என் மலர்
இது புதுசு
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது சர்வீஸ் ஆன் வீல்ஸ் சேவையினை சென்னையில் துவங்கி உள்ளது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஊரடங்கு காலக்கட்டத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு கைக்கொடுக்கும் வகையில் பல்வேறு முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அந்நிறுவனம் சர்வீஸ் ஆன் வீல்ஸ் எனும் சேவையை அறிவித்தது.
சர்வீஸ் ஆன் வீல்ஸ் சேவையில் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை வீட்டில் இருந்தபடி சர்வீஸ் செய்து கொள்ள முடியும். அறிவித்து ஒருமாதம் ஆகிவிட்ட நிலையில், இந்த சேவை தற்சமயம் சென்னையில் துவங்கி உள்ளது.
தற்போதைய தகவல்களின் படி சர்வீஸ் ஆன் வீல்ஸ் சேவையில் மோட்டார்சைக்கிள் ஸ்டான்டர்டு சர்வீஸ் மற்றும் பெரும்பாலான ரிப்பேர்களை வீட்டிலேயே சரி செய்து தரப்படுவதாக கூறப்படுகிறது. இந்த சேவையை வழங்க ராயல் என்ஃபீல்டு 350 டிரையல் மாடல்கள் டூல்ஸ், ஸ்பேர் மற்றும் இதர உபகரணங்கள் கொண்டு செல்லும் வகையில் ஆல்டர் செய்யப்பட்டுள்ளன.

ஆல்டர் செய்யப்பட்ட விசேஷ சர்வீஸ் மோட்டார்சைக்கிள்கள் ராயல் என்ஃபீல்டு சர்வீஸ் மையங்களில் கிடைக்கிறது. இவ்வாறு செய்வதன் மூலம் சமூக இடைவெளியை பின்பற்ற முடியும் என்பதோடு சர்வீஸ் மையங்களில் வாடிக்கையாளர்கள் அதிகளவு கூடுவதை தவிர்க்க முடியும்.
சர்வீஸ் ஆன் வீல்ஸ் சேவையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தலைசிறந்த மோட்டார்சைக்கிள் வல்லுநர்களை வாடிக்கையாளர்களின் வீட்டிற்கு அனுப்பி, அவர்களது மோட்டார்சைக்கிளை சரி செய்கிறது. இத்துடன் வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் பணம் செலுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.
போர்ஷ் நிறுவனம் 992 ஜெனரேஷன் 911 டர்போ மாடல் காரை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
போர்ஷ் நிறுவனம் புதிய 992 ஜெனரேஷன் 911 டர்போ மாடலை கூப் மற்றும் கேப்ரியோலெட் என இரண்டு வெர்ஷன்களில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மாடல் 450 ஹெச்பி திறன் வழங்கும் கரெரா 4எஸ் மற்றும் 650 ஹெச்பி டர்போ எஸ் மாடல்களுக்கு இடையே நிலைநிறுத்தப்படுகிறது.
புதிய 911 டர்போ மாடலில் 580 ஹெச்பி திறன், 750 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும் 3.7 லிட்டர் ஃபிளாட் சிக்ஸ் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 2.8 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் இது மணிக்கு அதிகபட்சம் 320 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

இந்த என்ஜினுடன் 8 ஸ்பீடு பிடிகே டூயல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் போர்ஷ் டிராக்ஷன் மேனேஜ்மென்ட் ஆக்டிவ் 4 வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலை விட அதிக செயல்திறன் வழங்க வழி செய்கிறது.
இந்தியாவில் போர்ஷ் 911 மாடல் கரெரா மற்றும் கரெரா எஸ் வெர்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 1.82 கோடி மற்றும் ரூ. 1.99 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய டாப் ரேன்ஜ் போர்ஷ் 911 டர்போ எஸ் மாடல் விலை ரூ. 3.08 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
நிசான் நிறுவனத்தின் புதிய லோகோ அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
நிசான் நிறுவனம் தனது லோகோவை மாற்றியமைத்து புதிய லோகோவினை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து இருக்கிறது. நிசான் ஆரியா எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலுடன் புதிய லோகோ அறிமுகம் செய்யப்பட்டது.
2018 ஆரியா கான்செப்ட் மாடலில் பயன்படுத்தப்பட்ட லோகோவை பயன்படுத்த நிசான் நிறுவனம் ஏற்கனவே காப்புரிமைக்கு விண்ணப்பித்து இருந்ததாக ஏற்கனவே தகவல் வெளியானது. அந்த வகையில் நிசான் புதிய லோகோ அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

