என் மலர்
- கன்லால் உடன் ஷனயா கபூர், ஜாரா கான், ரோஷன் மேகா, ஸ்ரீகாந்த் மேகா நடித்துள்ளனர்.
- அரசர் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.
மோகன்லால் நடித்துள்ள பான் இந்தியன் காவியம் விருஷபா. இதில் மோகன்லால் உடன் ஷனயா கபூர், ஜாரா கான், ரோஷன் மேகா, ஸ்ரீகாந்த் மேகா, ரகினி துவேவிடி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை நந்தா கிஷோர் இயக்கியுள்ளார். மேலும் எக்தா ஆர் கபூர் (Balaji Telefilms), Connekkt Media, AVS Studios ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. படத்தின் இசையை Sam CS மேற்கொண்டுள்ளார்.
அரசர் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.
இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் கிறிஸ்துமஸை ஒட்டி டிசம்பர் 25 அன்று வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
- இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற உள்ளது
- விஜய் நடிக்கும் கடைசிப் படம்
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில், உருவாகி வரும் படம் ஜன நாயகன். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார்.
அரசியலால் விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான "தளபதி கச்சேரி" வெளியாகி அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற உள்ளது. தொடர்ந்து படத்தின் இறுதிக்கப்பட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை மறுநாள் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
- கூலி படம் முதல் 4 நாட்களில் உலகளவின் மொத்தம் ரூ.404 கோடிகளுக்கு மேல் வசூல் குவித்தது.
- எதிர்மறை விமர்சனங்களால் கூலி படத்தின் வசூல் வெகுவாக குறைந்தது.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் முதல் 4 நாட்களில் உலகளவின் மொத்தம் ரூ.404 கோடிகளுக்கு மேல் வசூல் குவித்தது. தமிழ் சினிமாவில் ரூ.1000 கோடி வசூலை குவித்த முதல் படம் என்ற சாதனையை கூலி படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்மறை விமர்சனங்களால் இப்படத்தின் வசூல் வெகுவாக குறைந்தது. மொத்தத்தில் இப்படம் உலக அளவில் 518 கோடி ரூபாய் தான் வசூல் செய்தது. ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.500 கோடி வசூலை மட்டுமே குவித்து ஏமாற்றம் தந்தது.
இந்நிலையில், கூலி படம் நன்றாக தான் இருந்தது என்று சமீபத்திய பேட்டியில் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவித்தார்.
அந்த நேர்காணலில் பேசிய அஸ்வின், "கூலி படம் நன்றாக இல்லை என்ற கருத்து அதிகப்படியாக வந்தது. அந்தப் படம் ஓடிடியில் வந்த பின்பு நான் பார்த்தேன். என்னை பொறுத்தவரை ஒரு படத்தை முழுவதுமாக ஒரே அமர்வில் பார்க்க முடிகிறதா என பார்ப்பேன். என்னால் 'கூலி' படத்தை ஒரே அமர்வில் பார்க்க முடிந்தது.
அதனை பார்த்து முடித்த பின் ஒரே ஒரு கேள்வி தான் என்னை நானே கேட்டுக் கொண்டேன். 'இணையத்தில் வரும் விஷயங்களை அப்படியே ஏற்றுக் கொள்ள பழகிவிட்டேனா?'. ஒரு விமர்சகராக அந்தப் படத்தில் 10 குறைகள் கூட கண்டுபிடிக்கலாம். ஆனால் இவர்கள் சொன்ன அளவு அந்தப் படம் மோசமில்லை" என்று தெரிவித்தார்.
- படம் ரூ.15 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன
- பராசக்தி பொங்கலுக்கு வெளியாக உள்ளது
நடிகர் ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால திரைப்பயணம், அவரது 75வது பிறந்தநாள் உள்ளிட்டவற்றை சிறப்பிக்கும் வகையில் அவரது பிளாக்பஸ்டர் படமான படையப்பா, டிச.12ஆம் ரீரிலீஸ் செய்யப்பட்டது. இதுதொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு வீடியோ எல்லாம் வெளியிட்டிருந்தார். ரீரிலீஸுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
ரஜினிகாந்தின் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். படம் ரூ.15 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் நடிகரும், ரஜினியின் ரசிகருமான சிவகார்த்திகேயனும் படையப்பா படத்தை திரையரங்கில் கண்டு ரசித்துள்ளார். சிவகார்த்திகேயன் புரொடக்ஷன் இணை தயாரிப்பாளர் கலையரசன் இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் பராசக்தி. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படம், பொங்கலுக்கு வெளியாகி உள்ளது.
- படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது.
- படக்குழு வெளியிட்ட வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் 'பராசக்தி' படம், அடுத்தாண்டு (2026) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது.
