என் மலர்
இது புதுசு
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சொனெட் மாடல் முன்பதிவு இந்தியாவில் துவங்கப்பட்டு இருக்கிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சொனெட் மாடல் முன்பதிவு துவங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கியா மோட்டார்ஸ் விற்பனையாளர்கள் புதிய காருக்கான முன்பதிவை துவங்கி உள்ளதாக தெரிகிறது.
புதிய சொனெட் மாடல் முன்பதிவை கியா மோட்டார்ஸ் இதுவரை அதிகாரப்பூர்வமாக துவங்கவில்லை. எனினும், சென்னை, மும்பை, ஐதராபாத் மற்றும் டெல்லியில் இயங்கி வரும் கியா மோட்டார்ஸ் விற்பனையாளர்கள் புதியசொனெட் மாடலுக்கான முன்பதிவை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கியா சொனெட் முன்பதிவு கட்டணம் ரூ. 12 ஆயிரத்தில் துவங்கி ரூ. 25 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய சொனெட் மாடல் செப்டம்பர் மாத முதல் வாரத்தில் விற்பனையகங்களுக்கும் வரும் என கூறப்படுகிறது. இதன் விலை விரைவில் துவங்கும் என தெரிகிறது.
இந்தியாவில் கியா சொனெட் மாடல் விலை ரூ. 7 லட்சத்தில் துவங்கி ரூ. 12 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
எவோக் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
பீஜிங்கை தலைமையிடமாக கொண்டு இயங்கும் எவோக் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் 6061 எலெக்ட்ரிக் குரூயிசர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் பிரம்மாண்ட பேட்டரி பேக் மற்றும் தலைசிறந்த ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கின்றன.
இதல் உள்ள 120 கிலோவாட் மோட்டார் மணிக்கு அதிகபட்சம் 230 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதில் உள்ள பேட்டரி 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 15 நிமிடங்களே ஆகும். இதற்கு மோட்டார்சைக்கிளை டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் பயன்படுத்துவது அவசியம் ஆகும்.

எவோக் 6061 மாடலில் வட்ட வடிவத்தில் எல்இடி ஹெட்லேம்ப், மஸ்குலர் தோற்றம் கொண்டிருக்கிறது. இதன் டெயில் பகுதியை பார்க்க டுகாட்டி டையவெல் போன்று காட்சியளிக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளில் 24.8kWh லிக்விட் கூல்டு பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
சிட்டி மோடில் ஓட்டும் போது இந்த மோட்டார்சைக்கிள் 470 கிலோமீட்டர் வரை செல்லும். நெடுஞ்சாலைகளில் செல்லும் போது 265 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது.
புதிய எவோக் 6061 விரைவில் அமெரிக்க சந்தையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் விலை 24995 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 18.73 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஃபெராரி நிறுவனத்தின் எஃப்8 டிரிபியூட்டோ சூப்பர் கார் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஃபெராரி எஃப்8 டிரிபியூட்டோ மாடல் சூப்பர் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இதன் துவக்க விலை ரூ. 4.02 கோடி, எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஃபெராரி காரை டெல்லியில் உள்ள ஃபெராரி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரான செலக்ட் கார்ஸ் அறிமுகம் செய்தது.
புதிய ஃபெராரி எஃப்8 டிரிபியூட்டோ மாடல் விநியோகம் விரைவில் துவங்க உள்ளது. முன்னதாக ஃபெராரி எஃப்8 டிரிபியூட்டோ மாடல் 2019 ஜெனீவா மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஃபெராரி சூப்பர் காரில் 3.9 லிட்டர் ட்வின் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த என்ஜின் 710 பிஹெச்பி பவர், 770 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 2.9 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது மணிக்கு அதிகபட்சமாக 340 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
காரின் உள்புறம் எஃப்8 டிரிபியூட்டோ மாடலில் 7 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய ஹெச்எம்ஐ (ஹியுமன் மெஷின் இன்டர்ஃபேஸ்) ஸ்டீரிங் வீல் மற்றும் புதிய ரவுண்ட் ஏர் இன்டேக்குகள் வழங்கப்பட்டு உள்ளன.
