என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பராசக்தி படத்தின் கதை இதுதானா? சமூக வலைதளத்தில் பரவும் தகவல்
    X

    'பராசக்தி' படத்தின் கதை இதுதானா? சமூக வலைதளத்தில் பரவும் தகவல்

    • படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது.
    • இந்த தகவல் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் 'பராசக்தி' படம், அடுத்தாண்டு (2026) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது.

    இதற்கிடையில் 'பராசக்தி' படத்தின் கதை இதுதான் என்று கூறும் ஒரு கதை சமூக வலைதளத்தில் உலா வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு மெட்ராசில் நடைபெற்ற ஒரு உரிமை மறுப்பு போராட்டத்தில், கிளர்ச்சியாளர்களை ஒழிக்க ஒரு அதிகாரி வருகிறார். ஆனால் அவரது சகோதரர் தான் போராட்டத்துக்கு மூலகாரணமாக இருக்கிறார்.

    இறுதியில் பாசமா? நீதியா? என்ற சூழலில் நாயகன் எடுக்கும் முடிவு தான் 'பராசக்தி' படத்தின் கதை என கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

    Next Story
    ×