நிசான் நிறுவனத்தின் வியாபார யுக்தியில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் மாற்றங்களை குறிக்கும் வகையில் புதிய லோகோ வெளியிடப்பட்டு இருக்கிறது. புதிய லோகோ நிசான் நிறுவனத்தின் கடந்த காலத்துடன் இணைந்த வாக்கில் எதிர்காலத்தை குறிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
எலெக்ட்ரிக் கார் காலக்கட்டத்தில் பல்வேறு நிறுவனங்களும் தங்களது லோகோக்களை மாற்றி புதிய லோகோவினை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றன. நிசான் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் புதிய லோகோ ஏற்கனவே மாற்றப்பட்டு உள்ளது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சொனெட் மாடல் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் சொனெட் மாடல் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. கியா செல்டோஸ் மற்றும் கார்னிவல் எம்பிவி போன்ற மாடல்கள் இந்திய சந்தையில் அமோக வரவேற்பு பெற்று இருக்கும் நிலையில், கியா சொனெட் மாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
புதிய கியா சொனெட் ஆகஸ்ட் 7 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்திய சந்தையில் இந்த மாடல் பண்டிகை காலக்கட்டத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வெளியீட்டிற்கு முன் புதிய கார் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

கியா சொனெட் புதிய ஸ்பை படங்களின் படி இந்த கார் இன்டகிரேட் செய்யப்பட்ட ரூஃப் ஸ்பாயிலர் கொண்டிருக்கிறது. காரின் பூட் லிட் முழுக்க லைட் பார் காணப்படுகிறது. இது இருபுறங்களில் உள்ள ஸ்ப்லிட் டெயில் லேம்ப்களை ஒன்றிணைக்கிறது. இத்துடன் காரை சுற்றி பாடி கிளாடிங், சிறிய குவாட்டர் விண்டோ கிளாஸ், ஸ்டீல் வீல் டிசைன் வழங்கப்படுகிறது.
காரின் முன்புறம் டைகர் நோஸ் கிரில், எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள், ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்கள் வழங்கப்படுகின்றன. உள்புறம் 10.25 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே மற்றும் யுவிஒ கனெக்ட்டெட் அம்சங்கள் வழங்கப்படுகின்றன.
கியா சொனெட் மாடலில் ஹூண்டாய் வென்யூ காரில் உள்ளதை போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் சொனெட் மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் உள்ளிட்ட என்ஜின் ஆப்ஷன்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெர்சிடிஸ் நிறுவனத்தின் புதிய ஏஎம்ஜி ஜிடி பிளாக் சீரிஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
மெர்சிடிஸ் நிறுவனத்தின் ஏஎம்ஜி ஜிடி பிளாக் சீரிஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஃபிளாக்ஷிப் ஏஎம்ஜி ஜிடி மாடல் பார்க்க கம்பீர தோற்றம் கொண்டிருக்கிறது.
புதிய மெர்சிடிஸ் மாடலில் ட்வின் டர்போ 4.0 லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 730 பிஹெச்பி பவர், 800 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த கார் ணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.2 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது.

மேலும் 200 கிலோமீட்டர் வேகத்தை வெறும் ஒன்பது நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் மணிக்கு அதிகபட்சமாக 325 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இதில் உள்ள தலைசிறந்த ஆக்டிவ் ஏரோடைனமிக் அம்சங்கள் இந்த கார் இத்தனை வேகம் செல்ல வழி செய்கிறது.
புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி பிளாக் சீரிஸ் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. மேலும் இந்த கார் எத்தனை யூனிட்கள் உற்பத்தி செய்யப்படும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், இந்த கார் 2021 ஆண்டு விநியோகம் செய்யப்பட இருக்கிறது.
நிசான் நிறுவனத்தின் ஆரியா எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
நிசான் நிறுவனத்தின் ஆரியா எலெக்ட்ரிக் எஸ்யுவி ப்ரோடக்ஷன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய எஸ்யுவி மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
புதிய நிசான் ஆரியா மாடல் ஒற்றை மோட்டார் ரியர்-வீல் டிரைவ் மற்றும் ட்வின் மோட்டார் 4-வீல் டிரைவ் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றுடன் முறையே 63 கிலோவாட் மற்றும் 87 கிலோவாட் பேட்டரிகள் வழங்கப்படுகின்றன. இதன் 63 கிலோவாட் பேட்டரி கொண்ட ஒற்றை மோட்டார் மாடல் 218 பிஹெச்பி பவர் மற்றும் 360 கிலோமீட்டர் வரை செல்லும்.

