என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sivakartikeyan"

    • மதராஸி படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
    • மதராஸி படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார்.

    சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது படமான மதராஸி திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார்.

    சில வாரங்களுக்கு முன்பு படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டது. மக்களிடம் இந்த வீடியோ பெரும் அளவு வரவேற்பை பெற்றது. திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

    படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அனிருத்- சிவகார்த்திகேயன் காம்போவில் இசையை நீண்ட நாட்கள் ஆனதால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர்.

    சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படத்தில் அனிருத் இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், திரைப்படம் வெளியாக இன்னும் 50 நாட்களே உள்ள நிலையில், அதை குறிப்பிட்டு படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

    • நடிகர் விஷ்ணு விஷால் தம்பி ருத்ரா இந்த படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
    • பாலிவுட் நடிகை மிதிலா பால்கர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர் விஷ்ணு விஷால். இவருடைய தம்பி ருத்ரா 'ஓஹோ எந்தன் பேபி' என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமாகி உள்ளார். இந்த படத்தினை விளம்பரப் பட இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். இதில் பாலிவுட் நடிகை மிதிலா பால்கர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    இந்தப் படத்தை விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ், ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் டி-கம்பெனி இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.

    காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள 'ஓஹோ எந்தன் பேபி' திரைப்படம் வருகிற ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    இந்த நிலையில், படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் நாளை மாலை 5 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு அறிவித்தது. அதனை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுவார் எனவும் தெரிவித்துள்ளது.

    • இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் பிரின்ஸ்.
    • பிரின்ஸ் படத்தில் ரியா போஷாப்கா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    சிவகார்த்திகேயன் நடித்து வெளியான 'டாக்டர்' மற்றும் 'டான்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் மக்கள் மத்தியில் இந்த இரண்டு திரைப்படங்களும் பெரும் வரவேற்பை பெற்றது.

    தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி வரும் 'பிரின்ஸ்' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் ரியா போஷாப்கா கதாநாயகியாகவும், சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள்.


    சிவகார்த்திகேயன் பட போஸ்டர்

    இந்த படத்தை தொடர்ந்து 'மண்டேலா' பட இயக்குனர் அஸ்வினுடன் இணைந்து புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்நிலையில், சிவகார்த்திகேயன் படத்தின் புதிய அப்டேட்  நாளை காலை 10.10 மணிக்கு வெளியாகவுள்ளது. இதனை  படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

    ×