என் மலர்
இது புதுசு
ஆடி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஆர்எஸ் கியூ8 மாடல் காரின் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஆடி நிறுவனம் தனது புதிய ஆர்எஸ் கியூ8 மாடல் காரை இந்திய சந்தையில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த காருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 15 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய கார் முன்பதிவை வாடிக்கையாளர்கள் ஆடி அதிகாரப்பூர்வ வலைதளம் அல்லது விற்பனையகம் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம் என ஆடி நிறுவனம் அறிவித்து இருக்கிறது. புதிய ஆர்எஸ் கியூ8 மாடல் இதே ஆண்டு ஆடி அறிமுகம் செய்யும் நான்காவது வாகனம் ஆகும்.

ஆடி ஆர்எஸ் கியூ8 மாடலில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 600 பிஹெச்பி பவர், 800 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகிறது.
புதிய ஆடி கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.8 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது. காரின் வெளிப்புறத்தில் பிரம்மாண்ட தோற்றம், ஒற்றை ஃபிரேம் கிரில், மேம்பட்ட முன்புற மற்றும் பின்புற பம்ப்பர்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் 22 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் 23 இன்ச் யூனிட்கள் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 3 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ ஷேடோ எடிஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ஜெர்மன் நாட்டு ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ இந்தியாவில் 330ஐ கிரான் டூரிஸ்மோ ஷேடோ எடிஷன் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ. 42.50 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
இதன் பெட்ரோல் வேரியண்ட் சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. புதிய 3 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ ஷேடோ எடிஷன்-ஆல்பைன் வைட், மெல்போன் ரெட் மெட்டாலிக், பிளாக் சஃபையர் மெட்டாலிக் மற்றும் எஸ்டோரில் புளூ மெட்டாலிக் என நான்கு நிறங்களில் கிடைக்கிறது.

பிஎம்டபிள்யூ 330ஐ கிரான் டூரிஸ்மோ ஷேடோ எடிஷன் மாடலில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 248 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஸ்டெப்டிரானிக் ஸ்போர்ட் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்ட பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ ஷேடோ எடிஷனில் 6 ஏர்பேக்குகள், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட வசதி, டைனமிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், டைனமிக் டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இந்தியாவில் விலை உயர்ந்த போர்ஷ் நிறுவன கார் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. இவற்றின் விவரங்களை பார்ப்போம்.
ஜெர்மன் நாட்டு கார் ஸ்போர்ட்ஸ் கார் உற்பத்தியாளரான போர்ஷ் 718 ஸ்பைடர் மற்றும் 718 கேமன் ஜிடி4 மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
போர்ஷ் நிறுவனத்தின் புதிய 2020 போர்ஷ் 718 ஸ்பைடர் மற்றும் 2020 கேமன் ஜிடி4 மாடல்களின் விலை முறையே ரூ. 1.59 கோடி மற்றும் ரூ. 1.63 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

போர்ஷ் 718 ஸ்பைடர் மற்றும் கேமன் ஜிடி4 மாடல்களிலும் 4.0 லிட்டர் 6 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 415 பிஹெச்பி பவர் மற்றும் 420 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.
இரு மாடல்களும் 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.4 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது. 718 ஸ்பைடர் மாடல் மணிக்கு 301 கிலோமீட்டர் வேகத்திலும், 718 கேமன் ஜிடி4 மாடல் மணிக்கு 304 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
போர்ஷ் நிறுவனத்தின் புதிய பனமெரா கார் மாடல் நர்பர்கிரிங் பந்தய களத்தில் புதிய சாதனை படைத்து இருக்கிறது.
போர்ஷ் நிறுவனம் தனது புதிய பனமெரா காரை நர்பர்கிரிங் களத்திற்கு கொண்டு சென்று புதிய சாதனை படைத்து இருக்கிறது. ஜெர்மனி நாட்டு பந்திய களத்தில் பனமெரா மாடல் 20.832 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 7:29.81 நிமிடங்களில் கடந்து உள்ளது. இதன் மூலம் எக்சிக்யூட்டிவ் கார்கள் பிரிவில் புதிய சாதனையை புரிந்துள்ளது.
பந்திய களத்தில் இந்த சாதனையை எட்ட போர்ஷ் பயன்படுத்திய பவர்டிரெயின் விவரங்கள் இதுவரை ரகசியமாகவே வைக்கப்பட்டு இருக்கின்றன. இது 2016 ஆம் ஆண்டு பனமெரா டர்போ மாடலை விட 13 நொடிகள் முன்கூட்டியே களத்தை நிறைவு செய்து இருக்கிறது.