87 கிலோவாட் பேட்டரி கொண்ட மாடல் 242 பிஹெச்பி பவர் மற்றும் 500 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இரண்டு மாடல்களும் 300 என்எம் டார்க் வழங்குகிறது.
இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 7.5 நொடிகளில் எட்டிவிடும். நிசான் ஆரியா மாடல் மணிக்கு அதிகபட்சமாக 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
புதிய நிசான் ஆரியா மாடல் சர்வதேச சந்தையில் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது. இந்த மாடல் டெஸ்லா மாடல் வை மற்றும் ஃபோக்ஸ்வேகன் ஐடி4 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.
460 கிலோமீட்டர் செல்லும் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது ஐஎக்ஸ்3 மாடல் அறிமுகம் செய்தது. புதிய கார் முதற்கட்டமாக சீன சந்தையில் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. ஐந்தாம் தலைமுறை இடிரைவ் பவர்டிரெயின் கொண்டிருக்கும் புதிய ஐஎக்ஸ்3 மாடல் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மாடலாக இருக்கிறது.
தோற்றத்தால் இந்த கார் பார்க்க மூன்றாம் தலைமுறை எக்ஸ்3 போன்றே காட்சியளிக்கிறது. பிஎம்டபிள்யூ எலெக்ட்ரிக் மாடலில் புதியி கிரில், பானரோமிக் சன்ரூஃப், ஆட்டோ டெயில்கேட் மற்றும் 510 லிட்டர் பூட் ஸ்பேஸ் கொண்டுள்ளது.

இத்துடன் 19 இன்ச் ஏரோ வீல்கள், ஹெட்ஸ்அப் டிஸ்ப்ளே, ஸ்போர்ட்ஸ் சீட், 3 சோன் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் ஹார்மன் கார்டன் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய பிஎம்டபிள்யூ கார் 282 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. மேலும் இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6.8 நொடிகளில் எட்டிவிடும். இது மணிக்கு அதிகபட்சமாக 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
இதில் உள்ள 80கிலோவாட் பேட்டரி பேக் ஒருமுறை சார்ஜ் செய்தால் 460 கிலோமீட்டர் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதனுடன் வரும் 150 கிலோவாட் டிசி ஃபாஸ்ட் சார்ஜர் கொண்டு பேட்டரி 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 34 நிமிடங்களே ஆகும். இத்துடன் பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர்கள் பயணிக்க முடியும்.
ஃபோர்டு நிறுவனத்தின் புதிய மஸ்டாங் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதிய ஃபோர்டு மஸ்டாங் மாடல் இந்திய சந்தையில் இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய விற்பனையில் வெற்றிகரமான ஸ்போர்ட்ஸ் அல்லது ஜிடி மாடலாக ஃபோர்டு மஸ்டாங் இருக்கிறது. தலைசிறந்த செயல்திறன், சவுகரியமான கேபின் என பல்வேறு காரணங்களால் இந்த கார் விற்பனையில் கணிசமான வரவேற்பு பெற்று இருக்கிறது.

2016 ஆம் ஆண்டு உற்பத்தி துவங்கிய நிலையில், இதுவரை இந்தியாவில் ஃபோர்டு நிறுவனம் 450 மஸ்டாங் மாடல்களை விற்பனை செய்து இருக்கிறது. இந்தியா மட்டுமின்றி ஃபோர்டு மஸ்டாங் மாடல் சர்வதேச சந்தையிலும் அதிக பிரபலமாகி இருக்கிறது. ஐரோப்பிய சந்தையில் மஸ்டாங் மாடல் போர்ஷ் மாடல்களை விட அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன.
இந்தியா வர இருக்கும் புதிய ஃபோர்டு மஸ்டாங் மாடலில் 2.3 லிட்டர் இகோபூஸ்ட் 4 சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 310 பிஹெச்பி பவர் செயல்திறன் வழங்குகிறது. இதுதவிர 526 ஹெச்பி திறன் வழங்கும் ஷெல்பி ஜிடி350 வி8 என்ஜின் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆடி நிறுவனத்தின் ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் புதிய டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.
ஆடி இந்தியா நிறுவனம் தனது ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடலுக்கான புதிய டீசரை வெளியிட்டுள்ளது. ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடல் இந்தியாவில் ஜூனை 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய பிரீமியம் காருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது.
புதிய டீசரில் ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.6 நொடிகளில் எட்டிவிடும் என தெரியவந்துள்ளது. உயர்ரக சக்திவாய்ந்த ஏ7 வெர்ஷனில் 4.0 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி8 என்ஜின் மற்றும் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

