என் மலர்
இது புதுசு
ஜீப் நிறுவனத்தின் புதிய காம்பஸ் நைட் ஈகிள் எடிஷன் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ஃபியட் க்ரிஸ்லர் ஆட்டோ நிறுவனம் ஜீப் காம்பஸ் நைட் ஈகிள் எடிஷன் மாலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் கார் விலை ரூ. 20.14 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த மாடல் மொத்தமும் 250 யூனிட்களே உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. புதிய நைட் ஈகிள் எடிஷன் பிளாக் தீமில் கிடைக்கிறது. இந்த மாடல் லாங்கிடியூட் பிளஸ் வேரியண்ட்டில் கிடைக்கிறது. புதிய லிமிட்டெட் எடிஷன் வெளிப்புறம் பிளாக் நிற ஜீப் பேட்ஜிங் கொண்டிருக்கிறது.

இதன் முன்புறம் ஏழு ஸ்லாட் கிரில், டிஆர்எல்கள், ஃபாக் லேம்ப் பெசல்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் கிளாஸ் பிளாக் ரூஃப், 18 இன்ச் பிளாக் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த மாடல் வோக்கல் வைட், எக்சோட்டிக்கா ரெட், பிரிலியன்ட் பிளாக் மற்றும் மகனீசியோ கிரே நிறங்களில் கிடைக்கிறது.
காரின் உள்புறத்தில் பிளாக் டெக்னோ லெதர் சீட்கள், கிளாஸ் பிளாக் அக்சென்ட்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் 7 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 4 ஏர்பேக், டிராக்ஷன் கண்ட்ரோல், குரூயிஸ் கண்ட்ரோல், இபிஎஸ், இஎஸ்சி, என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன் வழங்கப்படுகிறது.
புதிய காம்பஸ் நைட் ஈகிள் எடிஷன் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன், 2.0 லிட்டர் டர்போ டீசல் மோட்டார் மற்றும் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. இத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.
மசெராட்டி நிறுவனத்தின் இரண்டு புதிய கார் மாடல்களுக்கான டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது.
மசெராட்டி நிறுவனம் இரண்டு செடான் மாடல்களுக்கான டீசர்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. இரு மாடல்களும் டிரோஃபியோ மேக் ஓவர் கொண்டிருக்கும் என டீசர்களில் தெரியவந்து இருக்கிறது.
முன்னதாக 2018 ஆம் ஆண்டு லெவேண்ட் டிரோஃபியோ மாடலை தொடர்ந்து கிப்ளி மற்றும் குவாட்டர்போர்ட் மாடல்கள் வி8 என்ஜினுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இவற்றில் ஃபெராரி நிறுவனத்தின் 3.8 லிட்டர் வி8 என்ஜினுக்கு மாற்றாக புதிய டர்போசார்ஜ் செய்யப்பட்ட 4.0 லிட்டர் வி8 என்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

இரு செடான்களுடன் லெவேண்ட் மாடலும் டீசரில் இடம்பெற்று இருக்கிறது. இதனால் மேம்பட்ட எஸ்யுவி மாடலில் புதிய வி8 என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. புதிய 8 சிலிண்டர் என்ஜின் சுமார் 600 பிஹெச்பி பவர் செயல்திறன் வழங்கும் என தெரிகிறது.
மசெராட்டி நிறுவனத்தின் இரண்டு புதிய மாடல்களும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வரும் நாட்களில் புதிய கார்களின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய டி கிளாஸ் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புதிய டி கிளாஸ் மாடல் டீசரை வெளியிட்டு இருக்கிறது. புதிய டி கிளாஸ் மாடல் ஆடம்பர வசதிகள் நிறைந்த காம்பேக்ட் வேன் ஆகும்.
புதிய மெர்சிடிஸ் பென்ஸ் டி கிளாஸ் மாடல் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் ஏ கிளாஸ் மற்றும் நிசான் கிக்ஸ் மாடல்களில் பல்வேறு டியூனிங்கில் வழங்கப்படுகிறது. புதிய மெர்சிடிஸ் காம்பேக்ட் வேன் 2022 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

தற்சமயம் சிறிய வேன்கள் பிரிவில் பென்ஸ் சிடான் மாடல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடல் 2012 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இது நிசான் - ரெனால்ட் - மிட்சுபிஷி கூட்டணியில் உருவாக்கப்பட்டது ஆகும்.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் புதிய கோஸ்ட் மாடல் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் புதிய கோஸ்ட் மாடலை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், புதிய கோஸ்ட் மாடல் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. புதிய காரின் வெளிப்புற வரைபடம் வெளியிடப்பட்டு உள்ளது.