இந்த சாதனையின் போது புதிய போர்ஷ் பனமெராவை போர்ஷ் நிறுவனத்தின் பாரம்பரிய டெஸ்ட் டிரைவர் லார்ஸ் கெர்ன் ஓட்டினார். இந்த வேகம் மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி 63 எஸ் மாடலையும் முந்தியுள்ளது. மெர்சிடிஸ் மாடல் இந்த களத்தை 7:30.11 நிமிடங்களில் கடந்து இருந்தது.
புதிய பனமெரா மாடல் பற்றிய அதிகாரப்பூர்வ விவரங்கள் ஆகஸ்ட் 26 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய மேம்பட்ட வெர்ஷன் முந்தைய மாடலை விட அதிக மாற்றங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றன.
பென்ட்லி நிறுவனத்தின் புதிய பென்ட்யகா ஸ்பீடு ஃபேஸ்லிப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
பென்ட்யகா ஃபேஸ்லிப்ட் மாடலை தொடரந்து பென்ட்லி நிறுவனம் தனது பென்ட்யகா ஸ்பீடு மாடலை அப்டேட் செய்து இருக்கிறது. இந்த மாடல் பிரத்யேகமாக டபிள்யூ12 பவர்டிரெயினில் கிடைக்கிறது. இத்துடன் இந்த மாடல் பிளாக் பேக்கேஜில் கிடைக்கிறது.
புதிய பென்ட்லி பென்ட்யகா ஸ்பீடு ஃபேஸ்லிப்ட் மாடலில் 6.0 லிட்டர் ட்வின் டர்போ டபிள்யூ12 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 626 பிஹெச்பி பவர், 900 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.9 நொடிகளில் எட்டும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் இந்த கார் மணிக்கு அதிகபட்சமாக 306 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 48 வோல்ட் சிஸ்டம், சிலிண்டர் டி-ஆக்டிவேஷன் தொழிலநுட்பம், பல்வேறு டிரைவ் மோட்கள் மற்றும் டார்க் வெக்டரிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய காரின் முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்களில் புதிய வடிவமைப்பு கொண்டுள்ளது. இத்துடன் டார்க் டின்ட் ஹெட்லேம்ப்கள், டெயில் லைட்கள், பாடி நிற சைடு ஸ்கர்ட்கள், மெஷ் கிரில், 22 அங்குல அலாய் வீல்கள் மற்றும் எகெஸ்டென்ட்டெட் ஸ்பாயிலர் வழங்கப்பட்டு உள்ளது.
இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2020 மஹிந்திரா தார் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2020 மஹிந்திரா தார் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய கார் மாடல் வெளியீடு அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான முன்பதிவும் அதே தினத்தில் துவங்கும் என மஹிந்திரா தெரிவித்து உள்ளது.
புதிய மஹிந்திரா தார் மாடலில் எல்இடி டிஆர்எல்கள், வட்ட வடிவ ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில் லைட்கள், டெயில்கேட் மவுண்ட் செய்யப்பட்ட ஸ்பேர் வீல் மற்றும் புதிய 18 அங்குல அலாய் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன. உள்புறம் கார்பன் ஃபைபர் ஃபினிஷ் செய்யப்பட்ட ஏர் கான் வென்ட்கள் மற்றும் ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் மேம்பட்ட ஸ்டீரிங் வீல், ஆடியோ மற்றும் டெலிபோன் கண்ட்ரோல் வழங்கப்பட்டுள்ளது. 2020 மஹிந்திரா தார் ஏஎக்ஸ் வேரியண்ட்டில் முன்புற இருக்கைகள் விரும்புவோர் தேர்வு செய்து கொள்ளும் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. இத்துடன் 7 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.
புதிய மஹிந்திரா தார் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இவை முறையே 150 பிஹெச்பி, 320 என்எம் டார்க் மற்றும் 130 பிஹெச்பி பவர் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
செடான் மற்றும் ஹேட்ச்பேக் ஆப்ஷன்களில் 2021 ஆடி எஸ்3 மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
புத்தம் புதிய ஆடி எஸ்3 மாடல் செடான் மற்றும் ஹேட்ச்பேக் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இரு வெர்ஷன்களும் சர்வதேச சந்தையில் இந்த ஆண்டு விற்பனைக்கு வரயிருக்கிறது.
புதிய ஆடி எஸ்3 மாடலில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர், டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. முன்னதாக இதே என்ஜின்கள் ஃபோக்ஸ்வேகன் கொல்ஃப் ஜிடிஐ மற்றும் கப்ரா லியோன் மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஆடி எஸ்3 மாடலில் இந்த என்ஜின் 310 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த கார் மாடல் 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.8 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது.
மேலும் இது மணிக்கு அதிகபட்சமாக 250 கிலோமீட்டர் செல்லும் திறன் கொண்டது ஆகும். இந்த என்ஜினுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.
வால்வோ நிறுவனத்தின் புதிய எஸ்60 காரின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
வால்வோ நிறுவனத்தின் புதிய தலைமுறை வால்வோ எஸ்60 செடான் மாடல் இந்தியாவில் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச சந்தையில் இந்த மாடல் ஜூன் 2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய வால்வோ எஸ்60 மாடலை 2021 ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறோம் என வால்வோ கார் இந்தியா நிர்வாக இயக்குனர் சார்லஸ் ஃபிரம்ப் தனியார் நிறுவனத்திக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். மேலும் இந்த கார் இந்த ஆண்டின் இறுதி காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