இவை 591 பிஹெச்பி பவர், 800 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்குகிறது. இத்துடன் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகிறது.
புதிய ஆடிஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடலில் பிளாக்டு-அவுட் கிரில், மேம்பட்ட கம்பீர தோற்றம் கொண்ட முன்புற பம்ப்பர், 21 இன்ச் அலாய் வீல்கள், சைடு ஸ்கர்ட்கள், டிஃப்யூசர் மற்றும் இரண்டு எக்சாஸ்ட்டிப்கள் பொருத்தப்பட்ட பின்புற பம்ப்பர் கொண்டிருக்கிறது.
இந்திய சந்தையில் அறிமுகமானதும் ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடல் மெர்சிடிஸ் ஏஎம்ஜி இ63எஸ் மற்றும் பிஎம்டபிள்யூ எம்5 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
ஆஸ்டன் மார்டின் நிறுவனத்தின் டிபிஎக்ஸ் மாடல் உற்பத்தி அதிகாரப்பூர்வமாக துவங்கி உள்ளது.
ஆஸ்டன் மார்டின் டிபிஎக்ஸ் உற்பத்தி துவங்கியது. புதிய டிபிஎக்ஸ் முதல் மாடல் உற்பத்தி ஆலையில் இருந்து வெளியே எடுத்து வரப்பட்டது. செயின்ட் ஆத்தன் உற்பத்தி ஆலையில் முதலீடு செய்துள்ளதாக நான்கு ஆண்டுகளுக்கு முன் அறிவித்த நிலையில், புதிய கார் இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய ஆஸ்டன் மார்டின் டிபிஎக்ஸ் மாடலில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. புதிய என்ஜின் 542 பிஹெச்பி பவர், 700 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.3 நொடிகளில் எட்டிவிடும்.
ஆஸ்டன் மார்டின் டிபிஎக்ஸ் அதிகபட்சமாக மணிக்கு 291 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இதுவரை இந்த கார் வாங்க சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்து உள்ளனர்.
மசராட்டி நிறுவனத்தின் எம்சி20 வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதுபற்றி தொடர்ந்து பார்ப்போம்.
மசராட்டி நிறுவனம் தனது எம்ச20 மாடலை செப்டம்பர் 9 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய எம்சி20 மாடலில் நெட்டுனோ என்ஜின் வழங்கப்படுகிறது. இது 3.0 லிட்டர், ட்வின் டர்போ வி6 யூனிட் ஆகும். இந்த என்ஜின் 630 ஹெச்பி பவர் மற்றும் 730 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
புதிய பவர் யூனிட் கொண்டு வெளியாகும் முதல் மாடலாக எம்சி20 இருக்கிறது. இதே என்ஜின் எதிர்கால மாடல்களிலும் வழங்கப்படும் என மசராட்டி தெரிவித்து இருக்கிறது.

இந்த கார் என்ஜினை கடந்த ஆண்டு நவம்பர் முதல் மசராட்டி சோதனை செய்து வருகிறது. இந்த யூனிட் ஆல்ஃபா ரோமியோ 4சி சார்ந்து உருவாகி இருக்கிறது. இந்த என்ஜின் முழுக்கமுழுக்க மசராட்டி நிறுவனத்தான் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு இருக்கிறது.
சர்வதேச சந்தையில் மசராட்டி எம்சி20 அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடலாக இருக்கிறது. புதிய எம்சி20 மூலம் மசராட்டி நிறுவனம் மீண்டும் சர்வதேச ரேசிங்கில் களம் இறங்க இருக்கிறது.
லம்போர்கினி நிறுவனத்தின் சியன் ரோட்ஸ்டர் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
லம்போர்கினி சியன் ரோட்ஸ்டர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் உலகம் முழுக்க சுமார் 19 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. ஒவ்வொரு யூனிட்டும் ஆட் பெர்சோனம் துறை கஸ்டமைஸ் செய்ய இருக்கிறது.
புதிய லம்போர்கினி சியன் ரோட்ஸ்டர் மாடலில் 6.5 லிட்டர் வி12 என்ஜின் மற்றும் 48 வோல்ட் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது. இவை 808 பிஹெச்பி பவர் வழங்குகின்றன. இதனால் இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 2.9 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இந்த கார் மணிக்கு அதிகபட்சமாக 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

லம்போர்கினி சியன் ரோட்ஸ்டர் மாடல் வெளிப்புறம் புளு யுரேனஸ் நிறத்திலும், உள்புறம் வைட் மற்றும் புளு குலௌகோ நிறம் கொண்டிருக்கிறது. மேலும் ஏர் வென்ட்கள் 3டி முறையில் அச்சிடப்படுகிறது.