டொயோட்டா நிறுவனத்தின் ஃபார்ச்சூனர் டிஆர்டி லிமிட்டெட் எடிஷன் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
டொயோட்டா நிறுவனம் லிமிட்டெட் எடிஷன் ஃபார்ச்சூனர் டிஆர்டி மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. இந்த கார் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை ரூ. 34.98 லட்சம் மற்றும் ரூ. 36.88 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல்களில் பிரத்யேக காஸ்மெடிக் மாற்றங்கள் மற்றும் புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி இந்த மாடலில் டூயல் டோன் ரூஃப், ரக்கட் சார்கோல் பிளாக் ஆர்18 அலாய் வீல்கள், 360 டிகிரி பானரோமிக் வியூ மாணிட்டர், ஆட்டோ ஃபோல்டு ஒஆர்விஎம், டூயல் டோன் டேஷ்போர்டு மற்றும் இலுமினேட் செய்யப்பட்ட ஸ்கஃபிள் பிளேட் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் ஹெட் அப் டிஸ்ப்ளே, டையர் பிரெஷர் மாணிட்டர், டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர் மற்றும் வெல்கம் டோர் லேம்ப், ஏர் ஐயோனைசர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது. ஏர் ஐயோனைசர் அம்சம் கொண்ட முதல் டொயோட்டா கார் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிய டொயோட்டா காரில் 2.8 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 170 பிஹெச்பி பவர், 450 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடல்கள் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனிலும் கிடைக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் கிராஸ் பெட்ரோல் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் கிராஸ் பெட்ரோல் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இதன் துவக்க விலை ரூ. 8.39 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய எஸ் கிராஸ் பெட்ரோல் மாடல் ஐந்து வித நிறங்கள் மற்றும் ஏழு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
மாருதி சுசுகி எஸ் கிராஸ் மாடல் 1.5 லிட்டர் கே15பி என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 103 பிஹெச்பி பவர், 138 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய எஸ் கிராஸ் பெட்ரோல் வெர்ஷன் ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், குரூயிஸ் கண்ட்ரோல், கிளைமேட் கண்ட்ரோல், என்ஜின் ஸ்டார்ட், ஸ்டாப் பட்டன், லெதர் இருக்கைகள், 4 ஸ்பீடு ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் எஸ்ஹெச்விஎஸ் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
மாருதி சுசுகி எஸ் கிராஸ் பெட்ரோல் சிக்மா, டெல்டா, சீட்டா மற்றும் ஆல்ஃபா என நான்கு ட்ரிம்களில் கிடைக்கிறது. மேலும் இந்த கார் நெக்சா புளூ, கஃபைன் பிரவுன், கிரானைட் கிரே, பியல் ஆக்டிக் வைட் மற்றும் பிரீமியம் சில்வர் என நான்கு நிறங்களில் கிடைக்கிறது.
டொயோட்டா நிறுவனத்தின் புதிய அர்பன் குரூயிசர் மாடல் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
டொயோட்டா நிறுவனம் விரைவில் அர்பன் குரூயிசர் கார் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய எஸ்யுவி மாடல் அடுத்த மாதம் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டொயோட்டாவின் புதிய அர்பன் குரூயிசர் மாடல் மாருதி சுசுகி நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யுவி மாடலை தழுவி உருவாகி உள்ளது. அர்பன் குரூயிசர் மாடலை மாருதி சுசுகி நிறுவனம் உற்பத்தி செய்ய இருக்கிறது.
முன்னதாக இதே போன்று மாருதி சுசுகி மற்றும் டொயோட்டா நிறுவனங்கள் இணைந்து கிளான்சா மாடலை வெளியிட்டன. இது மாருதி சுசுகியின் பலேனோ மாடலை தழுவி உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இதன் பெரும்பாலான வடிவமைப்பு மாருதி நிறுவனத்தை தழுவி உருவாக்கப்படுகிறது. எனினும், கிளான்ஸா போன்று இல்லாமல் புதிய மாடலின் முன்புறம் புதிய வடிவமைப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இந்த மாடலில் முற்றிலும் வித்தியாசமான அலாய் வீல்கள், டெயில் லேம்ப்கள், இன்டீரியர் தீம் வழங்கப்படும் என தெரிகிறது.
காரின் உள்புறம் 7 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட ஆடியோ கண்ட்ரோல்கள், குரூயிஸ் கண்ட்ரோல், கிளைமேட் கண்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் மல்டி இன்ஃபோ டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.
பாதுகாப்பிற்கு புதிய காரின் முன்புறம் டூயல் ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி, பின்புற பார்க்கிங் சென்சார்கள், ரியர் வயூ கேமரா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அர்பன் குரூயிசர் மாடலில் 105 பிஎஸ் பவர் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்று் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படலாம்.
நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் இன்டீரியர் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
நிசான் நிறுவனம் கடந்த மாதம் தனது மேக்னைட் காம்பேக்ட் எஸ்யுவி கான்செப்ட் மாடலினை அறிமுகம் செய்தது. தற்சமயம் இந்த மாடல் இன்டீரியர் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. இதில் காரின் டேஷ்போர்டு மற்றும் கேபின் ஸ்பேஸ் விசேஷமாக தெரியும் படி வடிவமைக்கப்பட்டு உள்ளது.
புதிய கார் இன்டீரியர் பிளாக், ரெட் தீம் மற்றும் ஸ்டிட்ச் ஃபேப்ரிக் சீட்களை கொண்டிருக்கிறது. டூயல் டோன் டேஷ்போர்டு ஹனிகொம்ப் டிசைன் மற்றும் பெரிய ஃபுளோட்டிங் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் கொண்டிருக்கிறது. இத்துடன் இதில் நான்கு ஹெக்சாகோனல் ஏர் வென்ட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீனின் கீழ் ஏசி மற்றும் ஃபேன் கண்ட்ரோல்களுக்கு ரோடரி நாப்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் கன்சோலில் ஆட்டோமேடிக் டிரைவ் செலக்டர் அருகில் ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன் வழங்கப்படுகிறது. இத்துடன் 3 ஸ்போக் ஃபிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல் மற்றும் கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இத்துடன் காரின் அனைத்து கண்ணாடிகளையும் இயக்க ஒரே பட்டன் வழங்கப்பட்டுள்ளது. காரின் முன்புற இருக்கைகளில் ஃபிக்சட் ஹெட்ரெஸ்ட்களும், பின்புற இருக்கைகளுக்கு லம்பர் வசதியும் வழங்கப்படுகிறது. இத்துடன் பின்புற இருக்கைகளில் ஆம்ரெஸ்ட் வழங்கப்படுகிறது.
ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கார் மாடல்களை வெளியிட திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பிரெஞ்சு நாட்டின் ஆட்டோ உற்பத்தியாளரான ரெனால்ட் இந்திய சந்தையின் ஊரக பகுதி விற்பனையில் அதிக கவனம் செலுத்த இருப்பதாக தெரிவித்து உள்ளது. இதன் மூலம் நாட்டில் தனது இடத்தை பலப்படுத்த ரெனால்ட் திட்டமிட்டு இருக்கிறது.
சமீபத்தில் ரெனால்ட் நிறுவனம் தனது டிரைபர் மற்றும் க்விட் மாடல்களின் ஏஎம்டி ட்ரிம்களை அறிமுகம் செய்தது. மேலும் இந்தியாவில் புதிய கார்களை வெளியிட திட்டமிட்டு உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்து உள்ளது.

விரைவில் புதிய டஸ்டர் மாடலை புதிய டர்போ என்ஜினுடன் அறிமுகம் செய்ய இருக்கிறோம். இது இந்த பிரிவில் மிகவும் சக்திவாய்ந்த எஸ்யுவியாக இருக்கும் என ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் வெங்கட்ராம் மமிலாபேல் தெரிவித்தார்.
எங்களது வழக்கமான கொள்கைக்கு உண்மையாக இருக்கும் நோக்கில், ரெனால்ட் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதில் தலைசிறந்த மாடல்களை அறிமுகம் செய்யும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கவாசகி நிறுவனத்தின் புதிய இசட்1000 மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
கவாசகி நிறுவனத்தின் நேக்கட் மோட்டார்சைக்கிள் மாடலான இசட்1000 மோட்டார்சைக்கிள் எம்வை2021 அப்டேட் வழங்கப்பட்டது. புதிய அப்டேட் மாடல் 2021 சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
கவாசகியின் மேம்பட்ட மோட்டார்சைக்கிள் புதிய நிறத்தில் கிடைக்கிறது. 2021 இசட்1000 மாடல் ஆல் பிளாக் நிறம் கொண்டிருக்கிறது. மேலும் இதன் ஃபேரிங், ஹெட்லேம்ப் ஷிரவுட், பின்புற ஃபேரிங்கில் சிவப்பு நிறம் பூசப்பட்டு இருக்கிறது. இரு சக்கரங்களிலும் சிவப்பு நிற ஸ்டிரைப் செய்யப்பட்டு உள்ளது.