இதற்கிடையில் பல ஆண்டுகளுக்கு முன்பு மெட்ராசில் நடைபெற்ற ஒரு உரிமை மறுப்பு போராட்டத்தில், கிளர்ச்சியாளர்களை ஒழிக்க ஒரு அதிகாரி வருகிறார். ஆனால் அவரது சகோதரர் தான் போராட்டத்துக்கு மூலகாரணமாக இருக்கிறார். இறுதியில் பாசமா? நீதியா? என்ற சூழலில் நாயகன் எடுக்கும் முடிவு தான் 'பராசக்தி' படத்தின் கதை என்ற தகவல் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. இதனால் 'பராசக்தி' படத்தின் வெளியீட்டை நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து உள்ளனர்.
இந்த நிலையில், 'பராசக்தி' படத்தில் வரும் காட்சிகளை கொண்ட 10 நிமிட வீடியோவை வருகிற 18-ந்தேதி சென்னை வள்ளுவர்கோட்டத்தில் வெளியிட உள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இது சினிமா வரலாற்றில் முதன்முறையாக நடைபெற உள்ள நிகழ்வு என்பதால் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர்.
படக்குழு வெளியிட்ட வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- இப்படம் வருகிற கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாக உள்ளது.
- இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். இவர் தமிழில் 'நான் ஈ', 'அருந்ததி', 'புலி' ஆகிய திரைப்படங்களில் வில்லனாக நடித்து தமிழ் மக்களின் மனதில் பதிந்தார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான 'மேக்ஸ்' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்த விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் 'மார்க்' திரைப்படத்தில் கிச்சா சுதீப் நடித்துள்ளார். இது இவரின் 47வது திரைப்படமாகும். இப்படம் வருகிற கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாக உள்ளது. இதையொட்டி இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், சென்னையில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், இயக்குநர், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது பத்திரிகையாளர் ஒருவர் நடிகை நோக்கி கடுமையான கேள்விகளை கேட்டார். அதற்கு தகுந்த பதிலடி கொடுத்ததற்காக கிச்சா சுதீப்பை இணையதள வாசிகள் பாராட்டி வருகின்றனர்.
'வணங்கான்' படத்தில் உள்ள அருமையான வசனங்களைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். இந்தப் படத்தில் உங்களிடம் அவ்வளவு வசனங்கள் உள்ளதா?
ஏனென்றால் நடிகைகளை இங்கே ஓரமாக உட்கார வைத்திருக்கிறார்கள். படத்திலும் அப்படித்தான் இருக்குமா?' என்று ஒரு பத்திரிகையாளர் கேள்வி கேட்டார். அதற்கு உடனே கிச்சா சுதீப், 'எங்கள் படப்பிடிப்பு தளத்தில் இதுபோன்ற மோசமான கேள்விகள் எதுவும் வரலை. அதனால தான் நல்லா வந்துருக்கு என்று கூறிய சுதீப் உடனடியாக அந்த நடிகைகளை அழைத்து, மேடையின் நடுவில் உட்கார வைத்து பேசச்சொன்னார். இப்படி யாருடைய மைண்டிலும் வரலை. இது போன்ற உங்கள் கேள்விகள் மற்றவர்களை சங்கடப்படுத்தும் என்று சுதீப் கூறினார்.
முன்னதாக, '96' பட நடிகை கௌரி கிஷனின் 'அதர்ஸ்' பட செய்தியாளர்கள் சந்திப்பில், உடல் எடை குறித்து யூடியூபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு கௌரி கிஷன் துணிச்சலாக பதில் அளித்து இருந்தார். இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அந்த யூடியூபர் கௌரி கிஷனிடம் மன்னிப்பு கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது.
- இந்த தகவல் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் 'பராசக்தி' படம், அடுத்தாண்டு (2026) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது.
இதற்கிடையில் 'பராசக்தி' படத்தின் கதை இதுதான் என்று கூறும் ஒரு கதை சமூக வலைதளத்தில் உலா வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு மெட்ராசில் நடைபெற்ற ஒரு உரிமை மறுப்பு போராட்டத்தில், கிளர்ச்சியாளர்களை ஒழிக்க ஒரு அதிகாரி வருகிறார். ஆனால் அவரது சகோதரர் தான் போராட்டத்துக்கு மூலகாரணமாக இருக்கிறார்.
இறுதியில் பாசமா? நீதியா? என்ற சூழலில் நாயகன் எடுக்கும் முடிவு தான் 'பராசக்தி' படத்தின் கதை என கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடித்துள்ள படம், 'பராசக்தி'. இது சிவகார்த்திகேயனின் 25வது படம்.
ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரித்துள்ள இப்படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாயகியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் ரிலீஸாக உள்ளது.