புதிய டீசரின் படி ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் எதிர்பார்க்கப்பட்டதை விட முன்கூட்டியே அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கோஸ்ட் மாடல் டீசர் மூன்றே கோடுகளை கொண்டிருக்கிறது. தற்சமயம் விற்பனை செய்யப்படும் கோஸ்ட் மாடல் 2009 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் புதிய வெர்ஷன் அதிநவீன அம்சங்களை கொண்டிருக்கும் என்றும் இது அடுத்த தலைமுறை வரை விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டொயோட்டா நிறுவனத்தின் புதிய யாரிஸ் ஃபேஸ்லிப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
டொயோட்டா நிறுவனத்தின் ஃபேஸ்லிப்ட் செய்யப்பட்ட வியோஸ் மாடல் பிலிப்பைன்சில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது சர்வதேச சந்தையில் இரண்டாவது பெரும் அப்டேட் ஆகும். இந்தியாவில் இதன் முதல் ஃபேஸ்லிப்ட் மாடலே யாரிஸ் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய யாரிஸ் ஃபேஸ்லிப்ட் மாடலின் முன்புறம் புதிய பம்ப்பர், எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் மேம்பட்ட கிரில் வழங்கப்பட்டு உள்ளது. புதிய பம்ப்பரினுள் டிரேப்சோயிடல் சென்ட்ரல் ஏர் டேம், ஹெட்லேம்ப் பிளாக்டு-அவுட் செய்யப்பட்டு உள்ளது. இது லெக்ஸ் மாடலில் உள்ள கிரில் போன்று காட்சியளிக்கிறது.

ஃபாக் லேம்ப்கள் சி வடிவ ரெசஸ்களில் பொருத்தப்பட்டு உள்ளது. இத்துடன் புதிய அலாய் வீல் வடிவமைப்பு மற்றும் பின்புறம் சிறிதளவு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. காரின் உள்புறம் சிறிதளவு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
புதிய மாடலில் 1.3 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் 2018 ஆண்டு அறிமுகமான யாரிஸ் மாடல் விற்பனையில் அதிக வரவேற்பு பெறவில்லை. அந்த வகையில், இந்த மாடல் விரைவில் இதன் வர்த்தக மாடல் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
டொயோட்டா நிறுவனத்தின் புதிய லேண்ட் குரூயிசர் மாடல் மீண்டும் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கிறது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது பாரம்பரிய மாடல்களில் ஒன்றாக விளங்கிய லேண்ட் குரூயிசர் மாடல் விற்பனையை இந்திய சந்தையில் நிறுத்தியது. லேண்ட் குரூயிசர் பிராடோ மற்றும் ஃபிளாக்ஷிப் லேண்ட் குரூயிசர் என இரண்டு வேரியண்ட்களில் இந்த எஸ்யுவி விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இரு மாடல்களும் உலகின் தலைசிறந்த ஆஃப் ரோடர் மாடல்களில் ஒன்றாக விளங்கின. தற்சமயம் இரு மாடல்களும் இந்திய சந்தையில் மீண்டும் அறிமுகமாகும் என டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சர்வீஸ் பிரிவு மூத்த துணை தலைவர் நவீன் சோனி தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

இந்த மாடலை கைவிட மாட்டோம் என்றும், இந்த மாடல் ஏதேனும் வடிவம், விதம் அல்லது அளவில் மீண்டும் அறிமுகமாகும் என அவர் மேலும் தெரிவித்தார். டொயோட்டா லேண்ட் குரூயிசர் மாடல் உலக சந்தையின் ஃபிளாக்ஷிப் எஸ்யுவி பிரிவில் 33 சதவீத பங்குகளை வைத்திருந்தது.
அந்த வகையில் டொயோட்டா நிறுவனம் தனது லேண்ட் குரூயிசர் எஸ்யுவி மாடலின் ஃபேஸ்லிப்ட் வெர்ஷனை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. இந்த மாடல் சர்வதேச சந்தையில் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய எக்ஸ்7 பிளாக் ஷேடோ எடிஷன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் புதிய எக்ஸ்7 பிளாக் ஷேடோ எடிஷன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் ஃபுரோசன் ஆர்க்டிக் கிரே நிறம் கொண்டிருக்கிறது. இந்த மாடல் உலகம் முழுக்க 500 யூனிட்களே உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.
இதே மாடல் விரைவில் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் விண்டோ சரவுண்ட், பி மற்றும் சில பில்லர்கள் மற்றும் வெளிப்புற கண்ணாடிகளில் ஹை-கிளாஸ் ஷேடோ ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது.