2021 கவாசகி இசட்1000 மாடல் ஒற்றை நிறத்தில் கிடைக்கிறது. இதன் முந்தைய மாடல் பிளாக் மற்றும் கிரீன் என இரண்டு நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இவை தற்சமயம் விற்பனை செய்யப்படுவதில்லை. புதிய நிறம் தவிர இதன் உபகரணங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
புதிய 20201 இசட்1000 மாடல் லிக்விட் கூல்டு, இன்-லைன் 4 சிலிண்டர், 1043 சிசி டிஒஹெச்சி என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 140 பிஹெச்பி பவர், 111 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஹூண்டாய் ஐ30 மாடலில் விரைவில் புதிய அம்சம் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஐ30 மாடலில் மேம்பட்ட புளூலின்க் கனெக்ட்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்பட இருக்கிறது. புதிய மேம்பட்ட தொழில்நுட்பம் கார் ஓட்டும் அனுபவத்தை ஒட்டுமொத்தமாக மாற்றி அமைக்கும் என ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

ஆடம்பர வசதியை வழங்குவது மட்டுமின்றி, பாதுகாப்பு மற்றும் சவுகரியத்தை வழங்குகிறது. புதிய மேம்பட்ட புளூலிலன்க் தொழில்நுட்பம் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் சேவைகளை வழங்குகிறது. இதில் லாஸ்ட் மைல் நேவிகேஷன் மற்றும் லைவ் பார்க்கிங் விவரங்களை வழங்குகிறது.
புதிய யுஐ பிளாக் ஸ்கிரீன் பயன்படுத்துகிறது. இத்துடன் நீள நிற ஐகான்கள் நேரம் மற்றும் வெப்பநிலை விவரங்களை காண்பிக்கிறது. பயனர் தேர்வும் செய்யும் பட்சத்தில் இந்த சிஸ்டம் மேப் வசதியினையும் வழங்குகிறது. இதன் மேப் யுஐ மூன்று வித நிறங்கள் மற்றும் டார்க் நைட் மோட் கொண்டிருக்கிறது.
டொயோட்டா நிறுவனத்தின் புதிய அர்பன் குரூயிசர் மாடல் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
டொயோட்டா நிறுவனம் விரைவில் 4 மீட்டர் எஸ்யுவி பிரிவில் புதிய அர்பன் குரூயிசர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாடல் செப்டம்பர் 2020 வாக்கில் அறிமுகமாகும் என தெரிகிறது.
புதிய டொயோட்டா அர்பன் குரூயிசர் மாடலுக்கான முன்பதிவுகள் ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா அர்பன் குரூயிசர் மாடல் ரீபேட்ஜ் செய்யப்பட்ட விட்டாரா பிரெஸ்ஸா மாடல் ஆகும்.
இதன் பெரும்பாலான வடிவமைப்பு மாருதி நிறுவனத்தை தழுவி உருவாக்கப்படுகிறது. எனினும், கிளான்ஸா போன்று இல்லாமல் புதிய மாடலின் முன்புறம் புதிய வடிவமைப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இந்த மாடலில் முற்றிலும் வித்தியாசமான அலாய் வீல்கள், டெயில் லேம்ப்கள், இன்டீரியர் தீம் வழங்கப்படும் என தெரிகிறது.

காரின் உள்புறம் 7 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட ஆடியோ கண்ட்ரோல்கள், குரூயிஸ் கண்ட்ரோல், கிளைமேட் கண்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் மல்டி இன்ஃபோ டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.
பாதுகாப்பிற்கு புதிய காரின் முன்புறம் டூயல் ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி, பின்புற பார்க்கிங் சென்சார்கள், ரியர் வயூ கேமரா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அர்பன் குரூயிசர் மாடலில் 105 பிஎஸ் பவர் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்று் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படலாம்.
சுசுகி ஜிம்னி புது வேரியண்ட் மாடல் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.
சுசுகி ஜிம்னி மூன்று கதவுகள் கொண்ட வேரியண்ட் இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த மாடல் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இந்த மாடல் அறிமுகமானது முதல் இதே காரின் ஐந்து கதவுகள் கொண்ட வேரியண்ட் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் ஏற்கனவே சில ஜிம்னி யூனிட்களை இந்தியாவில் இறக்குமதி செய்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த மாடலுக்கான சுங்க துறை அனுமதி மற்றும் இதர சான்றுகளை பெறுவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த கார்கள் கம்ப்லீட்லி நாக்டு-டவுன் யூனிட்களாக இறக்குமதி செய்யப்பட்டு உள்ளன. சுசுகி நிறுவனம் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் யூனிட்களை உற்பத்தி செய்து அவற்றை மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.