வால்வோ எஸ்60 மாடலில் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 190 பிஹெச்பி பவர் வழங்குகிறது. இதன் டர்போ பெட்ரோல் டி4 மாடலில் உள்ள டி8 ட்வின் என்ஜின் 390 பிஹெச்பி பவர் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் வால்வோ எஸ்60 டி4 வெர்ஷன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இதே என்ஜின் எக்ஸ்சி40 மாடலிலும் வழங்கப்பட்டு உள்ளது.
வால்வோ நிறுவன கார் மாடலுக்கு அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
வால்வோ எக்ஸ்சி40 டி4 ஆர் டிசைன் தற்சமயம் ரூ. 36.90 லட்சம் எனும் விசேஷ விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது காரின் முந்தைய விலையை விட ரூ. 3 லட்சம் வரை குறைவு ஆகும். இத்துடன் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள அக்சஸரீக்கள் வழங்கப்படுகிறது.
இந்தியாவின் 74 வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் வால்வோ கார் இந்தியா நிறுவனம் புதிய சலுகைகளை அறிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

வால்வோ எக்ஸ்சி40 காரில் 9 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.3 இன்ச் திரையுடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 14 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் டைமண்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன.
என்ட்ரி லெவல் எஸ்யுவி பிரிவில் வால்வோ எக்ஸ்சி40 டி4 ஆர் டிசைன் அந்நிறுவனத்தின் முதல் பெட்ரோல் மாடல் ஆகும். வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவி காரின் பிஎஸ்-6 மாடல் பெட்ரோல் என்ஜினுடன் டி4-ஆர் என்ற ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டும் கிடைக்கிறது.
இந்த மாடலில் வழங்கப்பட்டு உள்ள 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 187 பிஹெச்பி பவர், 300 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எக்ஸ்3 எம் காரின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எக்ஸ்3 எம் எஸ்யுவி மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தற்போதைய தகவல்களின் படி இந்த கார் விலை ரூ. 1.1 கோடி, எக்ஸ் ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எம் மாடல் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட இருந்தது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதன் வெளியீடு தாமதமாகி இருக்கிறது.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எம் மாடலில் டவின் டர்போ, ஸ்டிரெயிட்-6 என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 480 பிஹெச்பி பவர், 600 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.2 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது.
மேலும் இந்த கார் மணிக்கு 250 கிலமீட்டர் வரை செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. எனினும், இதனை மணிக்கு 280 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கம் வகையில் காரின் உச்ச வேகத்தை நீட்டித்துக் கொள்ள முடியும்.