இதன் கிரில் பகுதிகள், எக்சாஸ்ட் டிப்கள் மற்றும் ரூஃப் ரெயில் ஆகிய பகுதிகளிலும் பிளாக் குரோம் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் 22 இன்ச் எம் ஸ்பெக் வீல்கள், எம் ஸ்போக் டிசைன் மற்றும் ஜெட் பிளாக் மேட் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது. இதேபோன்று காரின் உள்புறத்திலும் பிரத்யேக வடிவமைப்பு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 டார்க் ஷேடோ எடிஷன் மாடல் அர்பன் கிரீன் மற்றும் கிரிகியோ டெலஸ்டோ மெட்டாலிக் ஃபினிஷ் ஆகிய நிறங்களிலும் கிடைக்கிறது. இந்த மாடலின் உற்பத்தி அமெரிக்காவில் ஆகஸ்ட் மாதத்தில் துவங்க இருக்கிறது. இந்த மாடலை ஃபிளாக்ஷிப் எஸ்யுவி மாடலுடன் கிடைக்கும் எந்த பவர்டிரெயினுடன் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்.
மாருதி சுசுகி நிறுவனத்தின் இக்னிஸ் மாடல் புதிய அம்சத்துடன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் தனது இக்னிஸ் ஹேட்ச்பேக் மாடல்களின் சீட்டா வேரியண்ட்டில் ஸ்மார்பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்க துவங்கி உள்ளது. இதனால் இந்த வேரியண்ட் விலை ரூ. 8500 அதிகமாகி உள்ளது.
மாருதி இக்னிஸ் சீட்டா மாடல் எம்டி மற்றும் ஏஎம்டி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 5.98 லட்சம் மற்றும் ரூ. 6.45 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

முன்னதாக 7 இன்ச் ஸ்மார்ட்பிளே தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆல்ஃபா வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது.
மாருதி சுசுகி இக்னிஸ் மாடலில் 1.2 லிட்டர், 4 சிலிண்டர் விவிடி பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 82 பிஹெச்பி பவர், 113 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஏஎம்டி யூனிட் உள்ளிட்ட ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.
சங்யோங் நிறுவனத்தின் புதிய இ100 எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு உள்ளது.
தென்கொரிய ஆட்டோமொபைல் நிறுவனமான சங்யோங் மோட்டார் இ100 எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலின் டீசர் படங்களை வெளியிட்டு உள்ளது. இந்த கார் கொராண்டோ மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகும். இந்த எலெக்ட்ரிக் கார் அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வருகிறது.
சர்வதேச சந்தையில் சங்யோங் இ100 எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் ம்றும் கியா இ நிரோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. வடிவமைப்பில் புதிய இ100 பார்க்க கொராண்டோ போன்றே காட்சியளிக்கிறது. எனினும், புதிய காரில் ஸ்டிரீம்லைன் மற்றும் ஏரோடைனமிக் லைன்கள் வழங்கப்படுகின்றன.

சங்யோங் இ100 மாடலில் 188 பிஹெச்பி திறன் வழங்கும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படும் என இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் கூறப்பட்டுள்ளது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 153 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
இந்த காரில் 61.5 கிலோவாட் பேட்டரி பேக் வழங்கப்படும் என்றும் இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 420 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்தியாவில் சங்யோங் இ100 அல்லது கொராண்டோ இவி மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.
இந்தியாவில் இந்த கார் மஹிந்திரா இகேயுவி300 மாடலுக்கு போட்டியாக அமையும். இந்த கார் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது வென்யூ மாடல் காரின் புது வேரியண்ட்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் தனது வென்யூ காம்பேக்ட் எஸ்யுவி மாடலின் ஐஎம்டி மற்றும் ஸ்போர்ட் ட்ரிம் வேரியண்ட்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
புதிய ஹூண்டாய் வென்யூ மாடல்கள் துவக்க விலை ரூ. 9.99 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் ஸ்போர்ட் ட்ரிம் மாடல் விலை ரூ. 11.58 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஹூண்டாய் வென்யூ ஐஎம்டி வேரியண்ட்டில் 1.0 லிட்டர் டி ஜிடிஐ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கிறது. ஹூண்டாய் வென்யூ ஐஎம்டி எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ் ஒ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 9.99 லட்சம் மற்றும் ரூ. 11.08 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