இதனிடையே இப்படத்தின் அடி அலையே, ரத்னமாலா பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடலான, நமக்கான காலம் பாடல் வெளியாகி உள்ளது. இப்பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், பராசக்தி படத்தில் இடம்பபெற்றுள்ள ஒரு பாடலை சிவகார்த்திகேயன் பாடியுள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
அதன்படி, படத்தின் "தரக்கு தரக்கு" பாடலை சிவகார்த்திகேயன் பாடியுள்ளார். இதனை, ஜி.வி.பிரகாஷ் புகைப்படத்துடன் பதிவு வெளியிட்டு அறிவித்துள்ளார்.
- பாதிக்கப்பட்டவருக்கு நீதி இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை
- பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்பதே அறம்
கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் 8 ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு, 6 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் பிரபல நடிகர் திலீப் உட்பட 4 பேர் விடுவிக்கப்பட்டனர். இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்தநிலையில், கேரள அரசு மேல்முறையீடு செய்யப்படும் என தெரிவித்திருந்தது.
இதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நடிகையும், நடிகை மஞ்சு வாரியரும் இதுதொடர்பாக கருத்து தெரிவித்திருந்தனர். "நீதிமன்றத்தின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு நீதி இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை. குற்றத்தைச் செய்தவர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொடூரச் செயலைத் திட்டமிட்டு, அதற்கு வழிவகுத்த அந்த மாஸ்டர் மைண்ட் அது யாருடையதாக இருந்தாலும், இன்னும் சுதந்திரமாக நடமாடுகிறது, அதுவே மிகவும் அச்சமூட்டுகிறது." என மஞ்சு வாரியர் தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் மஞ்சு வாரியரின் பக்கமே தான் நிற்பதாக நடிகரும், இயக்குநருமான அமீர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பதிவிட்டிருந்த அவர்,"பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்பதே அறம். தீர்ப்புகள் எல்லாம் நீதி ஆகிவிடாது. மஞ்சு வாரியரின் பக்கமே நான் நிற்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும், குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற இளமை இதோ, இதோ, ஒத்த ரூபா தாரேன், என் ஜோடி மஞ்சக்குருவி பாடல்களை நீக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும்," அனுமதியின்றி பாடல் பயன்படுத்துவதை தடுக்க, பாடலை உருமாற்றம் செய்வதை தடுக்க இளையராஜாவுக்கு உரிமை உண்டு.
இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை" என்று நீதிபதி தெரிவித்தார்.
இடைக்கால தடையை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி செய்த நீதிமன்றம் பிரதான வழக்கின் விசாரணையை ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்நிலையில்,'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
படத்திலிருந்து பாடல்கள் நீக்கப்பட்டதாகவும், இனி இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த மாட்டோம் என மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் உறுதி அளித்ததால் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'மான் கராத்தே' படத்தை இயக்கிய திருக்குமரன் அடுத்ததாக அருண் விஜயின் 'ரெட்ட தல' படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். இவர் இதற்கு முன் சிம்பு நடித்த 'வெந்து தணிந்தது காடு' படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சாம். சி.எஸ் இசையமைத்துள்ளார். பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
இப்படத்தில் அருண் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 25-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், 'ரெட்ட தல' படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகியுள்ளது.
- மலேசியாவில் நடைபெற்று வரும் கார் பந்தய போட்டியில் அஜித்குமார் ரேசிங் அணி பங்கேற்றுள்ளது.
- அஜித்குமாரை நடிகர் சிம்பு, நடிகை ஸ்ரீ லீலா, இயக்குனர் சிறுத்தை சிவா ஆகியோர் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் அஜித் குமார். சினிமா தாண்டி கார் பந்தயத்திலும் கலக்கி வரும் நடிகர் அஜித் குமார், சமீபத்தில் ஸ்பெயினில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் 3-வது இடம் பிடித்தார்.
இதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு (2026) அபுதாபியில் நடைபெறும் கார் பந்தய போட்டிகளிலும் அஜித்குமார் ரேசிங் அணி கலந்து கொள்கிறது. இதற்கு முன்னதாக மலேசியாவில் நடைபெற்று வரும் கார் பந்தய போட்டியில் அஜித்குமார் ரேசிங் அணி பங்கேற்றுள்ளது.
இந்நிலையில் அங்கு அஜித்குமாரை நடிகர் சிம்பு, நடிகை ஸ்ரீ லீலா, இயக்குனர் சிறுத்தை சிவா ஆகியோர் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகியது.
அந்த வகையில் தமிழக முதல்வரின் மருமகனான சபரீசன் அஜித் குமாரை நேரில் பார்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.