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய குளோஸ்டர் காரின் டீசர் வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது.
எம்ஜி குளோஸ்டர் எஸ்யுவி மாடல் டீசர் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது. முன்னதாக எம்ஜி குளோஸ்டர் மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது. எம்ஜி குளோஸ்டர் ஐந்து மீட்டர்கள் அளவில் 2.95 மீட்டர் வீல்பேஸ் கொண்டிருக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 40 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 50 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
புதிய குளோஸ்டர் மாடல் முன்புற தூரத்தை எச்சரிக்கும் அம்சம் கொண்ட முதல் எஸ்யுவி மாடலாக இருக்கும் என தெரிகிறது. இத்துடன் முன்புற கொலிஷன் வார்னிங் மற்றும் ஆட்டோ பார்க்கிங் வசதி உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு உள்ளது. வழக்கமான அம்சங்களுடன் குளோஸ்டர் மாடலில் கனெக்ட்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்பட இருக்கிறது.

சர்வதேச சந்தையில் எம்ஜி குளோஸ்டர் மாடல் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்தியாவில் இந்த கார் ஹைப்ரிட் மற்றும் டீசல் மோட்டார் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.
எம்ஜி குளோஸ்டர் மாடல் இந்தியாவில் பண்டிகை காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது விலைகளின் அடிப்படையில் பிஎம்டபிள்யூ எக்ஸ்1, வால்வோ எக்ஸ்சி40 போன்ற மாடல்களுக்கும் டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு என்டெவர், ஃவோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் மற்றும் ஸ்கோடா கோடியக் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
ஹூண்டாய் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன சந்தைக்கென பிரத்யேக சப்-பிராண்டு ஒன்றை துவங்கி உள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் ஐயோனிக் எனும் சப்-பிராண்டை அறிமுகம் செய்துள்ளது. இது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கென பிரத்யேகமாக துவங்கப்பட்டு உள்ளதாக ஹூண்டாய் தெரிவித்து இருக்கிறது.
ஏற்கனவே ஹூண்டாய் நிறுவனத்தின் ஐயோனிக் பெயர் கொண்ட கார் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஐயோனிக் செடான் மாடல் ஹைப்ரிட், பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் முழுமையான எலெக்ட்ரிக் போன்ற வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

ஐயோனிக் பிராண்டிங்கில் அறிமுகமாகும் புதிய வாகனங்கள் எண் அடிப்படையில் பெயரிடப்படும் என ஹூண்டாய் தெரிவித்து உள்ளது. ஒற்றைப்படை எண்கள் எஸ்யுவி மாடல்களுக்கும், இரட்டைப்படை எண்கள் செடான் மற்றும் இதர மாடல்களுக்கு சூட்டப்பட இருக்கிறது.
புதிய ஐயோனிக் பிராண்டிங் கொண்ட முதல் மாடல் 2021 ஐயோனிக் 5 எஸ்யுவி என கூறப்படுகிறது. இது கடந்த ஆண்டு ஃபிரான்க் புரூட் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் 45 கான்செப்ட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு வருகிறது.