புதிய ஐஎம்டி மாடலில் எலெக்ட்ரோ மெக்கானிக்கல் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது. இது கிளட்ச் பெடல் இல்லாத முதல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார் ஆகும். இந்த டிரான்ஸ்மிஷனுடன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. புதிய பிஎஸ்6 ரக என்ஜின் 120 பிஹெச்பி பவர், 170 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
ஹூண்டாய் வென்யூ ஸ்போர்ட் ட்ரிம் எஸ்எக்ஸ், எஸ்எக்ஸ் பிளஸ் மற்றும் எஸ்எக்ஸ் ஒ என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ் ஒ வேரியண்ட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவை 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் யூனிட் ஆகும்.
வென்யூ ஸ்போர்ட் ட்ரிம் எஸ்எக்ஸ் பிளஸ் வேரியண்ட் டர்போ பெட்ரோல் என்ஜின் எனும் ஒற்றை ஆப்ஷனில் கிடைக்கிறது. இத்துடன் 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
ரெனால்ட் நிறுவனத்தின் டஸ்டர் புது வேரியண்ட் கார் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
பிரெஞ்சு ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான ரெனால்ட் விரைவில் டஸ்டர் புது வேரியண்ட்டை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த வேரியண்ட்டில் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. முன்னதாக இந்த என்ஜினை ரெனால்ட் நிறுவனம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தியது.
ரெனால்ட் டஸ்டர் டர்போ பெட்ரோல் வேரியண்ட் இந்திய சந்தையில் ஆகஸ்ட் மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இந்த காரின் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

புதிய 1.3 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் 153 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் மற்றும் விரும்புவோர் தேர்வு செய்யும் ஆப்ஷனாக சிவிடி ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
தற்சமயம் விற்பனை செய்யப்படும் ரெனால்ட் டஸ்டர் மாடலில் பிஎஸ்6 ரக 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 104 பிஹெச்பி பவர், 142 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது.
லம்போர்கினி நிறுவனத்தின் புதிய அவென்டடார் எஸ்விஜெ ரோட்ஸ்டர் சேகோ எடிஷன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இத்தாலி நாட்டை சேர்ந்த லம்போர்கினி நிறுவனம் அவென்டடார் எஸ்விஜெ ரோட்ஸ்டர் சேகோ எடிஷன் காரை அறிமுகம் செய்து இருக்கிறது. உலகம் முழுக்க இந்த கார் மொத்தம் பத்து யூனிட்களே உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.
புதிய லிமிட்டெட் எடிஷன் லம்போர்கினி நிறுவனத்தின் விர்ச்சுவல் ஆட் பெர்சனம் ஸ்டூடியோ திட்டத்தை கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தில் தங்களது கார்களை கஸ்டமைஸ் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் இத்தாலியில் உள்ள சேன்ட் அகாடா போலோக்னீசில் உள்ள ஆட் பெர்சோனம் துறைக்கு செல்ல வேண்டிய அவசியத்தை நீக்குகிறது.

லம்போர்கினி வாடிக்கையாளர்கள் சந்திப்புகளை இரண்டு மணி நேரத்திற்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு லம்போர்கினி ஊழியர்கள் குழு ஆட் பெர்சோனம் ஆப்ஷன்களை வரிசைப்படுத்தி பிரத்யேகமாக விளக்கம் அளிப்பர். இது முழுக்க முழுக்க ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது.
புதிய லம்போர்கினி அவென்டடார் எஸ்விஜெ ரோட்ஸ்டர் சேகோ எடிஷன் மாடல் ஹெக்சகன் கிளவுட் பேட்டன்களை சார்ந்து வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அவென்டடார் எஸ்விஜெ ரோட்ஸ்டர் சேகோ எடிஷனினி வெளிப்புறத்தை உருவாக்க 120 மணி நேரங்கள் ஆனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






