியபிரதாப் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் நடிகை அபர்சக்தி குரானா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். நடிகை பவ்யா திரிகா, கவுதம் ராம் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இப்படத்தில் ஒய்.ஜி.மகேந்திரன், பாவ்னி ரெட்டி, லிங்கா, ஆர்.ஜே.ஆனந்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அறிவியல் கற்பனையும், உணர்ச்சியைப் பிணைந்து கலந்த ஒரு வித்தியாசமான கிரைம் திரில்லராக இப்படம் உருவாகி உள்ளது. சென்னை மற்றும் பிற முக்கிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அக்டோபர் மாதம் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், 'ரூட்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டார். இதுதொடர்பான புகைப்படங்களை வெளியிட்ட நடிகர் கவுதம் ராம் கார்த்திக், 'ரூட்டின்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிடுவது உண்மையிலேயே நம்பமுடியாத அனுபவம். 2026 ஐத் தொடங்க என்ன ஒரு யதார்த்தமான வழி!
அவரது ஆசீர்வாதங்களுடன், ரூட் ஒரு காலமற்ற பயணத்தில் அடியெடுத்து வைக்கிறது என்று கூறியுள்ளார்.
- சென்னை மற்றும் பிற முக்கிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
- கடந்த மாதம் படிப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
நடிகர் கவுதம் ராம் கார்த்திக் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'ரூட் - ரன்னிங் அவுட் ஆஃப் டைம்'. ரஜினிகாந்தின் 'கோச்சடையான்' படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றிய அறிமுக இயக்குநர் சூரியபிரதாப் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் நடிகை அபர்சக்தி குரானா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். நடிகை பவ்யா திரிகா, கவுதம் ராம் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இப்படத்தில் ஒய்.ஜி.மகேந்திரன், பாவ்னி ரெட்டி, லிங்கா, ஆர்.ஜே.ஆனந்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அறிவியல் கற்பனையும், உணர்ச்சியைப் பிணைந்து கலந்த ஒரு வித்தியாசமான கிரைம் திரில்லராக இப்படம் உருவாகி உள்ளது. சென்னை மற்றும் பிற முக்கிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த மாதம் படிப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நடிகர் கவுதம் ராம் கார்த்திக் 'ரூட்' படத்தின் டப்பிங் பணியை நிறைவு செய்துள்ளார். இதனை தொடர்ந்து இன்னும் சில நாட்கள் படம் வெளியீடு குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.